லேபிள்கள்

சனி, 20 நவம்பர், 2010

பழமொழி' கலாய்ப்புகள்!

 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!
- இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது?
 வேலிக்கு ஓணான் சாட்சி!
- இதெல்லாம் ரொம்ம ஓவர். எந்த ஓணான் கோர்ட் படியேறி சாட்சி சொல்லியிருக்கு?
 தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை!
- ஏன் தகப்பனை போல பிள்ளையே கிடையாதா? நூல் மாதிரி சேலை இருந்தா யாரு கட்டுவாங்க ரோம்ப அடுக்குறாங்கப்பா!
 ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
- பானைக்கு சரி! குக்கர், ரைஸ் குக்கர் இதுக்கெல்லாம் எப்படி? பதத்தை அதுவே பாத்துக்கும்! பானையை கொஞ்சம் கவுத்து வைங்க!
 சின்ன புள்ள வெள்ளாமை வந்து சேராது!
- தெரியுதுல்ல... அப்புறம் எதுக்கு குழந்தை தொழிலாளர் முறை? படிக்க வைங்கய்யா!
 தென்னைய பெத்தா இளநீரு! பிள்ளைய பெத்தா கண்ணீரு!!
- பெறவேண்டியதுதானே..! தென்னை வந்து பொறந்து வளர்ந்து இளநீரு குடுக்கும்! ஆகுற பேச்சை பேசுங்க! கண்ணீரு... நம்ம பரம்பரை சொத்து! வருத்தப்படாத பெருசு... நாங்கதான் பொறப்போம்!
 சேரிடம் அறிந்து சேர்!
சொல்லீட்டீங்க! சரியான காலேஜா பார்த்துதான் சேர்றோம்! ம்... வேலைதான் சேர முடியலே தலைவா!

தொந்தியின் பயன்கள்

மிழ் வினாத்தாள்களில் கட்டுரை வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.
எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டுவிட்டார். இதனால், தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன்.
கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:
கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து கூட்டமாக வாழும்.
தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:
பால் மூன்று வகைப்படும். அவையாவன:
1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.
ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.
இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.
'காந்தி பற்றி கட்டுரை வரைக'
இப்படி ஒரு கேள்வி நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது. பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.
(இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.)
தொந்தி
'காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா'
இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல. இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.
காயம் என்றால் உடல் என்று பொருள்.
பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி குறிப்பிடுகிறார்:
காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.
அதாவது,
காயத்தில் (உடலில்)
காயம் (புண்) ஏற்படின்
காயத்தில் (புண்ணில்)
காயத்தை (பெருங்காயத்தை) வைத்து கட்டு
- என்பது பொருள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று. சிலர் கண்கள் என்பர்.
உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஒரு பழமொழி உண்டு.

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.
சிரசு என்றால் தலை என்று பொருள்.
இது மிகவும் தவறான பழமொழியாகும்.
உண்மை என்னவெனில்,
எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.
இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.
1. ஓர் அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்
2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.
3. கண்ணை மூடிக்கொள்ளவும்.
4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.
5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.
6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.
7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?
நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.
நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல; வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன. காரணம், அவரது அழகான தொந்தி.
பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.
பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.
போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறைசாற்றும்.
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
பாடலாசிரியர் வைரமுத்து கூட,
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.
அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.
தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!

கணவன் - மனைவி சண்டை :

கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.
எனது திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.
கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே...
நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்-னு நம்பி...(வடிவேலு ஸ்டைலில் படிக்க) வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..
அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.
1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.
2. அடுத்து யார் பக்கம் என்ன தப்பு-ன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.
3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.
ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீயே திட்டிட்டு நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.
4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "Sorry" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).
*
சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு.. என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.
*
என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.
ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்டோம்!!
*
இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது!
இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!
நம்ம ஃபிரண்டை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் ஒயிஃபை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு (ஓரளவுக்கு) வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..
என்ன தான் சுப்ரீம் கோர்ட்லயே நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!!

நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்

(ஸ்ருதி தாளம் லயம் எந்தத் தேவையுமின்றி பாடகர் உச்சஸ்தானியில் அலறிப்பாடும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவராத தத்துவப் பாடலைப்பற்றி சில வரிகளை உங்களுக்காக தருகிறேன்...)
ங்களில் பலரைப் போலவே எனக்கும் ஆரம்பத்தில் இந்த நாக்க முக்கா நாக்க முக்கா என்ற 'காதலில் விழுந்தேன்' படப்பாடல் பிடிக்கவே இல்லை. அப்பப்ப தமிழ் சினிமாவில் இந்த மாதிரி வேகமான குத்துப் பாடல்கள் வந்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கிவிட்டு சிறிது காலத்தில் காணாமல் போய்விடும் என்று எனது பாட்டில் இருந்துவிட்டேன். உதாரணத்துக்கு 'ஓ போடு' 'மன்மதராசா' என நிறைய சொல்லலாம்..
தற்செயலாகத்தான் இந்த நாக்க முக்காவை கேட்க நேர்ந்தது (நிரப்பந்தத்தின் பேரில்தான்..) கேட்ட பிறகுதான் ஓர் அருமையான தத்துவப்பாடலை நான் இதுவரை வெறுத்து ஒதுக்கிவிட்டேன் என்று என்னையே கடிந்து கொண்டேன். வலுக்கட்டாயமாக இதைக் கேட்க வைத்த எனது நண்பனுக்கு நிறைய நன்றி சொன்னேன்.
இப்படி ஒரு தத்துவப் பாடலை கண்ணதாசன் கேட்டிருந்தால் அகமகிழ்ந்து போயிருப்பார், தனக்குப் பிறகும் அற்புதமான தத்துவப்பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று.
அதிகப் பிரசங்கத்தினம் போதும்.. இனி பாடலில் பொதிந்திருக்கும் தத்துவங்களைப் பார்க்கலாம்...
படம் : காதலில் விழுந்தேன் (படத் தலைப்பே கவிதை)
பாடல் : ஆர்ரார்ரா நாக்க முக்கா (தமிழ்ப்பாடல்தான்)
இசை+பாடியவர் : விஜய் ஆன்டனி
பாடல் தொடங்கும்போது நீங்களெல்லாம் அதி உன்னிப்பாக கேட்கவேண்டும் ஆங்கிலத்தில் பாடலைப் பற்றிய சிறு குறிப்பொன்று சொல்லப்படும். அதன் தமிழாக்கம் இதுதான். "நண்பர்களே இது ஒரு பாடல் (அதையும் அவர்கள் சொல்லித்தான் நம்ப வேண்டியிருக்கிறது) இது ஒரு உண்மைக் கணிதவியல் (அப்படித்தான் எனக்குக் கேட்டது) மற்றும் விளையாட்டு (எனது
மொழிபெயர்ப்பை நீங்கள் ஒருமுறை சரிபாருங்கள்) ஆங்கில வாசகங்கள் முடிந்தவுடன்
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
என்று புரியாதவர்களுக்காக அந்தத் தத்துவம் இரண்டு முறை சொல்லப்படும்...
அதாவது மாடு செத்தால் மனுசன் அதை சாப்பிட்டு விட்டு அதன் தோல் பகுதியை மேளமாக இசைக்காக உபயோகிக்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மனுசன் செத்தால் என்ன செய்கிறோம்... அந்த மேளத்தை கொட்டி ஆடோ ஆடென்று ஆடி அவனுக்கு இறுதிக்கிரியைககள் செய்கிறோம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றது. மனுசன் மாட்டிலிருந்து தனது அறிவுக்கு எட்டியவரை அதனை உணவாகவும் இசைக்கருவி ஒன்றுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தி தனக்கு ஆறறிவு என்பதை நிரூபிக்கிறான்!
இரண்டாவது விஷயம் மாடு மனிதனை விட சிறந்தது.காரணம் மனுசன் செத்த பிறகும் செத்த ஒரு மாட்டின் தோல்தானே அவனது இறுதி ஊர்வலத்தில் பயன்படுகிறது..? (புரியாதவர்கள் மீண்டும் ஒரு முறை இதை படியுங்கள்)
அதனைத்தொடர்ந்து...
அதி உச்சஸ்தானியில் பாடலின் முக்கிய கருப்பொருளான
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
என்று இசையோடு கலந்து நமது சிந்தைகளை மெல்ல மெல்ல கிளறுகிறது. அதற்குப் பிறகு ஒரே வகையான இசையோடு (16 ராகங்களிலிருந்து வேறுபட்ட புதியதொரு ராகம்... 7 ஸ்வரங்களில் இது எந்த ஸ்வரம் என்று பிடிபடவில்லை)
முதல் சரணம் தொடங்குவற்கு முதல் அந்தத் தத்துவம் மீண்டும் ஒலிக்கிறது (திரும்த் திரும்ப வாழ்வின் யதார்த்தத்தை நமக்கெல்லாம் புரியவைக்கத்தான்)
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
சரணம் தொடங்க முதல் "அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனாரே என்று இந்தியிலும் ஏதோ தத்துவம் சொல்கிறார்கள். எனக்கு இந்தி மொழி தெரியாததால் அதைப்பற்றி அலசிப்பயனில்லை.
தொடரும் முதலாவது சரணத்தை பாருங்கள்...
பந்தாட்டம் உழல வெச்சான்
ராட்டினம் போல் சுழல வெச்சான்
ஏற வெச்சான் எறங்க வெச்சான்
சுழலவிட்டு மயங்க வெச்சான்
மயங்கினவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா 
(பாடகரின் கத்தலிலேயே உண்மையா மயங்கினவன் எழும்பி விடுவான் போலுள்ளது)
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா (அடிக்கச் சொல்வது மேளத்தையா... மயகக்த்தில எழுப்பியவனையா..? என்று பாடலைக் கேட்பவர்களை சிந்திக்க வைக்கிறார்கள்)
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...

என்று மீண்டும் மீண்டும் உலக தத்துவத்தை நினைவுபடுத்துகிறார்கள்
உலக வாழ்க்கை வட்டம் மாதிரி. உயரத்தில் இருப்பவன் கீழே வந்துதான் ஆகணும். கீழ இருப்பவன் உயர்ந்துதான் ஆகவேண்டும். எனவே வீணான மமதை மயக்கத்திலிருந்து நாமெல்லாம் விடுபடவேண்டும் எனறு வித்தியாசமான உவமையில்
பாடலில் சொல்லப்படுகிறது. (பந்தாட்டம் ராட்டினம் போன்ற உவமைகளைச் சொன்னேன்)
அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த "அடி லாரீப் சோனா" என்ற இந்தி மொழித்தத்துவம் உச்சஸ்தானியில் பலமுறை ஒலிக்கிறது.
இனி இரண்டாவது சரணம்
பொண்ணுங்கள பொறக்க வெச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வெச்சான் கருவ வெச்சான்
கற்பவெச்சான்

(இது தெரியாதா எங்களுக்கு என்று விதண்டாவாதமாக கேட்க வேண்டாம் நண்பர்களே...)
கற்புக்குள்ள தீய வெச்சான்
தீய வெச்சு எரிய வெச்சான்
எரிய வெச்சான்
மதுர எரிய அணைங்கடா அணைங்கடா அணைங்கடா...
பொண்ணுங்கள பொறக்க வெச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வெச்சான் கருவ வெச்சான்
கற்பவெச்சான்
கற்புக்குள்ள தீய வெச்சான்
தீய வெச்சு எரிய வெச்சான்
எரிய வெச்சான்
மதுர எரிய அணைங்கடா அணைங்கடா அணைங்கடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
(இந்தி மொழியை இதைப்புரிந்த கொள்ளவேனும் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று அதிகம் கவலைப்படுகிறேன்)
ரண்டாவது சரணத்தில் நிறைய உண்மைகள் தொடடுக் காட்டப்பட்டிருப்பதை அவதானியுங்கள்.. அவைகளில் சில அதோ இலக்க வடிவில்
01) பெண்ணியம் பேசப்படுகிறது
02) கண்ணகி மாதவியின் சிலப்பதிகார வரலாறு மீளப்போதிக்கப்பட்டுள்ளது.
03) கற்பு என்பதன் மகோன்னதம் விளக்கப்பட்டுள்ளது.
04) பெண்களின் கருவினால்தான் மனித உயிரகள் சூல் கொள்கின்றன என்பது அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
05) பெண்களுக்கெதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற எச்சரிக்கைத் தொனி ஒலிக்கக் காண்பீர்கள்
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
என்கிற வாசகங்களோடு
ஒரு பெண் குரலின்
"நாக்க முக்க.." என்ற உச்சரிப்புடன் அழகாக முடிகிறது இந்தப் பாடல்...
இப்போது சொல்லுங்கள்... அது எப்பேர்ப்பட்ட தத்துவப் பாடல் என்று..????
ரொம்ப கஷ்டப்பட்டு பாடல் வரிகளை விளங்க பல முறை பாடலைக் கேட்ட பிறகே எனக்குப் பாடல் புரிந்தது. இது கூட ஒரு உண்மையை சொல்கிறது. அதாவது கஷ்டப்பட்டால்தான் சில விஷயங்களை அடைய முடியும் என்ற தத்துவத்தை மிக
லாவகமாக பாடல் உணர்த்துகிறது.
இவ்வளவு கஷ்டப்பட்டும் என்னால் ஒரேயொரு விஷயத்தை இந்தப் பாடலில் இருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் தயவு செய்து சொல்லிவிடுங்கள். காரணம் தெரியும் வரை எனக்கு தூக்கம் வருவது
சந்தேகம்தான்...
அது என்னவெனில்...
"நாக்க முக்க" என்றால் என்ன என்பதுதான்...

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.
7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.
9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.
11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.
16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.

1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.
2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.
3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.
4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.
5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி... அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.
6. பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.
7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.
8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.
9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.
10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.
11. காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)
12. பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
13. இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.
14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.
15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.
16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.
18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.
19. யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.
20. வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.
21. தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.
22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.
23. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.
* துடிப்பான வாசகக் கண்மணிகள் தாங்கள் விரும்பும் நேரக் கொல்லியைப் பற்றிப் பதிவு செய்யலாம்.

ரயில் பயணங்களில்..! : சிறுகதை

"ம்ம்ம்... டாக்ஸி வந்தாச்சு... நகரு... நான் கொண்டு போறேன். பெரிய பெட்டியை இப்படி வை... தண்ணி கேம்பர் எங்கே? பூட்டு எங்க..? சாவி எங்க? ஏறுங்க... கதவை அடித்து மூடுங்க..."
கேள்விகளும் அறிவுரைகளுமாய் ஒருவழியாய் ஏறியாயிற்று...
"என்னங்க? பூட்டை வெளிலே போட்டீங்களா? உள்ளேயுள்ள கொக்கியில் போட்டீங்களா?"
"ஆரம்பிச்சிட்டியா?"
"சரி விடுங்க!"
இரண்டு தெரு தாண்டியதும், "ஏங்க... வெளி லைட் போட்டீங்களா?"
இப்போ போட்டேன்னு சொல்லவா? போடலைன்னு சொல்லவான்னு குழம்பியதிலே போட்டேனா போடலையான்னே குழப்பம்...
அடுத்த 10 நிமிடம் சுமுகமாக நகர்ந்தது...
"என்னங்க கேஸ் கீழே உள்ள ஸ்விட்சை மூடினீங்களா?"
"ஆமாம்மா..."
அடுத்த ஐந்தாவது நிமிடம்.
"ஏங்க.."
"என்னம்மா?"
"கிச்சன்லே குழாயை மூடினீங்களா?"
இப்படிக் கேல்வி மேல கேள்வி கேட்டாலே பதிலைப் பற்றிய குழப்பமும் கை நடுக்கமும் ஆரம்பிச்சுடுதே எனக்கு...
"இல்லைங்க... பாத்ரூம்லே யார் கடைசியா போனது?"
"குழாயை மூடினீங்களா?"
"லைட் ஆஃப் செய்தீங்களா?"
"ஹாலில் ஃபேன் ஆஃப் செய்தீங்களா?"
இந்தக் கேள்விக் கொண்டாட்டத்தையெல்லாம் வீட்டிலேயே கேட்டுக் கொண்டாடியிருக்கக் கூடாதா?
கொலை வெறியுடன் ஆனால் பரிதாபமாகப் பார்த்தேன்...
நிறைய தடவை என்னுடைய குழப்பமான பதில்களால் வீட்டுக்குத் திரும்பிப் போய்ச் சரிபார்த்த அனுபவம் கூட உண்டு எனக்கு...
அப்பாடா!! ஸ்டேஷன் வந்தாச்சு. இனிமேல் வீட்டுக்கு அனுப்ப மாட்டாள்.
ரொம்ப நம்பிக்கையுடன் ரயிலில் ஏறியாச்சு.
"சாவியைக் கொண்டா... பெட்டிக்கெல்லாம் சங்கிலி போட்டுரலாம்..."
"அச்சோஓஓஓஓஓஓ...."
"என்னம்மா... சாவி கொண்டு வரலியா? ஒண்ணும் பிரச்னையில்லை. பூட்டு சாவி ரிப்பேர் பண்றவன் வருவான் திறந்திடலாம்..."
நான் வீட்டுக்குப் போவதைத் தடுப்பதிலேயே குறியாயிருந்தேன்.
"இல்லைங்க டிக்கெட்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். சரி சரி இறங்குங்க... ஒரு நடை போய் டிக்கெட்டை எடுத்திட்டு அப்பிடியே கேஸ் திறந்திருக்கான்னு செக் பண்ணிட்டு, பாத்ரூம், கிச்சன் குழாயைத் திறந்திருக்கான்னு பார்த்துட்டு, ஃபேனை அணைத்து விட்டு, வெளி லைட்டைப் போட்டுட்டு... வீட்டை உள்ளேயுள்ள கொக்கியில் பூட்டைப் போட்டுப் பூட்டிட்டு வாங்க... பதறாதீங்க... இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு..."
'கிராதகி... இப்படி எல்லாத்தையும் செக் பண்ணுவதற்கே டிக்கெட்டை வீட்டில் விட்டு வந்தாளோ?'
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே இரண்டடி வைத்திருப்பேன்.
"என்னாங்க... வீட்டுச் சாவி எடுத்துக்கிட்டீங்களாஆஆஆஆஆஆ..?"
நான்... ஙே!!!

வெள்ளி, 19 நவம்பர், 2010

பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

டவுச்சீட்டு! இந்தியாவில் மேதகு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும் ஓர் ஆவணமாக
கடவுச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். அதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம்.
Ordinary, Official, Diplomatic, Jumbo என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,Official அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomaticமுதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் 
வழங்கப்படும்!
பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஆர்டினரி, தட்கல் ஆகியவை. இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை 'பிரின்ட் - அவுட்' எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் தங்கள் கைப்பட பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்பட மாட்டாது!
அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்ப்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் மையங்கள் இருக்கும். அங்கும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ் களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த மூன்றில் ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.
ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும்.
புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு  1,000, தட்கல் மூலம் என்றால்  2,500 கட்டணம்.
ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டு களுக்குச் செல்லுபடி ஆகும். 10 ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1,000 மற்றும் தட்கலுக்கு 500 கட்டணம்.
பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப் பித்துக்கொள்ளவும் ஆன் லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2ஐப் பயன்படுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் 'non traceable' சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2,500 மற்றும் தட்கலுக்கு 5,000 கட்டணம்.
 

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?
திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நி கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக...
"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூ சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
நன்றி: ராகவி - சினேகிதி - செப்டம்பர் 2009
மூளையைப் பாதிக்கும் செயல்கள்:
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது.

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

‘சகுனம்’ ஓர் அலசல்!

மனித வரலாற்றில் சகுனம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுனத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!
‘சகுனம்’ என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.
இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: -
அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:
பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.
இராக் காலங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். அதை விரட்டுவதற்கு அவர்கள் கையாளும் முறை அவர்களது நம்பிக்கையை விட அபத்தமாக இருக்கும். சிலர் ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள். சிலர் எரியும் அடுப்பில் அடுப்பூதும் குழலை சூடேற்றுவார்கள் அப்படிச் செய்தால் அது பறந்து விடும் என்பது அவர்களது ஐதீகம்!
சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விடயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் தமிழில் கூட பல்லி கத்தும் என்று கூறாமல், பல்லி சொல்லும் என்பர். சகுனம் தமிழ் மொழியைக் கூட விட்டுவைக்கவில்லை!
  • சிலரது வீட்டில் பகற் நேரங்களில் தொடராக காகம் கறைந்தால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல். காகம் கூடக் கறையக் கூடாதா?
  • வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால் பரக்கத்தும் பறந்து போய்விடும் என்று நினைத்தல்!
  • சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பரகத் கொட்டும் என எண்ணுதல்!
  • பயணத்தின் போது ட்ரஃபிக் சிக்னல் தொடராக மூன்றும் சிகப்பில் காணப்பட்டால் பிரயாணத்தில் தடை இருப்பதாக நினைத்தல்.
பார்த்தீர்களா நவீன கண்டு பிடிப்புகளைக் கூட மூட நம்பிக்கையினால் பினைத்துப் போடுகிறார்கள்!
  • வீட்டிலோ தொழில் நிறுவனங்களிலோ அசோக் மரம் நாட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல். காரணம் அந்த மரத்தின் கிளைகள் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும், அது சோகமாக காட்சி தருவது போன்று தெரிவதாக நினைத்து வீட்டிலும் சோகம் ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கை!
  • சிலர் சில இலக்கங்களை ராசியான இலக்கங்களாகக் கருதுதல். உதாரணமாக: 13, 786 போன்றவற்றைக் கூறலாம்.
இப்படி நாட்டிற்க்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுன முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம்இ சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.
இந்துக்களால் வெளியிடப்படும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல். மற்றும் வெறும் போலித்தனமான செயல் என்பதற்கு நாம் நாளாந்தம் காணும் செய்திகள் ஒரு எடுத்துக் காட்டாகும்.
உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து, தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்து, பல நல்லோர்கள் என கருதப்படுபவர்களின் ஆசிர்வாதங்களோடு, கெட்டிமேளம் கொட்டி ஒரு திருமணம் சிறப்பாக நடந்தேரும். அடுத்த நாள் காலையில் தினப் பத்திரிக்கையைத் திறந்தால் நேற்று திருமண மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள். இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுனம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிச் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.
இது இப்படியிருக்க காதலித்து கலப்பு திருமணம் செய்பவர்கள், ஓடிப் போய் பதிவுத் திருமணம் செய்து தம்பதியினராக வாழ்பவர்களுக்கு இந்த சடங்கு சமபிரதாயங்கள் பதில் கூறட்டும்.ஆக சகுனம் பார்த்தல், உலகில் மடமையை அதிகரிக்கச் செய்யும், மறுமையில் தண்டனையைத் தான் பெற்றுத் தரவல்லது. சுருங்கக் கூறின், சகுனம் இணைவைப்புக்கான வாயிலாகும்.
இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்: -
‘சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது’.
சகுனம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெறும் பித்தலாட்டம் மட்டும் தான்.
சகுனமாகக் கருதக் கூடிய ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?

(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)

(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)

பொருள்: ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).
மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.
சகுனம் பற்றிய சட்டம்: -
சகுனத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும்’ என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)
சகுனத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெரிய வருகின்றது. நாளை மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ இன்றி சுவர்க்கம் நுழைபவர்கள் எழுபதுனாயிரம் பேர்களாவர். ‘அவர்கள் யாரென்றால், மந்திரிக்காதவர்கள், மந்திரிக்குமாறு யாரையும் பனிக்காதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
தாவுஸ் என்ற அறிஞர் தனது தோழருடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போது ஒரு காகம் கறைந்து கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. அதற்கு தோழர், நல்லது நடக்கட்டும் என்றார். இதனைக் கேட்ட தாவுஸ் அவர்கள்: அதனிடத்தில் என்ன நலவு இருக்கிறது! அல்லாஹ் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்னுடன் பயணத்தைத் தொடரவேண்டாம் என்றார்கள்.
சகுனம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்: -
சகுனம் பார்ப்பதால் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு தருகிறோம்.
  • எமது இறை விசுவாசத்திற்கு நேர் எதிரானது
  • தவக்குல் எனும் அல்லாஹ்வைச் சார்ந்திருத்தலை தடுக்கின்றது
  • ஒரு நன்மையை தரவோ அல்லது ஒரு தீமையைத் தடுக்கவோ முடியாதது
  • சிந்திக்கும் திறன் இல்லாமைக்கு சான்றாக அமைகிறது
  • மனக் குழப்பத்தை தொடர்ந்தும் உண்டாக்கவல்லது
  • வாழ்க்கையில் தோழ்வியை தரக் கூடியது
  • அறியாமைக் கால மக்களின் பண்புகளில் ஒன்று
  • நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதியை நிராகரிக்க விடுக்கப்படும் ஒரு பகிரங்க அழைப்பு
  • நபிகளாரின் போதனைக்கு முரண்படுதல்
  • அடிப்படைகளற்ற விடயங்களை முற்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றது!
  • சகுனம், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், ராசி-பலன்… போன்ற மூட நம்பிக்கைகளில் தமது காலத்தை வீணடிக்கும் சமூகங்கள் இன்று வரைக்கும் முன்னேராமல் பின்தங்கியிருப்பதையும், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே தெரியாத மேற்கத்தியர் நன்றாக முன்னேறிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். இப்போதாவது சிந்திப்போமாக!
இது சகுனம் பற்றிய சுருக்கமான ஒரு அலசலாகும். இதன் பிறகும் கண்டதையெல்லாம் சகுனத்திற்கு உற்படுத்தி நம் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாமல் இத்தீமையிலிருந்து விலகி நடக்க வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!


ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts