நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?
மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில……….
நிர்வாகம்
கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள்
சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது M.Phil, M.Tech, Phd, போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகாரம்
தேர்ந்தெடுக்கும் கல்லூரி, மத்திய, மாநில அரசுகளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.
உள்கட்டமைப்பு வசதிகள்
தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
கல்லூரியின் பிரபலம்
புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும். கடந்த ஆண்டு கல்லூரியின் மொத்த தேர்ச்சி விகிதத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.
பாடத்திட்டங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள்தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.
இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.
கட்டணம்
கட்டணங்களை பொறுத்தவரை சிலர் அட்மிஷனின் போதே முழு செமஸ்டருக்கான பணம் மற்றும் ஹாஸ்டல் கட்டணம் போன்ற மற்றக்கட்டணங்களையும் சில்ர் செலுத்தி விடுகின்றனர். ஆனால் கல்லூரி எதிர் பார்த்த அளவில் இல்லாவிட்டாலோ, அல்லது அதைவிட நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டாலோ நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தாலும் அதனை திரும்ப பெற முடியாது ஆகவே பகுதி பணம் மட்டும் ஆரம்பத்தில் செலுத்தினால் வீண்விரயத்தை தவிர்க்கலாம்.
பிற வசதிகள்
விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்
--
*more articles click*
www.sahabudeen.com