லேபிள்கள்

புதன், 28 பிப்ரவரி, 2018

சொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்?

சொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்?
ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்கால ஆசைப் பட்டியலிலும் கார் நிச்சயம் இருக்கும். கார் தேவையாக இருக்கிறதோ இல்லையோ, பயன்படுத்துகிறோமோ இல்லையோ, வீட்டு வாசலில் ஒரு அழகான காரை நிறுத்தி வைக்கவே எல்லோரும் விருப்பப்படுவது உண்டு.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்டோ, இயான், நானோ போன்ற சிறிய கார்கள்தான் முதலிடங்களில் உள்ளன. இந்தச் சிறிய கார்கள் நடுத்தர மக்களின் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வருகின்றன. இந்திய கார் மார்க்கெட்டின் ஆணிவேர் இந்தச் சிறிய கார்கள்தான்.
ஆனால், நகரங்களில் கார்களை நிர்வகிப்பது என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் இப்போதெல்லாம் மொபைலை எடுத்தோமா, ஆப் மூலம் டாக்ஸியை புக் செய்தோமா, வேண்டிய இடத்துக்கு போய் வந்தோமா என்பதுதான் ட்ரெண்ட்-ஆக இருக்கிறது.நகரங்களில் உபர், ஓலா போன்ற பல டாக்ஸி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அதுவும் ஆட்டோவில் செல்வதைவிடவும் டாக்ஸிகளில் செல்வது மலிவாக இருப்பதாகச் சொல்லப்படு கின்றன. இதனால் சொந்தமாக ஒரு காரை வாங்கி பயன்படுத்து வதைவிட வாடகை கார் பயன்படுத்திக் கொள்ளவே பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒருவர் சொந்தமாக காரை வாங்கி பயன்படுத்துவது லாபமா அல்லது வாடகை காரைப் பயன்படுத்துவது லாபமா என்கிற கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

சொந்தக் கார் என்னும் கனவு!
காரில் பயணிக் கிறோம் என்பதைக் காட்டிலும் நம்மிடம் சொந்த கார் இருப்பது ஒரு ஸ்டேடஸ் கெளவரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சொந்தமாக கார் வாங்கும்முன் நம் வருமானம், தேவை, எத்தனை பேர் பயணிப்போம் என்கிற விஷயங்கள் முக்கியமானவை. ஏனெனில், பெரும்பாலான நகரங்களில் இருப்போரின் வருமானம் ரூ.30,000-க்கும் அதிகமாக இருப்பதால் எளிதில் கார் வாங்கும் முடிவை எடுத்து விடு கிறார்கள். அதற்கேற்ப கார் நிறுவனங்களும், கார் கடன் விளம்பரங்களும் அவர்களை கவர்ந்து இழுக்கின்றன.

ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், பெரும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி இருக்கிறது. இதனால் சொகுசாக அலுவலகம் போகலாம் என்று நினைத்து, கார் வாங்கியவர்கள் அதனை வீட்டில் வைத்து விட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

போக்குவரத்து நெருக்கடி என்பதுடன், பார்க்கிங் பிரச்னையும் முக்கிய காரணம். நம் ஊரில், அதுவும் சென்னையில் கார் பாக்கிங் செய்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லாத தால், காவல் துறை எப்போது வேண்டுமானாலும் காரை
   'டோ' செய்து, எடுத்துக் கொண்டு போகலாம். அல்லது யாராவது வந்து இடித்து சேதப்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. 

அதுமட்டுமல்லாமல் கார் வாங்கிய ஒரு ஆண்டில் உங்கள் காரின் மதிப்பு ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% வரை குறைய வாய்ப்புண்டு.
  இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், 45% குறையும்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின்  காரின் மதிப்பு அதிகளவில் குறையும்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கார் வாங்கும் ஆசையே இருக்கக் கூடாதா என்று கேட்கிறீர்களா?

சொந்த கார்தான் வாங்குவேன்!
சொந்த கார் வாங்குவது தவறே இல்லை. ஆனால், அது ஒரு செலவுதானே தவிர, முதலீடு அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.

கார்களின் விலை குறைந்த பட்சமாக ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகிறது. ஆனால், உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒரு வருடத்துக்கு மொத்தமாக எரிபொருள், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் சாலைக் கட்டணம் (toll), பார்க்கிங் உட்பட பல்வேறு செலவுகளையும் பட்டியலிட்டு உங்களுடைய காருக்கான பட்ஜெட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அவசியமான வசதிகள் கொண்ட ஒரு காரின் விலை ரூ.5 லட்சம் எனில், முழுத் தொகையையும் அப்படியே கட்டி வாங்க முடியாத நிலையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
   முன்பணமாக ரூ. 1  லட்சம் செலுத்தி, பாக்கியை கடனுதவி மூலம் கட்டி காரை வாங்குகிறார்கள் பலர். கடன் வாங்கிய தொகைக்கான தவணைக் காலம் ஐந்து ஆண்டுகள் எனில், மாதம் சுமார் ரூ.8,400 மாதத் தவணை (9.5% வட்டியில்) செலுத்த வேண்டும். மாதத் தவணை மட்டுமல்லாமல் மற்ற செலவுகளையும் கணக்கிடுங்கள்.

சராசரியாக லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் காரில் மாதம் 1000 கிமீ பயணிப்பீர்கள் எனில், பெட்ரோலுக்கு மட்டுமே மாதம் சுமார் 5000 ரூபாய் செலவாகும். சர்வீஸ், இன்ஷூரன்ஸ், பார்க்கிங், டோல் போன்றவற்றுக்கு மொத்தமாக மாதம் ரூ.3,500 வரை செலவாகும். மொத்தமாக மாதத்துக்கு சொந்த காருக்கு ஆகும் செலவு ரூ.16,900 ஆகும். டிரைவிங் தெரியாதவர்கள் டிரைவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். டிரைவர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.12,000 ஆகும்.

உங்கள் ஆண்டு வருமானத்தில் இந்தத் தொகையை மைனஸ் செய்யுங்கள். மீதமுள்ள தொகையிலிருந்து வீட்டுக் கடன் அல்லது வாடகை, வீட்டு இதர செலவுகள், பள்ளி/கல்லூரிக் கட்டணம் என அனைத்தையும் கழித்தால், மீதி என்ன இருக்கிறது என்று பாருங்கள். உங்களுடைய செலவுகளுக்கு மீறி 20% தொகை கையில் சேமிப்புக்காக நின்றால் மட்டுமே நீங்கள் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.

மேலும், சிலர் கார் வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசையில் பட்ஜெட் சரியாக இல்லா விட்டாலும்கூட கடனை வாங்கி கார் வாங்குவார்கள். அது தவறு. கிட்டத்தட்ட 80% பேர் கடனுதவி மூலம்தான் கார் வாங்குகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இதில் எத்தனை பேர் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கி இருப்பார்கள் என்பது சந்தேகமே.
  பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம். அதே போல், அவசரப்பட்டு பழைய கார்களை வாங்காமல், எத்தனை வருடம் ஓடியது, என்ன காரணத்துக்கு விற்றார்கள் என்று தெரியாமல் வாங்குவதும் தவறு. பழைய கார்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம்.

சொந்த காரா, டாக்ஸியா? 
சொந்த காரைப் பொறுத்த வரை, முதலில் அதற்கு ஆகும் செலவை சமாளிக்கும் வகையில் பணம் இருக்க வேண்டும். இரண்டாவது, காரைப்
  பாதுகாப்பாக நிறுத்தி வைக்கத் தேவையான இடவசதி இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நகரத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு சாத்தியமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் சொந்த காருக்கு பதிலாக வாடகை கார்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.

ஏனெனில் சொந்த கார் வைத்திருக்கும் பலரும் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால், அவர்களால் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அடிக்கடி சுற்றுலாவோ, ஊர் சுற்றவோ போக முடியாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதே அதிசயம்தான். மேலும், தினசரி அலுவலகம் காரில் செல்பவர்கள் சொந்தமாக கார் வாங்கலாம். மற்றவர்கள் மாதாமாதம் செலவு வைக்கும் காரை ஏன் வாங்கி வீணாக்க வேண்டும்; அழகாக டாக்ஸியை புக் செய்துவிட்டு போய் வரலாம்.
 

முன்பு ஃபாஸ்ட் ட்ராக், என்டிஎல் என்று டாக்ஸிகள் இயங்கின. இப்போது ஓலா, உபர் என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் ரக கார்கள்கூட டாக்ஸி சேவையில் இயக்கப்பட்டு வருகின்றன. சொந்த கார் வாங்கி அதிகம் பயணிக்காதவர்கள் டாக்ஸியைப் பயன்படுத்துவது லாபகரமானதா கவே இருக்கும். டாக்ஸியில் பயணிக்கும்போது, நாம் செலுத்தும் கட்டணம் எரிபொருள் செலவு, டிரைவர் ஊதியம், காரின் இன்ஷூரன்ஸ் மற்றும் கம்பெனியின் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண அடிப்படையில் பார்க்கும்போது, மாதம் 1000 கிமீ பயணிக்கும் ஒரு நபர் டாக்ஸிக்கு செய்யும் செலவு குறைந்தபட்சமாக ரூ.8000 மட்டுமே. அதிகபட்சமாக சொகுசு கார்களுக்கு ரூ.20,000 வரை ஆகலாம். அதேபோல், நகரங்களுக்குள் பயணிப்பவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 - 20 கிமீ மட்டுமே பயணிக்கிறார் கள். மாதத்துக்கு 600 கிமீ பயணம் செய்தால், ஆகும் செலவு மேலும் குறையும்.

இது மட்டுமல்லாமல் டாக்ஸி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் தரப்படும் ஏராளமான சலுகைகள், ரைட் ஷேரிங் வசதிகள் ஆகியவை மேலும் லாபகரமானதாகவே இருக்கும். டாக்ஸி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் டாக்ஸிகளில் புகுத்தப் பட்டுள்ளன.

 எனவே, அதிகம் காரைப் பயன்படுத்தாததவர்கள்,  தனியாக மட்டுமே காரில் பயணம் செய்பவர்கள் சொந்தக் காரை வாங்குவதைக் காட்டிலும் டாக்ஸியைப் பயன் படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

சொந்த கார் Vs டாக்ஸி செலவு விவரம்:

சொந்த கார்
மாதம் 1000 கிமீ பயணம்

(காரின் விலை - ரூ. 5 லட்சம்

கடன் - ரூ. 4 லட்சம்)

மாதத் தவணை: ரூ.8,400 (9.5 % வட்டியில்)

பெட்ரோல்: ரூ.5000

சர்வீஸ், இன்ஸ்பெக்‌ஷன், டோல், பார்க்கிங், கார் வாஷ்: ரூ.2,000

இன்ஷூரன்ஸ்: ரூ.1500

மொத்தம் (தோராயமாக): ரூ.16,900 (டீசன்டான வசதி கொண்ட குறைந்தபட்ச விலை கார். சற்று விலை அதிகமான கார் என்றால் இந்த செலவு மேலும் அதிகம். டிரைவர் வைத்துக் கொண்டால் மாதம் ரூ.12,000 கூடுதல் செலவு ஆகும்)

வாடகை கார்:
அடிப்படைக் கட்டணம்: ரூ.30 - ரூ.50

கிமீ கட்டணம்: ரூ.6 -ரூ.8

காத்திருப்புக் கட்டணம்: ரூ.1 -ரூ. 5

மொத்தம் (தோராயமாக): ரூ.8,000

(1000 கிமீ பயணம், எடுத்துக்கொள்ளும் காரைப் பொறுத்து கட்டணம்)

வாடகை கார்களை ஆப் மூலம் இப்போது எளிதில் புக் செய்ய முடியும். அலுங்காமல் குலுங்காமல் பயணத்தை ஓய்வெடுத்துக்கொண்டே செல்ல முடியும். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு பயணம் செய்தால் செலவு இன்னும் குறையும்.

கார் வாங்குபவர்கள் என்ன செய்யவேண்டும்?
* உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது அதிக மைலேஜ் தரக்கூடிய காரா?

* ஒரு காரை வாங்கும்முன் அந்த காரின் நிறை, குறைகள் குறித்த ரிவ்யூக்களைப் படித்து விட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன, அது எந்த ஆண்டு மாடல், அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.

*
  பயன்படுத்தப்பட்ட பழைய  கார்கள் எனில், சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கை மாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!
http://pettagum.blogspot.com/2016/05/vs.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்!

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்!
என்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம். முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு, பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம்தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

அப்படி என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற  வழக்கறிஞர் சுதா இங்கே பகிர்கிறார்...


1. இரண்டாவது திருமணம் செய்யும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு இது முதல் திருமணம் எனில், அதை நன்கு விசாரித்துக்கு கொள்வது நலம். அதாவது அவர் ஏன் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை  திருமணம் செய்கிறார். அதற்கான காரணம் என்ன? அவர் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், அந்த ஆணை திருமணம் செய்வது குறித்து யோசிக்கலாம்.  

2. திருமணம் செய்துக் கொள்ளும் நபர் விவாகரத்து பெற்றுள்ளார் எனில், அதற்கான சான்றிதழ்களை சரிபார்ப்பது மிக முக்கியம். அந்த விவாகரத்து சான்றிதழில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். அதாவது, முதல் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு என்ன உரிமை உள்ளது. முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா? என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை முதல் மனைவி இறந்துவிட்டார் எனில், அதை உறுதி செய்வதோடு, எந்த காரணத்தினால் அவர் இறந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

3. இணையதளங்களில் வரன் தேடும்போது, அதிலுள்ள விவரங்களை அப்படியே நம்பிவிடக்கூடாது. அதனுடைய உண்மை தன்மையை மணமகனின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் விசாரிப்பது அவசியம். ஏனெனில், இணையதளங்களில் பொய்யான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் ஆகியவற்றில் அவருடைய நடவடிக்கைகளை எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். மேலும் அவரின் முகவரி, எத்தனை வருடங்களாக அந்த முகவரியில் வசித்து வருகிறார் என்பதையும் விசாரிப்பது அவசியம்.

4. மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக உடல் ரீதியான பிரச்னை சற்று அதிகமாகி வருகிறது. இது போன்ற பிரச்னை உள்ள ஆண்கள், இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறக்கவில்லை எனில் அந்த பிரச்னையை உங்களின் மீது குறையாக கூற வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, மருத்துவ ரீதியாக விசாரித்துக் கொள்வது அவசியம். அதே சமயத்தில் இது சற்று கடினமான வேலைதான்.

5. இரண்டாவதாக, திருமணத்துக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் நபரின் மீது ஏதாவது கிரிமினல் வழக்கு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி ஏதாவது சிக்கல் இருந்தால் அவர்களை தவிர்ப்பது நல்லது.

6.  அடுத்தது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவருக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைதான். எனவே இதில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பதில் தெளிவாக இருங்கள்.

7. முதல் திருமண வாழ்க்கையில், பிரச்னையில் சிக்கி விவாகரத்து பெற்று இருக்கும் பெண்கள் அல்லது எதிர்பாரத விதமாக கணவர் மரணம் அடைந்ததது போன்ற பிரச்னையில் இருக்கும் பெண்கள், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன் மனநல ஆலோசகரை கலந்து ஆலோசித்து, மன ரீதியாக தயார் ஆவது முக்கியம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது.

8. 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின்' படி  இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வது அவசியம். இதை திருமணமான 3 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் திருமணம் செய்யும் நபர், ஏற்கனவே  திருமணம் செய்து, அதை பதிவு செய்து வைத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மேற்கூறிய, விஷயங்கள் அனைத்தும், முதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். இரண்டாம் திருமணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இது, பெண்களுக்கு மட்டும் அல்ல...ஆண்களுக்கும் பொருந்தும்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்!

ஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்!
அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள்.

எந்த விஷயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள்.

அதிகாலையில் 5 - 6 மணிக்கெல்லாம் விழித்திடுங்கள்.

தினமும் குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.

கீரை, காய்கறிகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான நொறுக்குத்தீனி சாப்பிடுங்கள்.உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்.

யோகா முறைப்படி பயின்று, வீட்டிலேயே தினசரி முயற்சி செய்யுங்கள்.

தினமும் புத்தகம் வாசிப்புக்கு அரை மணி நேரத்தை ஒதுக்குங்கள்.

பலவீனங்களைக் கண்டு பயப்படாதீர்கள்.

அலுவலகம், வீடு தாண்டி பயணம் செய்து இயற்கையை நேசியுங்கள்.

குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுங்கள்.

உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களை செய்யத் தவறாதீர்கள்.

தோல்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

முடியாது, இல்லை போன்ற வார்த்தைகளைத் தேவைப்படும் இடங்களில் கண்டிப்பாக உபயோகியுங்கள். வேலைப்பளுவை ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

கனவுகளை விட்டுக்கொடுக்காதீர்.

தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளியுங்கள்.
http://pettagum.blogspot.com/2016/05/20.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

02. மனது புண்படும்படி பேசக் கூடாது.

03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச்செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக்கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள்
  மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத்தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள்
கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்
http://pettagum.blogspot.com/2016/05/blog-post_52.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 21 பிப்ரவரி, 2018

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?
1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.


3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 19 பிப்ரவரி, 2018

சிறுநீரகக்கல்

சிறுநீரகக்கல்

ஆயுர்வேதம் சித்த மருத்துவம்.

கல்லும் மெல்லக் கரையும்
பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன். உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா? அரிசியில் சரிபாதிகல்லு! அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?

இப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும். ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.

சிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம். கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம். சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம். இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும். இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும். அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல்! இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.

சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும். மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும். சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும். சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும். சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும். 2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம். சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம். 2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

உணவு உட்கொள்ளும் முறை:
பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம். வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் தினமும் 10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம். தினமும் இரண்டு வேளை காபி போதும். தேநீர் அறவே வேண்டாம். நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும். அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது. கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம். முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம். மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி. காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம். பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுநீரகக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிடுவது நல்லது. இது சிறுநீர்ச் சுரப்பை அதிகப்படுத்தும். கல்லைக் கரைக்கும் தன்மையும் இதற்குண்டு. சிறுநீரகக்கல்லுக்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இந்தச் சாறைச் சாப்பிட்டால் மிளகு அளவில் இருக்கும் கற்கள் அதி விரைவில் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். அதற்காக திராட்சை அளவிற்கு வளர்ந்துள்ள கல்லும் இதனால் கரைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 17 பிப்ரவரி, 2018

குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!

குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
புகுந்த வீட்டுக்கு  போகிற எல்லோரும் கொஞ்சநாளில் 'புஷ்டி' குண்டாக மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அடஇ கல்யாணத்துக்கு  அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா…. இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டுஇ தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். 'ஸ்லிம்' ஆகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை!
குடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோசெய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா….

1. சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக்குது இப்படி பலவித காரணங்களை சொல்லி இன்ஸ்டண்ட் பிரேக் ஃபாஸ்ட்ல ஆரம்பிச்சு மினி மீல்ஸ், ஈவ்னிங் குட்டியா ஸ்நாக்ஸ்னு கிச்சன்ல சாப்டுட்டே சமைக்கறீங்களா…?
ஃபேமிலியில எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்சமாகுற உணவை குப்பையில கொட்ட மனசில்லாம, நீங்களே சாப்பிடறீங்களா ? உடனே நிறுத்துங்க, இந்த பழக்கங்களை இப்படியே தொடரும் பட்சத்தில், உங்கள் நாற்பது பிளஸ் வயதில் மெடிக்கல் பில்லுக்கு தனி பட்ஜெட் போடவேண்டிவரும் குடும்பத்தலைவிகளே!
2. வீட்டில் அம்மி, உரல்னு எல்லாம் இருந்தாலும் அதை பயன்படுத்தாம எல்லா விஷயங்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர்தான் உபயோகப்படுத்துகிறீர்களா ? இனிமே செய்யாதீங்க இல்லைன்னா சில வருடங்கள்ல வெயிட்டை குறைக்க 'ஜிம்'மே கதின்னு கிடக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!
3. காலையில் ஆரம்பிச்சு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் மதியமே முடிச்சிட்டு, லஞ்ச்,டின்னர்னு எல்லாமே டி.வி முன்னாடி உக்கார்ந்த இடத்துலயே பண்றது,  மதிய சாப்பாட்டுக்கு பின்னாடி தூக்கத்தை வழக்கமாக வைச்சிருக்குற ஆளா நீங்க ?
உடனே நிறுத்துங்க இந்த பழக்கத்தை! அதற்கு பதிலாக ஹோம் க்ளீனிங், கார்டனிங்னு சின்ன  சின்ன வேலை பாத்தீங்கன்னா உங்கள் ஃபிட்னஸ் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
4. தினமும் காலை, மாலை மட்டும் இல்லாம, நினைச்ச நேரத்துக்கெல்லாம்னு குறைந்தபட்சம் மூன்று முறைக்குமேல் டீ, காபி குடிக்கறீங்களா ? அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் சமையலுக்கு காய்கறி வேக வைக்கும்போது, எக்ஸ்ட்ராவா ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்கறி சூப் ரெடி செய்து குடித்தால் ஆரோக்கியம் பிளஸ் அழகும் நிரந்தரம்.
5. அலுப்பு காரணமாக மொட்டை மாடியில் துணி காயப்போடுவதை தவிர்த்து, கீழேயே கொடி கட்டி துணி காயவைக்கறது, அலுவலகம், ஷாப்பிங், வீடு என எங்குமே படிக்கட்டுகளை உபயோகிக்காமல், லிஃப்டை உபயோகப் படுத்தறதுன்னு, நம்ம வாழ்க்கையில் இயல்பா இருக்குற உடற்பயிற்சிகளை வெறுக்குறீங்களா ? உடனடியாக கைவிடுங்க இல்லையென்றால் நாளடைவில் நிறைய உடல் சம்பந்தமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
6. வேலைக்கு போகாம வீட்லயே இருந்தாலும், வீடு பெருக்க, துடைக்க, துணி துவைக்கன்னு எல்லாத்தையும் செய்ய எங்க வீட்ல ஆள் இருக்காங்கன்னு பெருமை பேசிட்டிருக்கீங்களா ? இனி அப்படி பண்ணாதீங்க உடல் உழைப்பே இல்லாம இருந்தா, நாளடைவில் எடை அதிகரிப்பதுடன், சோம்பேறியாகிடுவீங்க. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க சின்ன வேலைகளை எடுத்து செய்யுங்கள்.
7. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிப்ஸ், சாக்லெட் போன்ற தின்பண்டங்களை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக மிச்ச சொச்சத்தை வாங்கி நீங்கள் சாப்பிடறீங்களா? திரும்பவும் செய்யாதீங்கவயசுக்கு ஏத்த உடை மட்டுமல்ல, உணவு விஷயத்திலும் கவனம் தேவை. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.
8. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது துவங்கி அருகிலிருக்கும் கடைக்குகூட  டூ வீலரில் அழைத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா ? உடனே மாத்திக்கோங்க ஒரு நாளைக்கு இது போன்ற சிறு விஷயங்களுக்காக குறைந்த பட்சம் ஒரு நாளில் 2-3 கி.மீ தூரம் நடக்க பழகிக் கொள்ளுங்கள். அது உங்களை செம ஃபிட்டாக வைத்திருக்கும்.
http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 15 பிப்ரவரி, 2018

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா!

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா!
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.  அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
இது ஒரு நல்ல பயிற்சி
கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.
 • தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.
 • மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
 • இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.
 • தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
 • ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
 • சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.
 • சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
 • கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
 • வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
 • பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
 • இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
ஊஞ்சல்கள் பலவகை:
 • சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.
 • நவீன வகை ஊஞ்சல்கள் "சோபா" வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.
 • தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.
மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது.
மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது.
 • குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது.
 • காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.
 • கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது.
 • ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.
http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை!

சிறுநீர் கல்லடைப்பு இயற்கை முறை சிகிச்சை!
சிறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர்
டாக்டர்கள்.

முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.
பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
சிறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர்.மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.
படத்தில் காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார்.சிறுநீர்
கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்.
இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்துக்கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர். அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது.  அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, , பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், அவ்வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும். அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது.
சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.
 மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார்.விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம்  5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கைவாசி தான்.
சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.  வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.. அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts