லேபிள்கள்

சனி, 29 டிசம்பர், 2018

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!


அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன், வீடு திரும்புகிறார்.
'
என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?'
'
அதெல்லாம் ஒண்ணுமில்ல...'
'
எத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்துறேன்; எனக்கு தெரியாதா உங்களப் பத்தி... சும்மா சொல்லுங்க...'
'
சொன்னா, பெரிசா தீர்த்து வச்சுடுவியாக்கும்... பேசாம இரு; சும்மா, நீ வேற குடையாதே...'
'
யாருகிட்டயாவது பகிர்ந்துக்குங்க; மனசுலயே வச்சுக்கிட்டு பாரம் ஏத்திக்காதீங்க...'
-
இப்படி, நீண்டு கொண்டு போன உரையாடலில், கடைசியாக, அலுவலக பிரச்னையை சொன்னார், கணவர்.
'
அட என்னங்க நீங்க... இப்படி தான், ரெண்டு வருஷத்துக்கு முன், இதே மாதிரி ஒரு பிரச்னை வந்துச்சு; என்னமா சமாளிச்சு, வெளி வந்தீங்க. இதெல்லாம், உங்க திறமைக்கு முன் ஒண்ணுமே இல்ல; ஊதி, எறிஞ்சுடுவீங்க பாருங்க...'
காட்சி மாறுகிறது; கணவர், தன் நண்பரிடம் இப்படி சொல்கிறார்...
'
என் மனைவி படிக்காதவ தான்; வெளி உலகமே தெரியாது. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், குடும்பம், கடமை, அம்மா வீடு இவ்வளவு தான். ஆனா, அவ குடுத்தா பாரு தைரியம்... 'ஊதி எறிஞ்சுடுவீங்க'ன்னா... அதே மாதிரி நடந்துடுச்சு; அவ குடுத்த தைரியத்தை மட்டுமே வச்சு, போராடினேன்; இப்ப ஜெயிச்சிட்டேன்...'
'
பரவாயில்லயே... என்கிட்ட சொன்னதோட நிறுத்திடாம, உன் மனைவிகிட்டே போய், இதை அப்படியே சொல்லு...' என்றார் நண்பர்.
'
விமானத்துக்கு நேரமாச்சு... சென்னை, கத்திப்பாரா சந்திப்புல, பாலத்துக்கே பூட்டு போட்டுட்டாங்களாம்; ஒரே போக்குவரத்து நெரிசலாம்; விமானத்தை பிடிக்க முடியுமான்னு தெரியல...'
'
இதெல்லாம் தேவையில்லாத கற்பனை... நீ போறதுக்குள்ள எல்லாம் சரியாயிடும். தைரியமாகப் போ; இல்லன்னா, நந்தம்பாக்கம் வழியா போ; விமானத்தை பிடிச்சுருவே...'
விமானத்தில் ஏறி அமர்ந்ததும், மொபைல் போனில், 'நீ சொன்னபடிதாம்பா நடந்துச்சு... சரியான நேரத்துக்கு விமான நிலையம் வந்துட்டேன்; நான் போன நேரம் எல்லாம் சரியாயிடுச்சு. நீ தைரியம் குடுக்கல்லன்னா, வழியெல்லாம் ரொம்ப பதட்டப்பட்டிருப்பேன்; ரொம்ப நன்றி...'

'தங்கச்சி பிரசவத்துல ஏதோ சிக்கலாம்; அம்மா போன் செய்து, உடனே ஊருக்கு வரச் சொல்றாங்க; ரொம்ப கவலையா இருக்கு...'
'
கவலைப்படாதே... பிரசவம் நல்லபடியா நடக்கும்; தைரியமாக போயிட்டு வா; எதுக்கும் இந்த பணத்த செலவுக்கு வச்சுக்கோ; போய், போன்ல பேசு...'
இப்படியெல்லாம், நம்பிக்கையூட்டும், தைரியமூட்டும் கதாபாத்திரங்களாக நாம் மாற வேண்டுமே தவிர, 'நான் அப்பவே சொன்னேன், இந்த வேலைய விட்டு தொலைங்கன்னு; கேட்டாத்தானே... இப்ப கிடந்து, படாத பாடு படுறீங்க; என் பேச்சு எங்க எடுபடுது...' என்று, பேசுகிற மனைவியாகவோ, 'ஆமாமா... கத்திப்பாராவுல ரொம்ப பிரச்னையா இருக்கு; நீ, விமானத்தை பிடிக்கிறது சந்தேகம் தான்...' என்று சொல்கிற நண்பராகவோ, 'என்ன செய்றது... எல்லாம் விதிப்படி தான் நடக்கும்; நம்ம கையில என்ன இருக்கு. யார் தலையில, என்ன எழுதி வச்சிருக்கோ...' என்று, இருக்கிற கொஞ்ச, நஞ்ச தைரியத்தையும், உருக்குலைக்கும்படி பேசுகிற முதலாளியாகவோ, ஆகிவிடக் கூடாது.

'என்ன நம்பிக்கையில், இப்படியெல்லாம் நல்வார்த்தை சொல்லச் சொல்றீங்க... எதை நம்பி, தைரியமூட்டச் சொல்றீங்க... நாம் நல்லது சொன்னாலும், அப்படியேவா நடந்துடப் போகுது...' என்றெல்லாம், கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்கிறேன்...
எல்லா ஆயுதங்களையும் இழந்து, நிராயுதபாணிகளாக நிற்போருக்கு, நாம், நம் கைப்பொருளை இழக்காமல் அளிக்கக் கூடியதெல்லாம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மட்டும் தாம்!
நாம் சொன்னபடி நடக்காவிட்டாலும், நாம் வழங்கிய நற்சொற்கள், அவர்களுக்கு அந்நேரத்துக்கு ஆறுதலை வழங்கியிருக்குமா, இல்லையா...
நாம் சொன்னபடி நடக்காவிட்டால், 'நீ ஏன், அப்படி ஆக்கப்பூர்வமாகப் பேசுனே...' என்று சண்டைக்கா வரப்போகின்றனர்... மாறாக, நாம் சொன்னபடி நடந்து விட்டாலோ, நம்மை அவர்கள் தலையில் வைத்து கொண்டாடாத குறை தான்!
எனவே, எவ்வித இழப்பையும் நமக்கு ஏற்படுத்தாத நல்வார்த்தைகளை சொல்லி தான் வைப்போமே!

லேனா தமிழ்வாணன்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 27 டிசம்பர், 2018

உங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தது!


1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)
7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295
24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419
26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495
30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா?


நிறை மாத கர்பிணியா நீங்கள் இதோ உங்கள் கவணத்திற்காக சில உன்மைகள் :
ஒன்று தெரியுமா உங்களுக்கு , அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது .
ஆம் , இதற்கு காரணம் தூங்கும் போது உங்கள் உடலிற்கு முழு ஓய்வுகிடைப்பதால் , இடுப்பு எலும்பு தளர்ந்து பிரசவத்திற்கு ஏதுவாக இருக்கும்
நல்ல ஓய்வு தான் எளிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்பது இயற்கை விதி , உடல் ஓய்வு மட்டும் அல்ல மன ஓய்வும் தான்.
பல தாய்மார்களுக்கு இதனால் தான் இரவில் பிரசவ வலி எற்படுகிறது
ஆழ்ந்த உறக்கத்தில் முதல் கட்ட பிரசவ வலி எற்படுவதால் இது பலருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது .
முதல் கட்ட பிரசவ வலி மாதவிலக்கின் போது எற்படும் மென்மையான வலி போல் இருக்கும் , இது மேல் அல்லது கீழ் வயிற்றில் உணரப்படும் மாறாக கீழ் முதுகுத்தண்டில் விட்டு விட்டு வலி வரலாம் , சிலசமயம் உடல் சோர்வு கூட எற்படலாம் .
பிறப்புறுப்பிலிறுந்து பனிக்குட நீர் வெளியேறாமல் இருக்கும் வரை நீங்கள் விட்டிலேயே இருக்கலாம் , உங்கள் வீட்டில் இருப்பது உங்களை சற்று பாதுகாப்பாகவும் , தைரியமாகவும் வைத்திருக்கும் உதவும் .
ஒருவேளை பனிக்குட நீர் வெளியேறுவதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள் .
அப்படி நீங்கள் அவரை அணுகும்போது அவர் உங்களிடம் முன்று கேள்விகளை கட்டாயம் கேட்பார்
அவை
1) Frequency<
2) Duration<
3) Leaking<
இப்போது இவை பற்றி விரிவாக பார்ப்போம் .
1)#Frequency
இது ஒரு வலிக்கும் மற்றொன்றிற்கும் உள்ள இடைவெளி (நேரம் ),
முதல் வலிக்கும் அடுத்த வலிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும் .
இந்த நேரம் குறைவாக இருந்தால் நீங்கள் பிரசவத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் .
2)#Duration
இது வலி நீடிக்கும் கால அளவை குறிக்கும் , ஒரு வலி எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதாகும் .
இது ஆரம்பகாலத்தில் குறைந்த தாகவும் , பிரசவ நேரம் நெருங்க நெருங்க அதிக மாகவும் இருக்கும் .
3)#Leaking
இது பனிக்குட நீர் வழிவதை குறிக்கும் பனிக்குட நீர் வழியும் போது நீங்கள் பிரசவத்தின் அடுத்து கட்டத்தை அடைந்திருப்பீர்கள் ,இன் நிலையில் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் .
உங்கள் நிலையை வைத்து மருத்துவர் சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யமுடியும் .
(பிரசவ வலி என்பது கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் உண்டாவது )
நிங்கள் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும்போது மறக்காமல் உங்களது மாதாந்திர பரிசோதனை ரிப்போர்ட்டையும் எடுத்துச்செல்லுங்கள் .
பிரசவம் எதிர்பார்க்கப்படுகிற தேதிக்கு முன்னதாகவே உங்களுக்கு தேவையானவற்றை ஒரு பையில் எடுத்த வைத்துக்கொள்வது நல்லது .
உலகத்தமிழ் மங்கையர் மலர்
தமிழச்சி நித்யா



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

தேனை சூடாக்குவது அல்லது சமைப்பது பாதுகாப்பானதா?

நாம் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்துகிறோம் , குறிப்பாக அதன் செழுமையான சுவை மற்றும் அமைப்புக்காக. ஆனால் தேனை சமைத்தால் அல்லத...

Popular Posts