லேபிள்கள்

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

மருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை

உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம்  நீங்கள் ஓடுகிறீர்கள்.

அவ்வாறு செல்லும் போது நீங்கள் என்ன சொல்ல வேண்டும், எதையெதை எடுத்துச் செல்ல வேண்டும், உங்களைப் பற்றி மட்டுமின்றி மற்ற நோயாளர்களின் நிலை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

கர்ப்பவதியாகவோ பாலூட்டுபவராகவோ இருந்தால் அவதானிக்க வேண்டியவை என்ன?

மருந்துகளை வாங்கும்போது அவதானிக்க வேண்டியவை எவை?

மருந்துகளை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிப்பது போன்ற பல விடயங்களை அவதானிக்க வேண்டும்.

இது பற்றி இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் (College of General practioners of Sri Lanka) ஒரு சுவரொட்டியை வெளியிட்டுள்ளது.


உங்கள் மருத்துவருடன் நீங்கள்...

1.
    நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போதுஅங்கிருக்கும் ஏனைய நோயாளர்களின் நிலைபற்றியும் சிந்தியுங்கள்.

2.உங்களது கடந்த கால மருத்துவ அறிக்கைகளையும், தற்பொழுது உபயோகிக்கும் மருந்துகளையும், மருந்துகளுக்கு ஒவ்வாமை இருப்பின் அது பற்றிய தகவல்களையும் எடுத்துச் செல்லுங்கள்.

3.    உங்கள் மருத்துவர் சொல்லுவதை கவனமாகக் கேளுங்கள். கூறுவது தெளிவாக இல்லாவிடில் மற்றெரு முறைகேட்டு அறியுங்கள். மருத்துவரிடம் செல்லும்போது உங்கள் குடும்பஉறுப்பினர் ஒருவரை அல்லது நண்பரை கூட்டிச் செல்வது நல்லது.

4.    நீங்கள் கர்ப்பவதியாகவோ குழந்தைக்கு பாலூட்டுபவராகவோ இருந்தால் அந்தவிடயத்தை உங்கள் மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

5.    மருந்துக் கடையிலிருந்து நீங்கள் மருந்துகள் வாங்கும் போது கீழ் கண்டவற்றை
அவதானியுங்கள்.
    மருந்தின் பெயர் (மருத்துவப் பெயரேஅன்றிவியாபாரப் பெயரையல்ல)
    மருந்துகாலாவதியாகும் திகதி

6.    என்ன அளவில், எவ்வளவுகால இடைவெளியில், எவ்வளவு காலத்திற்கு, மருந்துகளை உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் கூறிய அறிவுரைக்கு இணங்க பின்பற்றுங்கள். அரைகுறையாக இடையில் நிறுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

7.    பரசிட்டமோல் போன்ற சாதாரணவலி நிவாரணிகள் தவிர்ந்த ஏனைய மருந்துகளை எப்பொழுதும் மருந்துச் சிட்டையைக் கொடுத்தே வாங்குங்கள்.

8.    பழையமருந்துச் சிட்டைகளைக் கொடுத்து மருந்து வாங்குவதைத் தவிருங்கள்.
9.    மற்றவர்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை நீங்கள் உபயோகிப்பதையும், உங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுப்பதையும் தவிருங்கள்.

10.மருந்துகளை உபயோகிக்கும்போது உங்களுக்கு ஏதாவது அசௌகரியம், ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்டால், அல்லது உடல்நிலை மோசமானால் மருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக உங்கள் மருத்துவருக்கு அறிவியுங்கள்.

11.    ஒரு விசேட மருத்துவ நிபுணரிடம் ஆலோசனைக்கு செல்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடமிருந்துஅதற்கான கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

12.    அவ்வாறே மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும் போதும் மருத்துவரிடமிருந்து அதற்குரிய சிட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

13.
    வேலைப்பளு காரணமாக களைத்திருக்கும் மருத்துவரைத் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts