லேபிள்கள்

செவ்வாய், 9 ஜூன், 2026

பசி எடுக்கும் போதுஎன்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப் படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும்.

இதனால் எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல், உணவின் மீது முழு கவனம் செலுத்தி நம்மால் உணவினை நன்றாக உண்ண முடிகிறது. சரி வாங்க பசியின் வகைகளை பற்றி பார்க்கலாம்..

பசி நமது உணர்வுடன் தொடர்புடையது. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்ற வடிவத்தில் மன பசி தோன்றுகிறது. நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். மேலும் நாம் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது அதிக புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை தூண்டுவது இந்த மன பசி.

இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம். இதனால் ஆரோக்கியமான ஊட்டத்சத்து நம் உடலுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் உணவினை உட்கொள்வதற்கு முன் சில கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவேண்டும். அதாவது பசிக்காக சாப்பிடுகிறீர்களா அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த காரணத்தால் சாப்பிடுகிறீர்களா போன்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த உணவு உங்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குமா? அல்லது இது உங்களுக்கு பசியை தீர்க்குமா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டு கொள்வது நல்லது.

மனரீதியான பசி:- நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம்.

கண் பசி:- பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததை சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது. சிலருக்கு சில பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்புவது சாலச் சிறந்தது.

வாய் பசி:- ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உணவு ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அது உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள். திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்..



--

சனி, 6 ஜூன், 2026

மழை நீரில் குளிப்பது சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லதா?

பருவமழையானது உயர்ந்து வரும் வெப்பநிலையைக் குறைத்து, நமது திருப்தியின் அளவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் மழை நம்மை மகிழ்விக்கிறது.

ஒரு சிலருக்கு மழையை ரசிப்பது பிடிக்கும். ஒரு சிலருக்கு மழையில் குளிப்பது பிடிக்கும். ஆனால் மழையில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நல்லதா?

முதலில் மழையானது கொளுத்தும் வெப்பத்திலிருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும்போது நாம் நனைந்துவிடுகிறோம் என்பதால் உளவியல் ரீதியாக மிகவும் நிம்மதியாக இருக்கிறோம். எவ்வாறாயினும், மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு (H2S) போன்ற நச்சு இரசாயனங்கள், வாகன உமிழ்வுகள் மற்றும் தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் நாம் வசிக்கிறோம். எனவே, மழைத்துளிகள் ஆபத்தான பொருட்களுடன் இணைந்து உங்கள் தோலை சேதப்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே, மழைக்காலத்தில் நாம் பெறும் மழைநீரில் பெரும்பாலானவை அமிலத்தன்மை, அழுக்கு மற்றும் அசுத்தமானவை. இது அனைவருக்கும் மோசமானது.

பருவ மழையில் குளிப்பது சருமத்திற்கும் கூந்தலுக்கும் தீமை விளைவிக்குமா?

உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், அமில மழை உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் என்பதால், மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழையில் குளிப்பது பொடுகு, வெப்பம் அல்லது முகப்பரு போன்றவற்றுக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள். உண்மையில், இந்த நீரில் அதிக அளவு மாசுக்கள் இருப்பதால், உங்களுக்கு கடுமையான முகப்பரு, தோல் தொற்று மற்றும் தோல் வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. மழையில் நனைந்த பிறகு, உங்கள் தோல் மற்றும் தலைமுடியில் அரிப்பு ஏற்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மழைநீர் சிலருக்கு தோல் வெடிப்புகளைத் தணிக்கும்.

இந்த பருவமழையில், நீங்கள் மழையில் நனைய நினைத்தாலோ அல்லது மழையில் குளிப்பதை விரும்பினாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அசுத்தங்களை அகற்ற லேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும். ஷாம்பூவைத் தொடர்ந்து கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, அதனை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க ஆடைகளை அணிவதற்கு முன் உடலை நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.



--

புதன், 3 ஜூன், 2026

சொத்தைப் பல் வராமல்தடுக்கும் எளிய வழி முறைகள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

ஆயில்புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்

கிராம்பு

2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்

உப்புதண்ணீர்

அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

மஞ்சள்

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் போக்கலாம் .

உணவுமுறைகளில்மாற்றம்

சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, , கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.



--

பசி எடுக்கும் போதுஎன்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

பசி என்பது எண்ணங்கள் , உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப் படுகிறது. நாம் உணவு உண்ணும் போத...

Popular Posts