லேபிள்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2020

மலம் கழிக்க ஆரோக்கியமான நேரம் எது?

இதர கடன் பிரச்சனைகளை விட, இந்த காலை கடன் பிரச்சனை தான் மனிதர்களை பாடாய்ப்படுத்தி விடும். எந்த சிரமும் இன்றி காலை கடனை கழிப்பவர்கள் தான் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள்.
இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம், உணவு கலாச்சார மாற்றங்கள் போன்றவை மலம் கழித்தலில் பிரச்சனைகள், கோளாறுகளை உண்டாக்குகின்றன.
மலம் கழித்தலில் உண்டாகும் பிரச்சனைகள் உங்கள் ஆரோக்கியத்தை மெல்லே, மெல்ல கரையான் போல அரிக்க துவங்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எது சிறந்த நேரம்?
நமது சிறுகுடல், முந்தய தினம், இரவு உண்ட உணவை செரிமானம் ஆனது போக கழிவை முதல் வேலையாக காலையில் தான் வெளியேற்ற தயாராகும். நீங்கள் கண் விழித்த முதல் 30 நிமிடங்களில் சிறுகுடல் கழிவுகளை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கும்.
சிரமமாக இருக்கிறதா?
காலை நீங்கள் கண்விழித்த உடன் முதல் வெளியாக செய்ய வேண்டியது மலம் கழிப்பது தான். ஒருவேளை மலம் கழிப்பதில் சிரமமாக உணர்ந்தால், ஒரு கப் காபி, இதமான சுடுதண்ணி, சுடுதண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
காலையில் மலம் கழிக்க முடியாவிட்டால்?
ஒருவேளை காலை வேளையில் மலம் கழிக்க முடியவில்லை, வரவில்லை, முயற்சித்தாலும் சிரமமாக இருக்கிறது எனில், கவலைப்பட வேண்டாம். தினமும் நீங்கள் சரியான நேரத்தில் மலம் கழிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
கோல்டன் ரூல்!
சிலருக்கு 8 மணிக்கு, சிலருக்கு காலை சிற்றுண்டி கழித்த அரைமணிநேரம் கழித்து, சிலருக்கு அலுவலகம் சென்ற பிறகு கூட மலம் கழிக்க வரலாம். தினமும் ஒரே நேரத்தில் நீங்கள் சீராக மலம் கழித்தல், உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதை ஆங்கில மருத்துவ முறையில் கோல்டன் ரூல் என்றும் குறிப்பிடுகின்றனர்.
எத்தனை முறை இயல்பு?
ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து மூன்று முறை வரை மலம் கழித்தல் இயல்பு. இரண்டு நாளுக்கு ஒருமுறை அல்லது ஒரே நாளில் ஐந்து முறைக்கும் மேல் மலம் கழிக்க செல்லுதல் போன்றவை உங்கள் குடல் இயக்கம் மற்றும் செரிமானத்தில் ஏதோ மாற்றங்கள் உண்டாவதை உணர்த்துபவை.
எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 26 ஆகஸ்ட், 2020

நபிவழி மருத்துவம் (மண் சிகிச்சை)

      ரஹ்மத் ராஜகுமாரன்      
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரேனும் ஒரு மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது .ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து மண்ணைத் தொட்டு விட்டு அதை உயர்த்தி,
"பிஸ்மில்லாஹி, துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா" என்று கூறுவார்கள்
பொருள் :    அல்லாஹ்வின் பெயரால்... எங்களுள் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் இணைந்தால் அது எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களுள் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும். (நூல் : புகாரி 5745 - 5746, முஸ்லிம் 4417)
நீங்களும் நானும் இந்த மண் சிகிச்கையை செய்திருக்கிறோம். நபிகளாரின் சிகிச்சை என்று நமக்கு தெரியாமல் அது எப்படி நாம் செய்யும்படி எது தூண்டியது ?
ஷாலீனூஸ் என்னும் மருத்துவ அறிஞர் கூறுகிறார் :
எகிப்தில் உள்ள இஸ்கந்தரிய்யா நகரில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோர் , தலையில் அல்லது மூளையில் நீர் தங்கிய நோயால் பாதிக்கப்பட்டோர் (Hydrocaphalus Dropsy ) பெரும்பாலோர் தம் தாய் நாடான எகிப்தின் மண்ணைப் பயன்படுத்தி சிகிச்சை செய்வதை நான் பார்த்திருக்கிறேன் .மண்ணை நீர் விட்டு குழைத்து அவர்கள் தம் கெண்டைக்கால்கள், தொடைகள் , முன்னங்கைகள், முகுதுகள், விலாப்புறங்கள் ஆகியவற்றில் தடவிக் கொள்கிறார்கள் .இதனால் கடுமையான வீக்கங்கள், தொங்கு சதைகள் (Flaccid ) ஆகியவற்றின் மீதும் மண்ணை பூசிக்கொள்கிறார்கள் .
அல்கிதாபுல் மஸீஹீ எனும் நூலாசிரியர் கூறுகிறார் :
கனூஸ் எனும் தீபகற்பத்தில் உள்ள களிமண்ணின் ஆற்றல் புண்களிலுள்ள அழுக்குகளை அகற்றி அல்லது கழுவி விடுகிறது. மேலும் அப் புண்களில் தசைகளை வளரச் செய்து, காயங்களை முடிவுக் கொண்டு வருகிறது 
மண் சிகிச்சை என்பது என்ன ?
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆட்கொள்ளப் பட்டு இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு என்றாலும் உலகம் அழிவு நிலைக்குச் சென்றுவிடும்.
இவற்றுள் மண்ணைப் பற்றியும், அதில் அடங்கியுள்ள மருத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.
மண் உயிர்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் அரண். மண்ணை பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணில் மருத்துவக் குணங்களும் உண்டு. இதை சித்தர்கள் அன்றே உணர்ந்து மண்ணின் மருத்துவ மகிமையைக் கூறியுள்ளனர்.
மனிதனின் பேராசையால் மண் சீரழிக்கப்பட்டு வருகிறது. இரசாயன வேதிப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகள் இவற்றால் மண் வளம் கெட்டுவிட்டது. விவசாயம் செழித்த நிலங்கள் உவர் நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. மண்ணின் மகத்துவம் புரியாமல் அவற்றின் மேல் கான்கிரீட் தளங்களை அமைத்துவிட்டோம். இதனால் பசுமையை இழக்கிறோம்.
உலக உயிர்களை எல்லாம் வாழ வைப்பது மண்தான். அதோடு அதற்கு தேவையான உணவு வகைகளை வளர்த்துத் தருவதோடு தானே மருந்தாகவும் அமைகிறது.
மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதிலுள்ள மருத்துவ மகிமைகளைகண்டு மண்குளியல், மண்பட்டி என இரு சிகிச்சை முறைகளைக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
மண் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கிறது.
இதில் மருத்துவத்திற்காகப் பயன்படுவது சுத்தமான புற்று மண் மட்டுமே. இதில் உப்பு, உவர், சுண்ணாம்பு, கந்தகம், மைக்கா என எதுவுமே கலந்திருக்கக் கூடாது. மண் ஊறவைக்கும் நீரும் அவ்வாறே தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இத்தகைய மண் இரத்த ஓட்டத்தடை, தூக்கமின்மை, நரம்புத் தளர்வு, தோல் நோய்கள் போன்றவற்றுக்குச் சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது.
இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பலவகைச் சிகிச்சை முறைகளில் மண் சிகிச்சையும் ஒன்று.
புற்று மண்ணுக்கு உறிஞ்சும் சக்தி உண்டு. வெப்பத்தை கிரகிக்கும் தன்மையும் உண்டு.
மண் சிகிச்சை இரு வகைகளில் அளிக்கப்படுகிறது.
1. மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் சிகிச்சை.
2. மண்பட்டி – மண்ணை துணியில் சுருட்டி, வேண்டிய இடத்தில் பட்டி போடுவது.
1) உடல் முழுவதும் மண் பூசுவது அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் பூசுவது என இரு வகைகளில் மண்பூச்சு சிகிச்சை முறை நடைபெறுகிறது.
நன்கு குழைத்த மண்ணைப் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வருவதுதான் இந்த சிகிச்சை முறை. இதனை குளிர்காலத்தில் செய்யக் கூடாது. வெயில் நேரத்தில் நிழலில் அமர்ந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.
குழைத்த மண்ணை காலிலிருந்து மேல் நோக்கி பூச வேண்டும். கண், வாய், காது தவிர்த்து உடல் முழுவதும் பூசுதல் நல்லது.
இதனால் உடல் சூடு தணிகிறது.
உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தின் நிலை சீராகுகிறது. தச வாயுக்களின் செயல்பாடு தூண்டப்படுகிறது. பித்த அதிகரிப்பு குறைவதால் இரத்தம் சுத்தமாவதுடன் இரத்தம் தங்குதடையின்றி உடல் முழுவதும் சென்று அடைகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நீர்களை மண் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றன. நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன. எலும்புகள் வலுவடைகின்றன. மேலும் மன அழுத்தம் குறைகிறது. சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பாதுகாப்படைகிறது. அதுபோல் உடலில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கட்டி, புண், படை போன்றவற்றுக்கு அப்பகுதியில் மண் பூச்சைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.
2) வயிற்றைச் சுற்றி மண் பற்றுப் போட்டால் அசீரணம், மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும். நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
இன்றும் கிராமங்களில், சோப்புகளுக்குப் பதிலாக கரப்பான் என்ற மண் வகையை உடம்பில் தேய்த்து குளிக்கும் வழக்கம் உள்ளது.
மண்ணை, வயிற்றுப் பகுதியில் வைத்துக் கட்டினால் அஜீரணம், வாயுக் கோளாறு, வயிற்றுப்பொருமல் போன்றவை நீங்கும். மேலும் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதால் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக மண் பட்டியை 15 நிமிடங்களுக்கு மேல் கட்டியிருக்கக் கூடாது.
கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு மண்பட்டி சிகிச்சை நல்லது.
ஆகையால்தான் இயற்கை சிகிச்சை முறைகளில் மண் குளியல் முக்கிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள். பழங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் இதை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் சிறந்த சிகிச்சை முறையாக செய்தும் வருகிறார்கள்.
-ரஹ்மத் ராஜகுமாரன்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

உடலின் எந்த ஒரு பாகத்தில்பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்குபயிற்சி அளித்தே சரி செய்யலாம்!

 கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 19 ஆகஸ்ட், 2020

தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!

இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள். அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்...இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல்.
இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது... வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, "தும்மல்" எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள்.
அமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் "God Bless You" (இறைவன் அருள் புரியட்டும்) என்று சொல்வான்.
தும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை.
முஸ்லிம் தும்மினால், "எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே" (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்..அதைக் கேட்பவன், "உனக்கு இறைவன் அருள்புரியட்டும்" என்று சொல்வான். இது தான் ஆண்டிப்பட்டியில் உள்ள முஸ்லிமும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் செய்கின்றான். அதுவும் இன்று நேற்றல்ல... 1400 வருடங்களுக்கும் மேல், இன்னும் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை. இது எப்படி சாத்தியம்?
உலகில் எவ்வளவு மிகப் பெரிய தலைவராக இருந்தாலும் (அ) அரசாக இருந்தாலும் இது போன்ற காலத்தால் அழியாத, உலக மக்கள் அனைவருக்கம் ஏற்ற ஒரு பழக்கத்தை கொண்டு வரவே முடியாது. தும்மல் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே....இஸ்லாத்தின் எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்... universal principal..
சமூகத்தில் உயர்ந்த்தவனுக்கு ஒரு கலாச்சாரம், தாழ்ந்தவனுக்கு ஒன்று அல்ல என்று நிரூபிக்கும் நெறி முறைகள்..
இறைவனால் மட்டுமே முடியும்... இஸ்லாம் சான்று பகிகின்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

நபி மருத்துவமும் உடற்பயிற்சியும்

நபி மருத்துவம் பற்றிப் பேசும் நூல்கள் உடற்பயிற்சிக்கான பக்கங்களையும் ஒதுக்கியுள்ளன. உடற்பயிற்சியைக் குறிக்க ரியழா என்ற சொல் அரபு மொழியில் பயன்படுகிறது. இச்சொல் விரிவான அர்த்த்த்தில் கையாளப்படுகின்றது. ரியாழா உடற்பயிற்சியைக் குறிக்கும் அதேவேளை, உளப்பயிற்சி, புலப்பயிற்சி என்ற அர்த்தங்களிலும் பாவிக்கப்படுகின்றது.
உடற்பயிற்சியிலும் பல தராதரங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு, கட்டிளமைப் பருவத்தினருக்கு ஒரு விதமாகவும் வயோதிபருக்கு வேவொரு விதமாகவும் சுக்தேயிகளுக்கு இன்னொரு விதமாகவும் நோயாளிகளுக்கு வேறுவிதமாகவும் அமைந்துள்ளது. அசைவியக்கம் என்பது இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நவீன மருத்துவத்தில் Physio – Therapy என்ற பகுதியே தனியாக வளர்ந்துள்ளது. பின்வரும் நிலமைகளில் உடற்பயிற்சி அவசியமானதாக மாறுகின்றது.
மூட்டு, முறிவுகளை அடுத்து, பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டால் இருதய நோயாளிகளுக்கு, அஜீரன நோயாளிகளுக்கு, செமிபாட்டுத் தொகுதி கோளாறுகளுக்கு, தோற்புயங்கள் பலவீனமடையும் போது, சத்திரசிகிச்சை மேற்கொண்ட பின்பு, பிரசவத்தின் பின்பு, உடல் பருமனைக் குறிக்க, மூட்டு வலிகளுக்கு, சில உறுப்புக்களின் அசைவுக் குறைபாட்டைப் போக்க என்று உடற்பயிற்சியின் பரப்பு விரிந்து செல்கின்றது. நபிகளின் மருத்துவக் கண்ணோட்டத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேலதிக உணவால் வரும் உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.
உடற்பயிற்சி அசைவுகளால் உணவு விரைவாக செரிமானம் அடைகின்றது. உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் மேலதிக உணவு இதனால் இல்லாமல் போகின்றது. மேலதிகமாக உண்பது சோம்பலாய் இருப்பது, அசைவியக்குறைவு போன்றவை உடலுக்குத் தீங்காக அமைகின்ற பழக்கங்களாகும். இவை பின்னர் பல நோய்களுக்கு காரணமாக இருக்கும். அல்லது உடல் பருமனுக்கு இட்டுச் செல்லும். உணவு மருந்தைப் போல எதிர்மறைப் பண்புகளையும் கொண்டுள்ளது. சில போது நச்சுத் தன்மையையும் கொண்டுள்ளது. இத்தகைய அபாயங்களிலிருந்து தப்ப வேண்டுமானால் உடற்பயிற்சிதான் சரியான வழியாகும். அல்லது நபி வழியில் நோன்பு நோற்பதும் ஒரு வழிமுறையாகும்.
உடற்பயிற்சி உடல் பாரத்தைக் குறைத்து சுறுசறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இயங்க வைக்கின்றது. மூட்டுக்களையும் புயங்களையும் பலப்படுத்துகின்றது. உடல் நோய்களும் உள நோய்களும் வராமல் பாதுகாக்கின்றது. திப்புந் நபவி ஆசிரியர்களின் வார்த்தைகளில் கூறுவதானால் தேவையான நேரத்தில் தேவையான அளவில் உடற்பயிற்சி செய்வது அனைத்து வகையான சட ரீதியான நோய்களிலிருந்தும் கூடுதலாக உள நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்குகின்றது என்று கூறுகின்றார்.
நபிகள் மருத்துவம் உடற்பயிற்சிக்கான நேரத்தை வரையறுக்கின்றது. உணவு பூரண செரிமானம் அடைந்த பின்பே பயிற்சி இடம்பெற வேண்டும் என்பது நபிகள் மருத்துவத்தில் ஒரு முன்நிபந்தனையாகும். இவை இன்றைய விளையாட்டு மருத்துவ ஆய்வுகளோடு ஒத்துச் செல்கின்றது. சாப்பிட உடனேயே உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்குத் தீங்கு பயக்கின்றது. சாப்பிட்டவுடன் குடல், செமிபாட்டுத் தொழிற்பாடு ஆரம்பமாகின்றது. அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் இருதயத் துடிப்பு சிரம்மாக மாறும். குறிப்பாக வயோதிபர்கள், இருதய நோயாளிகளுக்கு இது இன்னும் கஷ்டமாகும்.
நபிகள் மருத்துவத்தில் பல வகையான உடற்பயிற்சிகள் கூறப்பட்டுள்ளன. நபிகள் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. விளையாட்டு, மற்றும் உடற்பயிற்சிகளை ஒருங்குபடுத்தி நடத்துவதற்கான ஒரு குழுவையும் நபிகள் வைத்திருந்த்தாக இமாம் அல் கத்தானி கூறுகின்றார். இது இன்றைய விளையாட்டுத் துறை அமைச்சை நமது நினைவுக்குக் கொண்டு வருகின்றது. இக்குழுவினர் சீஸனுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவார்கள். நபிகளும் அவரது மனைவிமாரும் அங்குராட்பன விளாவில் கலந்து ஆரம்ப்ப் போட்டிகளில் ஈடுபடுவார்கள்.
நபிகள் மருத்துவத்தில் நடைபோடுதல், குதிரைச் சவாரி, அம்பெரிதல், மல்யுத்தம், ஓட்டப்போட்டி, நீச்சல், ஹஜல் நடனம், ரக்ஸ் என்னும் போர்ப்பறை நடனம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தவிர நட்பணி, சமூக சேவை போன்ற காரியங்களையும் திப்புந்நபவி ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எல்லா உடற்பயிற்சிகளிலும் அல்லது விளையாட்டுக்களிலும் தலையாயது நீச்சல் என்றும் நபிகள் குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சிகளை மென்பயிற்சிகள், பாரமான பயிற்சிகள் என வகைப்படுத்துவதுமுண்டு.
உண்மையில் நீச்சல் மிகவும் நெகிழ்வுத் தண்மையான உடலுறுப்புகளுக்கு ஊறுகள் வராத உடற்பயிற்சியாகும். இது அல்லாமல் இஸ்லாம் கூறும் தொழுகை போன்ற வழிபாடுகளும் மென் உடற்பயிற்சிகளை சார்ந்தவையாகும். நிலையில் நிற்றல், கைகளை உயர்த்துதல், கைகளைத் தாழ்த்துதல், கைகளைக் கட்டிக் கொள்ளல், இடுப்பை வளைத்துக் குணிதல், பல்வேறு இருப்பு நிலைகள், நிலத்தில் நெற்றியை வைத்தல் போன்ற பல ஆசன முறைகளை உள்ளடக்கியதாக தொழுகை காணப்படுகின்றது. நோன்பும் உள்ளம் உடல் இரண்டுக்குமான ஓர் பயிற்சி வழிமுறையே. வருடத்தில் ஒரு மாதம் பகல் காலங்களில் பல மணித்தியாலங்கள் நோன்பு நோற்பதால் உடல் உறுப்புக்களும் மனமும் சிறந்த பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்றன.
உடற்பயிற்சிகள் ஆளுக்கால் வேறுபடும் என்பதை ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளோம். குறிப்பாக வயதானவர்களுக்கு நடத்தல் பயிற்சியே பொருத்தமானது என கூறப்படுகின்றது. நபிகளும் இதனையே வலியுறுத்தியுள்ளார்கள். மனித உடலில் குருதி செல்லும் நாடி, நாளங்கள் அடைபடுவது ஓர் ஆட்கொல்லி நோயாகும். இதற்கு இன்று மருத்துவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியே தேவை எனக்கூறுகின்றார்கள்.
உடற்பயிற்சித் துறையில் நபிகள் மருத்துவம் உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கவே விரும்புகின்றது. நவீன மேற்கு மருத்துவம் சிகிச்சை அளிப்பதிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் இன்று மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டுவருகின்றது. ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படைகளைக் கண்டுகொள்வதிலும் அது மிக நுண்ணிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்றைய மருத்துவத்தின் உச்சமாக உடற்பயிற்சி, அசைவுத் தொழிற்பாடு, சுற்றுழா, உணவுப் பழக்க முறைகள் போன்றவையே விதந்து போற்றப்படுகின்றன.
மருந்துப் பாவனைகளைவிட உடற்பயிற்சியே சிறந்த மருந்தும் ஆரோக்கியம் என்ற கருத்துக்கு முழு உலகமும் இன்று வந்து சேர்ந்துள்ளது. குருதிச்சுற்றோட்டத்தை சீரமைப்பதற்கும் உடலின் சீரான அமைப்பை, வளர்ச்சியை பேணுவதற்கும் பல நுண்ணிய உடற்பயிற்சிகளும் அதற்குரிய கருவிகளும் வீட்டுக்குள்ளேயே வந்து சேர்ந்துவிட்டன. இதில் வியாபாரப் போட்டியும் நிலவுகின்றது.
இந்த நுண்ணிய பயிற்சிக்கான சான்றாதாரங்களையும் திப்புந் நபவி நூல்களில் காணக்கிடைக்கின்றன. இதை தொழுகை போன்ற வழிபாடுகளில் அவதானிக்க முடியும். யோகா போன்ற அப்பியாசனங்களில் காணப்படும் பல பயிற்சி நுட்பங்களை தொழுகையும் கொண்டுள்ளது. இஸ்லாம் இந்த வழிபாடுகளை தனிமனித விருப்புக்குரியதாக விட்டுவிடவில்லை. அவற்றை ஒரு சமூக ஆற்றுகையாக அமைத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் நன்மை கிடைக்கும் எனவும் கூறி உடற்பயிற்சியை வாழ்நாள் பூராகவும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது.
source: http://idrees.lk/?p=1809  (جَزَاكَ اللَّهُ خَيْرًا )

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

நெஞ்செரிச்சல் - காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்!

      ஜெ.நிவேதா       
வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால், அதுவே ஒரு நோயாகக்கூட மாறலாம். அதனால் ஏற்படும் சில பிரச்னைகள் குறித்தும், அதற்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து இதயநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் குகன்நாத் விரிவாகச் சொல்கிறார் இங்கே...

    ஏன் ஏற்படுகிறது?    
நாம் உண்ணும் உணவு, உணவுக்குழாய் (Esophagus) வழியாக வயிற்றுப்பகுதியைச் சென்றடையும். உணவுக்குழாயின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் (இரைப்பைக்கு மேல்) திறந்து, மூடும் வடிவிலான தசைகள் இருக்கும். மேலே உள்ள தசை, நாம் சாப்பிடும்போது உணவு மூச்சுக்குழாய்க்குள் போய்விடாமல் இருக்க உதவக்கூடியது. அதேபோல் கீழே உள்ள தசை, இரைப்பைக்குச் சென்ற உணவு அதன் அமிலத்தன்மை காரணமாக மேல்நோக்கிச் சென்றுவிடாமல் இருக்க உதவும்.
ஆனால், செரிமானத்தின்போது வெளியாகும் அமிலமானது, உணவுக் குறைபாடு காரணமாகவோ, இரைப்பை அழற்சி காரணமாகவோ இரைப்பையின் அருகில் இருக்கும் மூடிகளின் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மேல்நோக்கி உணவுக் குழாயில் பயணிக்கத் தொடங்கும். இந்த நிகழ்வின்போது உணவுக்குழாயின் இருபக்கங்களிலும் அமிலம் தேங்கிவிடும். இதன் காரணமாகத்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
      காரணங்கள்...    
உடல் பருமன், புகைபிடித்தல். மது அருந்துதல், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துகள் (உதாரணமாக ஆஸ்பிரின், வலி நிவாரணிகள்) போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். சிலருக்கு, இரவுத் தூக்கத்தின்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவு உண்டவுடன் செரிமானத்துக்கு நேரம் தராமல் உறங்குவதால், வயிற்றில் உருவாகும் அமிலம் உணவுக்குழாயை நோக்கி நகர்ந்து பிரச்னையை ஏற்படுத்தும்.
    ஆபத்துகள்      
`Gerd' எனப்படும் செரிமானக் கோளாறுகளுக்கு, நெஞ்செரிச்சல் மிகமுக்கியமான அறிகுறி. இதில் Gerd 1,2,3 என மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகைகளையும் மருந்து மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சரிசெய்துவிடலாம். மூன்றாவது வகை, ஆபத்தானது. இரைப்பைக்கு மேலிருக்கும் சுருங்குத் தசைகள் முற்றிலுமாக அழிந்துவிடுவதையே இதுகுறிக்கும். நெஞ்செரிச்சலைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்கு லேப்ரோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை செய்யவேண்டியது அவசியம்.
அக்கறை எடுத்துக்கொள்ளாமல் விடப்படும் நெஞ்செரிச்சல்கள், அதன் தொடர்ச்சியாக பித்தப்பைக் கட்டி, அல்சர், குடலிறக்கம், இரைப்பை வாதம், சுருக்கத் தசைகள் அழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை கவனத்தில் கொண்டு அவற்றைத் தவிர்க்கவில்லையென்றால், பேரட்'ஸ் ஈஸோஃபேகஸ் (Barrett's esophagus) என்ற பாதிப்பு ஏற்படும். இந்தப் பாதிப்பு வந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை எண்டோஸ்கோப்பி செய்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய வேண்டும். கவனிக்காமல்விடும் பட்சத்தில், இது புற்றுநோய் பாதிப்பாக மாறும்.
சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, முதுமை போன்றவற்றால் இதய பாதிப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சுவலியை சிலர் நெஞ்செரிச்சல் என்று தவறாக எண்ணிக்கொள்வதுண்டு. இதுபோன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 10 நாள்களுக்கும் மேலாக நெஞ்செரிச்சல் தொந்தரவு இருக்குமேயானால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    எப்படிக் கண்டறிவது?    
உணவு உண்ணும்போது, உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவது, குரல்வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நீடிப்பது, (ஒரு வாரத்துக்கும் மேல் கரகரப்பான குரலில் பேசுவது, அதிகம் தண்ணீர் தாகம் எடுப்பது முதலியவை) இரவு தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டு இருமுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
குண்டாக இருப்பவர்கள், அதிகம் சாப்பிடுபவர்கள், இறுக்கமான ஆடை அணிபவர்கள் மற்றும் புகை சூழ்ந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு முறைக்கும் மேல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மரபுரீதியாக ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆகவே, குடும்பத்தில் யாருக்கேனும் உணவுக்குழாய் சிக்கல்களோ, உணவுக்குழாயில் புற்றுநோயோ இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
    எப்படித் தவிர்ப்பது?     
சாப்பிட்டவுடன் உறங்குவதைத் தவிர்க்கவும். இரவுநேரத்தில், உணவுக்கும் உறக்கத்துக்கும் மூன்று மணிநேர இடைவெளி விட வேண்டும். அதிகமாக சாப்பிடக் கூடாது. நொறுக்குத்தீனிகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பாதி வயிறு உணவும், மீதித் தண்ணீருமாக இருக்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைவிட்டு முழுமையாக வெளிவர வேண்டும். குறிப்பாக இரவில் குறைவாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
சாக்லேட் அதிகம் சாப்பிடாமலிருப்பது, டீ -காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ஃப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை (சிட்ரஸ், கால்சியம்) உட்கொள்ளாமலிருப்பது நல்லது. கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. வேறு சில மருத்துவச் சிகிச்சைகள் எடுப்பவர்கள், இந்த நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.
     சிகிச்சை     
அமிலத்தன்மையைக் குறைக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டவுடன் சிலர் ஜெலுசில் (Gelusil), ரானிடிடின் (Ranitidine) போன்ற மாத்திரைகளை உட்கொள்வார்கள். இது தவறில்லை என்றாலும், பத்து நாள்களுக்கும் மேல் தொடர்ச்சியாக ஜெலுசில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. நிறைய தண்ணீர் குடித்துவர வேண்டும். சரியான அளவு தூக்கம் அவசியம்.
Vikatan

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

கண்புரை (Cataract) நோய்க்குகுர்ஆன் கூறும் மருந்து

 
சுவிஸ் மருந்துக்கம்பெனி,   குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில்   கண்புரை நோய்விற்கு அறுவை சிக்கிசை இல்லாமல்  ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள்.
இது சம்மந்தமான செய்தி கத்தார்நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின் வேர்வை(Secretions of human Sweat Gland)யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள, எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார்.
பின்னர் அதை ஐரோப்பா மற்றும் அமெக்கா போன்ற நாட்டில் பதிவு செய்தார். அந்த குறிப்பிட்ட பொருளில் இருந்து சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பில் ஈடுப்படுகிறார்கள்.
சூரா யூசுஃப் என்ற திருக்குர்ஆனின் அத்தியாயமே டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் கண்புரை நோய்க்கு மருந்து உருவாக்க துண்டியது. அவர் கூறுகிறார், ஒரு நாள் காலை நேரத்தில் சூரா யூசுஃப் படித்துக் கொண்டு இருந்தேன்.
அச்சூராவின் 84 மற்றும் அடுத்து வரும் வசனங்கள் என் சிந்தனையை துண்டியது
اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ
"நீங்கள் என்னுடைய   இந்த சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள்.   (அதனால் உடனே)   அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார்.  பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார். (அல்குர்ஆன் 12:93).
நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கவலையினாலும், வருத்தினாலும் கண்புரை நோய் வந்தது, பின்னர் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையினால் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்தது. டாக்டர் இதற்கு என்ன காரணம் இருக்கும் என்ற ஆய்வில் இருந்த சமயத்தில் அவரின் சிந்தனைக்கு வந்த பொருள் தான் மனிதனின் வேர்வை. அவர் அதை சில சோதனை விலங்குகளில் ஆய்வு செய்தார்.
அது நேர் மறையான தாக்கங்கள் தந்ததின் அடிப்படையில் 250 கண்புரை நோயாளிகளுக்கு அம்மருந்தை தினத்தோறும் இருமுறை என இரண்டு வாரம் தந்தார்.அதில் அவருக்கு 99சதவிதம் வெற்றியை தந்தது.
அதன் பின் அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற நாட்டில் உள்ள சில ஆய்வு நிருவனங்களுடன்(Medical laboratory) மேலும் சில ஆய்வுகளை செய்து பின்னர் சுவிஸ் நாட்டை மையமாக கொண்ட மருந்து கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தார்.
மேலும் அந்த மருந்தில் "Medicine of Quran" என்ற வாசகத்தை பதியவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதன் உரிமையை தந்துவிட்டார். அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்திற்கு அருமருந்தாக தந்துள்ளான். இதை தான் அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்;
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
''நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 17:82).

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts