லேபிள்கள்

சனி, 29 ஏப்ரல், 2023

பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவதால்இத்தனை பயன்களா...?

தேன் மற்றும் பால் ஒரு உன்னதமான கலவையாகும். தேனுக்கு பல மருத்துவ குணங்களும், அதேபோன்று பாலுக்கு பல மருத்துவ குணங்களும் இருக்கின்றன.

சர்க்கரையை தவிர்த்து, அதற்கு பதிலாக பாலில் ஒரு ஸ்பூன்ஃபுல் தேன் கலந்து சாப்பிடுங்கள். பின்வருவனவற்றில் இதன் ஆரோக்கியமான நன்மைகளை பற்றி  தெரிந்துகொள்ளுங்கள்.

பால், கால்சியத்தின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாக இருப்பது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

தேனுடன் பால் குடிப்பது சுவாசப் பிரச்சினைகளைத் தடுக்க ஒரு சிறந்த தீர்வாகும். சூடான இந்த பானம் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளை எளிதாக்க பாக்டீரியாவைக் கொன்று வெளியேற்றுகிறது. தொண்டை புண் நோயால் பாதிக்கப்படும்போது பால் மற்றும் தேன் கலவை ஒரு சிறந்த தீர்வாகும்.

சளி சிகிச்சைக்கு மற்றும் இருமலை எளிதாக்க பாரம்பரிய மருத்துவத்தில் பால் மற்றும் தேன் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தேன் மற்றும் பால் சுவாசக்குழாய்  தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் நல்லது.

பால் மற்றும் தேன் இரண்டும் ஒன்றாக இணைக்கும்போது, அவை உங்கள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலிருந்து செரிமானம், தூக்கக் கோளாறுகள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவது வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

பால், தேன் கலந்த இந்த பானத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயிற்றில் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இது நல்ல குடல் பாக்டீரியாவை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், எந்த வயிற்று பிரச்சனைகளிடம் இருந்தும் உங்களை மீட்க இந்த பானம் உதவுகிறது

https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/corona-cases-cross-in-india-again-increased-121060400024_1.html


--

புதன், 26 ஏப்ரல், 2023

பெண்கள் ஹை ஹீல்ஸ் போடுவதால் என்ன ஆகும் தெரியுமா?


உயரம் குறைவாக இருப்பவர்கள் மட்டுமல்ல சராசரி உயரம் இருப்பவர்கள் கூட இந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிகிறார்கள். இங்கு பெண்களைத்தான் குறிப்பிடுகிறோம். ஏன்? அவர்கள்தான் ஹை ஹீல்ஸ் பிரியைகளாக இருக்கிறார்கள்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து அணிந்தால் நிரந்தரமான வலியை பெண்கள் உணரத் தொடங்கிவிடுகிறார்கள்.

சற்றும் பொருத்தமில்லாத வெறும் ஃபேஷனுக்காக அணியும் இத்தகைய ஹை ஹீல்ஸ் செருப்புகளால் மூட்டு அழற்சி, ஸ்ட்ரெஸ் எலும்பு முறிவுகள், இறுக்கமடையும் நரம்புகள் என்று பிரச்சனைகள் அதிகரிப்பதாக மைக் 'நீல் என்ற மருத்துவர் எச்சரிக்கிறார்.

லண்டனில் இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற வசதியற்ற ஹை ஹீல்ஸ்களை அணிவதால் அனைத்து பெண்களும் நீக்கமற வலி உள்ளிட்ட பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முக்கால்வாசிப் பெண்கள் வெறும் பாஷனுக்காக, அது பார்க்க அழகாக இருப்பதற்காகவே இதனை அணிவதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்த 10 நிமிடங்களிலேயே பல இடங்களில் வலி உருவாவதாக பெண்கள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பலர் பேஷனுக்காக வெளியில் போட்டுக் கொண்டு சென்று விட்டு பிறகு வலி தாங்க முடியாமல் வெறும் காலுடன் வீட்டுக்கு திரும்பவும் நேரிட்டுள்ளது.

மேலும் ஹை ஹீல்ஸ்களால் பித்தவடிகள் தோன்றுவதும் உண்டு என்கின்றனர், இந்த ஆய்வாளர்கள்.

18 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களே அதிகம் இத்தகைய ஹை ஹீல்ஸ்களை விரும்புகின்றனர். அவர்களுக்கு தங்கள் கால்கள் அழகாயில்லை, கவர்ச்சியாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகியுள்ளது. இதனால் ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால்கள் அழகாகி விட்டதாக ஒரு கற்பனை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்கிறார் டாக்டர் ஓ'நீல்.

அதுவும் நம்மூர் சாலைகள் திடீர் குண்டு குழிகளை உடையது ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு நொடித்து விட்டால் அவ்வளவுதான் சில பலவீனமான கால்களில் நரம்பு பிசகிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

பல இளம் பெண்கள் போட்டுக் கொள்ளும் ஹை ஹீல்ஸை பார்க்கும்போது 'பார்த்து செருப்புலேர்ந்து மெதுவா இறங்குங்க'ன்னு சொல்ல வேண்டும்போல்தான் இருக்கிறது.

ஆகவே இளம் பெண்களே ஹை ஹீல்ஸை தவிருங்கள்

https://tamil.webdunia.com/article/home-remedies/do-you-know-what-it-is-like-for-women-to-wear-high-heels-121061000001_1.html


--

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

மூச்சுப்பயிற்சி செய்வதால் கிடைக்கும்நன்மைகள் !!

பிராணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணாயாமம் என்பது 'பிராண' மற்றும் 'அயாமாஎன்ற வார்த்தைகளின் கூட்டாகும். 

'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணாயாமம் என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

பிராணாயாமம்வால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.

* நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.

* மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல்  பெருகும்

* மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து  நிறுத்தும்.

* தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும். பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும்  பயன்படுகிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-breathing-exercises-121060700108_1.html


--

புதன், 19 ஏப்ரல், 2023

நகம் கடிப்பது நன்மையா ? தீமையா?


தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம்.

நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது.

மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே, நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்

https://tamil.webdunia.com/article/home-remedies/is-nail-biting-good-is-it-bad-121060500090_1.html

--

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

உணவு உண்ணும்போதுதவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்ன தெரியுமா....?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.  மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 

உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. 

கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள்  வருவதில்லை. 

உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.  உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே வைத்துக்கொண்டும் டி.வி பார்த்துக்கொண்டும் சாப்பிடகூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சிதயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை  பரிமாறக் கூடாது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-some-of-the-things-to-avoid-while-eating-121061100091_1.html

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx5


--

வியாழன், 13 ஏப்ரல், 2023

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் !!


உடலுக்கு நோய்களோ, அல்லது ஏதேனும் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டால் தான் அதை பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறோம். அதிக உழைப்பின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரே வழி தினமும் ஒரு மணி நேரம், வேண்டாம் ஒரு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்வது தான்.

அதிகாலையில் செய்யும் நடைப்பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனனும் வேலை செய்ய முடியும். நடக்கும்போது  பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது.

வாக்கிங் செல்வதால் நரம்புகளுக்கும், சதைகளுக்கு நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், குறைகிறது.

சுறு சுறுப்பு உண்டாகிறது. சுவாசப் பிரச்சனை, செரிமானப் பிரச்சனை சீராகிறது. முகத்தில் பொலிவு, புத்துணர்ச்சி உண்டாகிறது. உடல் எடை குறையும்.

எலும்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும். சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. உடலின் உள்ளுறுப்புகள் பலம் பெறும். தசைகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை என்பது நோயல்ல. இது ஒரு வகையான ஆரோக்கிய குறைபாடு. இக்குறைபாட்டை நாம் தினமும் நடை பயிற்சி மேற்கொண்டே சரி செய்து விடலாம். எனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக நடை  பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்கள் வாக்கிங் செல்வது அவர்களின் இதயத்திற்கும், மனதிற்கும் மிகச் சிறந்தது. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு 100 சதவீதம்  ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. இதனால் நீங்கள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக, கட்டாயமாக நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடை பயிற்சி மேற்கொள்வதால் இதயம் பலமடைகிறது. மேலும்  மூச்சு குழாய் சீராக செயல்படுகிறது.

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறைந்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதனால் ஜீரண  சக்தி அதிகரித்து செரிமானம் சீராகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/varagu-it-improves-digestive-power-121061200033_1.html


--

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

கல் உப்பு சேர்த்து குளிப்பதால் என்னபயன்கள்...?

நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. 

சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு. ஆனால் குளியலுக்கு  பயன்படுத்தும் உப்பானது எந்த கலப்படமுமின்றி நேரடியாக ஆவியாதலிலிருந்து பெறப்படுகிறது. ஆவியாதல் மூலம் நேரடியாகப் பெறப்படும் இந்த உப்பில் விட்டமின் தாதுப்பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.

இந்த கடல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளது. இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரின் அளவுக்கு  ஏற்ப நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்கலாம். 

சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். குறைந்தது இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவேண்டும். நீங்கள் குளிக்கும் இந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து இரண்டு டிகிரி அதிகமான வெப்பநிலையில் இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் குளிக்கும் போது ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். அதோடு இரத்த ஓட்டம் சீராவதால் சருமம் பொலிவாக மாறும். தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும்.

இந்த கடல் உப்பு குளியல் சிலருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதாவது பிரச்சனை வந்தால் தவிர்த்து விடுங்கள். அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு, தேமல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த குளியலை நீங்கள் செய்யும்  முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-taking-a-bath-with-crystal-salt-121061500038_1.html


--

வியாழன், 6 ஏப்ரல், 2023

யாருக்கெல்லாம் மூட்டு வலி பிரச்சனை இருக்கும் தெரியுமா...?


நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. இதில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.

மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறோம். வயதாகும்போது, உடல்சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால்மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல. 

உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய்சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும். 

சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள்பட்டைகை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும்  தோள்பட்டை வலி. 

நீண்டநாள் பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். எனவே, முதல்நிலையிலேயே பிரச்னையைக்  கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம்

https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/corona-daily-cases-drop-down-near-1-lakhs-121061800027_1.html


--

திங்கள், 3 ஏப்ரல், 2023

உடலில் தங்கியிருக்கும் நச்சுகளைவெளியேற்ற உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்.

அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம். 

 காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும். 

 இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர் காலையில் அருந்தும் டீயில்  இஞ்சி சேர்த்து அருந்துவதால் அவை உடலைச் சுத்தமாக்கும். 

 இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும். 

 வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. 

 கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

 கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றி. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்; மலம் எளிதாக வெளியேறும். மற்றும் திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-eating-coconut-flower-often-121061600040_1.html


--

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts