லேபிள்கள்

திங்கள், 30 மார்ச், 2015

புது கார் வாங்கியிருக்கீங்களா..??..கொஞ்சம் இத படிச்சிட்டு போங்க…

புது கார் வாங்கியிருக்கீங்களா..??..கொஞ்சம் இத படிச்சிட்டு போங்க

பொதுவாக புதிய வாகனங்களை வாங்கும்போது முதல் 1,000 கிலோமீட்டருக்கு மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை ரன்னிங் இன் பீரியட் என்று கூறுகின்றனர். தயாரிப்பாளர்கள் முதல் 1,000 கிமீ தூரத்தை ரன்னிங் இன் பீரியடாக கொடுக்கின்றனர். ஆனால், 2,500 கிலோமீட்டர் தூரம் வரை மிதமான வேகத்தில் ஓட்டுவது சாலச்சிறந்தது.எஞ்சின் சிறப்பாக செயல்பட உதவுவது மட்டுமின்றி தயாரிப்பு நிலைகளில் ஏற்படும் குறைகளால் சில கசப்பான அனுபவங்களை தவிர்க்க உதவும்.
எஞ்சின் சிறப்பாக இயங்குவதற்கு சிறிது அவகாசம் தேவை. புதிய எஞ்சின்களில் தயாரிப்பு நிலைகளில் சிறு குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. சிலிண்டருக்குள் பிஸ்டன்கள் சரியாக பொருந்தி மேலும், கீழும் ஸ்மூத்தாக இயங்க வேண்டும். பிஸ்டன் இயங்கும்போது அதன் ரிங்குகள் சிலிண்டர் சுவருடன் ஏற்படும் உராய்வு ஆயில் மூலம் குறைக்கப்பட வேண்டும். இது செட் ஆவதற்கு சிறிது காலம் பிடிக்கும். இதில் ஏற்படும் குறைபாடுகளால்தான் சில கார்கள் வாங்கியவுடன் மைலேஜும் கொடுக்காது; சிறந்த பெர்ஃபார்மென்ஸும் இருக்காது.
எனவே, மிதமான வேகத்தில் ஓட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்ச‌னைகள் சரியாகும். இதனாலேயே, முதல் சர்வீஸ் செய்த பின்னர் கார்கள் அதிக மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் தருவதற்கு காரணம்.
இது எஞ்சினுக்கு மட்டுமல்ல, கியர் பாக்ஸ், பிரேக்கிங் சிஸ்டம், பேரிங்குகள், டயர்கள் என அனைத்தும் செட்டிலாக கொஞ்ச காலம் பிடிக்கும். எனவே, ரன்னிங் இன் பீரியடில் காரை மிதமாக ஓட்ட வேண்டியது அவசியம்.
எஞ்சின் வார்ம் அப்:
காரை ஸ்டார்ட் செய்தவுடன் நகர்த்த வேண்டாம். எஞ்சினை 2 நிமிடங்கள் ஐட்லிங்கில் வைக்க வேண்டும். இதேபோன்று, எஞ்சினை ஆன் செய்த அடுத்த கணமே ஏசியை ஆன் செய்யாதீர்கள். கார் நகர்ந்து 2000 முதல் 2500 ஆர்பிஎம்மில் செல்லும்போது மட்டுமே ஏசியை ஆன் செய்ய வேண்டும். எடுத்தவுடன் காருக்கு கூடுதல் சுமையை கொடுக்க வேண்டாம்.
கியர் மாற்றுவது எப்படி?
சீரான வேகத்தில் செல்வது மட்டுமின்றி எஞ்சின் திணற விடாத வகையில் கியர் மாற்ற வேண்டும். 10 கிமீ வேகத்தில் இரண்டாவது கியரையும், 20 கிமீ வேகத்தை எட்டும்போது 2 வது கியரையும், 30 கிமீ வேகத்தில் 3 வது கியரையும், 40 கிமீ வேகத்தில் 4 வது கியரையும் மாற்றவும்.
வேகம்:
கார் வாங்கி முதல் 2500 கிமீ தூரம் வரையிலும் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்ல வேண்டாம். ரன்னிங் பீரியடை தாண்டியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லலாம்.
பிரேக்கை கையாள்வது எப்படி?
எஞ்சின் போன்றே பிரேக்குகளும் செட் ஆவதற்கு சிறிது காலம் பிடிக்கும். எனவே, பிரேக்குகளையும் மென்மையாக கையாள்வது சிறந்தது. அடிக்கடி சடன் பிரேக் அடிப்பதை தவிர்க்க வேண்டும். மிதமான வேகத்தில் செல்லும்போது கண்டிப்பாக சடன் பிரேக் அடிப்பதை தவிர்க்க முடியும்.
எஞ்சின் ஆஃப்:
காரை பார்க்கிங் செய்தவுடனேயே எஞ்சினை நிறுத்தி விட வேண்டாம். 30 வினாடிகள் எஞ்சினை ஐட்லிங்கில் வைத்து ஆஃப் செய்ய வேண்டு்ம். ரன்னிங் இன் பீரியட் மட்டுமல்ல, எப்போதுமே இதுபோன்று நிறுத்துவது சிறந்தது. டீசல் எஞ்சின் கார்களுக்கு இது மிக அவசியம்.
ஆயில் சேஞ்ச்:
முதல் 1,000 கிமீ எஞ்சின் ஆயில் மாற்றுவது மிக சிறப்பானது. தயாரிப்பு நிலைகளில் எஞ்சினில் இருக்கும் தூசிகள், சிறு துரும்புகள் ஆகியவை வெளியேறுவதற்கு இது மிக அவசியம். அடுத்ததாக தயாரிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட கால அளவைவிட சிறிது முன்கூட்டியே மாற்றுவதும் நல்ல விஷயமே.
http://iminder.blogspot.in/2012/09/blog-post_19.html


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 28 மார்ச், 2015

கர்ப்பிணிகள் அறவே தொடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்!!!

கர்ப்பிணிகள் அறவே தொடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்!!!


கர்ப்பமாக இருக்கும் போது தான் நிறைய உணவுப் பொருட்களின் மீது நாட்டம் எழும். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. நிறைய கர்ப்பிணிகளுக்கு நூடுல்ஸ் மீது ஆசை ஏற்படும். ஆனால் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் ஆரோக்கியமற்றது. அதுமட்டுமின்றி, இந்த உணவுகள் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.

எனவே கர்ப்பிணிகள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தொடாமல் இருப்பதே நல்லது. அதிலும் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட நினைக்காமல் இருப்பது நல்லது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இப்போது பிரசவத்திற்கு முன்பு, கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளிலேயே மிகவும் மோசமான சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகளை தெரியாமல் கூட சுவைத்துவிடாதீர்கள்.

டஃப்நட்ஸ் (Doughnuts)

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிடித்த உணவுப் பொருள் தான் டஃப்நட்ஸ். ஆனால் இது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாக இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில், இதற்கு பதிலாக ஜெல்லி பன் கூட சாப்பிடலாம்.

நூடுல்ஸ்

நூடுல்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டால், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான எடையை பெற நேரிடும். மேலும் இதனை அதிகம் சாப்பிட்டால், மீண்டும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடியாது.

பாஸ்தா

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் நூடுல்ஸ் போன்றே பாஸ்தாவும் ஒன்றாதலால், இந்த உணவுப் பொருளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பிரெஞ்சு ப்ரைஸ்

எண்ணெயில் பொரித்த எந்த ஒரு உணவுப்பொருளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. குறிப்பாக பிரெஞ்சு ப்ரைஸை தொடவேக் சுடாது.

பர்கர்

ஃபாஸ்ட் ஃபுட் உணவிலேயே மிகவும் மோசமான ஒரு உணவுப் பொருள் என்றால் அது பர்கர் தான். தற்போது நிறைய பேர் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதற்கு முக்கிய காரணமே, இந்த பர்கர் தான். ஆகவே கர்ப்ப காலத்தில் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.

உருளைக்கிழங்கு விட்ஜஸ்

இந்த உணவுப் பொருளில் 280 கலோரிகள் நிறைந்திருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால், கர்ப்பமாக இருக்கும் போது அளவுக்கு அதிகமான எடையை பெற நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த உணவுப் பொருள் குறை பிரசவத்திற்கும் வழிவகுக்கும்.

பார்பெக்யூ ரோல்ஸ்

பார்பெக்யூ ரோல்ஸை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும். ஆனால் இந்த உணவு வளரும் குழந்தைக்கு நல்லதல்ல. அதிலும் இது குழந்தையின் எடையை அதிகரித்துவிடும்.

பிட்சா

பிட்சாவின் மேலே தூவப்படும் பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் மோசமானவை. ஆகவே இதனை கர்ப்ப காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும்.
http://www.onlytamil.in/2013/10/karppinigal-arave-sappida-kudatha-fast-food-unavugal.html


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 26 மார்ச், 2015

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!


முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?


தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
"முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது."

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
"குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்."

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? "முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்."

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?"பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை."

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? "பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன."

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?"முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்' என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்."

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
"முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்."

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
"முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை."

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?"வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது."

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?"பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்."

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?"எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.
http://iminder.blogspot.in/2013/10/blog-post_21.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 24 மார்ச், 2015

எப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்!

எப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்!

வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும். குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.
வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி. அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் அரவணைக்கும்.
அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்
* காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.
* காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு டம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.
* காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் சாறு கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.
* காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.
* மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.
* இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது பருப்பு. வயிறை மிதமாக வைத்திருக்கும்.
இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 22 மார்ச், 2015

வீடு வாங்குவதற்கு சேமிப்பது எப்படி?

வீடு வாங்குவதற்கு சேமிப்பது எப்படி?

நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்கமுடியாது. அப்படி வாங்குபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள்.
(மேலும் வீட்டுக்கடன் கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுகடன்தான் வா ங்குகிறார்கள்) ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவிகிதத் தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை டவுன்பேமென்ட் என்று சொல்லுவார்கள்.
உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும்.
வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு என்னும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம். வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில்(இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம்.
இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும். குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது.
இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு எதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட, நீங்கள் கடனுக்காக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும். அதனால் கடனை முழுமையாக அடைத்த பிறகு, வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம்.
அதேபோல இந்த டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தைத் திரட்ட வேண்டாம். இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டி பணம் கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்குப் போய்விடும். அதனால், அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
பொதுவாக ஒருவருடைய மாத வருமானத்தில் 40 சதவிகிததுக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது. திடீரென வருமானம் பாதிக்கபட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும்.
ஆனால், அதேநேரம் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எஃப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம்.
வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம். வீட்டுக்கடன் வட்டியில் 1.5 லட்சம் வரை(வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 25 லட்ச ரூபாய்க்குள் முதல்முறையாக கடன் வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் வரிலக்கு பெற்றுக்கொள்ளலாம்) வரிவிலக்கு பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் அதிகபட்சம் 30 % வரி செலுத்த வேண்டி இருந்தால்கூட 45,000 ரூபாய் சேமிக்க முடியும். ஆனால், இந்த 45,000 ரூபாயை சேமிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வீட்டுக்கடன் வாங்க விடாதீர்கள்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 20 மார்ச், 2015

விண்டோஸ் 7 டிப்ஸ்

விண்டோஸ் 7 டிப்ஸ்

டாஸ் பார் ட்யூன் அப்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. 


ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.


டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.
டாஸ்க்பார் ஹாட் கீ: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம். டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.


டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
கால்குலேட்டர்: பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் கால்குலேட்டர் ஒன்று அக்செசரீஸ் பட்டியலில் தரப்படும். இது சாதாரணமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க பயன்படும். கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளை இதில் மேற்கொள்ளலாம்.


விண்டோஸ் 7 தொகுப்புடன் கிடைக்கும் கால்குலேட்டரில் பல புதிய சிறப்புகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு மேலாக உள்ள சர்ச் பாரில் CALC என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் கால்குலேட்டர் கிடைக்கும். இதன் மேலாக உள்ள View என்பதில் கிளிக் செய்திடவும். இதன் நேர் கீழாக கால்குலேட்டர் கட்டமைப்பை மாற்றிக் காணும் வகையில் ஆப்ஷன்ஸ் தரப்படும். இவை standard, scientific, programmer மற்றும் statistics என நான்கு வகைகளில் கிடைக்கும்.


மேலும் View>Worksheets என்ற பிரிவில் சென்றால் நம் கடன் தொகைக்கான மாதம் கட்ட வேண்டிய தொகையினைக் கணக்கிடும் வசதி உள்ளதனைப் பார்க்கலாம்.
இவை எதுவும் வேண்டாம் என பின் நாளில் எண்ணுகையில் View>Basic என்பதனை அழுத்தினால் போதும். சாதாரண கால்குலேட்டர் கிடைக்கும். விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் இந்த கால்குலேட்டரை இயக்கிப் பாருங்கள். பின் சாதாரண கணக்குகளுக்கான கால்குலேட்டரை மூட்டை கட்டி வைத்திடுவீர்கள்.
http://kulasaisulthan.wordpress.com\

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 18 மார்ச், 2015

கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை…

கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை
ஒரு பெண் கர்ப்பமானதும் செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து மூத்த மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர் பாமா நடராஜனிடம் கேட்டோம்
"திருமணம் ஆன உடனேயே ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு பற்றிய புரிதலை உருவாக்கிவிடுவது அவசியம். கருத்தரித்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் உடல்நிலைக்கும்  அந்தப் பெண்ணைத் தயார்ப்படுத்த வேண்டும்.
கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின், முதல் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கரு, கருப்பையில்தான் உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உள்ளதா என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆறு முதல் ஏழாவது வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு தொடங்கும். அது நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பரிசோதித்து தெரிந்துகொள்வது அடுத்த நிலை. இதன்பிறகுதான் அடிப்படை ஆய்வு என்று சொல்லக் கூடிய பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இதில், அவர்களுடைய ரத்த வகை, ஆர்.ஹெச். பேக்டர், ஹெச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத் தட்டுக்களின் தரம், சிறுநீரில் ஏதேனும் தொற்று உள்ளதாஇப்படிச் சகல விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
எங்களின் முதல் ஆலோசனைசாப்பாடுதான். ஏனெனில், குழந்தையின் உருவம், மூளை எல்லாம் உருவாவது முதல் மூன்று மாதத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில்தான் உள்ளது. அந்த நிலையில் தாய்க்கு நல்ல சத்தான உணவு முக்கியம். காய், கீரை, பருப்பு, முளைகட்டிய பயறு, பழம், பால், மோர் ஆகிய ஏழு பொருட்கள் தினமும் அத்தியாவசியமாக உணவில் இருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் நாட்டுக்கோழி, மீன் அதிகம் சாப்பிட வேண்டும்.
அதேபோல், நல்ல ஓய்வும் அவசியம். நேரத்துக்கு படுக்கச் செல்ல வேண்டும். இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை தூங்குவது நல்ல ஓய்வைத் தரும். படுக்கும்போது இடது பக்கமாகத் திரும்பிய நிலையில் படுக்க வேண்டும். இப்படிப் படுத்தால், இதயத்தில் இருந்து வரும் நல்ல ரத்தம், கர்ப்பப்பைக்கு அதிகமாகச் செல்லும். உடலில் அநாவசியமாக கால், கை, வயிறு வீக்கம் இல்லாமல் இருக்கும்.
அடுத்து, 20-வது வாரத்தில் மீண்டும் ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். குழந்தையின் மொத்த உருவம், தலை முதல் கால் வரைக்கும் எல்லாப் பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்து உள்ளதா, அதன் செயல்பாடு சரியாக உள்ளதா என்பதை அறிய இது உதவும்.
குறித்த காலத்திற்கு ஒருமுறை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் எல்லாம் சிறப்பாக அமையும் பட்சத்தில், பிரசவம் இயல்பானதாக அமைந்துவிடும். பிரசவத்திற்கு 10-15 நாட்களுக்கு முன்பு டாக்டரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் அப்போதுதான் எங்கே, எப்படி, எப்போது டெலிவரி என்பதை டாக்டர் முடிவு செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றமுடியும்.  மருத்துவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும்!" என்றார் பாமா நடராஜன்.
நன்றி:டாக்டர் விகடன்
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 16 மார்ச், 2015

கடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் என்ன?


கடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் என்ன?

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
 அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, 
 இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
 பட்டை: 
செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
 கிராம்பு: 
நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி :
மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
புதினா: 
ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.
ஏலக்காய்: 
வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.
மல்லி:
 செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
மஞ்சள்: 
காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.
சோம்பு:
வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
பெருங்காயம்:
கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
சீரகம்:
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
வெந்தயம்:
நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
 கடுகு:
இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
பூண்டு:
 வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

ஓமம்: 
இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
http://kulasaisulthan.wordpress.com
--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts