லேபிள்கள்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?
தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. இளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.


2. வெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
3. தேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

4. காய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

5. அரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

6. பழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

7. முளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

8. உளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.
- ச.மோகனப்பிரியா​


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்!

குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்!
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:
நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.
உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.
மாரடைப்பு அபாயம்:
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.
ஆபத்தான நோய்:
டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:
இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.
உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
குறட்டையை குறைக்க:
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறை:
குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.
முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.
இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 25 ஏப்ரல், 2018

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பல சான்றுகளின் மூலம் நிறூபிக்கப்ட்டுள்ளன.
அவற்றில் ஒன்று தான் மனிதனின் ஆரோக்கியமாகும்.
மனிதன் தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடல் பயிற்ச்சி முதல் பல விதமான மருந்துகளை பயன்படுத்துகிறான்.
இந்த ஆரோக்கியம் விசயத்13தில் இஸ்லாம் அதிகமாக அக்கரை காட்டுகிறது.
அந்த அக்கரையில் ஒன்று தான் சிறுநீர் விசயங்களில் இஸலாம் காட்டக் கூடிய ஒழுங்கு முறையாகும். ஆரோக்கியமும், சிறுநீரும் இரண்டரக் கலந்த அம்சமாகும். சிறுநீர் என்ற அசுத்தத்திலிருந்து தன்னை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதை இக் கட்டுரை மூலம் நாம் அறிந்து கொள்வோம்.


கத்னா (சுன்னத்) செய்தல்
கத்னா என்றால் மர்ம உறுப்பின் முன் தோலை சிறிதாக வெட்டுதலாகும்.

இஸ்லாம் ஒரு விசயத்தை செய்யும் படி ஏவுகிறது என்றால் அதில் பல உண்மைகள் அடங்கி இருக்கும். சிறு பராயத்திலே ஆண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று ஏன் இஸ்லாம் சொல்கிறது என்றால், அதில் பல நலன்கள் இருந்தாலும், இதனால் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் இலகுவாக வெளிவந்து விடும். கத்னா செய்யா விட்டால் சிறுநீரின் ஓரிரு துளிகள் அந்த தோலுக்குள்ளே இருக்கும் இதனால் தான் அணிந்திருக்கும் ஆடையும் அசுத்தமடைகிறது, மேலும் தோலுக்குள் இருக்கும் ஓரிரு சிறுநீர் துளிகள் மூலம் நோய்கள் ஏற்ப்பட்டு விடும்.
எனவே கத்னாவின் மூலம் மனிதன் ஆரோக்கியம் அடைகிறான் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர்
'ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 239)

நமது உடம்பை ஆரோக்கியாக வைத்துக் கொள்வதற்காக தான் நீங்கள் குளிக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை மேற்ச் சென்ற ஹதீஸ் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஓடக்கூடிய தண்ணீர் என்றால் அதில் சிறுநீர் கழித்தாலும் தண்ணீரோடு, தண்ணீராக சிறுநீர் ஓடிவிடும். ஆனால் தேங்கி நிற்க கூடிய குறைவான தண்ணீரில் சிறுநீர் கழித்தால் அந்த தண்ணீர் அசுத்தமாக மாறிவிடும். எனவே தான் இப்படியான இடங்களில் சிறுநீர் கழிக்க கூடாது என்று ஆரோக்கியத்தை முதன்மை படுத்தி இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது. .
சிறு நீர் தரையில் பட்டால்
" அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள் (முஸ்லிம் 480)
நாம் பயன் படுத்தப்படும் மண் தரையில் சிறுநீர் கழிக்கப்பட்டுவிட்டால் அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றினால் போதுமாகும். அதே நேரம் டையில்ஸ் போன்ற கல் பதித்த பகுதியாக இருந்தால் சிறுநீர் பட்ட இடத்தை தண்ணீரால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும், என்பதை ஆரோக்கியத்தை முதன்மை படுத்தி நபியவர்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.
சிறு பிள்ளையின் சிறுநீர்
" உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டவரும் ஆரம்பமாக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பெண்மணிகளில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரான உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் மகவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அக்குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள். அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை. (முஸ்லிம் 484)
"நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அது அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார்கள். அதைக் கழுவவில்லை (முஸ்லிம் 481)
'அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) சிறுநீர் விஷயத்தில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். 'இஸ்ரவேலர் சமூகத்தினரில் யாருடைய ஆடையிலாவது சிறுநீர் பட்டால் அப்பாகத்தைக் கத்தரித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்' எனக் கூறுவார். 'அவர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளலாமே' என ஹுதைஃபா(ரலி) கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்' என்று கூறினார்' என அபூ வாயில் அறிவித்தார்.(புகாரி 226)

எனவே சிறு பிள்ளையின் சிறு நீருக்கு தாக்கம் இல்லாவிட்டாலும் கூட சிறுநீர் பட்ட இடத்தில் தண்ணீரை இலேசாக தெளிப்பதன் மூலம் நமது ஆடையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.
சிறு நீர் கழிக்கும் போது மறைப்பு
நின்று கொண்டு சிறு நீர் கழித்தல்…?
" அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்.

(இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர் (அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்) கொண்டிருந்தேன். (முஸ்லிம் 454)
பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும். நின்று கொண்டு கழிக்க வேண்டிய இக்கட்டான ஓரிரு சந்தர்ப்பங்கள் வந்துவிட்டால் நின்று கொண்டு கழிக்கலாம். எது எப்படியோ சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் துளிகள் நமது மேனியில் படாத அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கிப்லாவை முன்னோக்க தடையா?
" நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 145)

திறந்த வெளியாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது, பின் நோக்கவும் கூடாது. ஆனால் சுவர்களால் மறைக்கப்பட்ட இடமாக இருந்தால் எந்த திசையையும் முன்னோக்கியும், பின்நோக்கியும், உட்காரலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 23 ஏப்ரல், 2018

மதீனாவின் சிறப்புகள்

மதீனாவின் சிறப்புகள்

உலகில் சில இடங்களை புனிதமான இடமாக இஸ்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கஃபத்துல்லாஹ் அமைந்த இடம் புனிதமானது.மதீனா பள்ளி அமைந்த இடம் புனிதமானது. பைத்துல் முகத்திஸ் அமைந்த இடம் புனிதமானதாகும் . அதனால் தான் புனித பயணங்கள் என்ற அடிப்படையில் நன்மை நோக்கமாக கொண்டு பயணம் செய்வதற்கு இந்த மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடங்களுக்கும் புனித பயணம் செல்லக் கூடாது என்பதை இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது.
" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1189)

மதீனா பள்ளி வரலாறு:
அனஸ் (ரலி) அறிவித்தார்கள்.


"நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்' 'பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) எனக்கு விலைக்குத் தாருங்கள்!' என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் 'இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!' என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் கப்ருகளைத் தோண்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர்செய்யப்பட்டன, பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன, பள்ளிவாசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர். ( புகாரி 1868)

மதீனா பள்ளி கட்டப்பட்ட இடம் ஆரம்பத்தில் முஷ்ரிக்குகள் அடக்கம் செய்யப் பட்ட இடமாகும். அதனால் தான் பள்ளியை கட்டுவதற்கு முன் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த இணை வைப்பாளர்களின் கப்ருகளை அப்புறப் படுத்தி விட்டு பள்ளியை அமைத்தார்கள்.
மேலும் " இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1187)

மேலும்"
பள்ளி இருக்கும் இடங்களில் கப்ருகள் இருக்க கூடாது என்பதையும் மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் அறியலாம்.
"அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'மஸ்ஜிதுன்னபி'யுடைய சுவர்கள் செங்கற்களாலும் அதன் கூரை பேரீச்ச மர ஓலையாலும் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன. அபூ பக்ரு(ரலி) (தம் ஆட்சியின் போது) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை என்றாலும் உமர்(ரலி) அதை விரிவுபடுததினார்கள். நபி(ஸல்) காலத்தில் இருந்தது போன்றே செங்கல், பேரீச்ச மர ஓலை, பேரீச்ச மரம் ஆகியவற்றைக் கொண்டே விரிவுபடுத்தினார்கள்.


பின்னர் உஸ்மான்(ரலி) அந்தப் பள்ளியில் அனேக விஷயங்களை அதிகமாக்கினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். அதன் கூரையைத் தேக்கு மரத்தால் அமைத்தார்கள். (புகாரி 446)
மதீனா நகரம் புனிதமானதாகும்:
" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!'
என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1867)

மேலும்"அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) 'மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1873)

மேலும்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
'மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று, 'பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்!' என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு. 'இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்!' என்றார்கள். (புகாரி 1868)

நபியவர்கள் கூறிய அடையாளங்களை முன் வைத்து இன்று மதீனா பள்ளியை சூழவுள்ள இடங்கள் புனித இடங்களாக அடையாளமிடப்பட்டுள்ளன.
மதீனாவிற்கு மற்றொரு பெயர்:
மேலும் " அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். 'இது 'தாபா!' (நலம் மிக்கது)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1872)

மதீனாவிற்கு யத்ரிப் என்ற பெயரும் உள்ளது. அது போல தாபா என்ற பெயரும் உள்ளதை தான் மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.
மதீனா தீயவர்களை வெளியேற்றும்


" யத்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1871)

மேலும்" ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் 'இவர்களைக் கொல்வோம்!' என்றனர். அப்போது 'நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?' (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. 'நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி 1884)

கெட்டவர்கள், மற்றும் மார்க்கத்தில் புதியதை ஏற்படுத்தியவர்களை எல்லாம் இந்த மதீனா நகரம் அடையாளப்படுத்தி விடும் என்பதை தான் நபியவர்களின் இந்த ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
மதீனாவிற்கு எதிராக சூழ்ச்சி:
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!'
என ஸஅத்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1877)

மதீனாவிற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தப்பிக்க முடியாது. திரை மறைவிலிருந்து என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அந்த சூழ்ச்சிகளை அல்லாஹ் வெளியாக்கி முறியடித்து விடுவான்.
நபியவர்களின் வீடும், மிம்பரும்:
நபியவர்களின் வீட்டிலிருந்து மிம்பர்வரை உள்ள பகுதி மிக முக்கியமான புனித இடமாக நபியவர்கள் பிரகடனப் படுத்தியுள்ளார்கள் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் காணலாம்.

"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! என்னுடைய மிம்பர் என்னுடைய ஹவ்ள் (அல்கவ்ஸர் தடாகத்தின்) மீது அமைந்துள்ளது!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1888)
உலகில் நபியவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக அல்லாஹ் இப்படியொரு சிறப்பை நபியவர்களுக்கு கொடுத்துள்ளான்.

தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய முடியாது:
மறுமை நாளுக்கு ஓர் முக்கியமான அடையாளமாக தஜ்ஜால் வரவுள்ளான். அவன் உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் போய் வந்து விடுவான் ஆனால் புனித நகரங்களான மக்காவிற்குள்ளும், மதீனாவிற்குள்ளும் அவனால் நுழைய முடியாது. மதீனாவிற்கு அப்போது ஏழு வாசல்கள் இருக்கும் எந்த வாசல் வழியாகவும் அவனுக்கு உள்ளே நுழைய முடியாது. என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி1880)

மேலும் "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்'
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

மதீனாவிற்கு பரகத்
இப்றாகீம் நபி மக்காவிற்காக பரகத் வேண்டி பல பிரார்த்தனைகளை செய்துள்ளார்கள். அதே போல நபியவர்கள் மதீனாவிற்காக பல பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள்.

" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!'
என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1885)

மதீனா பள்ளியில் தொழுவதன் சிறப்பு
" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 1190)

மதீனாவில் வசிப்பவர்களுக்கும், மேலும்அங்கு வேலைக்கு சென்றவர்களுக்கும் மதீனா பள்ளியில் அடிக்கடி தொழுவதன் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உம்ரா, மற்றும் ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் குறிப்பபிட்ட நாட்கள் அங்கு தொழுவதன் மூலம் ஓரளவிற்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
மதீனாவே சிறந்த இடம்
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் 'ஷாம்' வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, 'தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?'
என சுப்யான்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1875)

இப்படி பல சிறப்புகளை மதீனா நகரமும், மற்றும் மதீனா பள்ளியும் பெற்றுள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 21 ஏப்ரல், 2018

நாப்கின் பயன்படுத்தும் போது தவறாமல் கடைபிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்.


மாதவிடாய் பற்றி பொதுஇடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். டி.வியில் நாப்கின் விளம்பரம் வந்தால்கூட வேறு பக்கம் முகம் திருப்பும் ஆண்களும் இருக்கின்றனர். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்  ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை. மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பெண்கள் மகப்பேறு மருத்துவர் மைதிலி தரும் தகவல்கள்.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப் பட்டிருக்கும்) வாங்குவது நல்லது. இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.



நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப் பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது.

நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.

நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது.
ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம்.

நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்.

பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப் படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 19 ஏப்ரல், 2018

நோய் நாடி..! - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி?

நோய் நாடி..! - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி?
கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!
"இன்று, 'அல்சர்' என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் ஆட்டிப்படைக்கிறது. அந்தளவுக்கு அல்சர் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை'' என்று ஆதங்கப்படுகிறார்,
  சென்னை - அண்ணா நகர் 'அரசுப் பொது மருத்துவமனை'யின் செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி.ராம்குமார்.


அல்சர் என்பது என்ன?
வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. இதில், வயிறு மற்றும் சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதிக்குள் காயம் அல்லது புண் ஏற்பட்டால், அதனை வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்கிறோம். சிலருக்கு வாய்ப்பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இதனை வாய்ப்புண் அல்லது 'மவுத் அல்சர்' என்போம். இந்த வயிற்றுப்புண் பெரும்பாலும் 18 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 95 - 98 சதவிகிதம் பேர் 18 வயதைக் கடந்தவர்களே! 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அல்சர் வரக்கூடும். அதற்கு 2 சதவிகித வாய்ப்பே உள்ளது. 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வயிற்றுப்புண் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

வயிற்றுப்புண் ஏன் வருகிறது?
'ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori)' எனும் கிருமித் தாக்குதல், வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம், ஸ்டீராய்டு (Steroid) மாத்திரைகள் சாப்பிடுவது, 'கேஸ்ட்ரினோமா (Gastrinoma)' எனும் கட்டி ஏற்படுதல் போன்ற காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.

அல்சர் பற்றிய தவறான புரிதல்கள்
red-dot1 காரம் சாப்பிட்டால் அல்சர் வரும் என்பதில் உண்மையில்லை. அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் காரம் சாப்பிட்டால் பாதிப்புகள் அதிகமாகும்.

red-dot1சரிவர மற்றும் சரியான நேரத்துக்குச் சாப்பிடாததால் அல்சர் வருமென்பதும் தவறு. அல்சர் வந்தவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.

red-dot1வயிற்றுவலி என்றாலே அல்சர் என்று பதற வேண்டாம். அல்சருக்கான அறிகுறி இது என்று நினைத்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் வரும்?
புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு (Renal failure) உள்ளவர்கள், உப்புக்கருவாடு அதிகம் சாப்பிடுவோர், மூட்டுவலிக்கு
  அதிக அளவில் மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோருக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

அல்சருக்கான அறிகுறிகள்
வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (சடாரென 2 - 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.
உடனடி மருத்துவம்!

மேற்கண்ட அறிகுறிகள் இருப்பவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில் உடனடி அறிகுறியோ பாதிப்போ தென்படாது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதிப்பே குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளிப்படத் தொடங்கும். அதனால், உடனடி மருத்துவம் அளித்துச் சரிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
 

வயிற்றுப்புண் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி வேண்டிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரத்த வாந்தி, அதிக அளவில் எடை குறைதல், மிகுந்த சோர்வு நிலை ஆகியவை ஏற்படக்கூடும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம். அதனால், சாதாரண அல்சர்தானே என நினைத்து விட்டுவிடாமல், உடனடி மருத்துவம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் பிரச்னையை மிக எளிதில் மாத்திரை, மருந்துகள் மூலமாக அரசு மருத்துவமனைகளில் இலவச மாக சரிசெய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர பாதிப்புகள்
1. வயிறு, சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதியில் ஓட்டை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக
  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

2. சிறுகுடல் புண் நீண்டகாலமாக இருந் தால், சிறுகுடலில் அடைப்பை ஏற்படுத்தி அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குப் பிரச்னையை உண்டாக்கிவிடும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத் தும் பிரச்னை.

பரிசோதனைகள்
1. மேல் உள்நோக்குக் குழாய் (Upper GI Endoscopy): உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் 5 செ.மீ வரை வாய்வழியாக உள்நோக்குக் குழாயைச் செலுத்தி
  புண் இருக்கிறதா, எங்கே இருக்கிறது, என்ன அளவில் இருக்கிறது, ரத்த வாந்தி ஏற்பட்டிருந்தால், ரத்தக்கசிவு எந்த இடத்தில் இருந்து வந்தது, இரைப்பைச் சதையில் புற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா என்பனவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 2,500 முதல் 3,500 ரூபாய் வரை கட்டணத்திலும் இந்த சோதனை செய்யப்படுகிறது.

2. பேரியம் உணவுச் சோதனை: எண்டோஸ்கோப்பி
  சோதனை முறை வருவதற்கு முன்பு இந்த சோதனையே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், பேரியத்தைத்  தண்ணீரில் கலந்து விழுங்கவைத்து, வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியில் தடயம் அல்லது அடையாளம் ஏதேனும் தென்படுகிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் பார்த்து, என்ன பிரச்னை உள்ளது எனக் கண்டறிந்து வந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தச் சோதனை வெகு அரிதாகவே செய்யப்படுகிறது. சிறுகுடல் புண், சிறுகுடல் அடைப்பு போன்றவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்பட்டு வருகிறது.  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

சிகிச்சைகள்
1. உள்நோக்குக் குழாய் மூலம் வழங்கப்படும் சிகிச்சை: வயிற்றுப்புண் பிரச்னையால் ரத்த வாந்தி எடுப்போருக்கு உள்நோக்குக் குழாய் மூலமாக ரத்தக் குழாயில் எந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிந்து, அந்த இடத்தில் உள்நோக்குக் குழாய் மூலமாகவே `க்ளிப்' என்ற கருவியைப் பொருத்திச் சரிசெய்வது அல்லது ரத்தக் கசிவு ஏற்படும் ரத்தக் குழாயைச் சுற்றி, ஐந்தாறு இடங்களில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி, ரத்த வாந்தியை நிறுத்துவது என இரு வகை சிகிச்சைகள் இதில் உள்ளன. இவற்றோடு, மருத்துவர் வழங்கும் மாத்திரை மருந்துகளை
  2 - 6 வார காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டியதும் அவசியம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

2. அறுவைசிகிச்சை: அல்சரால் சிறுகுடலில் ஏற்படும் ஓட்டையைச் சரிசெய்ய அவசர அறுவைசிகிச்சை அவசியம். இரைப்பைப் புண் இருப்பவர்கள் சதைப் பரிசோதனை மேற்கொண்டு, புற்றுநோய் இருப்பது உறுதியானால், கட்டாயம் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இச்சிகிச்சை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

"மொத்தத்தில், வயிற்றுப்புண் பற்றிய அடிப்படைப் புரிதலை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொண்டாலே போதும்... அல்சர் என்னும் மெள்ளக் கொல்லும் நோயை நம் பக்கம் நெருங்கவிடாமல் விரட்டலாம்'' என்று நம்பிக்கை விதைக்கிறார்
  டாக்டர் ராம்குமார்.

-
  சா.வடிவரசு
வயிற்றுப்புண்...
வீட்டுமுறைச் சிகிச்சைகள்!
red-dot1குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்று எரிச்சலைப் போக்கும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, நெய் ஜீரணமாகாவிட்டால், சுடுநீர் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது. 

red-dot1நெல்லிக்காய்ச் சாற்றை பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், வில்வ இலைகள் மற்றும் பழங்கள் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

red-dot1மாதுளம் பழச்சாறு, பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது.

red-dot1வாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

red-dot1ஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. 

red-dot1அல்சர் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி  போன்றவற்றைத் தவிர்த்து,  ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.

சில கூடுதல் சிக்கல்கள்!
வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில், தொடர் சிகிச்சைகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் அல்சர், வயிறு மற்றும் சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று, கணையம், கல்லீரலை பாதிக்கக்கூடும். இதனால், தீவிர வலி ஏற்படும். அல்சர் பாதித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு மற்றும் சிறுகுடல் பாதையை அடைக்கக்கூடும். சாப்பிட்டவுடன் வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பதே இதன் அறிகுறி.

மேலும் சில காரணங்கள்!
red-dot1ஹர்ரி - வொர்ரி - கர்ரி மூன்றையும் தவிர்க்க வேண்டும். அதாவது அவசரம், டென்ஷன், பதற்றம் - கவலை, பொறாமை - காரசாரமான உணவு வகைகள், மசாலா போன்றவை அதிக அமிலத்தைச் சுரக்க வைத்துப் புண்களை உண்டாக்கக்கூடும்.

வயிற்றுப்புண் வர மிக முக்கியக் காரணம் 'ஹெலிகோபேக்டர் பைலோரி' என்ற ஒரு வகை பாக்டீரியா. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுவதாகவும், அது வயிற்று அமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குவதாகவும், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ் அல்சராக மாற ஹெச்.பைலோரி கிருமிகள் உதவுவதாகவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

red-dot1தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.

red-dot1குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு , அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, ஆங்கங்கே சிதைந்துவிடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். அதோடு.. வயிற்று 'லைனிங்'கில் ஓட்டை ஏற்பட்டுப் புண்கள் உருவாகக்கூடும்.

red-dot1அதிக டீ மற்றும் காபி குடிப்பது.

red-dot1மன அழுத்தம், படபடப்பு, பரபரப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஆகியவையும் காரணமாகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts