லேபிள்கள்

திங்கள், 29 மே, 2017

மெனோபாஸ் தொல்லைகளை தவிர்க்க...

மெ னோபாஸ் சமயத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளும், வீட்டு முறை சிகிச்சைகளும் உண்டு.

மெனோபாஸ் ஆரம்பிக்கும்போதே 'கல்யாண குலம்' என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தினமும் ஒருவேளை இரவு படுக்கப் போவதற்கு முன் கல்யாண குலம் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது இளஞ்சூட்டில் இருக்கும் பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் மெனோபாஸ் கஷ்டமான விஷயமாக தோன்றாது.

மெனோபாஸின்போது அதிக உதிரப்போக்கைத் தடுக்க... ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழுப்பு இலையாகவோ, பூச்சி அரித்ததாகவோ இல்லாமல், சுத்தமான இலைகளாக அவை இருப்பது நல்லது. அவற்றை கழுவி சுத்தம் செய்து, இலைகளின் காம்பு, நரம்பு எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும்.
பிறகு, அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கி சாறு எடுக்க வேண்டும். அந்த சாற்றுடன் சமபங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன் அருந்த வேண்டும்.
மெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு வரும் நாட்களில் இந்த மருந்தை உட்கொண்டால் தொல்லை தீரும்.

மெனோபாஸ் சமயத்தில் வரும் தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்க ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து இருக்கிறது. அஸ்வகந்தாரிஷ்டம் என்பது அதன் பெயர். இதை, உணவு உட்கொண்ட பிறகு காலை ஒன்பது மணிக்கு ஒரு தடவையும், இரவு ஒன்பது மணிக்கு ஒரு தடவையும் முப்பது மில்லி அருந்தவேண்டும்.
கூடவே, திராக்ஷாதி கஷாயம் என்ற இன்னொரு மருந்தும் அவசியம். இதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த கஷாயம் பதினைந்து மில்லி எடுத்துக் கொண்டு அறுபது மில்லி சுடுதண்ணீரில் கலந்து காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும், மாலை ஆறு மணிக்கு இன்னொரு தடவையும் சாப்பிட வேண்டும்.
இந்த அரிஷ்டமும், கஷாயமும் எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

மெனோபாஸ் சமயத்தில் சிலருக்கு உடம்பு சூடாகி உதிரப் போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க 'நன்னாரி- சீந்தில் கொடி பால் கஷாயம்' அருந்த வேண்டும்.
இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி ஆகிய இரண்டும் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றில் தலா பதினைந்து கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நூறு மில்லி பால், நூறு மில்லி தண்ணீர் எடுத்து, இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து நூறு மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை, இரவு படுக்கப் போகும் முன்பு சாப்பிட வேண்டும்.

மெனோபாஸ் சமயத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க... மூட்டுகளில் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மிருதுவாக மஸாஜ் செய்து விடவேண்டும். தினமும் கொஞ்சம் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும். வேளாவேளைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்!
http
://pettagum.blogspot.in/2015/09/blog-post_41.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 27 மே, 2017

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட் :
7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
19. இப்போதெல்லாம் 'இன்டர்லாக் செங்கல்கள்' என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.
http://pettagum.blogspot.in/2015/09/50_15.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 25 மே, 2017

தல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்!

மிகவும் வறண்ட ஸ்கால்ப் மற்றும் கூந்தலால் அவதியுறுபவர்களுக்கு தீர்வுகள் சொல்கிறார், சென்னை 'மியா பியூட்டி சலூன்' உரிமையாளர் ஃபாத்திமா...
முட்டை
இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருக்களை எடுத்து, இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு, ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இதனை 'பேக்' ஆக தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து அலசவும். முட்டையில் உள்ள அதிக புரோட்டீன் சத்து, முடியை வலிமையாக்குவதுடன், வறட்சியிலிருந்து காக்கும்.

மயோனைஸ்
பிரெட் சாண்ட்விச் செய்ய உதவும் மயோனைஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை கப் எடுத்து, தலையில் நன்கு தடவி 15 நிமிடம் கழித்து அலசவும். இது வறண்ட கூந்தலை பளபளப்பாக்கும்.
இளம்தேங்காய் எண்ணெய்
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கக்கூடிய இளம்தேங்காயின் எண்ணெயை வாங்கி, தேவையான அளவு எடுத்து நன்கு சூடுபடுத்தி, வெதுவெதுப்பாகும் வரை ஆறவைத்து, தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து அலசவும். கேசத்துக்கு நல்ல கண்டிஷனர் இது.

டீ ட்ரீ ஆயில்
தலையில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் பூஞ்சை, அரிப்பு, செதில் செதிலாக உதிரும் டெட் ஸ்கின் போன்ற அனைத்து பிரச்னை களுக்கும் தீர்வளிக்கக்கூடியது, டீ ட்ரீ ஆயில் (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்). இதை தலையில் நன்கு தேய்த்து 20 நிமிடத்தில் அலச, முடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தடவவும். இதில் விட்டமின் `சி' உள்ளதால் முடிக்கு ஈரப்பதம், பளபளப்பு அளிப்பதுடன் முடியை வலிமையாக்கும்.

அவகோடா
ஒரு அவகோடா பழத்தின் சதைப்பகுதியுடன் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலை மற்றும் முடியில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நேச்சுரல் ஆயில் நிறைந்த அவகோடா, வறண்ட தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், வறண்டு உடைந்த கூந்தலை மிருதுவாக்கி கண்ணாடி போன்ற பளபளப்பையும் அளிக்கக்கூடியது.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயை வெதுவெதுப் பான சூட்டில் தலையில் தேய்த்து 10 நிமிடத்தில் அலசவும். இது வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் இன்ஸ்டன்ட் ரெமடி.

அலோ வேரா
ஒரு அலோ வேரா (சோற்றுக் கற்றாழை) கிளையின் உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும். இது கேசத்தை வறட்சியிலிருந்து காப்பதுடன், ஜிலீர் புத்துணர்வு அளிக்கும்.
http://pettagum.blogspot.in/2015/09/blog-post_33.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 23 மே, 2017

மைக்ரோவேவ் அவன்'...

மணியான யூஸர் கைடு!
நீண்ட நேரம் கிச்சனில் நிற்கும் நிலையை மாற்றி, நிமிடங்களில் சமையலை முடிக்க கைகொடுக்கிறது `மைக்ரோவேவ் அவன்.' அதைப் பயன்படுத்துபவர்களுக்கும், வாங்க நினைப்பவர்களுக்கும் ஏ டு இஸட் வழிகாட்டல் தகவல்கள் தருகிறார், எல்.ஜி.எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கோவை விநியோகஸ்தர் விற்பனைப் பிரிவின் அதிகாரி சரவணன். ''மைக்ரோவேவ் அவனில் எத்தனை வகைகள் இருக்கின்றன, அவற்றில் தேவையானதை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது, அதை எப்படிப் பயன்படுத்துவது, `அவன்' விஷயத்தில் செய்யக்கூடாதவை என்ன... ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!'' எனும் சரவணன், அவற்றைப் பற்றி விலாவாரியாக விளக்குகிறார்...

மூன்று வகை!
"மைக்ரோவேவ் அவனில் சாப்பாடு, காய்கறிகள், முட்டை அவிப்பது முதல்... பிரியாணி, பிஸ்கட், கேக், தந்தூரி அயிட்டங்கள் வரை எல்லாம் சமைக்கலாம். இதில் மூன்று வகைகள் உள்ளன. பேஸிக் சோலோ மாடல்... பேக்கரியில் உணவுகளை சூடுபடுத்தவும், வீடுகளில் சில அடிப்படை உணவுகளை சமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கேக், பிஸ்கட், கட்லெட், தந்தூரி போன்ற ஃப்ரை அயிட்டங் களைச் செய்ய முடியாது.
க்ரில் மற்றும் கன்வர்ஷன் ஆகியவை மற்ற இரு மாடல்கள். இதில் ஃப்ரை உட்பட அனைத்து வகை உணவுகளையும் தயாரிக்க முடியும். க்ரில் மாடலில் ஒருபுறம் ஃப்ரை ஆனதும், மறுபுறம் திருப்பி வைக்க வேண்டும். கன்வர்ஷன் மாடலில் எல்லா பக்கமும் ஃப்ரை ஆகும்.
இந்த இரு மாடல்களிலும் `ஆட்டோ குக்' மெனு இருக்கும். அதாவது ஒரு பொருளை எவ்வளவு நேரம் ஃப்ரை செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை என்றால், ஆட்டோ குக் மெனுவில் உணவுப் பொருளைத் தேர்வு செய்து, அதன் எடையைக் குறிப்பிட்டுவிட்டால், அதுவே தேவையான நேரத்தில் சமைத்துக் கொடுத்துவிடும். கட்லெட், கேக் பேக்கிங், தந்தூரி முதலிய உணவுகளை இதில் சமைக்கலாம்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?
இதில் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள்... தேவை மற்றும் பட்ஜெட். ஃப்ரை உணவுகளைச் செய்யப்போவதில்லை, ஆட்டோ குக் மெனுவும் தேவையில்லை என்றால் பேஸிக் மாடலான `சோலோ'வைத் தேர்வு செய்யலாம்; பட்ஜெட் அளவிலும் சிறந்தது. ஃப்ரை உணவுகளைச் செய்ய வேண்டும், அதேசமயம் பட்ஜெட்டிலும் வேண்டும் என்றால் `க்ரில்' மாடலைத் தேர்வு செய்யலாம். பட்ஜெட் எல்லாம் பிரச்னை இல்லை, தேவையை முழுமையாக நிறைவுசெய்ய வேண்டும் என்றால் `கன்வர்ஷன்' மாடலைத் தேர்வு செய்யலாம். அதிக எண்ணெய் இல்லாமல் ஃப்ரை செய்ய விரும்புபவர்களுக்கு க்ரில் மற்றும் கன்வர்ஷன் மாடல்கள் நல்ல சாய்ஸ்.

என்ன விலை?
பேஸிக் சோலோ மாடல் - 4 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை.
க்ரில் மாடல் - 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை.
கன்வர்ஷன் மாடல் - 9 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை.
பொதுவாக 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 26 லிட்டர் அளவுள்ள `மைக்ரோவேவ் அவன்' போதுமானது.

`அவன்' சமையலின்போது செய்யக் கூடாதவை!
மைக்ரோவேவ் அவனில் மேக்னட்ரான் கதிர்வீச்சினால் தான் உணவுப் பொருள் சமைக்கப்படுகிறது. `அவனுக்கு' நேராக நின்று சமைக்கும்போதோ, சமைத்த உணவுப் பொருட்களை எடுக்கும்போதோ கதிர்வீச்சால் உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால், பக்கவாட்டில் இருந்துதான் `அவனை' திறக்க வேண்டும்; கையுறை (கிளவுஸ்) அணிந்தே பொருட்களை எடுக்க வேண்டும்.
கதிர்வீச்சின் தாக்கம் உணவுப் பொருட்களிலும் இருக்கும் என்பதால், `அவனில்' சமைத்த உணவுகளை 3 நிமிடங்கள் கழித்துதான் சாப்பிட வேண்டும்.
வழக்கமாகச் சமைக்கும் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் `அவனில்' ஷாக் அடிக்கக்கூடும், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உருகிவிடக்கூடும் என்பதால், `அவனில்' சமைப்பதற்கான பிரத்யேகப் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.

'வாவ்' வசதிகள்..!
வாய் அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கும் போது, `அவனில்' பால் பொங்கி வழியாது.
காய்கறிகளைத் தண்ணீர் சேர்த்து வேகவைக்கும்போது சுருங்கிப் போகாமல் நன்றாக வேகும்.
`அவனில்' சமைக்கும்போது நேரத்தை செட் செய்துவிட்டால், குறிப்பிட்ட நேரம் வந்ததும் அலாரம் அடித்து நினைவுபடுத்தும். சமையல் நடந்துகொண்டிருக்கும்போது, இடையில் உணவுப் பொருட்களை அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கரண்டியைக் கொண்டு கிளறிக்கொடுக்க முடியும். இதனால் நேரத்தில் மாற்றம் ஏற்படாது.
`அவனில்' சமைத்த பின் அந்த வாடை நீண்ட நேரம் அதனுள் இருக்கும். இதைப் போக்க, ஒரு பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து `அவன்' உள்ளே வைத்து, 4 நிமிடங்களுக்கு

`ஆன்' செய்து வைத்தால், வாசம் போய்விடும். சில மாடல் களில் ஆட்டோமேட்டிக் கிளீனிங் வசதியும் உள்ளது. 
மொத்தத்தில், `மைக்ரோவேவ் அவன்' பயன்படுத்துவது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். அதுதான் `அவனுக்கும்', உங்களுக்கும் பாதுகாப்பு!''
- சரியாகச் சொல்லி முடித்தார் சரவணன்.
http://pettagum.blogspot.in/2015/09/blog-post_34.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 21 மே, 2017

பாலுட்டும் தாய்மார்களுக்கு

1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.
 2. பால் அதிகமாக சுரக்க ‍= ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும். ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.
3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது
4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.
5.தாய்மார்கள் இரண்டு காதுகளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ளவும். காலில் என்னேரமும் செருப்பு அனியவும். இரவில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ளவும். இப்படி செய்வதால் நம்புகளில் காத்து ஏறுவதை தவிர்க்கலாம்.

6.எலும்புகள் வலுவடையசிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் நல்லசுரக்கும்.
7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.
8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை () ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும். (இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் () ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.
http://pettagum.blogspot.in/2015/09/blog-post_62.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 மே, 2017

பல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பல்... அழகு மற்றும் ஆரோக்கியக் காரணி! அதைப் பாதுகாத்துக்கொள்வதில் எழும் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார், பல் மருத்துவத்தில் 53 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, சென்னை தி.நகரைச் சேர்ந்த 'ஜே.ஜி.ஹெச்.ஆர் டோட்டல் டென்டல் கேர்' மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் ஜானகிராமன்.

"காலை, இரவு இரு நேரங்களிலும் பல்துலக்க வலியுறுத்தப்படுவதன் காரணம் என்ன?''
"பல் சொத்தையைத் தவிர்க்கவே அவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்களுக்கு இடையே ஒட்டிக்கொள்ளும். மேலும், உணவுப்பொருட்களில் உள்ள சுக்ரோஸை (இனிப்பு) பாக்டீரியாக்கள் சாப்பிட்ட பின்னர், லாக்டிக் அமிலத்தை பல், ஈறுகளின் மீது வெளியிடும்போது, அது ஒரு வெண்படலம் போன்று உருமாறும். அந்தப் படலம் தொடர்ந்து படியும்போது, காரையாக (Plaque) மாறி, பல் அரிப்பு ஏற்பட்டு பல்லானது சொத்தையாகும்."

"பல் துலக்கும்போது ரத்தம் வரக் காரணம்?''
"பற்களின் காரையை கவனிக்காமல் விட்டால், ஈறுகள் பலவீனம் அடைந்துவிடும். அதனால் பல் துலக்கும்போது, ஈறுகளில் ரத்தம் வரும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிலருக்கும், பல் துலக்கும்போது ரத்தம் வரும். பற்களில் ரத்தம் வந்தால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக, ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.''
"குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..?''
"குழந்தைகள் வாயை திறந்துகொண்டே தூங்குவது, விரல் சூப்பிக்கொண்டே தூங்குவது, அடிக்கடி நாக்கு மற்றும் பென்சிலைக் கடித்துக்கொண்டே இருப்பது... இதெல்லாம் தவறு. இவ்வாறு செய்வதால் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் சமயத்தில் பற்கள் கோணலாகவும், சீரற்ற முறையிலும் வளர ஆரம்பிக்கும். பொதுவாக, குழந்தைகளுக்கு 7 - 12 வயதில் பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும் சமயத்தில் குழந்தைகளின் பற்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். 12 வயதுவரை பற்கள் விழாமல் இருந்தால், கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்."

"சூடான, குளிர்ச்சியான, கடினமான உணவுப் பொருட்களால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு..?"
"ஆரோக்கியமான பற்கள் குளிர்ச்சியான, சூடான, கடினமான பொருட்களை ஏற்றுக்கொள்ளும். சொல்லப்போனால் கடினமான உணவுகளை மென்று சாப்பிட பற்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்கும்போது, அதன் வலிமை உறுதிபடும். அதனால்தான் கரும்பு சாப்பிடுவது பற்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி வலியுறுத்தப்படுகிறது. சொத்தைப் பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு உடையவர்கள் குளிர்ச்சியான, சூடான பொருட்களைச் சாப்பிடும்போதுதான், பல் வலி மற்றும் பல் கூச்சம் ஏற்படும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்."

"புகையிலைப் பொருட்கள், பற்களின் ஆரோக்கியத்தை பாழாக்குவது பற்றி?''
''தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பயன்படுத்து வதால், பற்களின் ஈறுகள் பாக்டீரியாக்களால் அரிக்கப்பட்டு, பல் சொத்தை, பல் வலி, பற்களில் கறை போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும், வாயினுள்ளே தொடர்ந்து புகையிலைப் பொருட்களை அடைத்து வைத்திருப்பதால் 'ஓரல் கேன்சர்' பாதிப்புக்கும் வாய்ப்பிருக்கிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்திய பின்னர், வாயை சுத்தம் செய்ய வேண்டும். படிப்படியாக புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நல்ல தீர்வு.''

''சூயிங்கம் மெல்வது நல்லதா?''
''சூயிங்கம் மெல்லும்போது பற்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்கப்படுவதுடன், உமிழ்நீரும் சுரந்து கொண்டே இருப்பதால் பற்களுக்கு வலிமையைத் தரும். எனவே, சூயிங்கம் மெல்வது பற்களுக்கு ஆரோக்கியமானதே."

"குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்ப தால் பல் பிரச்னை வருமா..?''
"கண்டிப்பாக வரும். புட்டிப்பால் கொடுக்கும் பெரும்பாலான அம்மாக்கள், இரவு நேரங்களில் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்கின்றனர். இதனால், குழந்தையின் பற்களில் பால் படிந்துவிடுகிறது. வாயில் எப்போதுமே இருக்கும் 'ஸ்டிரெப்டோ காகஸ்' (strepto coccus) பாக்டீரியா, பற்களில் படிந்திருக்கும் பாலுடன் வினைபுரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய பற்சொத்தை, 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (Nursing bottle caries) எனப்படும். அம்மாக்கள், புட்டிகளின் மூலம் குழந்தைக்குப் பால் கொடுத்தவுடன், கவனமாக குழந்தையின் பல் மற்றும் நாக்குப் பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும். அக்கால வழக்கத்தைப்போல சங்கு (பாலாடை) மூலமாக குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதே சிறந்த முறை.''

"சீரற்ற பல் வரிசையை சரிசெய்ய கிளிப் அணியும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?"
"பற்களின் வரிசையை சீர்செய்ய, 'ரிமூவபிள்' மற்றும் 'ஃபிக்ஸட்' என இரண்டு வகையான கிளிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுவர்களுக்கு, ரிமூவபிள் வகை கிளிப்களைப் பயன்படுத்தலாம். விலை குறைவாக இருப்பதுடன் குறுகிய நாட்களிலேயே பற்களின் வரிசையை சீர் செய்துவிடலாம். 20 வயதுக்கு மேல் பல் வரிசையை சீர் செய்ய நினைத்தால், அதிகம் செலவாகும். மேலும், 'ஃபிக்ஸட்' வகை கிளிப்களைமட்டுமே அணிய முடியும்.''
http://pettagum.blogspot.in/2015/09/blog-post_80.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 17 மே, 2017

எலுமிச்சை 7 பலன்கள்

 சித்தமருத்துவர், பத்மப்ரியாஉணவுதிருஷ்டி கழிக்கப் பயன்படுத்தப் படும் எலுமிச்சைக்கே திருஷ்டி சுற்றித்தான் போட வேண்டும். அந்த அளவுக்கு எலுமிச்சை பலன் நிறைந்தது. எலுமிச்சையின் ஏழு பலன்கள் இங்கே...
 வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

 பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டிபாக்டீரியலாகவும் இருப்பதால், சரும நோய்களை அண்டவிடாது. 
 காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

 வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கச் சரியாகும்.
கபம் அதிகம் இருந்தால், காலையில் எழுந்ததும் சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள், 10 மி.லி எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சட்டென நிவாரணம் கிடைக்கும்.

 சிலருக்கு, வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருக்கும். இதற்குச் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம்.  சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.
http://pettagum.blogspot.in/2015/09/7.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 15 மே, 2017

வெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.
http:
//www.anbuthil.com/2015/10/forign-visa-apply.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts