லேபிள்கள்

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

சோர்வு அதிகமாக இருக்கா ?

சோர்வு அதிகமாக இருக்கா ?

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சோர்வு, அமைதியின்மை, மயக்கம், போன்றவை
ஏற்படுவது சகஜம். இ?து போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளாறின் அறிகுறியாக
?ருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குடும்ப டாக்டரிடம் ஆலோசனை
பெறலாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக்குச் செல்வதாலும்,வீட்டில் அயராத வேலைகள் இ?ருப்பதாலும்
உடலில் சத்து குறைந்து பலகீனம்
ஏற்படலாம். இ?வற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம். புத்துணர்ச்சியுடன்
விளங்கலாம்.


பெரும்பாலான பெண்களுக்கு காலை உண்வு சாப்பிடுவதற்கு நேரம் ?ருக்காது. அதற்காக காலை உணவை
தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய
நாளில் உடலும் மனமும் நன்கு வேலை செய்யத் தயாகராக இ?ருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை
தந்தால்தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும். மேல் நாட்டில் காலை உண்வைத்தான்
முக்கியமாக கருதுவார்கள்.

அவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் சத்து மாவில் கஞ்சி செய்து
சாப்பிடலாம். பாதம் பருப்பு நான்கு என்ற கணக்கில் எடுத்து இ?ரவில் ஊறப் போட்டு விடவேண்டும்.
காலையில் அந்த பருப்பு தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். ஏதாவது முளை
கட்டிய பயறு வகையை சேர்த்துக் கொள்வது அவசியம். நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும்
பலகீனமான பெண்களுக்கு ஊட்டம்
தரக்கூடியது, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை குழைய வேகவிட்டு, அதில் ?ரண்டு டீஸ்பூன்கள் நெய் கலந்து
சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

நெல்லிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தில்
தயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும் போது மிதமான சூடில் உள்ள வெந்நீரில் ஒரு
டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும்
புதினா கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது
நல்லது. பீட் ரூட், காரட் போன்றவற்றிலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை
அவ்வப்போது பறித்து மென்று தின்ன வேண்டும். சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை
http://www.tamilyes.com/t52454-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 27 அக்டோபர், 2017

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?


நள்ளிரவிலோ, உறக்கம் கலையும் விடியற்காலையிலோ சிலருக்கு அடுக்கடுக்கான தும்மலும், சில நேரங்களில் இருமலும் பாடாகப்படுத்தும். கண்களில் எரிச்சலும் ஏற்பட்டு தூங்க விடாமல் செய்யும். நல்லாத்தானே இருந்தோம்திடீர்னு ஏன் இப்படி? சளி பிடிக்கப் போகுது போல…" என முன்ஜாக்கிரதை முத்தண்ணா-முத்தம்மாக்களாக இருமல், தும்மலுக்கான மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேர இம்சையிலிருந்து தப்பித்து விடுவார்கள். அந்த திடீர் இருமல், தும்மலுக்கான காரணம் மட்டும் தெரியாது!கண்ணுக்கு தெரியாமல் தலையணை, மெத்தைகளில் வாழும் டஸ்ட் மைட் (Dust mites) பூச்சிகள்தான் இதற்குக் காரணம்" என்கிறார் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஜரீன் முகமத்.

நமது படுக்கையில் வாழும் இந்தப் பூச்சிகள் செய்யும் தீங்குகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசுகிறார் அவர்.டஸ்ட் மைட் பூச்சிகள் நேரடியாக கண்ணுக்குத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். இவை பல நாட்களாக சுத்தம் செய்யாத மெத்தைகள், தலையணைகள், போர்வைகளில் உயிர் வாழும். மனிதனின் இறந்த செல்களை உண்டு உயிர் வாழும். துணிகளில் உள்ள செயற்கை இழைகளையும் உண்ணும். இந்த டஸ்ட் மைட் பூச்சிகள் செய்யும் அலர்ஜியானது ஒரு சீசனுக்கு மட்டும் வருவதல்லஒரு முறை தலையணை, மெத்தைகளில் வந்துவிட்டால் வருடம் முழுவதும் இருக்கும். டஸ்ட் மைட் அலர்ஜியை உடனடியாககண்டுபிடிக்கவும் முடியாது.

படுத்து அயர்ந்து தூங்கிய பின்னர் சில மணி நேரம் கழித்தே டஸ்ட் மைட் உருவாக்கும் துகள்கள் மூக்கினுள் சென்று தனது வேலையை ஆரம்பிக்கும். தும்மல் அல்லது இருமல் தொடரத் தொடங்கும். நடு இரவில் அல்லது விடியற்காலையில் மட்டுமே முழுமையாக டஸ்ட் மைட் அலர்ஜி தனது வேலையைக் காட்டும். நெடுநாளாக சுத்தப்படுத்தப்படாத குஷன் சோபாக்களில் கூட டஸ்ட் மைட் வாழும்.சிறிய அளவு சுவாசத்தில் கலந்தால் கூட கூருணர்ச்சியை தூண்டி பிரச்னையை உருவாக்கும். கதகதப்பான வெப்பநிலையில் அல்லது ஈரப்பதமுள்ள சூழலில் மட்டுமே டஸ்ட் மைட் பூச்சிகளால் வாழ முடியும். இவை வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்.சிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட, அவர்களுக்கு இவ்வகை அலர்ஜி இருக்கும். அவர்களின் பரம்பரையில் யாருக்காவது இவ்வகை அலர்ஜி இருந்தால் சிறிய அளவு டஸ்ட் மைட் பூச்சிகள் கூட ஒவ்வாமையை உருவாக்கிவிடும். வீட்டையும் படுக்கையறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு, இந்த அலர்ஜி வருவதற்கான வாய்ப்பு அதிகம். டஸ்ட் மைட் மட்டும் அலர்ஜியைஉருவாக்குவதில்லை. அது உருவாக்கும் ஒரு வகை வீண் புரதமும் அலர்ஜியை உருவாக்கும். ஒரு டஸ்ட் மைட் ஒரு நாளைக்கு குறைந்தது 20 வீண் புரதங்களை வெளியிடுகிறது. டஸ்ட் மைட் அழிந்தாலும், அது உருவாக்கும் வீண் புரதங்கள் அழியாமல் தும்மல், இருமலை உருவாக்கிக்கொண்டே இருக்கும். டஸ்ட் மைட் அலர்ஜி உள்ளவர்களுக்கு அவர்களது ஒவ்வாமை அளவை பார்த்து அலர்ஜி மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக இவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் அலர்ஜியை கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்போம். இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டால் டஸ்ட் மைட் அலர்ஜியை கட்டுப்படுத்தி விடலாம். இந்த மருந்துகளை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளலாம். ஊசி வடிவில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது…" என்கிறார் டாக்டர் ஜரீன் முகமத்.

கட்டுப்படுத்தும் முறைகள் அலர்ஜியை கட்டுப்படுத்தும் உறைகள் தலையணை, மெத்தை, சோபாவுக்கு கிடைக்கிறது. இவ்வகை உறைகளை பயன்படுத்தினால் டஸ்ட் மைட் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.படுக்கையில் விரிக்கும் துணிகளையும், தலையணை, மெத்தை உறைகளையும், திரைச்சீலைகளையும் வாரம் ஒருமுறையாவது சுடுதண்ணீர் கொண்டு சுத்தமாக துவைக்க வேண்டும்.துணியை உலர்த்தும் கருவியான டிரையர் கொண்டு (130 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்ப நிலை) மெத்தையை தேவைப்படும் போது உலர்த்தினால் டஸ்ட் மைட் பூச்சிகள் பெருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.சுத்தம் செய்யும் போது, மூக்கில் எந்த துகள்களும் போகாதபடி, முகமூடியை அணிந்து கொள்வது அவசியம்.அதிக குளிரான இடங்களில் மெத்தைகளை, உறைகளை வைத்தாலும் டஸ்ட் மைட்கள் அழிந்துவிடும். வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூசிகள் எளிதாக உள்ளே போகாதவாறு உள்ள துணிகளை பயன்படுத்தலாம். அதை தகுந்த கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதும் முக்கியம்.சுத்தமாக கழுவி வைக்கக்கூடிய பொம்மைகளை மட்டுமே வீட்டில் பயன்படுத்த வேண்டும். புத்தக அலமாரிகள், நகைப்பெட்டிகள், செய்தித்தாள்கள் வைக்கும் இடம் ஆகியவற்றை தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.மெத்தையை மாதம் ஒரு முறையாவது மொட்டை மாடியில் நல்ல வெயிலில் உலர விட்டால் டஸ்ட் மைட் பூச்சிகள் ஓரளவு அழிந்துவிடும்
http://www.tamilyes.com/t52964-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 25 அக்டோபர், 2017

இரவு நன்றாக தூங்க

இரவு நன்றாக தூங்க

கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு வீட்டிற்கு சென்றவுடன் உடைகளை மாற்றி விட்டு கடகடவென சாப்பிடுவார்கள். உடனே டிவியை பார்த்தபடி படுக்கைக்கு செல்வார்கள். மனைவியே, குழந்தைகளே எதாவது கேட்டால் கோபம் கொப்பளிக்கும். இவர்களுக்கு இரவு நீண்ட நேரமாகியும் தூக்கம் வராது.இதன் காரணமாக மறுநாள் காலை சீக்கரம் எழுந்திரிக்கலாம் சோம்பல் ஏற்படும். பின்னர் அலுவலகம் சென்றாலும் மந்தமான நிலையிலேயே உடல் இருக்கும். மனமும் சோர்வடையும். தூக்கம் வரவில்லை என்ற புலம்பலே இது போன்றவர்களிடம் அதிகம் கேட்கும்."அப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றினால் இரவில் நன்றாக தூங்கலாம்.



"என்கின்றனர் நிபுணர்கள்.தினமும் வேலை முடிந்த உடனேயே படுக்கைக்கு சென்று விடக்கூடாது. வீட்டிற்கு வந்த உடன், நன்றாக குளித்து, ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். 'டிவி' மற்றும் கம்ப்யூட்டர்களை ஆப் செய்ய வேண்டும். அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளை எடுத்து வைக்க வேண்டும். பின்னர், இதமான இசையை ரசித்த படி அடுத்த நாள் வேலையை திட்டமிட வேண்டும். இவ்வாறு மனதை அமைதிப்படுத்தி விட்டு தூங்கச் சென்றால், நன்றாக தூக்கம் வரும்.இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லக்கூடாது. 60 முதல் 90 நிமிடங்கள் கழிந்த பின்னர் தூங்கச் சென்றால் தான் நன்றாக தூக்கம் வரும். இடைப்பட்ட நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சிறிது மனம் விட்டு பேசுங்கள். அன்றைய சுவாரஸ்சிய சம்பவங்களை பேசி மகிழுங்கள். இதனால் மனமும் ரிலாக்ஸாக இருக்கும். தூக்கமும் நன்றாக வரும். பிரிட்டனில் நடந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilyes.com/t53026-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 23 அக்டோபர், 2017

மல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்

மல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்
எண்ணெய்கள்
லைவலி, காய்ச்சல் என்றால் மாத்திரை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது இல்லை. ஒரு மருத்துவம், உடலுக்கும் மனதுக்கும் சேர்ந்து சிகிச்சை அளித்தால் எப்படி இருக்கும்? நறுமண எண்ணெய் சிகிச்சை இதைச் செய்கிறது. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி பிரச்னைக்குத் தீர்வு காண உதவுகிறது நறுமண சிகிச்சை.
  மூக்கில், உள்ள சிறு முடிகள் (Cillia) வாசனையை உள்வாங்கி மூளைக்கு அனுப்பும். மூளையானது மற்ற உறுப்புகளுக்குக் கட்டளையிடுவதால் நோய்கள் தீரவும், நோய்களின் தீவிரம் குறையவும் வாய்ப்புகள் அதிகம். பூக்கள், பழங்கள், மூலிகைகள் போன்றவற்றை நுகர்ந்தோ, அதைச் சருமத்தில் பூசியோ நற்பலன்களைப் பெற முடியும்.


லெமன் எண்ணெய் (Lemon oil)
  – 25கி ரூ85

புண், மரு சரியாகும்.
சிறந்த கிளென்ஸர். சருமத்தின் உட்புறத் தோலில் உள்ள அழுக்கைச் சுத்தம்செய்யக்கூடியது.
உடலில் உள்ள செல்களுக்குப் புத்துயிர் தரக்கூடியது. பாதித்த செல்களை இயல்பாக்கும்.
சென்சிட்டிவ் சருமத்தினருக்கு மட்டும் எரிச்சல் கொடுக்கலாம். மற்ற அனைத்துச் சருமத்தினருக்கும் ஏற்ற எண்ணெய் இது.
முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகளைக் குணமாக்கும்.
முகத்தைப் புத்துணர்வாக்கும்.

லாவெண்டர் எண்ணெய் (Lavender oil)  – 25கி  ரூ350
ஐந்து நிமிடங்கள் சுவாசித்தால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
பூச்சிக்கடி, சரும நோய்கள் சரியாகும்.
நகம் உடையும் பிரச்னை இருப்பின், நகத்தைச் சுற்றி தடவி வர நகங்கள் ஆரோக்கியமாகும்.
பாத வெடிப்புகளைக் குணமாக்கும்.

இஞ்சி எண்ணெய் (Ginger oil) – 25கி  ரூ450
[You must be registered and logged in to see this image.]
உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்கும். மலமிளக்கியாகவும் செயல்படும்.
தொப்பை இருப்பவர்கள், இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் செய்துவர கொழுப்பைக் கரைக்க உதவும்.
செல்லுலாயிட் என்ற கொழுப்பு, சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் படியலாம். அதைக் கரைக்கும்.
வெந்நீரில் இரண்டு சொட்டுகள் விட்டு வாய் கொப்பளித்தால், தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும்.

யூகலிப்டிக்ஸ் எண்ணெய் (Eucalyptics oil) –
  25கி  ரூ125
மூக்கடைப்பு, தலைவலி, நீர் கோத்தல், சைனஸ் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும்.
மனச்சோர்வு நேரத்தில்,
  இந்த எண்ணெயைப் பஞ்சில் நனைத்து, ஐந்து நிமிடங்கள் சுவாசிக்கலாம்.
தலைமுடியில் துர்நாற்றம் வீசும், பிரச்னையைப் போக்கும்.
சுவாசப் பாதைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும்.
தலைவலி, தலை பாரம் தீரும்.

பெப்பர்மின்ட் எண்ணெய் (Peppermint oil) 25கி  ரூ70
மென்தால் இருப்பதால், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
சருமத்தில் அடைபட்டிருக்கும் அழுக்கைப் போக்கும்.
கை, கால்கள் போன்ற இடங்களில் திடீர் வீக்கம் வரும்போது, இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் கொடுக்கையில் வலி நீங்கும்.

மிளகு எண்ணெய் (Black pepper oil) – 25கி  ரூ500
மூட்டுவலி, முடக்குவாதம், எலும்புருக்கியால் ஏற்படும் வலிக்கு நிவாரணியாகச் செயல்படும்.
சிறந்த வலி நிவாரணி. உடனடியாக வலி குறையும்.
ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி சரியாகும்.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதோருக்கு, இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் கொடுத்துவர மாதவிலக்கு சீராகும்.

ரோஸ்மெரி எண்ணெய் (Rosemary oil) – 25கி
 ரூ200
கூந்தலுக்கு கிளென்ஸராகச் செயல்படும்.
பொடுகு நீங்கும். கூந்தல் வளர உதவும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இரண்டு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய்விட்டு குளித்தால், கூந்தல் பளபளப்புடன், ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
ரோஸ்மெரியைப் பயன்படுத்தும் அளவு மிகவும் முக்கியம். தெரப்பிஸ்ட் பரிந்துரைத்த அளவைத் தாண்டினால், வலிப்பு நோய் வரலாம்.
குளிக்கும் நீர், ஃபேஷியல் கலவை, கூந்தலில் தடவும் எண்ணெயோடு இரண்டு சொட்டுகள் ரோஸ்மெரி எண்ணெயைக் கலந்திட இரட்டிப்புப் பலன்களைப் பெற முடியும்.

டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree oil) 25கி
 ரூ200
ஆன்டிசெப்ட்டிக்காக பயன்படும். முகப்பருக்கள், எண்ணெய் வழிதல், பொடுகு, படை, தேமல், அலர்ஜி, பூச்சிக்கடி, கொப்புளங்களுக்கு மருந்தாகச் செயல்படும்.
காயங்களை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைக்க உதவும்.
அக்கி, அம்மைத் தழும்புகள் சரியாகும்.
சிடர்வுட் எண்ணெய் (Ciderwood oil) – 25கி
 ரூ50
தேவதாரூ என்ற மூலிகையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இது. பார்க்கத் தெளிவாகவும், எடை குறைந்தும் இருக்கும்.
சருமத்தில் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டு, தொற்றுகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கி ஆரோக்கியமாக்கும்.
கால், முழங்காலில் நீர் கோத்து மூட்டுக்கள் வீங்கும் பிரச்னைக்கு
  நல்ல தீர்வு.
பிசுக்கான பொடுகு, எண்ணெய் வழிதல் பிரச்னையைப் போக்கும்.
முகப்பரு, அரிப்பு, சொரி போன்ற சருமத் தொல்லைகளை நீக்கும்.

ஸ்வீட் ஆரஞ்சு எண்ணெய் (Sweet orange oil) 25கி
 ரூ125
கிளென்ஸராகச் செயல்படும். முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசையை நீக்கும்.
ஆரஞ்சின் தோலில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் ஒரு மூட் க்ரியேட்டராகச் செயல்படும்.
மாணவர்களுக்கு, கவனக்குறைவு, சோர்வான உணர்வு இருப்பின், கைக்குட்டையில் இரண்டு சொட்டுகள் விட்டு, அவ்வப்போது நுகர்ந்தால் நல்ல பலன் தெரியும்.
சோர்வைப் போக்கும். வீட்டில் இரண்டு சொட்டுகள் விட்டால், இந்த வாசனை மனதை ரம்மியமாக்கும்.
சரும துர்நாற்றத்தைப் போக்கும்.
வயதானவர்களின் மனநிலையை உற்சாகமாக்க இந்த எண்ணெய் உதவியாக இருக்கும்
http://www.tamilyes.com/t53241-10

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 21 அக்டோபர், 2017

நமது கண்களை கோடையிலிருந்து எப்படி காப்பது!

நமது கண்களை கோடையிலிருந்து எப்படி காப்பது!

கண்கள், நம் உடலின் ஜன்னல்கள். நாம் இந்த உலகைக் காணவும், இயற்கையின் அழகை, அற்புதத்தை அனுபவமாக்கிக்கொள்ளவும் உதவும் கண்களை, பஞ்சபூதங்களில் நெருப்புக்கு இணையாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில், நீண்டநேரம் கணிப்பொறி மற்றும் டி.வியைப் பார்ப்பது, விளக்கை அணைத்துவிட்டு நள்ளிரவு வரை மொபைல் பார்ப்பது என்று கண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். மறுபுறம் ஆரோக்கியமற்ற உணவுகள் நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும்  பாதிக்கும்போது, கண்களும் பாதிப்பு அடைகின்றன.  இயற்கையான முறையில் கண்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் எப்படி எனக் காண்போம்.



கண்ணும் சித்தாவும் 
நமது உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். பித்தம் சிறிது அதிகரித்தாலும் கண்பார்வையைப் பாதிக்கும். உதாரணமாக, பித்தம் அதிகரிப்பதால் காமாலை வருகிறது. இதனால், பார்வை பாதிப்படைகிறது. நாம் அன்றாடம் பருகும் காபி, தேநீரில் உள்ள காஃபின் ரசாயனம் முதல் சமைக்கப் பயன்படுத்தும் புளி வரை பல உணவுகளில் பித்தம் உள்ளது. சிலருக்கு, சைனஸ் பிரச்னையால் முன் நெற்றியிலும் கண்களுக்குக் கீழேயும் நீர் கோத்து, பார்வைக் கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நெடுங்கால மலச்சிக்கலால் ஏற்படும் உடல் அழுத்தத்தால் சிலருக்குப் பார்வைக் கோளாறு ஏற்படலாம். அதீத உடல் சூட்டினால் கண் சிவப்பாகுதல், ஒவ்வாமை ஏற்படும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்
கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இளநீர், நுங்கு, நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ள பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.

கண்ணில் ஏற்படும் புரை மற்றும் இதர கண் நோய்களுக்கு பொன்னாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து. 
கண்ணைக் காக்கும் திரிபலா
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் கலவையே திரிபலா சூரணம். இந்தச் சூரணம் 'கர்ப்ப மாத்திரை' என்ற பெயரில் சித்த மருந்துக் கடைகளில் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்கூட இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை, தினமும் தேன் அல்லது நெய்யில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவருவதால் கண் நரம்புகள் வலுவடைகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் நீங்கும். குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சிய நெய்யில் திரிபலா சூரணத்தைக் குழைத்துக் கொடுப்பது நல்லது. இதனால், தசைகளுக்குள் மருந்து சுலபமாக ஊடுருவிச்செல்கிறது.
 

எண்ணெய்க் குளியல்
தட்பவெப்பம் மற்றும் காலநிலை மாறும்போது மெட்ராஸ் ஐ போன்ற காற்று மூலம் பரவும் நோய்தொற்றுகள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் கண்ணில் உள்ள நீர் வற்றிப்போகிறது. ஆடிமாதக் காற்றில் பல கிருமிகள் கண்களைப் பாதிக்கின்றன. குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு, அடுக்குத்தும்மல், கண்களைச் சுற்றி நீர்கோத்தலால் கண்கள்
  கன்ஜங்ட்டிவிடிஸ்  (Conjunctivitis) பாதிப்புக்கு உள்ளாகின்றன. சனிக்கிழமை  நல்லெண்ணைக் குளியல்  இதற்கு நல்ல தீர்வு. கடுக்காய்த்தூள், நெல்லிக்காய், மிளகு, வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சளை நன்கு பொடியாக அரைத்து, பாலில் கலந்தால் கிடைப்பதுதான் பஞ்சகல்பம். இதை, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளித்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

சித்தா சிகிச்சைகள்
மரமஞ்சள், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலவையை 'இளநீர்க்குழம்பு' என்பார்கள். இது, கண்புரையைத் தடுக்கிறது. `அதிமதுரம்' என்ற பசைபோன்ற சித்த மருந்தை வெயில் காலங்களில் கண்ணுக்கு மையிட்டுக்கொள்வதைப்போல கீழ் இமைகளின் அடியில் பூசிக்கொள்வதன் மூலம், கண் சூட்டைத் தணிக்கலாம். இந்த முறைகளை சித்தமருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.

கண்களுக்கானபயிற்சிகள்
தினமும் காலை எழுந்தவுடன் ஆறு முதல் எட்டு மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இளம் சூரியக் கதிர்களை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பார்ப்பதன் மூலம், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
  
அலுவலகக் கணினி முன் நெடுநேரம் அமர்ந்து வேலைசெய்பவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.

இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் ஒற்றி எடுத்தால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டம் அதிகமாகும்.
அவ்வப்போது தொலைவில் உள்ளவற்றைப் பார்ப்பதன் மூலம், கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
அவ்வப்போது இடம், வலம், மேல், கீழ் எனக் கருவிழியை உருட்டிப் பார்ப்பது நல்லது.

வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்
திரிபலா சூரணத்தை சுத்தமான நீரில் கலந்துகொள்ள வேண்டும். இந்த நீரை பஞ்சில் நனைத்து, கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது பேக் போல் கண்களைச் சுற்றித் தடவலாம்.
இதே நீரை வடிகட்டி, தினமும் இரண்டு சொட்டுகள் கண்ணில் விடுவதன் மூலம், கண் சோர்வு நீங்கும்.
வெயில் காலத்தில் கண்ணில் ஏற்படும் எரிச்சல், பாக்டீரியா தொற்று, அரிப்பு , நீர்வற்றுதல், கண் தசை வீக்கத்தைத் தவிர்க்க இது ஓர் எளிய வழி.
தோல் சீவிய சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை வைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
நந்தியாவட்டைப் பூக்களின் இலைகளைக் கண்களை மூடி, அதன் மேல்பரப்பில் வைத்து, அதன் மேல் துணியால் கட்டிக்கொண்டு அரை மணி நேரம் ஓய்வெடுக்கலாம்.
கண் குளிர்ச்சிக்காக வெள்ளரிக்காயை நறுக்கி, காலை, மாலை இருவேளையும் கண்களில் வைக்கலாம்
http://www.tamilyes.com/t53247-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 19 அக்டோபர், 2017

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!


கரும்புள்ளிகள்
அனைத்து வகை மக்களும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். இத்தகைய வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பலரும் வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அதனை வாங்க மறுப்போம். உண்மையில் வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு அவை நன்கு கனிந்திருப்பது தான் காரணம்.
மேலும் சாதாரண வாழைப்பழங்களை விட, இம்மாதிரியான கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதால் ஜப்பானில் நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இங்கு கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.



ஆய்வுகளில் கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழத்தில் TNF என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.
வாழைப்பழங்கள் ஓர் சிறந்த இயற்கையான ஆன்டாசிட்டுகள். இது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம், எளிதில் செரிமானம் நடைபெற்று வயிற்று பிரச்சனைகள் குணமாகும். மேலும் இந்த வாழைப்பழங்கள் நெஞ்செரிச்சலில் இருந்தும் உடனடி நிவாரணம் தரும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள, இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. உடல் இந்த அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி செரடோனினை உற்பத்தி செய்யும். செரடோனின் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
பொதுவாக வாழைப்பழங்கள் மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் நார்ச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம் தரும். எனவே அடுத்த முறை உங்களுக்கு மலச்சிக்கல் வந்தால், கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

வாழைப்பழங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது தசைப்பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இதில் உள்ள இதர கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுவுடன் வைத்துக் கொள்ளும்.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொண்டு வருவதன் மூலம், வயிற்றில் உள்ள புண் குணமாகி, உண்ட உணவு எளிதாக செரிமான மண்டலத்தில் செரிமானமடைந்து, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.

வாழைப்பழங்களில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் இரும்புச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை பெண்கள் உட்கொண்டு வர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புக்கள் தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் பி6 அதிகம் இருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும்
http://www.tamilyes.com/t53274-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 17 அக்டோபர், 2017

உங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதயம் நலனை பற்றி எவ்வாறு அறிவது என தெரியுமா?

உங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதயம் நலனை பற்றி எவ்வாறு அறிவது என தெரியுமா?

இதயம்
கொழுப்பு வயிற்றில் மட்டுமல்ல, கழுத்தில் சேர்ந்தாலும் இதய நலன் பெருமளவு பாதிக்கப்படுகிறது என பிரேசில் ஆய்வாளர்கள் சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கழுத்தின் சுற்றளவு தடிமன் அதிகரித்தால் அவர்கள் சீரான இடைவேளையில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பரிசோதனைகள் செய்துக் கொள்வது நல்லது எனவும் கூறியுள்ளனர்.



பெரும்பாலும் உடல் பருமன் அதிகரிப்பதால் தான் நீரிழிவு, இதய நலன் குறைபாடு, ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன என நாம் அறிந்திருப்போம். ஆனால், பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் மூலம் நமது கழுத்து பகுதியில் கூட கொழுப்பு அதிகமாக சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக்கப்பட்டுள்ளது
உங்கள் மேற்சட்டையின் காலர் பொத்தானை போடுவதில் சிரமமாக இருக்கிறதா? மிக இறுக்கமாக இருக்கிறதா? அப்போது நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள்.
தடிமனான கழுத்து கொண்டுள்ளவர்களுக்கு இதயக் கோளாறுகள் அதிகமாக ஏற்படுகிறது என பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிகரிக்கும் ஒவ்வொரு அங்குலமும் இதய நலனை பாதிக்கலாம் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 4,000 ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். கழுத்தில் சுற்றளவு சராசரியாக 15 அங்குலம் மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்களை தான் இந்த ஆய்விற்கு இவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 என்ற அளவை சராசரியாக கொண்டு பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை துவங்கினர். வெறும் ஒரு இன்ச், அதாவது 16 அங்குலம் கழுத்து சுற்றளவு கொண்டவர்களுக்கே பெருமளவில் இதய நோய்கள் உண்டாகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு அங்குலம் அளவு கழுத்தின் தடிமன் அதிகரிப்பதே 32% வரையிலான இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கவும், 24% அவரை இரத்த அழுத்தம் அதிகரிக்கவும், 50% வரையில் உயர் ட்ரைகிளிசரைடுகள் உண்டாகவும் காரணியாக இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதனால் 22% அளவு உடலில் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன என பிரேசில் ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

கழுத்தை சுற்றி அதிகரிக்கும் / தேங்கும் கொழுப்பானது கரோட்டிட் தமனிகளில் தடை உண்டாக காரணியாக அமைகிறது. இதன் காரணத்தினால் தான் இதய கோளாறு அதிகரிக்க நேரிடுகிறது என பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதயம் மட்டுமில்லாது இது தோள்பட்டை பகுதியின் தசைகளில் வலுவினை குறைக்கவும் காரணியாக இருக்கிறது.

கழுத்தின் சுற்றளவு 15.3 அங்குலத்திற்கு மேலாக இருப்பவர்கள், சீரான இடைவேளையில் இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் எடுத்துக் கொள்ளுங்கள் என ஆய்வாளர்கள் அறிவுரைக்கின்றனர்.
மேலும், 15 அங்குலத்திற்கு மேலான கழுத்து சுற்றளவு கொண்டவர்களுக்கு மூன்றுக்கும் மேற்ப்பட இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
http://www.tamilyes.com/t53290-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

சானிட்டரி பேட்

சானிட்டரி பேட்
நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும்.



சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் அவ்வப்போது அதை மாற்றுவது சிறந்தது. ஒரே சானிட்டரி பேட் அல்லது துணியை 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும். இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள்.

அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள். பெண்கள் இப்போது வீட்டிலேயே முடங்கி இருப்பது கிடையாது.

அவர்களும் வேலை மற்றும் இதர காரியங்களில் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதனால் மாதவிடாய் காலத்தில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பயன்படுத்தும் துணி மற்றம் சானிட்டரி பேட் ஆகியவை தோலில் உராய்ந்து வெடிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அதனால் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காயங்கள் உண்டாகின்றன.

ஆகையால் சானிட்டரி பேட் தேர்ந்தெடுக்கும் போது மென்மையான மற்றும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லதாகும். சானிட்டரி பேட் ஜெல் மற்றும் பருத்தியால் செய்யப்பட்டு வினியோகமாகி வருகின்றன.

பருத்தியால் செய்யப்பட்டதை பயன்படுத்தும் போது அதை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அவை சிறந்ததாகும். நல்ல தரமான பேட்கள் உங்களுக்கு அரிப்புகள் இல்லாத பீரியட்களை கொடுக்கும்.
http://www.tamilyes.com/t51301-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 13 அக்டோபர், 2017

முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்

முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்


நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம். 

புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்கத் தவறாதீர்கள்.
 

குழந்தை விழித்திருந்த போது நகத்தை வெட்ட கூடாது. குழந்தை தூங்கும் போது நகத்தை வெட்டுவது எளிது என்பதை முதல் குழந்தை பெற்ற தாய்மார்கள் உணர்வதில்லை. நீங்கள் ஒரு புதிய அன்னையாக இருந்தால், அங்கே இங்கே என்று கைகளை விசிறிக் கொண்டிருக்கும் செல்லப்பாப்பாவின் விரல் நகங்களை பிடிப்பது எவ்வளவு வேலை தரும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
 



குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் எதையாவது தவறாக செய்து விட்டு, நான் ஒரு மோசமான தாய் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய கணவரைப் போலவே, குழந்தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும்.
 

குழந்தை பிறந்த வேளையில் அவரும் ஒரு பெற்றோர் - தந்தை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. அதனால், ஒரு புதிய அன்னையாக தோற்றம் கொண்டிருந்த நான், அவரும் ஒரு புதிய அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவணைப்பும் தரத் தெரியும் என்பதையும் மறந்து விட்டேன்.
 

பெரும்பாலான புதிய தாய்மார்கள் செய்யும் பரவலான தவறாக இது உள்ளது. எனினும், இது எளிதில் சரி செய்யக் கூடிய தவறாக உள்ளதால் கவலை வேண்டாம். எனவே, எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப்பையும் குழந்தையின் பேரில் நீங்கள் திருப்பி விடலாம்.
 

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிடம் கொடுத்தும் அமைதிப்படுத்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளிடம் இருந்து பழக மாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்களுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாத போது மற்றவர்களிடம் குழந்தையை அமைதியாக இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 11 அக்டோபர், 2017

குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

சைல்ட் சேஃப்டி

காசை விழுங்குவதில் இருந்து வெந்நீரை ஊற்றிக் கொள்வதுவரை, குழந்தைகளுக்கு நேரும் விபரீதங்களுக்கு பெற்றோரே பொறுப்பு. அதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம்குமார்.

''குழந்தை வளர்ப்பில் எப்போதும் 100 சதவிகித கவனம் இருக்க வேண்டும். நிமிடங்கள், நொடிகள் கவனம் சிதறினாலும், அது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வலியுறுத்தல்கள், பாதுகாப்பான பேரன்ட்டிங்க்கு வழிகாட்டும்.


தவழ ஆரம்பிக்கும்போது...

தவழ, நடக்க ஆரம்பிக்கும்போது குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாயில் எடுத்து வைத்துக்கொள்வார்கள். அது சுகாதாரக்கேடான பொருளாகவோ அல்லது கூர்மையான பொருளாகவோ இருக்கும் பட்சத்தில், விளைவுகள் மோசமாகும். மேலும், நாணயம், சிறிய மூடிகள், பேட்டரிகள் என்று சின்னப் பொருட்களை அவர்கள் விழுங்கிவிட நேரலாம். எனவே, குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தரையில் எந்தப் பொருளும் சிதறியிருக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.
 

அவர்களுக்கு விளையாடக் கொடுக்கும் பொருட்களைத் தண்ணீரில் கழுவி அவ்வப் போது நன்கு சுத்தம் செய்து கொடுக்கவும். பொருட்களில் உள்ள அழுக்கு வாய்க்குள் சென்றால், வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். ஃபர் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்க வேண்டாம். அது சுவாசப் பாதையில் ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.
 

சூடான பால், தண்ணீர் போன்றவற்றை குழந்தைகள் முன்னிலையிலோ, குழந்தைக்கு எட்டும் உயரத்திலோ வைக்கக்கூடாது. மிக்ஸி, கிரைண்டர் என்று பொருட்களை ஸ்டாண்டில் வைக்கும்போது, அந்த ஸ்டாண்ட் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் பிடித்து இழுத்து மேலே சாய்த்துக் கொண்டால், ஆபத்துதான்.

கரன்ட்டில் கவனம்!

சில வீடுகளில் ஸ்விட்ச் போர்டை குறைந்த உயரத்தில் வைக்கிறார்கள். அதைத் தவிர்க்கவும். யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் அதில் தங்கள் விரல்களைவிட்டு விளையாடுவது, ஊக்கு, ஹேர்பின் போன்ற பொருட்களை விட்டு விளையாடுவது என்று விபரீதத்தை நெருங்குவார்கள். டேபிள் ஃபேன், அயர்ன் பாக்ஸ், எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் வைக்க வேண்டாம். எந்த எலெக்ட்ரிக் பொருளையும் பயன்படுத்தியபின் போர்டில் இருக்கும் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிடவும். மிக முக்கியமாக, சார்ஜ் செய்துகொண்டே மொபைலில் பேச, மொபைல் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம். சமீபத்தில், சார்ஜ் செய்துகொண்டே செல்லில் பேசிய சிறுவனுக்கு, அப்போது செல்போன் வெடித்ததால் பார்வையே பறிபோன விபத்து, அனைத்து வீடுகளுக்குமான எச்சரிக்கை.

ஆசிட், ஃபினாயில் பாட்டில்கள்...
 

கீப் அவே!

நிறைய வீடுகளில் ஜூஸ் பாட்டிலில் கெரசின், ஃபினாயில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் அவற்றின் நிறத்தில் ஈர்க்கப்பட்டு, ஜூஸ் என்று நினைத்து அவற்றை எடுத்துக் குடித்துவிடும் விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஏற்படும் குடல் பாதிப்பு.... உயிரிழப்பு வரை செல்லலாம். மேலும் அவற்றை எடுத்து விளையாடும்போது, அவர்களின் உடல், கண்களில் தெறித்து... பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இவ்வகையான பொருட்களையும், முக்கியமாக ஆசிட் பாட்டில்களையும்
  குழந்தைகளின் பார்வைக்கே படாத இடத்தில், உயரத்தில் வைக்கவும்.

கதவை மூடவும்!
 

மாடி வீட்டில் வசிப்பவர்கள் மாடிப்படி, பால்கனியின் கதவுகளை எப்போதும் மூடியே வைக்கவும். அதேபோல வீட்டுக்குள்ளும் பாத்ரூம் கதவுகள் எப்போதும் மூடியே இருக்கட்டும். அங்கிருக்கும் அசுத்த தண்ணீரை அவர்கள் குடித்தாலோ, அதில் விளையாடினாலோ டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். மேலும், அந்த ஈரப்பதமான இடத்தில் வழுக்கிவிழ, தண்ணீர் நிரம்பியிருக்கும் பெரிய டப்பில் இடறிவிழ என... மொத்தத்தில் பாத்ரூம் குழந்தைகளுக்கு மிக ஆபத்தான ஓர் இடம்.

மருந்து, மாத்திரை... ஜாக்கிரதை! 

பொதுவாக, குழந்தைகளுக்குப் பலவித வண்ணங்கள், வடிவங்களில் இருக்கும் மாத்திரைகளின் மீதும், இனிப்புச் சுவையுடைய டானிக்கின் மீதும் ஈர்ப்பு இருக்கும். யாரும் கவனிக்காத நேரம் அவற்றை எடுத்துச் சாப்பிட்டு விடு வார்கள் என்பதால், மருந்து, மாத்தி ரைகள் எப்போதும் அவர்களின் கண் களுக்கும், கைகளுக்கும் எட்டாமலேயே இருக்கட்டும்.

க்ரயான்ஸ்... உஷார்!

க்ரயான்ஸ், பல்பம், சாக்பீஸ் போன்ற பொருட் களை, பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதியுங்கள். இவை எல்லாம் குழந்தைகள் வாயில் வைக்க விரும்பும் பொருட்கள். ஆனால், அது வயிற்றில் இருந்து சிறுநீரகம் வரை தீங்கு ஏற்படுத்தும்... கவனம்.

ஊக்கு, பட்ஸ் பழக்கங்கள்... டேஞ்சர்!

பெற்றோர்களைப் பார்த்தே எல்லாச் செயல்களையும் செய்யும் குழந்தைகள், ஊக்கு, ஹேர்பின், பட்ஸ் என்று காதுக்குள் விடுவதையும் அவர்களைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டே இருப்பதாலோ அல்லது அவற்றை வைத்து விபரீதமாக விளையாடுவதாலோ காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் குறைபாடுவரை ஏற்படலாம்.
 

குழந்தைகளின் இயல்பு... குறும்பு. எனவே, அதைக் குறை சொல்வதையோ, பழிசொல்வதையோ நிறுத்தி, எல்லா வகையிலும் பாது காப்பான ஒரு சுற்றுப்புறத்தை அவர்களுக்கு எப்போதும் தருவது, பெற்றோரின் பொறுப்பே!''
 

- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் பிரேம்குமார்
http://www.tamilyes.com/t52768-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts