லேபிள்கள்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நகங்கள் உடையாமல் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் !!

 

என்னதான் மெனிக்கியூர், பெடிக்கியூர் என நகங்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்த நகம்  படக்கென உடைந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிடும். இதற்கு காரணம் நம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாதது தான்.

* கால்ஷியமும் புரோட்டீனும் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளவது நகங்களுக்கு சிறந்தது.இந்த சத்துக்கள் கிடைப்பதற்கு முட்டையை தினமும்  உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

* அயன் மற்றும் ஜிங்க் நிறைந்த  உணவை சாப்பிட வேண்டும் அதாவது பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் உடைந்த நகம் கூட நன்கு வளரும்.  

* விட்டமின் மற்றும் பயோட்டீன்(விட்டமின் பி) நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவது நகங்களுக்கு பலத்தை பெருக்கும். கேரட், பீட்ரூட் போன்ற  காய்கறி சேர்த்து கொள்ளுங்கள்.

* சியா விதைகள், சம்சா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான நகங்கள் கிடைக்கும் இவை துணை புரியும். வெதுவெதுப்பாக ஆலிவ் ஆயிலை சூடாக்கி  நகங்களில் வாரம் ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம்.

பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால் இயற்கை முறையில் ஆரோக்கியமான பலப்பலப்பான நகம் வளரும். கைகள் ஈரமாக இருக்கும்  போது நகங்களை ஷேப் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

தரமான நெய்ல் பாலிஷ்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நெய்ல் பாலிஷ் ரிமுவரை அடிக்கடி பயன்படுத்துவது நகரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நெய்ல் பாலிஷ் ரிமுவர் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து உபயோக்கிப்பது நல்லது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/simple-steps-to-protect-your-nails-from-breakage-121041300084_1.html


--

வியாழன், 26 ஜனவரி, 2023

வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

 

தமிழர்கள் முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர்.

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள  நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள்  நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்  புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது

நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-banana-leaf-121040200097_1.html


--

திங்கள், 23 ஜனவரி, 2023

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன...?

 

கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.

வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது, மேலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது ஆகவே  கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும்.

வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை. சாலையோர கடைகளில் விற்கப்படும் 'பாஸ்ட் புட்' உணவு வகைகளையும் சாப்பிடுவதை அறவே தவிர்த்திட வேண்டும். கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது  நல்லது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-foods-to-avoid-in-the-summer-121033000082_1.html


--

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts