லேபிள்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2024

உங்கள் வீட்டில் பல்லி அதிகமாக இருக்கிறதா? அதற்கு தீர்வு தரும் பொருட்கள்.

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். பயமாக இருக்கும்.

அது தவறி மேலே விழுந்துவிட்டால் அபசகுனமாகவும் பார்ப்பார்கள். எப்படியிருந்தாலும் அது வீட்டைச் சுற்றிக் கொண்டிருப்பது, வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்தாலும் பலன் இல்லை. அதை எப்படி விரட்டுவது?

பூண்டு : பூண்டின் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. பூண்டை பல்லி சுற்றும் இடங்களில் வையுங்கள். அது அடிக்கடி தங்கும் இடத்தில் குறைந்த அளவு பூண்டு பற்களைக் குவித்து வையுங்கள். இல்லையெனில் பூண்டுப் பற்களை அரைத்து அதன் நீரை தெளியுங்கள். பல்லி பயம் இனியும் இருக்காது.

மிளகு ஸ்பிரே : பல்லிக்கு மிளகின் வாசனை மற்றும் அதன் காரத்தன்மை முற்றிலும் ஒத்துக்கொள்ளாது. மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும்.

வெங்காயம் : வெங்காயத்தை கதவு , ஜன்னல், நுழைவு வாயில் ஆகிய இடங்களில் மாட்டி வையுங்கள். அது தங்கும் இடத்தில் வெங்காயத் துண்டுகளை நறுக்கி வைத்தால் பல்லித் தொல்லை குறையும்.

இரசக் கற்பூரம் : இது பொதுவாக பலரின் வீடுகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும். இது வாசனைக்கு மட்டுமல்ல பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். பல்லி வரும் இடங்களில் இதை வையுங்கள்.

ஃபிளை பேப்பர் : இது பொதுவாக ஈ தொந்தரவு, வண்டு போன்ற பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வீட்டில் கட்டி வைப்பார்கள். இது பல்லியின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டவும் உதவும். சுவரில் இதை ஒட்டி வைத்தால் பல்லி அந்தப் பேப்பரில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இது சூப்பர் மார்க்கெட், ஹோம் நீட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

குளிர்ச்சியான நீர் : குளிர்ச்சியான நீரை பல்லியைப் பார்க்கும் போதெல்லாம் அதன் மீது ஸ்பிரெ செய்தால் அது தெறித்து ஓடும்.

மயில் இறகு : மயில் பல்லியை உண்ணக் கூடியது. எனவே மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

முட்டை ஓடு : பல்லி வரும் இடங்கள், தங்கும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது. பல்லியும் முட்டையிடும் வகையைச் சேர்ந்ததால் , பெரிய முட்டை ஓட்டைப் பார்த்ததும் நம்மை விடப் பெரிய உயிரினம் இருக்கிறது என ஏமாந்து ஓடிவிடும்.--

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் விக்கல் வரும் என வேடிக்கையாக கூறுவார்கள்.

ஆனால் இது சரியான வாதம் அல்ல. இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. எனவே விக்கல் ஏன் வருகிறது, அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அறிய முயற்சிப்போம்.

விக்கல்கள் தசைகளின் தன்னிச்சையான செயலால் ஏற்படுவதாகும். உதரவிதான தசைகள் திடீரென சுருங்கும்போது,   அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது. இருப்பினும், இந்த விக்கல்கள் பொதுவாக சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஆனால், விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அது கவலைக்குரியதாகிறது

விக்கலுக்கான காரணங்கள்

பல சந்தர்ப்பங்களில், அதிக சூடாக அல்லது வேகமாக சாப்பிடும் போதோ அல்லது காரமான உணவை உண்ணும் போது விக்கல் ஏற்படுகிறது. இது தவிர, பலருக்கு அதிக உற்சாகம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட விக்கல் வர ஆரம்பிக்கிறது. கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, குடல் அடைப்பு போன்றவற்றாலும் விக்கல் வரும்.

உங்களுக்கு நீண்ட காலமாக விக்கல் பிரச்சனை இருந்தாலோ, அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, நீங்கள் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்தது.

விக்கல்களை நிறுத்த இந்த வழிகளை முயற்சிக்கலாம்

1. விக்கல்களை நிறுத்த, நீங்கள் சிறிது நேரம் மூச்சைப் பிடித்துக் கொள்வது பலன் தரும். சில நொடிகள் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது, உதரவிதானத்தில் உள்ள பிடிப்பை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் விக்கல் நிற்கிறது.

2. இது தவிர விக்கல் வரும் போதெல்லாம் குளிர்ந்த நீரை அருந்தலாம். ஏனெனில் நீங்கள் தண்ணீரை விழுங்கும் போது,   உதரவிதானம் சுருங்குவது, பிடிப்பை அகற்றுவது ஆகியவற்றில் உதவிடும்.

3. தொடர்ந்து விக்கல் பிரச்சனைகள் ஏற்பாட்டால், நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம் அதை நிறுத்தலாம். இது விசித்திரமாகத் தோன்றலாம். என்றாலும் இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், உங்கள் நாக்கு ஒரு அழுத்தப் புள்ளி. உங்கள் நாக்கை நீட்டுவது உங்கள் தொண்டையின் தசைகளைத் தூண்டுகிறது.

4. இது தவிர, விக்கல்களை நிறுத்த சரியான இடத்தில் வசதியாக உட்கார வேண்டும். இதற்குப் பிறகு, முழங்கால்களை உங்கள் மார்புக்குக் கொண்டு வந்து இரண்டு நிமிடங்கள் அந்த நிலையில் வைக்கவும். உங்கள் முழங்கால்களை நீட்டுவது மார்பை அழுத்துகிறது, இது உதர விதானத்தின் பிடிப்பை போக்கலாம்.--

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

'மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு...' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் சிலிண்டர். நிலையில்லாத விலையில், அலைபோடும் காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு பொது மக்களுக்கு அத்யாவசியமானது.

அடுப்பு எரிந்தால் தான், உயிர் வாழ முடியும் என்பதால், எந்த காரணம் கொண்டும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆனால், வந்திறங்கும் சிலிண்டர்கள், குறைந்தது 40 நாட்களாகவது வர வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால், 30 நாட்களுக்குள் சில நேரம் முடியும் போதும் தான், எரிச்சல் மேலோங்கும். அதற்கு காரணம் இருக்கிறது. அதை சரி செய்தால், நீங்கள் பயன்படுத்தும் முறையில் கீழ் காணும் தவறுகள் இருந்து, அதை திருத்திக் கொண்டால், கட்டாயம் நீங்கள் நினைத்தது போல காஸ் சிலிண்டர் பயன்பாடு நீண்ட நாட்கள் வரும்.

இதோ உங்களுக்கான டிப்ஸ்:

பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் போது, அது ஈரமாக இல்லாதவாறு துடைத்து அல்லது காய வைத்ததை உபயோகிக்க வேண்டும். இதனால் பாத்திரம் எளிதில் சூடாகும், எரிபொருள் சிக்கனமும் இருக்கும்.

சமைக்கும் முன்பு, நாம் பலர் செய்யத் தவறும் ஒரு விசயம்... அதற்குரிய பொருட்களை பாத்திரத்தில் வைத்த பின் ரெடி செய்வது அல்லது தேடுவது. இது இரண்டும் காஸ் பயன்பாட்டை அதிகரிக்கும். சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்த பிறகு தான், அடுப்பை பற்ற வைக்க வேண்டும். இதனால் வீண் தேடுதல் படலம் தவிர்கக்ப்பட்டு காஸ் மிச்சம் செய்யப்படும்.

இதுவும் அதே மாதிரி தான். வீட்டில் அனைவரும் ப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம். நேரடியாக ப்ரிட்ஜில் இருந்து பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தினால், அதன் குளிர் தன்மையை போக்க சூடாகும் நேரம் அதிகரிக்கும். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகும். அதுவே ப்ரிட்ஜில் இருந்து எடுத்த பொருளை சிறிது நேரம் வெளியில் வைத்து, அதன் குளுமை போனதும், சமைப்பது சிலிண்டரை மிச்சப்படுத்தும்.

நாம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரம் சூடாகிவிட்டால், உடனே ஸ்டவ்வை 'சிம்'மில் வைக்க வேண்டும். பாத்திரம் சூடாக மட்டுமே வேகம் தேவை. அதன் பின் குறைந்த அளவில் சமைப்பது தான் காஸ் சிலிண்டருக்கும் நல்லது. சமைக்கும் உணவுக்கும் நல்லது. மித வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுக்கு ஊட்டசத்து அதிகம் என்கிறார்கள்.

சமைக்கும் போது, நாம் செய்யும் முக்கிய தவறில் ஒன்று, பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பது. இதனால் கொதிப்பான் வெளியேறி சமையல் நேரம் அதிகமாகும். அப்போது காஸ் சிலிண்டர் இன்னும் அதிகம் செலவாகும். பாத்திரத்தை மூடி சமைக்க வேண்டும்.

குக்கர் ஒரு விரைவு சமையல் முறை என்பதால், குக்கரில் சமைப்பது பெரிய அளவில் காஸ் சிலிண்டர் செலவை மிச்சப்படுத்தும். முடிந்த வரை குக்கம் பயன்பாடு சிலிண்டருக்கு ஆயுள் தரும்.

தண்ணீர் அதிகம் பயன்படுத்துவது, தேவைக்கு அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். தண்ணீர் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான சமையல் நேரமும் அதிகரிக்கும். இதனால் காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரிக்கும்.

சுடுதண்ணீர் அதிகம் பயன்படுத்துபவர் என்றால், அடிக்கடி அதற்காக காஸ் பயன்படுத்தாமல் ஒரு முறை சுட வைத்து விட்டு பின்னர் அதை தெர்மாஸ் பாட்டில் போன்றவற்றை கொண்டு நீண்ட பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

மிக முக்கியமான ஒன்று... அடிக்கடி நமது காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பை சோதனை செய்து கொள்ள வேண்டும். ரெகுலேட்டர், பர்னர், பைப்புகள் சரியாக இருக்கிறதா, லீக் ஆகிறதா என்பதை சோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன், சமைத்ததும், சிலிண்டரை ஆப் செய்து விடுவது கசிவிலிருந்து பாதுகாக்கும்.

இவையெல்லாம் கேட்க சிறிதாக இருக்கலாம்; ஆனால் நடைமுறைப்படுத்தினால் பெரிய அளவில் பயனளிக்கும். எனவே இந்த முறையை முயன்று பாருங்கள்... உங்கள் காஸ் சிலிண்டர் நீங்கள் நினைத்த நாட்களுக்கு பயன்படலாம்.--

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா -1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்படுத்தினால், விரைவாக சோர்வடையும் நிலை ஏற்படும்.

ஐடியா -2 : முட்டை அவிக்கும்போது குறுகிய பாத்திரத்தை பயன்படுத்தலாம். இதனால் முட்டை எளிதில் உடையாது. முட்டை வேகும்போது சிறிது சோடா உப்பை பயன்படுத்தினால் முட்டை பதமாக வேகும்.

ஐடியா -3 :ரசம் வைக்கும்போது புளி கரைசலை ஊற்றுவதற்கு முன்பு மற்ற பொருட்கைளை எல்லாம் கொதிக்கை வைத்து பச்சை வாசனை போன பின்னர் புளி கரைசலை ஊற்றினால், சூப்பரான மற்றும் சூப் போன்ற ரசம் கிடைக்கும்.

ஐடியா -4 : வாணலியில் எண்ணெய்விட்டு வெங்கயம் பச்சை மிளகாய், தக்காளி, ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கி சூடான சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம். உடனடி சாதம் ரெடி

ஐடியா -5 டீ போடும்போது சிறிது இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடித்தால், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வாக அமையும்

ஐடியா -6 : இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேகவைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும் துணி கழுவுவதற்கும் எளிதாக இருக்கும்

ஐடியா -7 : சைவ மற்றும் அசைவ வகை குருமா வகைகளுக்கு தேங்காய் சேர்ப்பது மட்டுமல்லாமல், சீரகம் தேங்காய் மிளகு சேர்த்த அரைத்து சேர்த்தால், அசைவம் சுவையாக இருக்கும்.

ஐடியா -8 : வீட்டில் பள்ளிகள் தொல்லை இருந்தால், பல்லி வரும் இடத்தில் மயில் தோகைகளை வைத்தால், அந்த பக்கம் பல்லிகள் வராது

ஐடியா -9 : மோர் குழம்பு செய்யும்போது அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க வைத்தால் மோர் திரியாமல் இருக்கும். அரைத்த விழுதினை வதக்காமல் மோரில் ஊற்றினால், மோர் திரியாமல் இருக்கும்.

ஐடியா -10 : கோதுமை மாவுடன் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்தால், சப்பாத்தி மாவு மிகவும் மிருவாக கிடைக்கும. மேலும் நீண்ட நேரத்திற்கு மிருதுவாகவும், சப்பாத்தி பஞ்சு போலவும் கிடைக்கும்.--

சனி, 13 ஏப்ரல், 2024

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க

நமது சமையலறையில் 'சர்க்கரை' முக்கிய இடத்தை பிடிக்கும் பொருள். ஆனால், இவை சேர்த்து வைக்கப்பட்டுக்கு உள்ள டப்பாவில் எறும்புகள் அடிக்கடி மொய்ப்பதுண்டு. அவை வராமல் இருக்க, அந்த டப்பாவில் மூன்று அல்லது நான்கு ஏலக்காய்களை போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

தேங்காய் எண்ணெயில் வாடை வராமல் இருக்க

தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, அவற்றில் 10 மிளகு போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி வைத்துவிட்டால் 6 மாதங்களுக்கு பிறகும் எண்ணெய் பிரஷ்ஷாக இருக்கும். இந்த எண்ணெயை நீங்கள் தாராளமாக தலையில் தேய்த்து வரலாம்.

வெஜிடபிள் கட்டரை சுத்தம் செய்ய

நாள்பட்ட வெஜிடபிள் கட்டரை சுத்தம் செய்ய அவற்றின் மீது சோடா உப்பு தூவி, எலுமிச்சை பழ சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்தோலைக் கொண்டு அவற்றின் மீது நன்றாக தேய்த்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவினால் இப்போது பளபளப்பாக இருக்கும்.

பிஸ்கட் கெடாமல் இருக்க

பிஸ்கட்டை பாட்டிலில் போட்டு மூடியை டைட்டாக மூடி வைத்தாலும் அவை எளிதில் கெட்டு போய்விடுகிறது அல்லது நமத்துப் போய்கிறது. இதைத் தடுக்க அந்த பாட்டிலில் ஒரு ஸ்பூன் அரிசியை போட்டு வைத்தல் போதுமானது.

எலுமிச்சை சாறு அதிகம் கிடைக்க

எலுமிச்சை பழத்தை சாறு பிழிவதற்கு முன், அவற்றை வெந்நீரில் இட்டு சிறிது நேரம் கழித்து பிழிந்தால் வழக்கத்தைவிட நிறையச் சாறு கிடைக்கும்.

ஃப்ரிட்ஜில் மாவு பொங்காமல் இருக்க

உங்களது ஃப்ரிட்ஜில் உள்ள இட்லி மாவு பொங்கி வழியும் பிரச்சனை இருந்தால், அந்த மாவின் மேல் வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கவிழ்த்து போட்டு வைக்கவும். இது மாவு பொங்கி வருவதை தடுக்க உதவும்.

கருணைக் கிழங்கில் உள்ள அரிப்பு நீங்க

கருணைக் கிழங்கை வேக வைக்கும்போதே அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வைக்கவும். இப்படி வேக வைக்கும்போது அதில் இருக்கும் அரிப்பு நீங்கும்.--

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது ஏன்?

வெயில் காலத்தில் தான் உடல்சூடு அதிகமாகும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் குளிர்காலத்தில் தான் சூடு அதிகரிக்கும்.

அதனால் சிறுநீர் கழிக்கும்போது நீர்க்கடுப்பு ஏற்படும். வலி எரிச்சல் உண்டாகும். அதை வீட்டிலேயே சின்ன சின்ன விஷயங்களின் மூலமாக சரிசெய்து கொள்ள முடியும். அது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

UTI என்பது சிறுநீரக பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் ஒரு நோயாகும். சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரக குழாய், போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்கள் நுண்மம் தாக்குவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு காரணம்

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு முக்கிய காரணம் நாம் அனைவரின் உடலிலும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் இரண்டும் உள்ளன. நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது பாக்டீரியாக்களின் சமநிலை பேணப்படுகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. மற்றுமொரு காரணம் நீரிழப்பு நாம் வெப்பப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறோம் நமது உடலில் நீர் இழப்பை சரி செய்ய அதற்கேற்றார் போல் தண்ணீர் குடிக்க வேண்டும் போதிய அளவு நீர் குடிக்க வில்லை என்றால் நீர் இழப்பு ஏற்பட்டு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் வெகு நேரம் அடக்கி வைத்தலும் நோய் தொற்றுக்கு காரணமாகும். வேலைக்கு செல்வோர், வெளியில் செல்வோர், கழிவறையை பயன்படுத்தாமல் சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

திருமணமான புதிதில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது

ஏன் ? (Honeymoon Cystitis)

திருமணமான புதிதில் ஏராளமான பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். நமது ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. நமது ஒவ்வொருவரின் உடலிலும் உடலுக்கு ஏற்றார்போல் பாக்டீரியாக்கள் உள்ளன. திருமணமான புதிதில் உடலுறவின்போது ஆணின் உடலில் உள்ள பாக்டீரியாக்களால் பெண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். இதைப்போன்று பெண்ணின் பாக்டீரியாக்களால் ஆணுக்கு பாதிப்பு ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பாக்டீரியா நோய்த் தொற்று எதிர்ப்பு மாத்திரைகளை (antibacterial tablet) எடுத்துக் கொள்வதன் மூலம் இதை எளிதில் குணமாக்கலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கான அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுவது ஏன் ?

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுதல். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதாவது ஒரு மணி நேரத்தில் மூன்றில் இருந்து நான்கு முறை சிறுநீர் கழிப்பது. கவனிக்காமல் இருந்தால் நாளடைவில் அதிக காய்ச்சல், அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும்போது நாற்றம் மற்றும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்று தடுப்பது எப்படி ?

சிறுநீர் பாதை நோய் தொற்று எளிதில் வராமல் தடுக்கலாம். தினமும் இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம். மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல், காபி, டீ, குளிர்பானங்களுக்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது தோன்றும்போது சிறுநீரை அடக்காமல் சிறுநீர் கழிக்க வேண்டும். இதனால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பருத்தியில் ஆன உள்ளாடைகள் அணிவது, உடலுறவிற்கு பிறகு சிறுநீர் கழிப்பது போன்றவை சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பைத் தரும்--

சனி, 6 ஏப்ரல், 2024

மீன்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கடலுக்கு அடியில் நம்மால் நம்ப இயலாத வகையிலான பல உயிரினங்கள் வாழ்கிறது. இதில் மீன் வகைகள் மிக முக்கியமானது. மீன்கள் உருவாகி, சுமார் 50 கோடி வருடங்கள் ஆகிறது என்று கூறப்படுகிறது. முதுகெலும்பு உடைய பிற உயிரினங்களை விட மீன்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். மீன்களின் உடல் வெப்பநிலை, அவை வாழும் நீரின் வெப்பநிலையை பொறுத்து மாறுபடுகிறது. மீன்கள் அனைத்திற்கும் துடுப்புகள் உண்டு. மீன்களின் செதிள்கள், அவற்றின் உடல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

மீன்களில் சுமார் 22,000 வகைகள் இருக்கிறது.

ஒவ்வொரு மீன் வகையும், நிறம், வடிவம் மற்றும் எடை போன்றவற்றால் வேறுபடுகிறது. மீன்களுக்கு நுரையீரல் இல்லை. எனவே, அவை தன் வாயால், நீரை உறிந்து அதில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு செவில்கள் வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும்.

மீன்களுக்கு இமைகள் இல்லாததால், கண்களை திறந்தவாறே தூங்கும். ஆழ் கடலில் வாழும் மீன்கள், தூங்குவதில்லை. மீன்களால் நீரில் உண்டாகும் சிறு அதிர்வுகளையும் துல்லியமாக உணர முடியும்.

மிகவும் சிறிதாக இருக்கும் மீன் கோபி. இதன் எடை 13 மில்லி மீட்டர். நுரையீரல் மீன்கள், நுரையீரல் வழியே சுவாசிக்கிறது. ஆழ் கடலில் ஒளியை உமிழக்கூடிய மீன்கள் வாழ்கின்றன.

பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரம் தாவிச்செல்லும். மிகவும் அதிக வேகத்தில் செல்லக்கூடிய மீன்கள் Seil Fish. சூரிய மீன், கோடிக்கணக்கில் முட்டைகள் இடும். 

Puffer fish தட்டையாக இருக்கும். ஆனால், எதிரிகளை கண்டால் தண்ணீரை குடித்து உருண்டையாக மாறிவிடும். அதனை பார்த்து எதிரிகள் பயந்து ஓடி விடும். --

புதன், 3 ஏப்ரல், 2024

Fish oil மாத்திரை விட்டமின் டி குறைபாட்டை போக்க உதவுமா? நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.


மீன் மாத்திரையை மருத்துவர்கள் பல பிரச்னைகளுக்காக பரிந்துரைப்பார்கள்.

ஆனால் அது எதற்காக , ஏன் என யோசித்தது உண்டா..? இதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.

மீன் மாத்திரையானது பண்ணா மீன் ( Cod fish ) எனப்படும் ஒரு வகையான மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதை Cod Liver Oil என்றும் அழைப்பார்கள். இதில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் D சத்துக் குறைபாடு பலருக்கும் உண்டு என்பதால் இந்த மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்படும். இந்த வைட்டமின் D யானது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உறுப்புகளுக்கு அனுப்ப உதவுகிறது.

குறிப்பாக கால்சியம் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, செல்களின் வளர்ச்சி ஆகிவற்றை பிரதானமாக அளிக்கிறது. எனவேதான் வைட்டமின் D நிறைந்த மீன் எண்ணெய் மாத்திரை அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் A கண்களுக்கு நல்லது. கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது.

Omega 3 fatty acid என்பது கெட்டக் கொழுப்புகளை சேர விடாமல் குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையும் குறையும்.

இவை தவிற வைரஸை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுத்து அடியோடு அழிக்க உதவுகிறது.

எனவேதான் மருத்துவர்கள் மீன் மாத்திரையை அதிகம் பரிந்துரைக்கின்றனர். எனினும், இதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தாமாக வாங்கி உண்பது ஆபத்தை விளைவிக்கும்.--

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts