லேபிள்கள்

வெள்ளி, 30 மார்ச், 2012

நம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வு



சில நேரங்களில் நம் கணினியில் ஏதாவது மென்பொருள் அல்லது விளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும் ஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும். இது போன்ற பிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.
Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ் இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
 இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி எதிர்பாராமல் Shutdown செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும் மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும் பிழைச் செய்தியை காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைக்காக நாம் விண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை. எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த டல் கோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://www.dll-files.com
இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்தி வருகிறதோ அந்த கோப்பின் பெயரை படம் 1-ல் இருப்பது போல் இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக தரவிரக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.கணினி வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வியாழன், 29 மார்ச், 2012

வேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் !



பலருக்கும் ஒரு வேலை வேலை வாங்க வேண்டும் என்பது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கும். வேலை கிடைத்தபிறகோ அந்த வேலையில் அசத்துவது எப்படி எனும் சூட்சுமம் புரிவதே இல்லை. சிலர் சடசடவென உயரத்தில் போய்விடுவார்கள். சிலர் கடைசிப் படிக்கட்டையேக் கட்டிக் கொண்டு கலங்குவார்கள்.
சரி, வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் அலசுவோமா ?
வேலை கிடைத்ததும் எல்லாம் முடிந்துவிடவில்லை. இது தான் ஆரம்பமே. உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிப்பது தான் முக்கியம். புதிதாக வேலைக்குச் சென்றிருக்கும் உங்களை எல்லாக் கண்களும் ரகசியமாய்க் கண்காணிக்கும். எனவே வேலையில் கருத்தாய் இருங்கள்.
உங்கள் வேலைக்குத் தேவையான தகவல்களைக் கற்பதில் தயக்கம் காட்டாதீர்கள். அலுவலகத்தில் கடை நிலை ஊழியனிடம் கூட விவரங்கள் கேட்டுப் பெறலாம். முதல் சில மாதங்கள் மட்டும் தான் மற்றவர்களிடம் நிறைய விஷயங்கள் கேட்க முடியும். ரொம்ப நாளுக்கு அப்புறம் கேட்டால் இன்னுமா இதெல்லாம் தெரியலஎன ஏளனமாய்ப் பார்ப்பார்கள்.
அடுத்தவர்களுடைய வேலையைப் பங்கு போட்டுக் கொள்வதில் தயக்கம் வேண்டாம். வேலையை முடித்தோமா, கிளம்பினோமா என்று இருந்தால் கேரியர் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும். சகல கலா வல்லவன் ஆகவேண்டுமென்றால் அடுத்தவர் செய்யும் வேலைகளெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நிலமையை முன்கூட்டியே கணிக்கப் பழகுங்கள். ஒரு வேலை என்றால் அதைக் கேட்டுச் செய்யும் மனநிலை உருவாக வேண்டும். எங்கேனும் பிரச்சினை வரலாம் என்றால் அதையும் ஊகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த புரோ ஆக்டிவ்தன்மை உங்களை வேலையில் மிக விரைவாய் வளர வைக்கும்.
தயங்காமல் பேசுங்கள். சில சிறு சிறு ஐடியாக்களை எடுத்து விடுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை வேண்டாம். பத்து வருஷமா இப்படியே தான் ஓடுது, அதையே ஓட்டுவோம் என நினைக்காதீர்கள். அதில் சிறு மாற்றம் செய்ய முடியுமா என பாருங்கள். இவை உங்கள் அதிகாரிகளின் கவனத்தைக் கவரும்.
உங்கள் மேலதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். அதை அவரிடமே பேசி சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை மேலதிகாரியிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லையேல் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை மேலதிகாரியோடு விவாதியுங்கள். சில மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறீர்களா என்பதை விசாரித்து அறியுங்கள்.
தவறுகள் செய்யாமல் இருக்கவே முடியாது. தவறு செய்யும்போது தவறை மறைக்காதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன்னியுங்கள். பின் அந்தத் தவற்றை ஒப்புக்கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அந்த தவறை மற்றவர்களும் செய்யாமல் இருக்க ஏதேனும் வழிமுறை செய்ய முடியுமா என பாசிடிவ் ஆக யோசியுங்கள்.
நீங்கள் செய்யும் வேலைகளுக்கான கிரடிட் உங்களுக்கு வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரியிடம் அடிக்கடி உரையாடுவது. அன்றைய பணிகள் குறித்த சுருக்கமான ஸ்டேட்டஸ் அனுப்புவது, இப்படி மேலதிகாரியுடன் எப்போதுமே தொடர்பில் இருங்கள்.
ஒரு சிக்கல் வந்ததும் சிணுங்கிக் கொண்டே மேலதிகாரியின் கதவைத் தட்டாதீர்கள். அது உங்கள் மேலான அபிமானத்தைக் குறைக்கும். ஒரு சிக்கல் வந்தால் அதை தீர்க்கும் வழிகளை யோசியுங்கள். உங்களால் தீர்க்க முடியாத சிக்கல் என்றால் மேலதிகாரியைப் பாருங்கள். அவரைப் பார்க்கும் போது, இது தான் சிக்கல். இதற்கு இப்படியெல்லாம் தீர்வு உண்டு. என தீர்வுகளுடன் பேசுங்கள். மேலதிகாரியின் மனதில் மேலான இடம் பிடித்து விடுவீர்கள்.
10. கல்லூரி காலமெல்லாம் முடிந்து விட்டது என்பதை வேலைக்குச் செல்லும் போது நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தூய்மையான, நேர்த்தியான ஆடை உங்களுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
11, அலுவலகத்தில் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுங்கள். மேலதிகாரி உங்களிடம் சொல்லும் விஷயத்தை டமாரம் அடிக்காதீர்கள். ஆரோக்கியமான அலுவல் சூழல் மன அழுத்தங்களுக்கெல்லாம் வடிகாலாகும்.
12. நேரம் தரம் விலை இந்த மூன்றும் எப்போதும் உங்கள் சிந்தனையில் இருக்க வேண்டும். செய்ய வேண்டிய வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாத தரத்தில் அதைச் செய்து முடிக்க வேண்டும், குறைந்த செலவில் அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த மூன்று வார்த்தைகளும் தான் பணியின் வெற்றியின் ரகசியம்
13. சக பணியாளரைப் பற்றி புறணி பேசுவதையெல்லாம் அடியோடு ஒதுக்குங்கள். உங்கள் பெயர் ஒரேயடியாகப் பாழாகிவிடும். எல்லோரையும் மதித்து, எல்லோரிடமும் நேர்மையாய் இருங்கள். சிலர் ஜால்ராவுக்காக பிறரைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்வார்கள். அவர்கள் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள். நேர்மையாய் இருந்தால் மேலதிகாரியின் மனதில் காலம் தாழ்த்தியானாலும் நிரந்தர இடம் நிச்சயம் உண்டு.
14. சம்பளம் மட்டுமே எல்லாம் என நினைக்காதீர்கள். அது ஒரு பாகம் மட்டுமே என நினையுங்கள். செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள். ஈடுபாட்டுடனும் ரசனையுடனும் வேலை செய்யும் போது நீங்கள் வாழ்க்கையை ரசிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் வேலை செய்யும் ஸ்டைலே உங்களை உயர்த்தும்.
15. புதிய வேலைகள் ஏதேனும் வந்தால் தயங்காமல் முதல் அடியை எடுத்து வையுங்கள். மற்றதெல்லாம் கூடவே வந்து விடும். முதல் சுவடு வைப்பது தான் மிகக் கடினமானது. அது தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தவும் செய்யும்.
16. உங்களால் முடியாத வேலை ஏதேனும் வந்தால், இதை என்னால் தனியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை என நேரடியாகவே சொல்லி விடலாம். முடியும் என்று சொன்னால் செய்ய வேண்டும் என்பதில் கவனமாய் இருங்கள்.
17. தினமும் காலையில் உங்கள் வேலையை வரிசைப்படுத்துங்கள். தலை போகும் அவசரம், அவசரம் தான் ஆனால் பரவாயில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தரம் பிரியுங்கள். அவசர வேலைகளில் முதல் கவனம் இருக்கட்டும்.
18. அலுவலக பொருட்களை வீட்டிற்கு எடுத்து வராதீர்கள். ஒரு பேனாவோ, சில பேப்பர்களோ, புத்தகங்களோ எடுத்து வருவது உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது போல. நேர்மையாய் இருங்கள். அது தான் மனிதனின் அடையாளம்.
19. உங்களுக்கென சில வேலை இலட்சியங்களைக் கொண்டிருங்கள். அதை அடைய வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியலிடுங்கள். உங்கள் வேலை காலத்தில் அந்த பட்டியல் எப்போதும் உங்கள் மனதில் இருக்கட்டும்.
20. கம்பெனி எனும் பெரிய அளவில் சிந்தியுங்கள். கம்பெனியின் லாபத்தை அதிகரிக்க, பிஸினஸை கூட்ட ஏதெனும் செய்ய முடியுமா என யோசியுங்கள். இது என் வேலை இல்லை”, “இதான் நான் அப்பவே சொல்றேன்.. நீ தான் கேக்கலை”, “வேலை செம கடுப்படிக்குது..என்பவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கானவை அல்ல. எனவே ஒதுக்குங்கள்.

புதன், 28 மார்ச், 2012

உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்




1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். முடிந்தவரை ஆன்லைனில் ஸ்கேன் செய்வது நல்லது .

2 . நாம் பயன்படுத்தும் OPERATING SYSTEM அதாவது ( விண்டோஸ், லினக்ஸ் ) முறையாக
  அப்டேட் செய்து இருத்தல் வேண்டும் .

3. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர்களை முறையாக அப்டேட் செய்ய வேண்டும்
  குறிப்பாக இணையத்திற்கு பயன்படுத்தபடும்  (JAVA)ஜாவா (ADOBE FLASH )அடோபே பிளாஷ் போன்றவைகளை நமது அப்டேட் (SETTINGS)செட்டிகளுக்கு ஏற்றவாறு  அப்டேட் செய்ய வேண்டும. 

4. நாம் பயன்படுத்தும் (BROWSER)ப்ரௌசெர் முடிந்தவரை புதிய பதிப்புகளை (LATEST VERSION) பயன்படுத்துவது நல்லது.

5. BROWSER ப்ரௌசெரில் உள்ள சில EXTENSIONS மற்றும் PLUG-IN களையும் அப்டேட் செய்ய வேண்டும்.

6. உங்கள் அக்கௌன்ட் பாஸ்வோர்டை எழுத்துகள் மற்றும் எண்கள் போன்றவைகளை கொண்டு கலந்து கொடுத்து கொள்ள வேண்டும் அக்கௌன்ட் பாஸ் வோர்ட் குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ( இது ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்பதற்கு தான்)

7. (RECOVERY)ரேகோவேரி மெயில் ஒப்டிஒன் கொடுத்து இருத்தால் அதையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

          *  Recovery Email Address 
          *  SMS Notification
          *  Secret Question 
8.
  ஜிமெயில் அக்கௌண்டில் இருக்கும் USING STEP 2 VERIFICATION என்பதை (ENABLE) எனப்ளே செய்து கொள்ளவது சிறந்த  ஒன்றகும.

9. ஒரு சில வெப்சைட்டில் நாம் ஜிமெயில் அக்கௌன்ட் பயன்படுத்தி இணையத்தை பார்க்கும்போது நமக்கு தெரியாமல் விளம்பரங்கள் அல்லது (FACK)பாக் மெயில் மூலம் நமது பாஸ்வோர்டை
  திருட முயற்சி செய்யலாம்.
 அதற்கு  கீழ் உள்ளதை போன்று செய்யவும்

·                     Sign in on the Google Accounts homepage.
·                     Click the My Account link displayed at the top right of the page.
·                     Click Authorizing applications & sites.This page will list all third-party sites you've granted access to.
·                     Click the Revoke Access link to disable access for a site. 
 10. Use HTTPS Secure Connection : always use HTTPS this helps you from the stealers from stealing your information whenever you access Gmail from Cyber – Café or Hotel or other places. 

11. Check strange recent activity :
 this can be really useful as Gmail tracks all the iP address on which Gmail was accessed or we say your account was accessed so if you think there was a suspicious activity then you can check that by clicking the Details link @ the bottom like below and click Sign out all the sessions and simply change your password.

12.  நாம் அனுப்பும் மெயில் அட்ரஸ் சரியாக உள்ளதா என்று பார்த்து கொள்ள வேண்டும் முடிந்தவரை

13. காண்டக்ட் அட்ரஸ் களை ஏற்றோர் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்

 14. ஒரு சில் நேரத்தில் நாம் நமது (ACCOUNT)அக்கௌன்ட்- ன்  NAME, PASSWORD மறந்து இருப்போம்  அதற்கு (RECOVERY)ரெகவரி மெயில் கொடுத்து கொள்வது நல்லது.

15.
  உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தர்வகளிடம் உங்கள் அக்கௌன்ட் பாஸ் வோர்டை கொடுக்கதீர்கள் . முடிந்தவரை ACCOUNT SIGN OUT அவுட் செய்யவும்

செவ்வாய், 27 மார்ச், 2012

அதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்!



ஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ;  மொழியாக்ம்: காஜா முயீனுத்தீன்
ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்லஎன்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.
கஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.
அதிஸ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம்” – இதை விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்று உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார். அமைச்சரவை ஜித்தாவில் உள்ள மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்” – இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக
  பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.
நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ம முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறுகோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்குஇபுறாகிம் (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது!
நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன்.அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நிண்றபடியே சென்றார் காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!
மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம் கிணற்றின் நீரைக் குறைத்து  நீர் வரும் வழியைக் காணலாமே என்று! ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கானபெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.
நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.
நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.
ஜம்ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (lab) இந்த நீர் குடிப்பதற்று உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போது அவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.
இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜமை ஆராய ஆராய மேலும் பல அதிசிய தன்மைகள் வெளிவந்து நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூரதொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.
சுருக்கமாக ஜம்ஜமின் விசேசங்களைக் கூறுகிறேன்.
  • இந்த கிணறு என்றும் வறன்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
  • என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
  • அதன் குடிக்கத்தக்க தன்மைஒவ்வொரு ஆண்டும் உம்ரா ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal)..
  • பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க -  நீருக்காக சஃபா மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.

திங்கள், 26 மார்ச், 2012

தெரிஞ்சு சாப்பிடுவோம் 3



எம். முஹம்மது ஹுசைன் கனி
பாகற்காய்
என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய்
என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

ஞாயிறு, 25 மார்ச், 2012

தெரிஞ்சு சாப்பிடுவோம் 2



எம். முஹம்மது ஹுசைன் கனி
அத்திக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய்
என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

கோவைக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.

புடலங்காய்
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

சனி, 24 மார்ச், 2012

தெரிஞ்சு சாப்பிடுவோம் 1



எம். முஹம்மது ஹுசைன் கனி
இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் காய், பழ வகைகளும் ஆகும். படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்!
இது வரை நாம் பார்த்த காயா பழமா தொகுப்புக்குப்பின்….
தவறாமல் தினமும் சாப்பிடுகிறோம்தானே! நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அப்போதைய நம் உடல்நிலைக்கு பருவநிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட உதவவே இந்த இணைப்பு. எதையுமே தெரிந்து அனுபவிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் அலாதிதான். தாஜ்மஹால் என்பதை எந்தப் பின்னணியும் அறியாமல் பார்க்கும்போது அது பிரமிக்க வைக்கிற கட்டடக்கலை மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள காதலறிந்து பார்க்கும்போது உங்களுக்குள்ளும் கவிதை அனுபவம் கிட்டும்.
அப்படித்தான் தினமும் சாப்பிடும் காய், பழங்களின் ருசியோடு அதிலுள்ள பயன்களையும் அறிந்து சாப்பிடுவதும். இவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எது யாருக்கு ஏற்றது? யார் எதை விலக்கி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து உண்டு பயனும், பலமும் பெறவே இந்த இணைப்பு.
கத்தரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய்
என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
மாங்காய்
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய்
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது

வெள்ளி, 23 மார்ச், 2012

திடீரென நான் மௌத்தாயிட்டா!



நடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் மூன்று குழந்தைகளுக்குத் தந்தை ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!
ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!
மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்அதை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் எல்லா வகையிலும்- எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் குடும்பார்த்தக் கடமைகளை ஒத்தி போடாமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள வேண்டும் நம்முடைய தொழிலை உருவாக்க நான் பட்ட கஷ்டத்தை நீ அறிவாய் ! அந்தத் தொழில் எனக்குத் திடீரென ஏதாவது நிகழ்ந்துவிட்டாலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! திறம்பட நிர்வகிக்கப் பட வேண்டும் அதனால்தான் கேட்கிறேன்அப்படியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால், நீ என்ன செய்வாய்?”
என்னால் என்ன செய்ய முடியும்? போதிய படிப்பில்லை….. உலக அனுபவம் இல்லைசெல்வச் சூழலில் செல்லமாய் வளர்க்கப் பட்டவள்உங்களுக்கு வாழ்க்கைப் பட்டபிறகும் அதே மகிழ்ச்சியான வசதியான வாழ்க்கைச் சூழ்நிலைஎன்னால் ஒன்றும் செய்ய முடியாது…. குழந்தைகளும் சிறியவர்கள் …… ஊருக்குப் போய்விட வேண்டியதுதான் ..அந்தக் குடும்பத் தலைவி கலக்கத்துடன் சொன்னார்.
ஆயிரம் முறை அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மானசீகமாக இறைவனிடம் இறைஞ்சிக்கொண்டார்.
அப்ப இந்தத் தொழில்…? ரத்தம் சிந்தி உருவாக்கிய தொழில்..? உடனே சரிந்து போவதா? கூடாது! அதை அனுமதிக்கக் கூடாது!
எப்படி?”
வழியிருக்கிறது அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன் இன்ஷா அல்லாஹ்! அதற்கு நீ ஒத்துழைக்க வேண்டும்
புரியாமல் கனவணையே உற்றுப் பார்த்தார் அவர்.
ஏன் இவர் இப்படிப் பேசுகிறார்? என்னால் எப்படி இந்தத் தொழிலைக் காப்பாற்ற முடியும்? எனக்கு என்ன அனுபவங்கள் இருக்கின்றன?”
அவருக்கு அழுகை அழுகையாக வந்தது!
கணவர் விவரித்தார்.
குஜராத்தின் மொத்த வியாபாரிகளிடமிருந்து அவர் குழந்தைகள் பெண்களுக்கான உடைகளை மொத்தமாக ஜித்தாவுக்கு இறக்குமதி செய்கிறார். அவற்றிற்கு ஜித்தாவிலேயே எம்பிராய்டரி நீடில் வொர்க் டிஸைன்களை சீஸனுக்கு ஏற்றபடி செய்துகொள்கிறார். அதற்காக ஒவ்வொரு பீஸுக்கும் 15 முதல் 20 ரியால் வரை செலவழிக்கிறார். பிறகு விற்பனை செய்கிறார்.
அந்த 15- 25 ரியால் ஏன் பிறருக்குச் செல்ல வேண்டும்? நான் உனக்கு அந்தத் தொழிலின் நுணுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறேன் உதவிக்கு ஆட்களை நியமிக்கிறேன்…. கடல் போன்ற பெரிய வீடு இருக்கிறது…. நீ இங்கிருந்தே இதைச் செய்யலாம்! அந்தத் தொகையை நான் உனக்குத் தந்து விடுவேன்செலவு, உதவியாளர்கள் சம்பளம் போக மீதியை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்வீட்டுச் செலவுக்கும் உனக்கான செலவுகளுக்கும் வழக்கம் போல் தந்து விடுவேன்இது உன் தனிப்பட்ட சம்பாத்தியம்
இது சாத்தியமா? … கேட்க நன்றாகத்தான் இருக்கிறதுஎன்னால் இதைச் செய்ய முடியுமா?”
மனைவியின் சந்தேகம் நீங்குவதாக இல்லை!ஆனால் கணவர் விடவில்லை!
அவரை ஒப்புக்கொள்ள வைத்து திட்டத்தைச் செயல்படுத்தினார்!
அன்று பயந்து நின்ற மனைவி இன்று தன்னம்பிக்கை நிறைந்த குடும்பத்தலைவியாய் ஏராளமான சேமிப்புடன் தலை நிமிர்ந்து நிற்கிறார்! தஞ்சை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் சராசரியாக செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த பெண், ஒரு சிறந்த பெண் தொழில் முனைப்பாளர்ஆன உண்மைக் கதை இது!
அந்த புத்திசாலி யதார்த்தம் உணர்ந்த குடும்பத் தலைவர் மனைவியுடன் நிற்கவில்லை! +2 படித்த மூத்த மகளை தன் கணக்கு வழக்கு அத்தனையையும் பொறுப்புடன் நிறைவேற்றும் அக்கௌண்டண்டாக உருவாக்கி, அதற்காக நியமிக்கப் பட்டிருந்த பணியாளரை நிறுத்திவிட்டு அந்த ஊதியத்தை தன் மகளுக்கே வழங்கினார்!
ஆறாவது, ஏழாவது படிக்கும் தன் பிஞ்சு மகன்களையும் விட்டுவிடவில்லை அவர். ஆயத்த ஆடைகளுக்கான விலைச்சீட்டை பின் பண்ணும் பனியை ஓய்வு நேரத்தில் வழங்கினார். அதன் காரணமாக அவர்களின் சேமிப்பும் பெருகியது. ஜித்தாவில் இந்த வித்தியாசமான குடும்பத்தைச் சந்தித்த பிறகு பல இடங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.
சிலர் இந்த வழியில் தாங்களும் சிறக்க அல்லாஹ் வழியமைத்தான்! இதோ ஊற்றுக்கண் வாசகர்களுக்கும் அந்த உண்மைக் கதை! அந்தப் புத்திசாலி குடும்பத்தலைவராய் நாம் ஒவ்வொருவரும் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கவே இருக்கிறது!
நமக்கு வேண்டியதெல்லாம் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் மாற்றம்!- தெளிவான சிந்தனை!
குறுகிய வட்டத்தை விட்டு கொஞ்சமும் வெளிவராமலே குடும்பத்துக்குச் சுமைஆகிப் போகாமல் தற்சார்புள்ள குடும்பத் தலைவிகளை பெண்குழந்தைகளை உருவாக்கும் வலுவான திட்டம்!
அவரவர் வசதிப்படி சூழ்நிலைகளுக் கேற்ப தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்!
ஒரு புதிய முஸ்லிம் சமுதாய வாழ்வியலை உருவாக்கலாம், இன்ஷா அல்லாஹ்!

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts