லேபிள்கள்

சனி, 26 நவம்பர், 2022

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மீன் உணவின் மருத்துவ பயன்கள் !!

 

தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக் குறைக்க வழி செய்கிறது.

மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு  ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை  அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய்  ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது. பெண்கள் மீனை அதிக அளவில்  சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/medicare-provides-health-benefits-to-the-body-of-the-fish-foods-121010600081_1.html


--

புதன், 23 நவம்பர், 2022

உணவை அலுமினிய தாளில் பேக் செய்வதால் உணடாகும் ஆபத்துக்கள் !!.

 

அலுமினியத்தாள் என்பது பொதுவாக மெல்லிய, பல்வகை உலோகம், குறிப்பாக சமையலறையிலும் வீட்டு பயன்பாடுகளிலும் உபயோகிக்கப்படுகிறது.

உண்மையில், பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், மீன், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட பெரும்பாலான உணவுகள் இயற்கையாகவே அலுமினியம் உள்ளது. தேயிலை இலைகள், காளான்கள், கீரை மற்றும் முள்ளங்கி போன்ற சில உணவுகளில், மற்ற உணவுகளை விட அலுமினியம் அதிகமாக உள்ளது.

வீட்டில் அலுமினியத் தகடு எடுத்து உணவை சூடாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சூடாக சாப்பிட வேண்டும் என்ற உங்கள் ஆசை உங்கள் ஆரோக்கியத்தை  எவ்வளவு பாதிக்கிறது தெரியுமா? ஆம், அலுமினியத் தகடுகள் உங்கள் ஆரோக்கியத்தை சேதப்படுத்துகின்றன.

தொகுக்கப்பட்ட உணவை தினமும் சாப்பிடுவதன் மூலம், அந்த கூறுகள் உங்கள் உடலுக்குள் சென்று சேகரிக்கின்றன, இதன் காரணமாக உங்களுக்கு ஆஸ்துமா  அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இது தவிர, உங்கள் நோயெதிர்ப்பு சக்தியும் மோசமடைகிறது.

அலுமினியப் படலத்தில் சமைப்பது உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும். அதில் உள்ள அபாயகரமான இரசாயனங்கள் காரணமாக, எலும்புகள் பலவீனமடையத்  தொடங்குகின்றன. இது மட்டுமல்லாமல், இது மத்திய நரம்பு மண்டலத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கான உணவை அலுமினியப் படலத்தில் கட்டினால், கவனமாக இருங்கள், அவ்வாறு செய்யாதீர்கள். இதன் காரணமாக, அலுமினியத் தகட்டின் கூறுகள் உணவில் இருக்கின்றன, இது புற்றுநோயின் அபாயத்தை வைத்திருக்கிறது.

சூடான உணவை அலுமினிய தாளில் பொதி செய்வதன் மூலம், அதில் உள்ள கூறுகள் உருகி உணவு மூலம் உடலுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/dangers-of-packing-food-in-aluminum-foil-121010400065_1.html


--

சனி, 19 நவம்பர், 2022

திராட்சையை அதிகளவில் எடுத்து கொள்வதால் என்ன நன்மைகள்...?

 

திராட்சையை அதிகளவில் எடுத்துக் கொண்டால் இருத நோயை கட்டுப்படுத்தலாம். இதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை திராட்சையில் உள்ளது

இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் கூட இப்பழத்தினை தினமும் எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட பல நோய்களிலிருந்து குணமடையலாம்.

உடல் வளர்ச்சி குறைந்தவர்கள், உடல் பலவீனமானவர்கள் திராட்சையை தினமும் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.

தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரம் குணமடையலாம்.

உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வு இல்லாமல் பயணம் செய்ய வழிவகை செய்யும். தேவையான  சக்தியும் அதிகளவில் கிடைக்கும்.

ரத்தக் கொதிப்பு நோய்க்கு அருமருந்தாக திராட்சை விதைகள் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு, ரத்தக் குழாய்களில் வீக்கம் ஆகியவற்றை  திராட்சை விதை குறைக்கும்.

மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை திராட்சை கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை திராட்சை கரைக்கும்.

தினமும் திராட்சையை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயாளின் காலில் ஏற்படும் மரத்துப்போகும் தன்மை தடுக்கிறது. கண்புரை வராமல் திராட்சை காக்கிறதுகருப்பு திராட்சை விதை சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யும்

மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தரும். பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து திராட்சை காக்கிறது. திராட்சை தினமும் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-consuming-more-grapes-121010400071_1.html


--

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மீன் உணவின் மருத்துவ பயன்கள் !!

  தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு , சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள...

Popular Posts