லேபிள்கள்

CHILD CARE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CHILD CARE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

குழந்தைகளுக்கு வரலாம் கேட்டராக்ட்' பாதிப்பு; பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - கண்கள் பத்திரம்.

``கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு என்பது பெரியவர்களைத் தாக்கும் எனக் கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால், அது குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கூட பாதிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படுகிற இந்தக் கண்புரை பாதிப்பானது, ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ இருக்கக்கூடும். சில வேளைகளில் அது பரம்பரையாகத் தொடரும் பாதிப்பாக இருக்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அது குறித்து அவர் தரும் விளக்கமான தகவல்கள் இங்கே...

 சிறப்பு மருத்துவர் வசுமதி

``சில குடும்பங்களில் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ மிகச் சிறிய வயதிலேயே கண்புரை பாதிப்பு ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் கண்புரை பாதிப்பு இருக்கக்கூடும். சொந்தத்தில் திருமணம் செய்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரக்கூடும். கண்ணின் பாப்பா எனப்படும் பகுதியில் வெண்மையாக ஒரு படலம் போன்று தெரியும். அதை வைத்து கண்புரை பாதிப்பைச் சந்தேகிக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை... அரசுத்திட்டம் அறிவீர்களா?

`ராஷ்டிரியபால ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்' (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) எனப்படும் ஒன்றிய அரசுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே அதற்கு முழுமையான கண் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறது. கண்ணில் புரையோ, வேறு ஏதேனும் பிரச்னைகளோ, புற்றுநோயோ இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிய உதவுகிறது இந்தப் பரிசோதனை.

பிறக்கும்போதே ஒரு குழந்தைக்கு கண்ணில் புரை பாதிப்பு இருந்தால், அது கடந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த சோம்பேறிக் கண் பாதிப்பில் கொண்டுபோய்விடும். அதுவும் தீவிர நிலை சோம்பேறிக் கண் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகிவிடும்.

கண்புரை பாதிப்பு உள்ள அந்தக் கண்ணில் பார்வை வளர்ச்சியே இருக்காது. இதனால் இது கண்டுபிடிக்கப்பட்டால் குழந்தை பிறந்த அடுத்தடுத்த நாள்களிலேயேகூட அறுவைசிகிச்சை செய்து கண்புரையை நீக்குவதுண்டு. பெரியவர்களுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் லென்ஸ் வைப்பதைப்போல குழந்தைகளுக்கு முதல் ஒரு வருடத்தில் வைக்க முடியாது.

குழந்தையின் கண்களின் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது. தவிர, குழந்தையின் கண்பார்வையின் பவரானது மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரு வருடம் ஆன பிறகு, குழந்தையின் கண்களைப் பரிசோதித்துவிட்டு, பிறகு அதன் கண்களில் லென்ஸ் வைப்போம். அதன் பிறகு, நன்றாக உள்ள இன்னொரு கண், சோம்பேறிக் கண்ணாக மாறாமலிருக்க சிகிச்சை அளித்துக் காப்பாற்றப்படும். ஒருவேளை இரண்டு கண்களிலும் கண்புரை இருந்து அகற்றப்பட்டிருந்தால் குழந்தைக்கு கண்ணாடி கொடுத்து அணியப் பழக்கப்படுத்தப்படும்

அம்மாக்கள் கவனத்துக்கு...

பரம்பரைத் தன்மையை மீறி இந்தப் பிரச்னை வர குழந்தையின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ருபெல்லா எனப்படும் மணல்வாரி அம்மை பாதிப்பும் ஒரு காரணம். தாய்க்கு ருபெல்லா பாதித்திருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண்புரையும், விழித்திரை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின் கண் சிறியதாக இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கு Congenital Rubella Syndrome (CRS) என்று பெயர். இந்த பாதிப்பு உள்ள குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், காது கேட்பதில் பாதிப்பும் கூட இருக்கக்கூடும். அதனால்தான் திருமணத்துக்கு முன்பே இளம் பெண்களுக்கு எம்.எம்.ஆர் தடுப்பூசி போட வலியுறுத்தப் படுகிறது. இது போடப்படும் பட்சத்தில் கர்ப்ப காலத்தில் அந்தப் பெண்ணுக்கு இந்த அம்மை பாதிப்பது தவிர்க்கப்படும்.

 Eye Issues (Representational Image)

இதுதவிர, சம்பந்தப்பட்ட அந்த கர்ப்பிணி ஏதேனும் ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்திருந்தாலும், கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே எடுத்திருந்தாலும், வைட்டமின் குறைபாடு இருந்தாலும்கூட அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. கண்புரை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு அதை அறுவைசிகிச்சை மூலம் நீக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவரிடம் செக்கப்புக்கு அழைத்து வர வேண்டியது மிகவும் அவசியம்."



--

புதன், 29 ஜனவரி, 2025

கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைக்கும்.

பெரும்பாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு தலைப்பு உடற்பயிற்சி. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா? சிக்கலற்ற கர்ப்பம் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி நல்லது என்றும், சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சங்கடமாகவும் அழுத்தமாகவும் உணர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:-

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம்

செய்யக்கூடியவை:

கர்ப்பம் உடலிலும் மனதிலும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது இங்கே:

முதல் மூன்று மாதங்கள் (1-2 வாரங்கள்):

நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி

தரையில் இருந்து எழுவதற்கு முன் உங்கள் பக்கமாக திரும்பி எழவும்

முதல் மூன்று மாதங்களில் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நரம்புகளைத் தணிக்க நல்லது

2வது மூன்று மாதங்கள் (13-26 வாரங்கள்):

*இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் காற்றில் தூக்க வேண்டிய பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

*நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி

*மெதுவாக ஓடுவதும் செய்யப்படலாம் ஆனால் உங்கள் மூட்டுகளில் அழுத்தம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

*பட்டாம்பூச்சி பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் செய்யலாம்.

3 வது மூன்று மாதங்கள் (27-40 வாரங்கள்):

*அனைத்து முக்கிய பயிற்சிகளையும் தவிர்க்கவும்.

*கடைசி மூன்று மாதங்களின் முடிவில்,

கூடுதல் எடையை சுமக்க உதவும் தசைகளை வலுப்படுத்தும் வலிமை பயிற்சி பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.

*நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய தசைகள் குளுட்டுகள், தொடை, வயிறு மேல் மற்றும் கீழ், பின் தசைகள்.

*உடற்பயிற்சி செய்யும் போது உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள் மற்றும் தளர்வான ஆடைகளை அணியுங்கள்.

*உடற்பயிற்சியை தவிர, ஆரோக்கியமான சமச்சீர் உணவும் உங்கள் உடற்தகுதிக்கு சேர்க்கிறது.

செய்யக்கூடாதவை:

*உங்கள் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்கவும்.

*உடற்பயிற்சியின் போது உங்களால் பேச முடியவில்லை என்றால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள்.

*ஆரம்ப சோர்வை நீங்கள் கண்டால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள்.

*உங்களுக்கு தலைசுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்பட்டால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

*கர்ப்பத்தின் 4 மாதங்களுக்குப் பிறகு உங்கள் முதுகில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.

*ஏனெனில் கருப்பை மற்றும் குழந்தைக்கு இரத்த விநியோகம் பாதிக்கப்படலாம்.

*எப்பொழுதும் ஒரு பயிற்றுவிப்பாளரிடமிருந்து பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றைத் தனியாகச் செய்யுங்கள்.

எச்சரிக்கை: இவை ஒரு குறிப்பு மட்டுமே என்றாலும், நிச்சயமாகத் தெரிந்துகொள்ள உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.



--

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

உங்கள் குழந்தை கொழு கொழு என்று வளர கொடுக்க வேண்டிய உணவுகள்.

ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும்.

குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்துக்கு பிறகு திட உணவுகளும் தாய்ப்பாலும் கொடுப்பது அவசியம்.

ஒரு வாழைப்பழத்தில் 100 + க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. இயற்கையாகவே அதிக எனர்ஜி தரும் பழம் இது.

மாவுச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை நிறைந்துள்ளன.

6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம்.

பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது.

8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.

குழந்தைகளுக்கு முதல் உணவாக தருவதில் மிக சிறந்த உணவு, கேழ்வரகு.

6 மாத குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிட ஏற்றது, இந்த கேழ்வரகு சிறுதானியம்.

கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் பி1, பி2, தாதுக்கள் ஆகியவை உள்ளன.

குழந்தைக்கு ராகி எளிமையாக செரிமானமாகும். ராகி கஞ்சி, ராகி கூழ், ராகி இட்லி, ராகி தோசை, ராகி ரொட்டி, ராகி புட்டு, ராகி லட்டு, ராகி கேக், ராகி குக்கீஸ் போன்ற வகைகளில் ராகியை கொடுப்பது நல்லது.

முட்டை

முட்டையில் பல விதமான நல்ல சத்துக்கள் அடங்கியுள்ளன. புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும்.

முட்டை உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. அத்துடன் செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் ஒரு வேகவைத்த முட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமையும்.

முழு தானியங்கள்

பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும்.

பால்

பாலில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுகிறது. தினமும் பால் குடிப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுபடுத்துகிறது.

சிக்கன்

பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். பிராய்லர் கோழியில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே அதை தவிர்த்து நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

சோயா பீன்ஸ்

ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

காய்கறிகள்

குழந்தைகளின் உணவில் இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, , கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



--

வியாழன், 13 ஜூன், 2024

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?


குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர்.

இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம்.

வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்.

துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம்.

குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும்.

சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.



--

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் பின்பற்ற வேண்டியவைகள் என்ன?

இந்த வைத்திய குறிப்புகளை 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றலாம். குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போல் உணர்ந்தால் உடனடியாக தெர்மோ மீட்டர் கொண்டு அளவிடுவது அவசியம்.

குழந்தைகளை மெல்லிய பருத்தியாடை அணியும்படி செய்வது நலம்.உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்காமல் இது தடுக்கும். ஏ.சி அறையில் உறங்க வைக்காமல் ஃபேனிற்கு கீழ் உறங்கவைப்பதே நலம்.

குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டுமென்றால் இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூளை (தனியா) சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவிற்கு வற்றும் வரை நன்றாக காய்ச்சவும். இதனுடன் கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

ஈரத்துணி வைத்தியம்: வெது வெதுப்பான நீரில் சிறிது பருத்தி துணியை நனைக்க வேண்டும்.தண்ணீரை பிழிந்து துணியினை நெற்றி பகுதியில் சிறிது வைக்க வேண்டும்.குழந்தைகளின் உடலிலும் துடைத்து எடுக்கலாம். நீர் குளிர்ந்த நீராக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

காய்ச்சலின் பொழுது கஞ்சி போன்ற எளிமையான உணவினை உட்கொள்வதும் ஓய்வும் மிக மிக அவசியம். உடலின் வெள்ளையணுக்களானது நோய் கிருமிகளை அளிக்கும் வேலை செய்து கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் உடலுக்கு ஓய்வளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?

ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.

பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும். வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும். 0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம். 1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம். பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள். குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.

பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள். காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும். ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts