லேபிள்கள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அதிக மருத்துவ பயன்களை கொண்ட பப்பாளி...!!

பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, பி, , கால்சியம் இதுபோன்ற பலவிதமான சத்துக்கள் பப்பாளி பழத்தில் உள்ளதால் இதய நோய் போன்ற பலவிதமான நோய்களையும் குணமாக்கும். பப்பாளி பழம் ஜீரண சக்தியை அதிகரித்து அஜீரணத்தை குணமாக்கும்  தன்மையை கொண்டது.
பப்பாளி பழம் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் கொண்டது . மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்  சரியாகிவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கருக்கலைப்பை எற்படுத்தும்  தன்மையையும் கொண்டுள்ளது. செரிமான மாத்திரைகள் இந்த பப்பாளி பழத்தில் இருந்து தான் தயாரிக்க பயன்படுகிறது .

பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது .பப்பாளி விதையில் உள்ள ஆன்டி ஆக்சிஜன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து  உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறிக்கும்

பப்பாளி பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பப்பாளி பழத்தின் கனிந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை  தடை செய்யலாம். பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் கண்களில் எற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் சருமத்தில் எற்படும் சுருக்கங்களை தவிர்க்கலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 ஏப்ரல், 2020

பலவகை கீரைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்...!!


கீரை வகைகள்: உடலின் பலத்தை அதிகரிக்கும் நோய் எதிர்பாற்றலை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும்.

வாயுப் பிரச்சனை குணமாகும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராக  வைக்கும். வயிற்றுக் பிரச்சனைகள் குணமாகும். குடல்புண்ணை ஆற்றும்.
 அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தளர்ச்சியை போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை  சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள்  வராமல் தடுக்கலாம்.
 சிறுகீரை: மலச்சிக்களை குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை  குறைக்கும்உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.
 அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல்மயக்கம்போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி  ஏற்படும்.
 வெந்தயக்கீரையை கோதுமை மாவில் சேர்த்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். பாசிபருப்பு சேர்த்து செய்தால் இதன் கசப்புச் சுவை நீங்கும். சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
 மலச்சிக்கலை தீர்க்கும் அகத்திக் கீரை: அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்திக் கீரை என பெயர் வந்தது. சிறு கசப்புச் சுவை கொண்டது.
 சத்துக்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், நாவுச்சத்து, புரதம் ஆகியனை இதில் உள்ளது. பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா?

வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம், உடலுக்கு ஆகாது, உடல் பருமன் ஆகிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் அதன் மதிப்பு தெரிந்த ஆங்கிலேயர்கள் இதனை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து நமக்கு பாதாம், பிஸ்தாவை அதிக விலைக்கு தள்ளிவிட்டனர்.

வேர்க்கடலை எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததில்லை. வேர்க்கடலையில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்களை சொல்லிக் கொண்டே போகலாம். மூளை வளர்ச்சிக்கு மிக பெரிய டானிக் என்ற இதனைச் சொல்லலாம்.
இதை தினமும் 30 கிராம் அளவு சாப்பிடுவதால் பித்தக்கல் பிரச்னைகள் கூட சரியாகிவிடும். ரத்த ஓட்டமும் சீராகிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பப்பை பிரச்னை தீரவும், தாய்ப்பால் சுரக்கவும் வழி செய்கிறது.
ஒமேகா 3 இதில் உள்ளதால் குழந்தை உண்டாவதற்கும், மார்பகக் கட்டி, கருப்பைக் கட்டி, நீர்க் கட்டி என எதுவும் வராமல் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள வேர்க்கடலையை நாம் தினமும் உணவில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

வேர்க்கடலையை வைத்து பலதரப்பட்ட தின்பண்டங்களை செய்யலாம். வேர்க்கடலை பர்பி, வேர்க்கடலை உருண்டை, லட்டு, வேர்க்கடலை எண்ணெய் போன்றவற்றை தயாரித்து சாப்பிப்டலாம்.

சுவையும் சத்தும் நிறைந்த வேர்க்கடலையை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியம் பெறலாம். சிலருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பின் அதை அவர்கள் தவிர்ப்பது நலம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 16 ஏப்ரல், 2020

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...?

காலை உணவு எப்போதும் ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருக்கவேண்டும். காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது  உடலுக்கு மிகவும் நல்லது.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவதே நல்லது.  
 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.  
வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள்  அதிகமாக இருக்கிறது.  
25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளது. வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது. ட்ரை ஃப்ரூட்ஸ், ஆப்பிள் மற்றும் மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம். மக்னீஷியம் மற்றும் கால்சியம் இதய ஆரோக்கியத்தை  பாதுகாக்கிறது.
  பொதுவாகவே, வெறும் வயிற்றில் எந்த பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்லஓட்ஸ், வாழைப்பழம், நட் பட்டர் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து சாப்பிடலாம். இதனை காலை உணவாக சாப்பிட ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்
 பெர்ரீஸ், வாழைப்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக வெட்டி, ஸ்கிம்டு மில்க் உடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பழம், நட் மில்க், கோகோ பௌடர் ஆகியவை சேர்த்து க்ரீமியான ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 13 ஏப்ரல், 2020

உணவுகளை எளிதில் செரிக்க உதவும் குடம் புளியின் பயன்கள்....!!

குடம் புளி, உடலின் சீரண சக்தியை அதிகரித்து, உணவை விரைவில் செரிக்க வைக்கும். உடல் எடையை குறைக்கும் மருந்துவகைகளின், மூல மருந்தாக பயன்படுகிறது.
இதில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், இதயத்தை காக்கும் தன்மைமிக்கது. அதிகப்படியான பசி எண்ணத்தை குறைக்கும் மூளையின்  செயல்பாடுகளைத் தூண்டி, உடல் எடைக்குறைப்பில், முக்கிய பங்காற்றுகிறது. குடம் புளியை மூலப்பொருளாகக்கொண்ட, உடல் எடையைக்  குறைக்கும் மேலை மருந்துகளில், இதன் தாவரவியல் பெயரிலேயே, விற்பனையாகிறது.
 மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மையுள்ள சித்த மருந்துகளில், குடம் புளி பெருமளவில் பயனாகிறது. குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது.
 இரத்தக் கொழுப்புகளை கரைத்து, சர்க்கரை குறைபாடுகளை சரிசெய்து, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் உடல் நல மருந்தாகவும்  பயன்படுகிறது. குடம் புளி மரப்பட்டைப் பிசின், மருத்துவத்துறையில் பயன்படுகிறது.
மனிதர்களுக்கு மட்டுமன்றி, மாடுகளுக்கும் மருந்தாகிறது. இதன் பதப்படுத்தப்பட்ட பொடி, நகைகளை பாலிஷ் செய்ய பயனாகிறது. கேரளாவில் இரப்பர் மரப்பாலை, பதப்படுத்த பயன்படுகிறது.
 குடம் புளியின் பழச்சதையை அப்படியே, சமையலில், சாம்பார் செய்ய, இரசம் செய்யப்பயன்படுத்தலாம், புளி சேர்க்கும் அனைத்துவகை உணவுகளிலும் பயன்படுத்தலாம்.
 குடம் புளி பழச்சதை கிடைக்காதபட்சத்தில் இல்லையென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் பதப்படுத்தப்பட்ட குடம் புளியை வாங்கிப்  பயன்படுத்தலாம்.
 நாம் அன்றாடம் பயன்படுத்தும், புளிக்கு மாற்றாக, இந்த குடம் புளியை பயன்படுத்தினால் உணவுகளில் ஒரு தனி மணமும் சுவையும் கூடவே, சாப்பிட்ட உணவுகள் எல்லாம் விரைவில் செரிமானம் ஆகச்செய்யும் தன்மைமிக்கது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 9 ஏப்ரல், 2020

சரும பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும் உதவும் மஞ்சள்...!!

மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி  விடும்.
மஞ்சளில் ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் மிகுதியாக உள்ளதுகுர்குமினில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும்  ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இவை உடலில் கிருமி நாசினியாக செயல்படுகிறது.
 மஞ்சள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. அதனால் உணவில் சமைக்கும்போது மஞ்சள் சேர்த்து கொள்ளலாம். கடைகளில்  கிடைக்கும் மஞ்சள் பொடியை வாங்கி பயன்படுத்தாமல், கிழங்கு மஞ்சளை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
 முகத்தில் சிறுவயதிலேயே சுருக்கம் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது. தோல் விரைவில் தளர்ந்துவிடாமலும் தடுக்கிறது.
 முகப்பருக்களை போக்குவதில் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறதுபருக்கள், வெடிப்புகள் மட்டுமல்லாமல், முகத்தில் ஏற்படும் பள்ளங்கள், உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் மஞ்சளுக்கு உள்ளது.
 சிலருக்கு சோப்புகளை மாற்றி பயன்படுத்தினாலோ அல்லது புதிய உணவை சாப்பிட்டாலோ அலர்ஜி போன்று முகத்தில் சிவப்பு பருக்கள்  தோன்றும்அப்படி பட்டவர்கள் மஞ்சளும் சிறிதளவு வேப்பிலை கலந்து முகத்தில் தடவி 2 நிமிடங்களில் கழுவ வேண்டும்.
 உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால்  குணமாகி விடும்மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts