லேபிள்கள்

திங்கள், 29 டிசம்பர், 2014

வாயில் ஊறும் உமிழ்நீர்

வாயில் ஊறும் உமிழ்நீர்
எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.

1.
பரோடிட் சுரப்பி
2.
சப்மாண்டிபுலர் சுரப்பி
3.
சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்
http://www.pettagum.blogspot.in/2013/10/blog-post_8036.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 27 டிசம்பர், 2014

அழுக்கு-கறை நீங்க

அழுக்கு-கறை நீங்க

அழுக்கு நீங்க
  • கழுத்தில் அணித்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து அதனால் சரடை நன்கு உருவித் துடைத்துக் கழுவினால்
  • பளிச்சென்று இருக்கும்.
வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட
  • கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
நகைகளில் எண்ணெய் நீங்க
  • கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் போதும்.
நகைகள் பளிச்சிட
  • சிறிதளவு மஞ்சள், நீல டிடர்ஜென்ட் பவுடர் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் தங்க நகைகளை போட்டு பின்பு எடுத்து டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சிடும்.
திருகாணி பொருத்தமாக இருக்க
  • தோடு, மூக்குத்தி இவைகளின் திருகாணியை பூண்டுச் சாற்றில் தேய்த்து திருகினால் பொருத்தமாக இருக்கும்.
தோல் பொருள்கள் பளபளக்க
  • தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
  • தோல் பொருள்கள் மீது படியும் காளானை வெங்காயச்சாறு கொண்டு தடவி துடைத்தால் போதும்.
இரும்பு சாமான் புதியது போல் இருக்க
  • இரும்பு சாமான்களை ஆறு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் புதியது போல் இருக்கும்.
துரு நீங்க
  • இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.
  • அரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு சீமை வெங்காயத்தை தேய்த்தால் துரு போய் விடும்.
துருப்பிடிக்காமல் இருக்க
  • கத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.
  • குண்டூசி டப்பாவில் சிறிதளவு சாக்பீஸ் தூளை தூவி வைத்தால் துருப்பிடிக்காது.
  • இரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள் துரு பிடிக்காது.
எண்ணெய் பசை போக
  • பித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 25 டிசம்பர், 2014

ஏன் வேண்டும் பான் கார்டு?

ஏன் வேண்டும் பான் கார்டு?


கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.

இரண்டு வழிகளில் கருப்புப் பண பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒன்று, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கொண்ட எல்லா பரிவர்த்தனைகளையும் Electronic payment மூலம் செய்ய வைக்கலாம்.
அதாவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துதல். அதனுடன் பான் கார்டு எண் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குதல். அப்படிச் செய்தால் நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப்படும்.
அவ்வாறு கண்காணிக்கப்படும்போது, ஓர் ஆண்டில் நாம் செய்யும் செலவுகள், நாம் செலுத்தும் வருமான வரியைவிட அதிகமாக இருக்கிறது என்றால், கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும். இதற்கான விசாரணைகளில் கணக்கில் வராத வருவாய்களைக் கண்டறிவதன் மூலம் கருப்புப் பணம் களையப்படும்.
சரி, யாரெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டும்? ஆண்டுக்கு சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள், தனக்கு வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை அல்லது வரியை நானே கட்டிவிடுவேன் என்று உறுதி அளிக்க வேண்டும். இதற்கு சில படிவங்கள் வங்கிகளில் இருக்கும். அதைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியம். தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் ஒரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் உங்கள் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.
பான் கார்டு வாங்குவதும் மிக எளிது. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று இருந்தாலே போதுமானது. இதற்கு 100 ரூபாய் வரை செலவாகும். இதற்கான முகவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 23 டிசம்பர், 2014

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்? அடிக்கடி வருவதேன்?

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்? அடிக்கடி வருவதேன்?

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனை நிறுவனர், லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிகிச்சை  நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.
மது குடிப்பவர்கள் அதிக போதையால் சாப்பிடாமல் தூங்கிவிடுகிறார்கள். இதனால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்படும் கேடு என்ன?
மது குடித்துவிட்டு சாப்பிடாமலிருப்பதால் வயிற்றில் புண் உண்டாகும். அதுவே தொடருமானால் கேன்சர் வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்வதால்  ரத்த வாந்தி ஏற்படலாம். கணையம், ஈரல் முதலானவை பாதிக்கப்படலாம். சில சமயங்களில் மூச்சுத்திணறல் வரலாம்.
அடி வயிற்றில் இடது புறமும், வலது புறமும் அவ்வப்போது வலிக்கிறது. இது எதனால் ஏற்படுகிது?
வலது புறத்தில் வலி இருந்தால் அப்பண்டிக்ஸ் எனப்படும் குடல் வால்வு பிரச்னையாக இருக்கலாம். இரண்டு புறத்திலும் வலி இருந்தால் குடலில்  கிருமிதொற்று இருக்கலாம். அதுவே தொடர்ந்து வலி இருந்து வாந்தி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை  அணுகுவது நல்லது.
நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் துவக்க நிலையில் நீச்சல் குள நீரை குடித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
நீச்சல் குளத்தில் சிலர் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிடுகிறார்கள். எனவே, அந்த நீர் மாசுபட்டுவிடுகிறது. அதை பருகும்போது கிருமி தொற்று  ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எண்டோஸ்கோபி பரிசோதனையை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டுமா?
மேற்கொள்ளலாம். வயிற்றில் ஏதேனும் பிரச்னையிருப்பின் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம். உள்ளே உள்ள  பிரச்னைகளை ஸ்கேன் மூலமாக 90 சதவீதம் பார்க்கலாம். ஆனால் எண்டோஸ்கோபி மூலமாக நேரடியாக பார்க்க முடியும்.

சிலர் 4 அல்லது 5 நாட்களுக்கு மலம் கழிக்காமல் உள்ளனர். இதற்கு காரணம் கண்டறிய கொலனோஸ்கோபி உதவுமா?

சில சமயம் மலக்குடல் பகுதியில் சுருக்கம் அல்லது மூலநோயிருந்தால் இது போன்ற பிரச்னை ஏற்படும். 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் 6  மாதங்களாக மலம் கழிக்கவில்லை. எனவே அவர் பயந்து திரவ உணவை மட்டும் எடுத்துக்கொண்டார். அவருக்கு கொலனோஸ்கோபி பரிசோதனை  செய்து பார்த்ததில் மலம் இருகி கல்போன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து எடுத்தோம். இப்பொழுது  நன்றாக உணவு உண்கிறார். எந்த பிரச்னையுமில்லாமல் மலம் கழிக்கிறார். எனவே, நார்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர்  அதிகமாக பருகவேண்டும்.
கேன்சர் நோயாளிகளுக்கு வாய் வழியாக உணவு கொடுக்க முடியாமல், நீர் உணவை புனல் மூலம் தொண்டைக்குழியில் ஓட்டை போட்டு  கொடுக்கிறார்களே? உமிழ்நீர் இல்லாமல் செல்லும் உணவு செரிக்குமா? வேறு பிரச்னை வருமா?
தொண்டையிலிருந்து அல்ல. வயிற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலமாக அல்லது மூக்கு வழியாக உயிர் வாழ்வதற்குத் தேவையான சப்ளிமெண்ட்  உணவு அளிக்கப்படும். அதனால் பிரச்னை ஒன்றுமில்லை.

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருகிறது. காரணம் என்ன?

உணவுக்குழாயில் புண் இருக்கலாம் அல்லது எதுக்கலிச்சலாக இருக்கலாம். தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.
சாப்பிடும்போது திடீரென்று புரையேறுகிறது. மூச்சுக்குழாயில் உணவு துகள் செல்வதாலா? வேறு காரணமா? மூச்சுக்குழாயில் உணவு சிக்கினால்  எண்டோஸ்கோபி மூலம் எடுக்க முடியுமா?

சாப்பிடும்பொழுது உணவுக்குழாய் வழியாக உணவு செல்லும். அந்த நேரத்தில் பேசும்போது மூச்சுக்குழலில் உணவு செல்ல நேரிடும். அப்பொழுதுதான்
  புரையேறுகிறது. ஆனால் உணவுத்துகள் தானாகவே வெளி வந்துவிடும். சில சமயங்களில் உணவுத்துகள் சிக்க நேர்ந்தால் உயிருக்கே ஆபத்தாக  அமைந்துவிடுவதுண்டு. எனவே, சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்…

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்

1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய
வேண்டும்.


2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும்.


3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும்.


4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும்.


5 கடவாய் பற்களின் மேல் பகுதியை முன்பின் அசைவோடு மெதுவாக சுத்தம் செய்ய
வேண்டும்.


6 இறுதியாக நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற மற்றும் துர்நாற்றம் ஏற்படாமலிருக்க பிரஷ் செய்ய
வேண்டும்.

விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டியதில்லை. வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட் இருந்தாலே போதும். பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள்ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும். பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால், ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.

பற்களை மிதமான அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் போதும். ஆக்ரோஷமாக, அதிக அழுத்தத்துடன் தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும். எனாமல்தான் பற்களுக்குக் கவசம்.
3 மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். வாய்துர்நாற்றம் இருப்பவர்கள், பற்களில் கூச்சம் இருப்பவர்கள், ரத்தம் கசிவதை உணர்பவர்கள் எல்லாம், பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிரத்யேக பற்பசை மற்றும் மவுத்வாஷ் உபயோகிக்கலாம்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மனம் திறந்து பேசுவோம்

மனம் திறந்து பேசுவோம்


"தற்கொலை வரை போயிருக்கிறேன், ஏன் இப்படி இருக்கிறேன் என்று யோசித்து, என்னாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தது உங்கள் எழுத்து" என்றது அந்த மின்னஞ்சல். என் மனதை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள் என்று சுருக்கமாக வந்தன பல கடிதங்கள். தமிழ் கூறும் நல்லுலகில் Introversion பற்றி எழுதியது பலர் வலியை சுட்டிக்காட்டியது தெரிந்தது.

நடிகர்களை விட மற்றவர்களை உதாரணம் காட்டியிருக்கலாம் என்று குட்டினார்கள் சிலர். ஆனால் ரஜினி, ரஹ்மான் அளவிற்கு எனக்குத் தெரிந்தவர்கள் பிரபலமில்லையே? சினிமா பாஷையில் (திரும்பவுமா?) சொன்னால் ரஜினி படம் கட்டுரைக்கு நல்ல "ஓபனிங்" தந்தது என்பது தான் உண்மை!
ஒரு கல்லூரி முதல்வர் கைபேசியில் கதறினார்: "முதலிலேயே பசங்க இண்டர்வியூவில் வாயைத் திறக்க மாட்டேங்கறாங்க. நீங்க என்னன்னா இன்ட்ராவர்ட்டை புரிஞ்சுக்கோங்கன்னு எழுதறீங்க. எத்தனை HR களுக்கு நேரம் இருக்கு சார்? பேசுலேன்னா ஒரேடியா ரிஜக்ட் தான். இதுல நம்ம பசங்களுக்கு இங்கிலீஷ் வேற வராது. முதல்ல எல்லாரும் நல்லா பேச கத்துக்கங்கன்னு எழுதுங்க சார்."
சில இடங்களில் சரியாக பேச முடியாது போவது எல்லாருக்கும் நடக்கிறது. அது ஏன் என்று இப்பொழுது பார்ப்போம்.
உலக மக்களில் அதிகம் பேருக்கு உள்ள மிகப்பெரிய பயம் எது தெரியுமா? மரணம்? இல்லை, அது இரண்டாவது இடம் தான். முதல் இடம் கூட்டத்திற்கு முன் உரையாற்றுவது. இதில் இன்ட்ராவர்ட், எக்ஸ்ட்ராவர்ட் பேதமெல்லாம் இல்லை.
பெரும்பாலும் சொதப்புகிற இடம், படிக்கும் காலத்தில் வைவா எக்ஸாம். பிறகு வேலைக்கான இண்டர்வியூக்கள். பின்னர் ஆரம்ப கால பிசினஸ் பிரசண்டேஷன்கள்.
சொந்த வாழ்க்கையில் காதல் சொல்லும் தருணம், நம்மை யாரோ சோதனை செய்கிறார்கள்; இதில் தவறிழைத்தால் நம் சுய பிம்பம் உடைந்துவிடும் என்கிற போதுதான் பதற்றம் ஏற்படுகிறது. பதற்றம் ஏற்படுத்தும் பல மாற்றங்கள் உடலுக்குள் நிகழ்ந்தாலும், வெளியே அதிகம் தெரிவது நம் பேச்சில் மட்டும் தான்.
வார்த்தைகள் வெளி வராது இருத்தல், திக்குதல், கோர்வையான பேச்சு தவறுவது, தெரிந்த விஷயம் மறந்து போய் திரு திரு என முழித்தல் ஆகியவை எல்லாம் பதற்றத்தின் வெளிப்பாடு தான். அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வந்ததும் எல்லா விடைகளும் தெளிவாக நினைவுக்கு வரும். கோர்வையாக சொல்ல வரும். இது எல்லாருக்கும் நடக்கும்.
Performance Anxiety யைக் குறைக்க ஒரே வழி: எது பதற்றம் தருகிறதோ அதைத் தொடர்ந்து செய்வதுதான். இதற்கு மிஞ்சிய உளவியல் உத்தி எதுவும் கிடையாது. நம் கல்வி அமைப்பு ரொம்ப தமாஷானது. பள்ளி காலங்களில் "வாயை மூடு, பேசக்கூடாது, சத்தம் வரக்கூடாது, பேசினால் பனிஷ்மெண்ட்" என்று சொல்லி வளர்த்துவிட்டு, கல்லூரி வந்தவுடன் "எப்படி பேச வைப்பது?" என்று வெளியாட்களை அழைத்து வந்து கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.
ஒரு கேள்விக்கான விடை எது? புத்தகத்தில் உள்ளதையோ அல்லது ஆசிரியருக்கு தெரிந்ததைதோ சொன்னால் (பெரும்பாலும் இரண்டும் ஒன்று தான், ஹி ஹி!) பையன் தப்பிப்பான். வேறு ஏதாவது சொன்னால் பரிகாசிக்கப்படுவான் அல்லது தண்டிக்கப்படுவான். இதனால் தோல்வி பயத்தை கல்வித் திட்டத்தோடு சேர்ந்து படிக்கிறோம். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தான் நம் கல்வி முறை இத்தனை காலமாகக் கொண்டாடி வருகிறது. வித்தியாசமாக பதில் சொல்லும் மாணவனை தன் அதிகாரத்திற்கு வந்த அச்சுறுத்தலாக எண்ணுகின்றனர் ஆசிரியர்கள்.
அதே போல இன்னொரு அபத்தம், நன்கு படிக்கும் மாணவனையே வகுப்பு தலைவனாக்குவது. அவன் வேலை யார் பேசினாலும் பெயர் எழுதி டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது. பாடத்தில் சுமாரான மாணவனோ மாணவியோ வேறு எதற்கும் லாயக்கில்லை என்பதை தொடர்ந்து கல்வி, குடும்பம் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
இவை அனைத்தும் வளர்ந்த காலத்தில் நேர்முகத் தேர்வில் அச்சம் கொள்ள வைக்கின்றன. எதுவும் தெரியவில்லை என்று சொல்லவோ, பதில் கேட்கவோ ஒரு அமெரிக்க மாணவன் தயங்க மாட்டான். இங்கு நம் மக்கள் தெரியவில்லை என்று சொல்ல கூனி குறுகுகிறார்கள்!
இந்தத் தாழ்வு மனப்பான்மையை மேலும் சிக்கல் படுத்துகிறது ஆங்கில பயம். ஜப்பான், கொரியா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் அமெரிக்க நாடுகளில் இல்லாத பாதுகாப்பின்மையும் தாழ்வு மனப்பான்மையும் அவர்களை விட ஆங்கிலம் அதிகம் தெரிந்த நம்மவர்களுக்கு உண்டு.
ஆங்கிலம் அவசியம் தான். கார்பரேட் உலகில் பிழைக்க இன்று அது உலக பொது மொழி ஆனது நிஜம் தான். ஆனால் தாய் மொழியும் சரியாகத் தெரியாமல், பாட அறிவிலும் ஆழமில்லாமல், ஆங்கில பயமும் இருந்தால் அது அடுத்த தலைமுறையைக் கரை சேர்க்காது.
தாய் மொழி அறிவும் தெளிவும் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும். கல்வி, தொழில் திறன் இருந்தால் எந்த நாட்டிலும் எந்த வேலையையும் செய்யலாம். எந்த மொழியையும் எப்போது வேண்டுமானலும் கற்கலாம். 200 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் அரசை பிரஞ்சு படை வென்றிருந்தால் இன்று பிரஞ்சு படித்துக்கொண்டிருப்போம். சீனர்கள் ஆங்கிலம் தெரியாமலே போடு போடு என்று போட்டுத் தள்ளுகிறார்கள். நாளை நாம் மாண்டரின் கற்றுக்கொள்ளும் நாள் வரலாம்.
இந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்றார்கள் முன்பு. ஆனால் ஐ.டி. புரட்சி சென்னைக்கும் பெங்களூருக்கும் பாலம் போட்டது. இப்போது வடக்கத்தியர்கள் வேலைக்காக இங்கு வருகிறார்கள். அதனால் வேலை நிமித்தமாக எந்த மொழியையும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். சென்னை சென்ட்ரல் போர்டர்கள் சாதாரணமாக ஆறு மொழி பேசுவார்கள். இன்னும் எழுத படிக்கத்தெரியாதவர்கள் அவர்களுள் பலர் உண்டு.
மொழி அறிவை எப்போது வேண்டுமானாலும் சுலபமாக வளர்த்துக் கொள்ளலாம். தன்னம்பிக்கையை வளர்ப்பது கடினம். மாணவர்களை தொடர்ந்து பேச விடுவோம். நேர்காணல் நாள் அத்தனை பதற்றமாக இருக்காது.
இந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கென்றே தனி பத்திரிகை கொண்டு வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தபோது, இடை மறித்த நண்பர், "என் பையன் கம்பர், ஷேக்ஸ்பியர் இரண்டும் சேர்ந்த கலவை" என்றார். அவ்வளவு மொழி பெயர்ப்பு புலமையா எனக் கேட்டதற்கு, "சே சே! கம்பரோட ஆங்கில அறிவும் ஷேக்ஸ்பியரின் தமிழ் அறிவும் அவனுக்கு உள்ளது" என்றார்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 17 டிசம்பர், 2014

ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.

ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.
ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.
இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.
அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்; இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்
(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது? இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் .
எனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்.
1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)
2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.
3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரி முஸ்லிம்)
4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)
5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)
 
ஜனாஸாவை குளிப்பாட்டுதல்
ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.

ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.
கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்)அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)

அபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.
ஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்.

காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 984) என்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை
மைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும்.

பிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்கா கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்
மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும்.பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி ரலி)அவர்கள் )இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும்உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)

மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண் ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.
மைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்கவேண்டும். இன்னும னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகிகொண்டிருந்தால்தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.
கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.
மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது
பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்.

இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள்ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)
போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)
தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.
தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.
மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால்குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)
 
கஃபனிடுதல்

கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு
மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.
கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்
நபி(ஸல்)அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.

முகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.
வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி வி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ் ந் துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.
பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்
1. கீழாடை
2. முகத்தை மூடுவதற்கு முந்தானை
3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை
4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.
மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .
 
ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை.

1.முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .
2.இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்; (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.
3.மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் என்று ஓதிக்கொள்ளவேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்
4.நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்)
ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறிவிட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
 ( ஆதாரம் அபூ தாவூத்)
ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ; ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)
ஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.

ஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்
ஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது

மூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் !
1. சூரியன் உதிக்கும் போது.
2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.
3. சூரியன் மறையும் போது.
என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.

பெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான்மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வா வார்கள் இதற்கு ( ர்(ஷக்கு) என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது.
இது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் " ம் மற்றவர்களுக்கு ' ஷக்கு கு' ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு ! இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வர வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல்இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.
மைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி )என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்)மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)
(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன்ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும் அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்தததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)
கப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)
ஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.

ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)
ஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது (ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)
பெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்" கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் ""(திர்மிதி, அபூதாவூத், (நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற ப லகீனமானவர் இழப்புகளை தாங் கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹராமாக்கப்பட்டிருக்கலாம்.
(இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்)அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்

ஆறுதல் கூறுதல்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.
ஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்)அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக
ஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)
இறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம் செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது.

இறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் " இத்தா "" என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.
எனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதுஅவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்துதெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts