லேபிள்கள்

சனி, 16 அக்டோபர், 2021

உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்

உழ்ஹிய்யா, குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்தோடு ஆரம்பமாகி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரையான கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுகின்ற ஒருவணக்க வழிமுறையாகும்.

எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்- (அல்பகரா-203 ) என்ற வசனம் துல்ஹிஜ்ஜா பத்தின் பின்வரும் நாட்களையே குறிக்கும்.

எண்ணிக்கையான நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்பது அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்கள் என குர்ஆன் மேதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் விளக்கம் தரப்படுகின்றது.

٥٢- [عن سعيد بن جبير:] عنِ ابنِ عبّاسٍ رضيَ اللَّهُ عنْه، أنَّهُ قال: " الأيّامُ المعلوماتُ أيّامُ العَشرِ ، والمعدوداتُ أيّامُ التَّشريقِ .((ابن الملقن (ت ٧٥٠)، البدر المنير ٦‏/٤٣٠إسناده صحيح)) .

"அறியப்பட்ட நாட்கள்" என்பது துல்ஹிஜ்ஜா பத்து தினங்களையும், "எண்ணிக்கையான தினங்கள்" என்பது தஷ்ரீக் உடைய நாட்கள் என்றும் மாமாதே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுவதாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹி) அவர்கள் அறிவித்துள்ளதை ஸஹீஹான சனத் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ( இப்னுல் முலக்கின்- அல்பத்ருல் முனீர்).

அய்யாமுஷ் தஷ்ரீக் என்ற துல்ஹஜ் பிறை 11,12.13 ஆகிய நாட்கள் உண்டு, பருகி அல்லாஹ்வை கூரும் தினங்களாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் )

🌼அய்யாமுத்தஷ்ரீக் பெயர் வரக் காரணம் என்ன?🌼

ஆடு, மாடு, ஒட்டகைகள் ஆகிய கால்நடைகளை இந்த நாட்களில் மக்கள் அறுத்து அவற்றை உரித்து, மாமிசங்களை பதப்படுத்தி பாவிப்பதனால் இந்த பெயர் கொண்டும் அந்த நாட்கள் முதன்மையாக அழைக்கப்படுகின்றன என்பது இதன் பிரதான பொருள் களில் ஒன்றாகும்.

🌼உழ்ஹிய்யா கொடுக்க வேண்டிய நேரங்கள்/ தினங்கள்🌼

துல்ஹஜ் பிறை பத்தில் அதிகாலை ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை முடிந்ததும் உழ்ஹிய்யா கொடுக்கின்ற நேரமும் ஆரம்பமாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்படும் உழ்ஹிய்யா மாமிசம் உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட, சாதாரண, ஸதகாவில்தான் பதியப்படும் என்பது ஹதீஸ்களில் இருந்து அறிய முடியுமான கருத்தாகும்.

ஹஜ் பெருநாள் தொழுகையோடு ஆரம்பமாகும் இந்த வணக்கம் அய்யாமுத் தஷ்ரீக் முடியும் வரை தொடரும் என்பதை ஹதீஸ்கள் மற்றும் நபித்தோழர்களின் நடைமுறைகளில் இருந்து நம்மால் புரிய முடியுமாக இருக்கின்றது.

பிறை பத்தில்தான் கொடுத்தார்கள், எனவே பிறை பத்தில் பெருநாள் தினமே குர்பானி தினம் என வாதிடுவது ஹதீஸ் பற்றிய விளக்கமின்மையும் வரலாறு பற்றிய அறியாமையனயுமாகும்.

🌼பிறை பத்தில் மாத்திரம் தான் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டுமா?

👉"ஹஜ்" என்பது அரஃபாதான்,
👉அல்ஃபாத்திஹா அத்தியாயம் இன்றி தொழுகை இல்லை,
போன்ற சொற்பிரயோக வரையறை சொற்றொடர் பிரயோக முறை மூலம் "யவ்முன் நஹ்ர்" தான் அறுத்து பலியிடும் நாள் என்ற வரையறை மூலம் உணர்த்தி இருப்பின் அந்த வாதம் சரி எனக் கூற முடியும்.

அதற்கு மாற்றமாக அந்த நாளைத் தொடர்ந்து கொடுப்பதை தடை இல்லாமல் இருப்பதாலும் அதனை அனுமதித்தும் பல அறிவிப்புக்கள் வந்துள்ளதாலும் வழமையாக நாம் நிறை வேற்றுவது போன்று உழ்ஹிய்யாவை தாராளமாக நிறைவேற்ற முடியும்.

இது பற்றி குழப்பிக் கொள்ளவோ, குழம்பவோ வேண்டியதில்லை.

"كل منى منحر ، وكل أيام التشريق ذبح " انتهى . صححه الشيخ الألباني في السلسلة الصحيحة بمجموع طرقه.

"மினாவின் ஒவ்வொரு இடமும் அறுத்து பலியிடுவதற்கான இடமாகும். அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முழுவதும் அறுப்புக்கான நாட்களாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஸ்ஸஹீஹா- அல்பானி) என்ற ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் நாம் மேலே சுட்டிக் காட்டிய முறையில் தனது உழ்ஹிய்யாவை மேற்படி நாட்களில் தாரளமாக நிறைவேற்றலாம்.

பிறை பத்து முடிந்தால் உழ்ஹிய்யா நேரமும் முடிந்து விட்டதா?

உழ்ஹிய்யாவின் தினத்தை வரையறை செய்வதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

இருந்தும் பெருநாள் தினம் முதல் பிறை 13 வது அஸர் வரையான தினங்களையே பெரும் , பெரும் அறிஞர் பெருமக்கள் சரியான கருத்தாக தேர்வு செய்தனர் என்பதை தீர்வாக அறிய முடிகின்றது.

அந்த தேர்வு என்பது கண்மூடித்தனமான தேர்வு கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களைத் தேடிப் பார்க்கின்ற போது தற்போது பின்பற்றப்படும் வழமை மார்க்கம் அனுமதிக்காத ஒரு வழிமுறை என்றோ அல்லது உழ்ஹிய்யா நிறைவேறாத நாட்கள் என்றோ பல காரணங்களின் அடிப்படையில் கூறமுடியாதுள்ளது.

புதிய புரிதல்

துல்ஹஜ் பத்தாம் நாள் அன்று "யவ்முன் நஹ்ர்" அறுத்து பலியிடும் நாள் என்ற கருத்தை முன்வைத்தும் இறைத் தூதர் அவர்கள் அந்த நாளில்தான் அறுத்து அதனை உட்கொண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டும் அதற்குப் பின்வரும் நாட்களில் அறுப்பது உழ்ஹிய்யாவில் சேராது என பீ.ஜே.வும் மற்றும் சிலரும் வாதித்தாலும் அந்த வாதம் பலவீனமானதாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னால் அறுப்பது கூடாது, தொழுகை முடிந்த கையோடுதான் அறுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள விதத்தில் உழ்ஹிய்யாவை பின்வரும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அறுப்பது கூடாது என்ற எந்த தடையும் வரவில்லை.

அத்துடன், மினாவுடைய நாட்கள் உண்டு பருகும் நாட்கள் என ஆதாரபூர்வான செய்திகள் வந்திருப்பதையும், தஷ்ரீக் உடைய நாட்கள் அறுத்து பலியிடும் நாட்கள் என இரு வேறு அறிவிப்பாளர் வழியாக வந்ததன் அடிப்படையில் ஸஹீஹான தரத்தில் கொள்ளப்படும் என அல்பானி (ரஹி) போன்ற அறிஞர்கள் ஸஹீஹ் என கூறுவதையும் அவதானித்தால் "யவ்முன் நஹ்ர்" அறுத்து பலியிடும் நாள் என்பது அறுப்பதற்கான ஆரம்பத்தைக் குறிப்பதையும் "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்கள் இறுதியான நாட்கள் என்பதையும் உணரலாம்.

அத்துடன், மார்க்க சட்டங்கள் பொதுவாக நெகிழும் தன்மையைக் கொண்டுள்ளதை இங்கும் கவனிக்க வேண்டும்.

இப்னு தைமிய்யா, இப்னுல் கையிம் போன்ற முற்கால அறிஞர்களும், மற்றும் இப்னு பாஸ், ஷேக் உஸைமீன் போன்ற பிற்கால அறிஞர்கள் பலரும் இந்த கருத்தையே உறுதி செய்கின்றனர்.

அந்த வகையில்
"யவ்முன் நஹ்ர்" என்ற துல்ஹஜ் பத்தாம் நாளை அறுத்து பலியிடுவது சிறப்பான நாளாகவும், பிற்பட்ட நாட்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.

உண்டு பருகுதல் என்பது அறுத்து உண்டு பருகுவதைக் குறிக்குமே தவிர, அறுக்காமல் உண்டு, பருகுவதை குறிப்பதற்காக அந்த சொற்பிரயோகம் இடம் பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பின் வரும் நபி மொழி

மூலம் இந்த உண்மையினை உணர்ந்து கொள்ள முடியும். 👇

[عن عبدالله بن عمر:] أنَّ رَسولَ اللهِ نَهى أَنْ تُؤْكَلَ لُحُومُ الأضاحِيِّ بَعْدَ ثَلاثٍ. قالَ سالِمٌ: فَكانَ ابنُ عُمَرَ، لا يَأْكُلُ لُحُومَ الأضاحِيِّ فَوْقَ ثَلاثٍ، وَقالَ ابنُ أَبِي عُمَرَ: بَعْدَ ثَلاثٍ. [صحيح مسلم ] .

இறைத் தூதர் அவர்கள் மூன்று நாட்களின் பின்னால் உழ்ஹிய்யா மாமிசங்களை உண்ணுவதைத் தடை செய்தார்கள். (முஸ்லிம் ) மற்றொரு அறிவிப்பில் உழ்ஹிய்யா மாமிசங்களை மூன்று நாட்களின் பின்னரும் ஒருவர் சேமித்து வைப்பதைத் தடை செய்தார்கள். ( முஸ்லிம்).

இந்த தடை பற்றி யோசித்தாலும் உழ்ஹிய்யா என்பது பெருநாள் தினத்தின் பின் வரும் மூன்று தினங்களில் கொடுக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

மக்கள் பசி, பட்டினியால் வாடிய போதே இந்த தடை தற்காலிக நடைமுறையில் இருந்தது . பின்வந்த நாட்களில் அது நீக்கப்பட்டது என்பதை முஸ்லிம் கிரந்தத்தின் பின் வரும் மற்றொரு அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

قال رسولُ اللهِ كُنْتُ نهَيْتُكم عن لحومِ الأضاحيِّ بعدَ ثلاثٍ فكُلوا ما شِئْتُم (مسلم)

மூன்று நாட்களையும் தாண்டி உங்கள் உழ்ஹிய்யா மாமிசங்களை நீங்கள் சேமித்து வைப்பதை நான் தடை செய்திருந்தேன். நீங்கள் (இதன் பிறகு) தாராளமாக உண்ணுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

இந்த ஹதீஸில் உழ்ஹிய்யா இறைச்சிகளை ஒருவர் சேமித்து வைப்பது தடையாக வந்ததது போன்று ஹஜ் பெருநாள் தினத்தின் பின் தொடர்ந்து வரும் நாட்களில் உழ்ஹிய்யா நிறைவேற்றுவது தடையாக வந்திருப்பின் அந்த தடையை நாம் மீறக் கூடாது. அப்படி எந்த தடையும் இடம் பெறவில்லை.

அத்துடன், இந்த நடைமுறை உணவுப் பழக்கம் தொடர்பான நடைமுறையாகும்.
இதில் :-
👉பலிப்பிராணியின் மாமிசத்தை அறுப்பவருக்கு கூலியாகக் கொடுப்பது கூடாது,
👉கொம்பு உடைந்தது, மெலிந்தது, நோய்ப்பட்டது ,
👉ஆறுமாத ஆட்டுக் குட்டி கூடாது போன்ற
சில தடைகள் இதிலும் வந்திருப்பின் நாம் அதைக் கட்டாயம் எடுத்து நடக்க வேண்டும்.

அவ்வாறு எவ்வித சொற்பிரயோகங்களும் நபிவழியில் இல்லாத போது நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி

http://www.islamkalvi.com/?p=124836


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 13 அக்டோபர், 2021

பிஸ்தாவில் உள்ளவைட்டமின்கள் என்ன...?


பிஸ்தா நல்ல ஆரோக்கியத்தை வழங்கக் கூடியது. பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.

வைட்டமின் பி6, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பிஸ்தாவில் அதிகமாக உள்ள வைட்டமின் ஈ, தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அதன் பொலிவைக் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தாவில் சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து, தெளிவான பார்வைக்கு  வழிவகுக்கின்றன.

பிஸ்தா பருப்பு, வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளை அதிகப்படுத்தி, ரத்த நாளங்களைப் பாதுகாக்கிறது. இதயநோய் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.

பிஸ்தா சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது. ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம்

மினரல், பாஸ்பரஸ் இருக்கிறது.

பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருப்பதால், குளுக்கோஸை அமினோ அமிலமாகச் சிதைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவு என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-vitamins-in-pista-120072900073_1.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

சனி, 9 அக்டோபர், 2021

உடலை ஆரோக்கியமாகவைத்துகொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள் !!

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 

தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும். சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம். 

செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும். 

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். 

 இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள்  சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம். 

 அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும். 

 எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின்  செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும். 

 உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும். 

 இரத்த கொதிப்பு நோய்

குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/medical-tips-to-help-keep-the-body-healthy-120072900083_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 6 அக்டோபர், 2021

இரவில் தூங்குவதற்குமுன்பு இதை செய்ய மறக்கக்கூடாது...?

முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்குவதற்கு நீங்கள் தினமும் உங்கள் சருமத்தை கவனித்துக்கொண்டாலே போதும். தூங்க செல்லும் முன் சருமத்தை  பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும். 

இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஆனால் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றி விடும்.

இரவில் தூங்குவதற்கு முன்பாக சில பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் அவையே முகத்தை சீராக வைக்கும். மேக்கப் போட்டிருந்தால், எண்ணெய் தன்மை கொண்ட கிளிசரினை பயன்படுத்தி முதலில் மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது மிகவும் நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் தூசுகளை நீக்கிவிடும். ஈரமான தலையுடன்  தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தலைமுடி பிசுபிசுப்பு தன்மையுடன் மாறி, மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைமுடியை தளர்த்தி  கட்டிக்கொள்வது நல்லது.

தினமும்

ஆறு முதல் எட்டு மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. மேலும் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும். மேலும் முகம் சோர்வடைவதும் தடுக்கப்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/don-t-forget-to-do-this-before-going-to-bed-at-night-120073000065_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

தொப்பையை குறைக்க எந்தவகையான இயற்கை பானங்களை எடுத்து கொள்ளவேண்டும்...?

பலரும் தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.  உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும்.

எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை

அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-kind-of-natural-drinks-should-be-taken-to-reduce-belly-fat-120073000069_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 29 செப்டம்பர், 2021

இதய நோய்கள் சம்பந்தமானபிரச்சனைகளை தீர்க்கும் எளிய வழிமுறைகள்...!!

நன்றாகப் பழுத்த நெல்லிக்கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் உண்டாகும்.

இருதய படபடப்பு குறைய: மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி  சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.இதயம் படபடப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.

இதய நோய்கள் தீர: துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை48 நாட்கள் சாப்பிட்டு வர இதய  நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இதயத்தில் குத்து வலி தீர: கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து  ஆகியவை தீரும்.

இதய பலம் பெற: அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம்  பெறும்.

இதய நடுக்கம் தீர: திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதயநடுக்கம் தீரும்.இதயம் பலம் பெற:-மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை  மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும்.

இதய பலகீனம் தீர: செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வர (காலை  மாலை) இதய பலகீனம் தீரும். மேலும் தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.

மாரடைப்புத் தீர: தான்றிக்காயைப் பொடி செய்து 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற்

தடவி வர மாரடைப்புத்தீரும். தொடரும்.இதய நோய்  உள்ளவர்கள் டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/simple-ways-to-solve-problems-with-heart-disease-120073100028_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

எண்ணற்ற சத்துக்கள்அடங்கியுள்ள கொய்யா இலை தேனீர் !!

பொதுவாக கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கொய்யா இலை டீயை 3 மாதம் தொடர்ந்து குடித்துவந்தால் உடம்பில் பல்வேறு மாற்றங்கள்  நிகழ்வதை உணரலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை சீராக்கும். மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் குடிக்க வேண்டும். கல்லீரலை சுத்தப்படுத்தும் .இருமல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மாறும். பல்வலி,  வாய்ப்புண் போன்றவற்றை விரைவில் குணமாக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கொய்யா இலை தேனீர் குடிப்பதால் வயிற்றுப் போக்கால் அவதிபடுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இது வயிற்று பிடிப்பைத் தணிக்கும். மேலும் சீக்கிரம் நிவாரணத்தை கொடுக்கும். மேலும் திரவ நிலையில் உள்ள இதை வாய் வழியாக உட்கொள்வதால் இது உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தை  தக்கவைக்கிறது.

கொய்யா இலை தேனீர் உடல் எடை குறைப்பதையும் ஊக்குவிக்கிறது. கொய்யா இலையில் வைட்டமின் சி, இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. எனவே  உங்களுக்கு குறைவான காய்ச்சல் இருந்தால் இந்த தேனீரை குடியுங்கள். இது தொண்டை, சுவாச பாதை மற்றும் நுரையீரலில் உள்ள சளியை போக்கும்.

சருமத்தில் உள்ள முகப்பரு, வடுக்கள் ஆகியவற்றை போக்குவதற்கும் இந்த கொய்யா இலை சிறந்தது. இதற்கு கொய்யா இலைகளை நசுக்கி அதை பரு மற்றும்  வடுக்கள் உள்ள பகுதிகளில் தடவி பாருங்கள். வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.

தலை முடி அடர்த்தி குறைவு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிபடுபவர்களும் கொய்யா இலையை பயன்படுத்தலாம். கொய்யா இலைகளை ஒரு  பாத்திரத்தில்

தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிக்கட்டி பொருக்கும் சூட்டில் தலையில் மசாஜ் செய்யலாம்.

உங்கள் நரம்புகளையும் மனதையும் அமைதிப்படுத்தி, கொய்யா இலை தேனீர் நல்ல உறக்கத்தையும் தருகிறது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/guava-leaf-tea-contains-innumerable-nutrients-120073100039_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்

ஷைய்க் அபூ நதா M.J.M. ரிஸ்வான் மதனி   உழ்ஹிய்யா , குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்...

Popular Posts