லேபிள்கள்

ஞாயிறு, 26 நவம்பர், 2023

ஆணுருப்பின் அதிசயம்

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமேஎன‌ ஒரு மாற்று மத ச‌கோத‌ர‌ர் கேட்டார்.

அன்ப‌ரே…! அல்லாஹ் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார்…?? அது போன்றே த‌லை, அக்குள், மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள்? அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை?

ஆணுறுப்பிலும், பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து அல்லாஹ் ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாதுஇறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன்.

ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து

ஆக‌வே, இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.

ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும்.

ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின் தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்…? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.

வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக் கொண்டு மூட‌ வைத்தான்.

அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர், தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌…? இத‌னால் தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்….

அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன் தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.

குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான்.

அல்லாஹ்வும் அவ‌னது தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன்..?? எத‌ற்கு..?? என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் அல்லாஹ் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன் தான் முஸ்லிம்.

மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.

ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால், அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.

ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறுநீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே சுருட்டி சிறுநீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறுநீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌ சிறுநீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால் தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம்.

இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்..

சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து..

இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம்.

வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.

ஆக‌வே, ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்து கொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு மார்க்கம் இஸ்லாமாகும்.

https://www.nidur.info/2022/02/04/%e0%ae%86%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

வியாழன், 23 நவம்பர், 2023

*இரத்தம் குடிக்கும் மூட்டை பூச்சிகளை ஒரேயடியாக ஒழிக்க இந்த சமையலறை பொருட்களே போதுமாம்.*

மூட்டைப்பூச்சிகள் உண்மையில் மிகவும் பொதுவானவை, ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை நினைத்து பீதி அடைகிறார்கள் மற்றும் மூட்டை பூச்சிகளை விரட்டுவதற்கான வீட்டு வைத்தியங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அவை விரைவாக மறைந்து விடும்.

மூட்டைப்பூச்சிகள் சிறிய ஓவல் வடிவ, தட்டையான மற்றும் துருப்பிடித்த பழுப்பு நிறத்தில் சுமார் 5 மிமீ அளவுள்ள பூச்சிகள் ஆகும். அவை பொதுவாக இரவில் தோன்றும், அவை இரவில் தங்கள் இருண்ட பிளவுகளில் இருந்து வெளிவந்து, முக்கியமாக மனித இரத்தத்தை உண்கின்றன, இதன் விளைவாக படுக்கைப் பூச்சிகள் கடிக்கும். இந்த மூட்டைப்பூச்சிகளை விரட்டும் எளிய வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மூட்டைப்பூச்சிகளை பட்டினியாக விடுவது

உங்கள் படுக்கையை வெற்றிடமாக்கி, சில ஜிப்லாக் பைகளின் உதவியுடன் மெத்தையை சீல் வைக்கவும். சுமார் ஒரு வாரத்திற்கு அட்டையை வைத்திருங்கள். இதையொட்டி மூட்டைப்பூச்சிகள் வெளிவந்து இரத்தத்தை உறிஞ்சாமல் இது தடுக்கும், இது இறுதியில் அவை பட்டினி கிடக்கும் மற்றும் இறுதியில் இறக்கும்.

சுற்றுப்புறங்களில் இருந்து பொருட்களை அகற்றவும்

 மூட்டைப்பூச்சிகள் படுக்கை விரிப்புகளில் மட்டும் வசிப்பதில்லை, ஆனால் படுக்கைக்கு அடியில் உள்ள மரச்சாமான்கள், திரைச்சீலைகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் அல்லது சலவை கூடையில் கிடக்கும் துணிகள் ஆகியவற்றில் மறைந்திருக்கக்கூடும்.மூட்டைப் பூச்சிகளுக்கு குட்பை சொல்ல ஒரு சிறந்த வழி, முடிந்தவரை அறையை ஒழுங்கீனம் இல்லாமல் வைத்திருப்பது. அட்டைப் பெட்டிகளை பிளாஸ்டிக் பெட்டிகளால் மாற்றவும். சலவை துணிகளை சீல் செய்யப்பட்ட பின் லைனர்களில் வைக்கவும். முழு அறையையும் சீரான இடைவெளியில் வெற்றிடமாக்கிக் கொண்டே இருங்கள்.

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய் தொற்றுநோய்க்கான ஒரு மலிவான தீர்வாகும். இயற்கையான, தூய தேயிலை மர எண்ணெயில் இருபது சொட்டுகளை எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து, பின்னர் இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கவும். இந்த எண்ணெய் அவற்றைக் கொல்வது மட்டுமல்லாமல், பொதுவாக பூச்சிகளை ஈர்க்கும் மனித வாசனையை மறைக்கவும் உதவுகிறது. குறைந்தது 10 நாட்களுக்கு இந்த செயல்முறையை தொடர்ந்து செய்யவும்.

பேக்கிங் சோடா

சமையலறையில் சமையல் சோடாவை வைத்திருப்பது எப்போதும் எளிது. இது மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும். ஒரு நல்ல அளவு பேக்கிங் சோடாவை எடுத்து, பூச்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கவும். சில நாட்கள் அப்படியே வைத்திருங்கள், தேவைப்பட்டால், ஒவ்வொரு நாளும் மீண்டும் தெளிக்கவும். பேக்கிங் சோடா அவற்றின் சருமத்தை உடல்ரீதியில் நீரிழப்பு செய்ய உதவுகிறது, இது மூட்டைப்பூச்சிகளின் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

வினிகர்

வினிகரின் கடுமையான வாசனை பூச்சிகளை முற்றிலுமாக விரட்டுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளை காய்ச்சி வடிகட்டிய வினிகர் கொண்டு மரச்சாமான்களுக்கு அடியில் மற்றும் சுற்றி போன்ற பாதிக்கப்பட்ட பகுதியின் விளிம்புகளில் தெளிப்பதே சிறந்த வழி. இந்த வழியில் பூச்சிகள் வெளியேறும் போது அவை வாசனையை எடுத்துக்கொள்கின்றன, இறுதியில் அவை வினிகரின் வாசனையைத் தாங்க முடியாமல் திரும்பி வருவதில்லை. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது இதை முயற்சி செய்து, உகந்த முடிவுகளுக்கு வாரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்முறை செய்யவும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் மூட்டைப்பூச்சிகளுக்கு ஒரு பிரபலமான வீட்டு வைத்தியம். உங்கள் படுக்கையின் விளிம்புகள், மரச்சாமான்களுக்கு அடியில் மற்றும் சுற்றிலும் ஆல்கஹால் கொண்டு நன்றாக மசாஜ் செய்யவும். மூட்டைப்பூச்சிகள் மதுவின் காரமான நறுமணத்தை வீசும்போது அவை இறக்கின்றன.

உப்பு

உப்பு மூட்டைப்பூச்சிகளுக்கான இயற்கையான விரட்டியாகும். உங்களைச் சுற்றி தவழும் பூச்சிகள் மீது சிறிது கடல் உப்பைத் தெளித்த சிறிது நேரத்தில் பூச்சிகள் அழிந்து போவதைக் காண முடியாது. பிழைகளை வெளியேற்றுவதற்கு உப்பு உடனடி தீர்வாகும்.

வெங்காயச்சாறு

வெங்காயத்தில் இருந்து சிறிது சாறு தயாரித்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் பரப்பவும். வெங்காய சாற்றின் வலுவான வாசனை பூச்சிகளின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது, இதனால் அவை மரணமடைகிறது.

ஞாயிறு, 19 நவம்பர், 2023

இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!

  1. وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் அவனின் பிடரி நரம்பை விட, நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்குர்ஆன் (50:16)

இறைவன் நமக்கு அருகில் நம்முடன் நெருங்கி இருப்பதை இயம்பும் இறைமறை குர்ஆனின் பிற வசனங்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. (அல்குர்ஆன் : 56:85)

நீங்கள் எங்கிருப்பினும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்” (57:04).

நீங்கள் செய்யும் மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்” (2:271)

அல்லாஹ் அவனின் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்” (3:20).

“(நபியே) உங்களிடம் என் அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடை அளிப்பேன்குர்ஆன் (2:186).

சிரமத்தில் சிக்கிய மனிதனின் அபயக்குரலைக் கேட்டு அல்லாஹ் அவனின் சிரமத்தை நீக்குவான்” (27: 62).

இப்படி நிறைய குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் நம்மோடு மிக மிக நெருக்கமாக இருப்பதை சொல்லிக் காட்டுகிறது. தன் நெருக்கம் பற்றி அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களிடம் பேசிய உரையாடலை ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது (நண்பர்கள் இந்த ஹதீஸ் கிதாபின் பெயரை தேடி சொன்னால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்)

மூஸாவே நான் உம்மோடு நெருக்கமாக இருக்க வேண்டுமா ?” என்று அல்லாஹ் கேட்பான்.

என்ன நாயனே, இப்படி ஒரு கேள்வியா ? நீ என்னோடு நெருக்கமாக இருந்தால் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று சொல்வார்கள் மூஸா (அலை) அவர்கள்

அல்லாஹ் மீண்டும் கேட்பான், ” உம்முடைய நாக்கிற்கும் பேச்சுக்கும் உள்ள தொடர்பை விட நான் உனக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமா ?” (நாவு அசைந்தால் பேச்சு வந்து விடும். அவ்வளவு நெருக்கம் இருக்கிறது நாவுக்கும் பேச்சுக்குமிடையில் )

அதற்கு முஸா (அலை) கண்டிப்பாக நாவுக்கும் பேச்சுக்குமிடையில் ), அதற்கு மூஸா (அலை) கண்டிப்பாக நாவுக்கும் பேச்சுக்குமிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டிலும் நான் உனதுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள்.

இன்னும் ரூஹுக்கும், உடலுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை காட்டிலும் நான் உமக்கு நெருக்கமாக வேண்டுமா ? ” எனக் கேட்பான் அல்லாஹ். ( ரூஹு இருந்தால் அங்கே உடல் இருந்தாக வேண்டும். உடல் இருந்தால் அதில் ரூஹு இருந்தாக வேண்டும். இல்லையெனில் மையத்தாகி விடும் )

ஆம்..! ரூஹுக்கும் உடலுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை காட்டிலும் நான் உனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்என்பார்கள் மூஸா (அலை) அவர்கள் .

அல்லாஹ் அடுத்துக் கேட்பான்.கண்ணுக்கும் பார்வைக்கு மத்தியில் உள்ள நெருக்கத்தை காட்டிலும், நான் உமக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமா ? “என்று கேட்பான்

கண் இருந்தால் அதிலேயே பார்வையில் இருக்கும் அல்லவா ? இவ்வளவு நெருக்கம் வேண்டுமா எனக் கேட்பான் அல்லாஹ்.

அப்போது என்ன அல்லாஹ் ? கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறாயே ,விஷயத்தைச் சொல்

நாயனே ! என்று மூஸா (அலை) அவர்கள் கேட்கிற போது,

அல்லாஹ் சொல்வான் : எனது ஹபீப் நாயகம் (ஸல்) அவர்கள் மீது, இனி உமக்குப் பின்னால் வரை இருக்கிற அஹ்மதின் மீது நீர் அதிகம் ஸலவாத்து ஓதிக்கொள். என்னை நீர் , நான்

சொன்னது போல் உள்ள நெருக்கத்தில் பெற்றுக் கொள்வாய் என்று.

மூஸா (அலை) அவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் ஸலவாத்து ஓதி இருக்கிறார்கள். அதனால் நாம் தான் ஸலவாத்து ஓதுவதில் பின்தங்கி இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ரஹ்மத் ராஜகுமாரன்

https://www.nidur.info/2022/02/05/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87/

வியாழன், 16 நவம்பர், 2023

தேங்காயை எந்த வடிவில் எடுத்துக் கொள்வது நல்லது?*

சிலர் தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனைக் கொண்டு உணவுகளை செய்வர். இது தவறானது.

ஏனெனில், இதில் நீங்கள் தேங்காயில் உள்ள நார்ச்சத்தை நீக்கி விட்டு வெறும் கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறீர்கள்.

நார்ச்சத்து இன்றி வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டும் எடுத்துக் கொள்வது உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.

தேங்காயை சிலர் பொரியலுக்குத் துருவலாக பயன்படுத்துவர். அப்படி எடுத்துக் கொள்வது நல்லது தான். அதேபோல், தேங்காய் சட்னியாகவும் இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

மேலும், வெறும் தேங்காயை நீங்கள் சில சில்லுகள் மென்று கூட சாப்பிடலாம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவில் தேங்காயை அப்படியே சாப்பிட வேண்டாம்.

தேங்காய் நல்லதா, கெட்டதா என்றால் இரண்டுமே அதில் உள்ளது. இருப்பினும், தேங்காயில் அதிக அளவில் நன்மைகள் உள்ளன. அதனை நீங்கள் எந்த வடிவில் அதனை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் நன்மை நமக்குக் கிடைக்கும்.

திங்கள், 13 நவம்பர், 2023

சுர்மா பற்றி அறிந்து கொள்வோம்

சுர்மா இத்மித் குஹ்ல் என்று அழைக்கப்படும் கண் மை இஸ்லாம் நமக்கு மருத்துவ ரீதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு பரிந்துரை செய்து உள்ளார்கள்.

சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருளாகும். இத்மித் என்று அரபியில் அழைக்கப்படுகிறது. இதில் மூன்றாம் வகை ஆண்டிமொனி சல்ஃபைடு எனும் வேதி பொருள் உள்ளது.

அரபியில் குஹ்ல் / இத்மித் என்றும் துருக்கியில் சுர்மா என்றும் ஹிந்தியில் உருதுவிலும் காஜல் என்றும், மலையாளத்தில் கண்மஷி என்றும் சமஸ்க்ருதத்தில் காஜல்/கஜோல் என்றும் எகிப்தில் மீஸ்தீமீத் என்றும் லத்தீனில் ஸ்தீபியம் என்றும் கிரேக்கத்தில் ஸ்தீபி என்றும் சோமாலியில் கூல் என்றும் ஒவ்வொரு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் சுர்மா பயன் படுத்த படுகிறது.

இஸ்லாத்தில் ஆண் மற்றும் பெண் இருவரும் பொதுவாக சுர்மா இட்டு கொள்ளுவது சுன்னத் ஆகும்! ஆரம்ப காலம் முதல் இன்றுவரை கண் பார்வை குளிர்ச்சி மற்றும் சக்திக்கு சுர்மா பயன்படுத்த படுகிறது.

💟சுர்மா தோன்றிய வரலாறு :

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்.

அப்போது மூஸா : என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார்.

அதற்கு அவன் (அல்லாஹ்), மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்! என்று கூறினான்.
ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்! அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்.
அவர் தெளிவடைந்ததும், (இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன் ; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார். (அல்குர்ஆன்: 7:143)

மேலே உள்ள சம்பவத்தில் நடந்த இடம் எகிப்து நாட்டில் உள்ள சினாய் மலையாகும்.

இந்த மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,285 மீட்டர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்தும் இந்த மலை காணப்படுகிறது.

இந்த மலையிலிருந்து பெறப்பட்ட கருகிய கற்களையும் தூள்களை கொண்டும் யுனானி முறையில் கற்களை மருத்துவ முறையில் தேய்த்து எடுக்கப்பட்டு சுத்தமான முறையில் சுர்மா தயாரிக்கப்படுகிறது இதுவே அன்றைய அரபியர்கள் பயன் படுத்திய முதன்மை தரம் வாய்ந்த சுர்மா ஆகும்.

இவ்வாறு தான் சுர்மா எனும் கண் மை தோன்றியது.

💟சுர்மா இடுவதின் சிறப்பு :

பார்வை சக்தி அதிகரிக்கும் :

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் உறங்க செல்வதற்கு முன் சுர்மாவை (கண்களுக்கு) இட்டுக் கொள்ளுங்கள்! அது கண்பார்வையை அதிகரிக்கும்! மேலும் அது கண் இமைகளை வளரச் செய்யும்! (நூல் : இப்னுமாஜா : 3496)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை ஒவ்வொரு கண்ணிலும் சுர்மா இட்டுக்கொள்ளுவார்கள் என்று ஒரு ஹதீஸ் திர்மிதி மற்றும் இப்னு மாஜாவில் இடம் பெற்று உள்ளது இது பலகீனமான ஹதீஸ் ஆகும்!

நாம் நமக்கு தேவையான அளவுக்கு சுர்மா இட்டு கொள்ளலாம்! எண்ணிக்கை கிடையாது!

💜இத்தா இருக்கும் பெண் சுர்மா இட கூடாது :

கணவனை இழந்து பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும் இந்த நாட்களில் இத்தா இருக்கும் பெண் முற்றிலும் அழகாரங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் அதில் ஒன்று சுர்மா இட்டு கொள்ள கூடாது! இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்து உள்ளார்கள்! இத்தா இல்லாத பெண்கள் சுர்மா பயன் படுத்தி கொள்ளலாம் இதற்கு எந்த தடையும் இஸ்லாத்தில் கிடையாது. (நூல் : முஸ்லிம் : 2975)

💟சுர்மா வாங்கும் போது கவனமாக இருங்கள் :

இந்த சுர்மா தூல் மற்றும் சிறிய கல் துண்டு போன்றும் கிடைகிறது.

இன்னும் சிலர் வியாபாரத்திற்கு மற்றும் பணத்திற்காக சுர்மாவில் ரசாயணம் சேர்த்து விற்பனை செய்கிறார்கள் இதனால் நமக்கு கண்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது! இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நல்ல மற்றும் தூய்மையான சுர்மாவை நாம் தேடி நாம் பயன் படுத்த வேண்டும்!

https://www.nidur.info/

வியாழன், 9 நவம்பர், 2023

*உரித்த வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது ஏன் தெரியுமா?*

Why should you avoid storing peeled and cut onions in fridge: உரித்த வெங்காயத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம் நம் அன்றாட சமையலில் பிரிக்க முடியாத அங்கம். நாம் சமைக்கும் குழம்புகளுக்கு ஒரு தனித்துவமான சுவை மற்றும் அமைப்பைச் சேர்ப்பது முதல் சாலட்களின் சுவையை மேம்படுத்துவது வெங்காயம் எந்தவொரு சுவையான உணவுக்கும் ஆன்மாவை சேர்க்கிறது. இருப்பினும், அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் கடுமையான வாசனை, அவற்றை நறுக்கி சேமிப்பதைக் கடினமாக்குகிறது. ஆனால், அன்றாட சமையலில் நாம் அடிக்கடி வெங்காயத்தைத் தோலுரித்து, நறுக்கி, நேரத்தை மிச்சப்படுத்தக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்போம். ஆனால், உரித்த வெங்காயத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது பாதுகாப்பானதா? அதை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயத்தின் வலுவான வாசனை உங்கள் சுவையான உணவுகளுக்கு சுவை சேர்க்கலாம். ஆனால், சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து திறந்தால் அது துர்நாற்றத்தை உருவாக்குகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் sulfur அதிகம் நிறைந்துள்ளது மற்றும் பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. அதுமட்டுமின்றி பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன.

உரிக்கப்படும் அல்லது நறுக்கப்பட்ட வெங்காயம், பாக்டீரியா மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நோய்க்கிருமிகளால் எளிதில் மாசுபடுகிறது. இது வெங்காயத்தின் ஆக்சிஜனேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இது நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாக அமையும் மற்றும் அதிக தீங்கு விளைவிக்கும்.

வெங்காயத்தை உரித்து நறுக்கி வைக்கக்கூடாது என்பதற்கான மற்றொரு காரணம், வெங்காயத்தை வெட்டும்போது,   வெங்காயத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு சாறுகள் வெளியேறுவதற்கு வழிவகுக்கும். இது வெளிப்படும் போது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கலாம்.

உரிக்கப்படும் வெங்காயத்தைக் குளிரூட்டினால், குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே இருக்கும் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை, அவற்றின் பிடியை இழந்து, ஈரமாக மாறி, நோய்க்கிருமிகள் உருவாக வழி செய்கிறது. இது ஊட்டச்சத்து அளவைக் குறைத்து பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

வெங்காயத்தை சேமிக்க சரியான வழி என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை உரித்து சேமிப்பது சிறந்த செயலல்ல. நீங்கள் ஊட்டச்சத்து நன்மைகளைப் பெற விரும்பினால், வெங்காயத்தை எப்போதும் சமைக்கும் போது மட்டும் உரித்து, நறுக்கவேண்டும். யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் (USDA) கூற்றுப்படி, வெங்காயத்தை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது 4.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீல் செய்யப்பட்ட கன்டெயினரில் வைப்பதே சிறந்த வழி.

ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வெங்காயத்தை சேமிப்பதற்கான மற்றொரு எளிதான ஹேக் என்னவென்றால், உரிக்கப்படும் ஒவ்வொரு வெங்காயத்தையும் உலர்ந்த காகிதத் துண்டில் போர்த்தி வைப்பதுதான். இது, காற்றில் ஈரப்பதத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

திங்கள், 6 நவம்பர், 2023

உதவி செய்பவன் பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” (அல்குர்ஆன் 2:107)

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன் 7:194)

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.” (அல்குர்ஆன் 16:20)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.” (அல்குர்ஆன் 22:73)

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 33:17)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 4:48)

அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.

https://www.nidur.info/2022/01/10/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a9-2/

வெள்ளி, 3 நவம்பர், 2023

*ஆலீவ் எண்ணெய் பற்றி பரவும் கட்டுக் கதைகளும் உண்மைகளும்.*

 


ஆலிவ் எண்ணெய் பல உணவகங்களில் பல நாடுகளில் பயன் படுத்தப்பட்டு வரும் ஒரு மூல பொருளாகும். இந்த எண்ணெய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது.

மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் இதன் ஊட்டச்சத்து மதிப்பை அறிந்து பலர் இதனை தங்கள் உணவுகளில் சேர்த்து வருகின்றனர். இருப்பினும், இந்திய சமயலறைகளில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு காரணம் ஆலிவ் எண்ணெய் குறித்து பரவி வரும் சில கட்டுக்கதைகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்:

1. அடர் பச்சை நிறம் ஆலிவ் எண்ணெயின் தூய்மையைக் குறிக்கிறது:

ஆலிவ் எண்ணெயின் தூய்மை அதன் நிறத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டதில்லை.

2. ஆலிவ் எண்ணெய் சூடுபடுத்தப்பட்டால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறையும். எனவே இந்த எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் வறுக்க பயன்படுத்த முடியாது:

ஆனால் உண்மை என்னவென்றால் வெப்பமாக்கல் ஆலிவ் எண்ணெயின் ஊட்டச்சத்து மதிப்புகளை பாதிக்காது. இன்ஃபான்ட், ஆலிவ் போமேஸ் எண்ணெய் போன்ற பல்வேறு வகையான ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒரு மாறுபாடு, அதிக சூட்டைத் தாங்கும் தன்மைக் கொண்டது. இது உணவுகளை வறுக்க ஏற்றதாக இருக்கும்.

3. அனைத்து ஆலிவ்/கனோலா/காய்கறி எண்ணெய்களிலும் ஒரே மாதிரியான கலோரிகள் உள்ளன:

ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் (MUFA, PUFA), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் பூஜ்ஜிய டிரான்ஸ்-ஃபேட்/கொலஸ்ட்ரால் உள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் பல்வேறு வகையான ஆலிவ் எண்ணெய்களின் மாறுபாடு ஆகும். இது உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கலோரி அளவு அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆலிவ் எண்ணெயில் கனோலா/காய்கறி எண்ணெய்களைக் காட்டிலும் குறைவான கலோரிகளே உள்ளன.

4. ஆலிவ் ஆயிலை மற்ற எண்ணெயுடன் கலந்தால் நன்மைகள் குறைகிறது மற்றும் காய்கறிகள் ஆக்ஸிஜனேற்றத்தை இழக்கின்றன:

ஆலிவ் எண்ணெயை வேறு எந்த எண்ணெயுடனும் கலந்தால் ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் குறையாது.

5. கிளவுடி எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என்பது ரான்சிடிட்டியின் அறிகுறியாகும்:

கிளவுடி என்பது எண்ணெய் ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் வெப்பநிலை சார்ந்த மாற்றத்துடன் தொடர்புடைய ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். இது எண்ணெய் அதிகமாக சூடுபடுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, குளிர்காலத்தில், குறைந்த வெப்பநிலை எண்ணெய்களை திடமாக்குகிறது. இதனை தடுக்க சேமிப்பக இடத்தில் வெப்பநிலையை உயர்த்துவதன் மூலம் எண்ணெய்யை அதன் திரவ வடிவத்திற்கு கொண்டு வருவது, அதன் இயல்பான நிலையை மீட்டெடுக்க உதவும் என்று அறியப்படுகிறது. இதற்காக அவை ரான்சிடிட்டி தன்மை கொண்டிருக்கும் என்பது அர்த்தமல்ல.

6. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை இந்திய சமையலில் பயன்படுத்த முடியாது:

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சமைப்பதற்கு மிகவும் நிலையான எண்ணெய் மற்றும் 400 வரை இதனை சூடேற்றலாம். டீப் பிரை செய்ய 350 முதல் 375 வரை சூடேற்றலாம். வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்கள் அதன் குறிப்பிட்ட வெப்பத்தை தாண்டிச் சூடாக்கினாலும், எண்ணெயில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக, குறைந்த அளவிலான தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை அவை உருவாக்குகின்றன. எனவே, எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்களை இந்திய சமையல் வகைகளையும் சமைக்க பயன்படுத்தலாம்.

7. ஆலிவ் எண்ணெய் கனமானது மற்றும் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. அதுவே மற்ற எண்ணெய்கள் இதயத்திற்கு இலகுவானவை:

ஆலிவ் எண்ணெயில் பூஜ்ஜிய கொழுப்பு மற்றும் ஜீரோ டிரான்ஸ்-கொழுப்பு உள்ளது. இதில் மோனோசாச்சுரேட்டட் ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பல நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை சமையலில் பயன்படுத்த காட்டாயம் ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts