லேபிள்கள்

புதன், 29 மார்ச், 2017

விரல்கள் செய்யும் விந்தை!

கல்பனா தேவி
சித்தா மற்றும் வர்மக்கலை மருத்துவர்
சித்தா, வர்மக் கலை போன்ற நம்முடைய பாரம்பரிய மருத்துவங்களில் கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் வானத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்களையும் சமன் செய்வதற்கு முத்திரைகள் உதவுகின்றன.
 விரல்களின் நுனியில் பல்வேறு நரம்புகள் இணைந்திருக்கின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றை மென்மையாக அழுத்துவதன் மூலம், நம் உடலில் உள்ள பிரச்னை
களை சரிசெய்ய முடியும். இதுவே முத்திரைகள்.

சளி, இருமல், சுவாசப் பிரச்னை, தலைவலி, வயிற்று வலி, அஜீரணம் போன்ற சின்னச்சின்ன உடல்நலப் பிரச்னைகளுக்கு, மருந்துகள் இல்லாத சிகிச்சைமுறைகளை பற்றி இனி, ஒவ்வொரு இதழிலும் நாம் பார்க்கலாம்.

வாயு முத்திரை
ஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும், நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கை, கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி  போன்றவை ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.
 வாயுப் பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத் தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு விசீங் பிரச்னை இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.

முத்திரைகளின் கட்டளைகள்
தரையில் விரிப்பை விரித்து, கண்கள் திறந்தவாறு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்காரவும். முடியாதவர்கள், நாற்காலியில் அமரலாம். ஆனால், பாதங்கள் தரையில் முழுமையாகப் பட வேண்டும். கால்களைக் குறுக்காகவோ, கால் மேல் கால் போட்டு உட்காரவோ கூடாது. படுக்கையில் செய்வோர், தலையணை இல்லாமல் முத்திரைகளைச் செய்யலாம்.
விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம்.
வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு. தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட முத்திரைகள் செய்யலாம்.
காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது.
http://pettagum.blogspot.in/2015/06/blog-post_5.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 27 மார்ச், 2017

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்!

நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். 
நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.z 

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்

.பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
 

தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மழைக்காலத்தில்
ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். 

தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். 

மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். 

பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.
வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 25 மார்ச், 2017

அல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை!

 
திராட்சைப்பழம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. திராட்சையில் பச்சை, கறுப்பு என எந்த பழம் இருந்தாலும் சாப்பிடலாம். குறிப்பாக அல்சர் என்று சொல்லப்படும் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும்.

காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்... வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.

இதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

மேலும், பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.

இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில்  ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே  பிரச்னை சரியாகிவிடும்.

கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிட்டு பலனடையலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 மார்ச், 2017

எலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட்காலம், அசத்தல் செயல்பாடு உங்கள் கையில்!


வாட்டர் ஹீட்டர். ஃபேன், டி.வி, டி.வி.டி, கணினி, மின்சார அடுப்பு என எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் சூழ வாழும் நாம், அவற்றைப் பராமரிப்பதிலும் உரிய கவனம் கொடுக்க வேண்டும். அதற்கு வழிகாட்டுகிறார் சென்னை, வேளச்சேரியில் உள்ள 'ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்' உரிமையாளர் ராமகிருஷ்ணன்.

இண்டக்‌ஷன் ஸ்டவ்
இண்டக்‌ஷன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ் இடையே குறைந்தது 5 அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர், எண்ணெய் இதன் மேல் படக்கூடாது. ஸ்டவ்வுக்கு நிர்ணயிக்
கப்பட்டுள்ள அதிகபட்ச எடையைக் காட்டிலும் அரை கிலோவாவது குறைவாக வைத்துச் சமைக்க வேண்டும். சமையலை முடித்த பின், ஃபேன் நின்ற பிறகே மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும். இண்டக்‌ஷன் ஸ்டவ்வின் கீழ்ப்பக்க ஓட்டைக்குள் கரப்பான் பூச்சி நுழைந்து பழுது ஏற்படலாம் என்பதால் அங்கே ரச கற்பூரம் வைத்து, கரப்பான் வருவதைத் தடுக்கலாம்.
இம்மெர்ஷன் வாட்டர் ஹீட்டர்
வாட்டர் ஹீட்டரின் ஸ்கேலிங் அளவுக்கு ஏற்ப தண்ணீர் வைக்க வேண்டும். குறைவான அளவில் தண்ணீர் வைத்தால், ஹீட்டரில் பொத்தல் ஏற்பட்டு விரைவில் பழுதாகிவிடும். ஒவ்வொரு முறை ஹீட்டரைப் பயன்படுத்திய பிறகும், குறைந்தது 10 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் வைத்து எடுக்க, ஆயுள் நீடிக்கும். ஹீட்டரின் 'கோட்டடு' பகுதியில் உப்பு பிடிக்காமல் இருக்க மிருதுவான துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும். எப்போதும் ஹீட்டரை உயரமான பாத்திரத்தில், நடுவாக வைத்துப் பயன்படுத்த
வேண்டும். படுக்கவைத்த பொசிஷன் கூடாது.

குளிர்சாதனப் பெட்டி
குளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிக்கும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக மின்சாரம் செலவாவதோடு செயல்பாட்டிலும் பழுது ஏற்படும். வாரத்தில் ஒருநாள் சர்ஃப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து உட்புறம், வெளிப்புறம் துடைக்கலாம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை உட்புறம் உள்ள `கிளாஸ் டோர்'களை வெளியே எடுத்துத் துடைக்க வேண்டும். பழைய மாடல் பிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.

அயர்ன் பாக்ஸ்
பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் லைட் வெயிட் அயர்ன் பாக்ஸில், ஒருபோதும் உச்சபட்ச சூட்டினை வைக்கக் கூடாது. அதிக மின்சாரம் செலவாவதோடு, இயந்திரமும் பழுதாகும். `ஆஃப்' நிலையில், அயர்ன் பாக்ஸை படுக்கவைத்தால் எனாமல் கோட்டிங் போய்விடும் என்பதால் நிமிர்த்தித்தான் வைக்க வேண்டும். ஒயரை, அயர்ன் பாக்ஸைச் சுற்றி வைத்தால், விரைவில் ஒயர் உடைந்துவிடும்.

ஏ.சி
ஸ்பிளிட் ஏ.சி-யில், உள்ளே அணில் கூடுகட்டவும், எலிகள் அட்டகாசம் செய்யவும் வாய்ப்புண்டு. மேலும் அவை உள்ளுக்குள் இறக்க நேரிட்டால் துர்நாற்றமும், அவை சேர்க்கும் குப்பையும் இலவசம். எனவே, கடைகளில் கிடைக்கும் சுண்டு விரல் அளவுக்குத் துளைகள் கொண்ட வலையை வாங்கி, வெளிப்புறத்தில் பொருத்துவது நல்லது. ஏ.சி-யில் படிந்த தூசியை மாதம் ஒருமுறை பல்விளக்கும் பிரஷால் உட்புறம் தேய்த்துத் துடைத்து, தண்ணீரில் நனைத்துப்  பிழிந்த மிருதுவான துணியால் துடைத்து வந்தால், சர்வீஸ் நன்றாக இருக்கும்.

`மைக்ரோவேவ் அவன்'
`மைக்ரோவேவ் அவன்'னில் ஸ்டீல் பொருட்களைக்கொண்டு சமைத்தால் வெளியாகும் கதிர்கள் நமக்கு பாதிப்பை உண்டாக்கவும், விபத்து ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கான பிரத்யேகப் பாத்திரங்களையே பயன்படுத்தவும். உணவுப் பொருட்களை கட்டாயம் மூடியபடியே உள்ளே வைத்துச் சமைக்க வேண்டும். கரப்பான்பூச்சி நுழைய அதிக வாய்ப்புள்ளதால், ரசகற்பூரத்தை ஓட்டை இருக்கும் இடங்களுக்கு அருகில் வைக்கலாம். `ஆன்' செய்த நிலையில் ஒருபோதும் அடுப்பின் டோரை திறக்கவோ, மூடவோ கூடாது; கதிர் பாதிப்பு ஏற்படும். இதைக் கிளீன் செய்ய அவசியமில்லை. அப்படிச் செய்ய நினைத்தால், மெக்கானிக் உதவியுடன் செய்ய வேண்டும்.

மிக்ஸி
நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு கொஞ்சம் குறைவாகவே பயன்படுத்துவது நல்லது. அரைத்து முடித்ததும் நேரடியாக மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யக் கூடாது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ஜாருக்குள் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் விட்டால், சத்தம் வராமல் தடுப்பதோடு, செயல்திறனும் நன்றாக இருக்கும்.
ஃபேன்
ஃபேனில் நன்றாகக் காற்று வர 10 அடி உயரம் கொண்ட அறை என்றால், ஒன்றரை முதல் இரண்டரை அடி அளவுக்கு ராடு கொண்டு ஃபேனைப் பொருத்த வேண்டும். அதுவே 12 முதல் 15 அடி உயரம் என்றால், இரண்டரை முதல் மூன்றரை அடி வரை ராடு கொண்டு பொருத்த வேண்டும். அறைக்கு ஏற்றாற்போல் ஃபேனின் எண்ணிக்கையை நிர்ணயிக்கவேண்டும். 10 -15 அடி அளவு கொண்ட அறைக்கு இரண்டு, 8 - 10 அடி அளவு கொண்ட அறைக்கு ஒன்று என அமைக்கலாம். மூன்று இறகு உள்ள ஃபேன்தான் சிறந்தது. சுத்தம் செய்யும்போது, பிளேடை இழுப்பது, வளைப்பது கூடாது. மிக மெதுவாக ஓடினால் கண்டன்ஸரை மாற்றலாம். முடிந்தவரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதன் கெப்பாசிட்டரை மாற்றுவதும், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதும் ஆயுள் நீட்டிக்க உதவும். டேபிள் ஃபேனை அடிக்கடி சுத்தம் செய்யவும்!

வாஷிங் மெஷின்
வெயில் பட்டால் வண்ணம் மாறும், மேற்புறம் உள்ள ஸ்டிக்கர் உருகி பிசுபிசுப்பாகும் என்பதால், வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். பயன்படுத்தும் தண்ணீரில் பாசியும், துகள்களும்... பயன்படுத்தும் பவுடரில் துகள்களும் இருக்கக்கூடும் என்பதால், தண்ணீருடன் அதற்கென விற்கப்படும் லிக்விட் கலந்து 15 நிமிடங்கள் வரை டெஸ்ட் மோடில் வைத்து 'டிரம் கிளீன்' செய்ய வேண்டும். அதிகபட்ச அளவைக் காட்டிலும் குறைவாகப் பயன்படுத்துவதுடன், வாஷிங்மெஷினின் கீழ்பாகத்தில் தண்ணீர் பட்டு துரு ஏறாமல் இருக்க ஸ்டாண்ட், சின்ன மேடை, கட்டை என ஏதாவது ஒன்றின் மீது வைக்கவும். தண்ணீர் தடையின்றி வெளியேறும் விதத்தில் ஹோஸைப் பொருத்த வேண்டும்.

டி.வி
டி.வி-யை வாரத்துக்கு ஒருமுறை துடைக்கலாம். அதன் அருகில் காந்தம் மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை வைக்கக் கூடாது. செல்போனுக்கு எஸ்.எம்.எஸ், அழைப்பு வரும் சமயங்களில் அது டி.வி-க்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மொபைலை டி.வி-க்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும். இடி இடிக்கும் நேரங்களில் டி.வி-யை ஆஃப் செய்வதுடன், கரன்ட் மற்றும் கேபிள் ஒயரை நீக்கிவிடுவதும் நல்லது. ஆன்/ஆஃப் செய்ய ரிமோட் பயன்படுத்தாமல் மெயின் ஸ்விட்சை நாடவும். அதிகபட்ச வால்யூமை வைத்தால் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ ஐ.சி-யின் ஆயுளுக்கு தீங்கு என்பதால் அதைத் தவிர்க்கவும். ஒருபோதும் டி.வி-யை தரையில் வைக்காமல், குறைந்தது 4 அடி உயரத்தில், பின்பக்கம் சுவரில் இருந்து அரையடி இடைவெளி விட்டு வைக்கவும். ஆறு மணி நேர பயன்பாட்டுக்கு ஒரு மணி நேரம் வீதம் டி.வி-க்கு கட்டாயம் ஓய்வு கொடுக்க வேண்டும்.
எல்.ஈ.டி டி.வி-யைப் பொறுத்தவரையில் பர்மனன்ட் ஸ்டாண்டைவிட, அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் வசதியாகவும், காற்று போக, வர சுலபமாகவும் இருக்கும். சுத்தம் செய்யும்போது மிருதுவான துணி பயன்படுத்தவும். அழுத்தித் துடைக்கக் கூடாது. ஹாரிசான்டல் வியூவாக மட்டுமே துடைக்க வேண்டும். ஸ்க்ரீன் பழுதானால் பேனல் மாற்ற வேண்டும்.

கம்ப்யூட்டர்
எல்.சி.டி மானிட்டர், சி.ஆர்.டி மானிட்டர்... எதுவாக இருந்தாலும் தூசு படியாமல் இருக்க கவர் பயன்படுத்தலாம். கீ-போர்டுக்கும்கூட கவர் பயன்படுத்தலாம். இல்லையெனில், வேக்குவம் க்ளீனர் கொண்டு அதை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யலாம். கீ-போர்டுக்கு அருகே தண்ணீர், டீ, ஜூஸ் வைப்பதைத் தவிர்க்கவும். சி.பி.யூ-வை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேக்குவம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். கணினி ஏ.சி ரூமில் இருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதும்.
சி.டி மற்றும் பென்டிரைவ்
சி.டி-யின் மையப்பகுதி துளையில் ஆள்காட்டி விரல் பயன்படுத்தி எடுத்தால் கீறல் விழாமல் பாதுகாக்கலாம். டேபிள் டிராயர், பாக்ஸ் என்று போட்டு வைக்காமல், சி.டி-க்களை எப்போதும் அதற்கான பவுச்சில் மட்டுமே வைத்துப் பராமரிக்க வேண்டும். பென்டிரைவைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கு முன்னும் ஆன்டி வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும். இதனால் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்கலாம். அதேபோல, அடிக்கடி பென்டிரைவை ஃபார்மட் செய்து பயன்படுத்துவது நல்லது. இதனால் நிரந்தரமாக வைரஸ் அதில் தங்காமல் அழிக்க முடியும். இந்த சிறிய பொருள் தொலைந்துவிடாமல் இருக்க, கீ-செயினுடன் இணைத்து வைக்கலாம்.
டி.வி.டி/ஹோம் தியேட்டர்
ஹோம் தியேட்டரைக் குறைந்தது வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இதனுள் இருக்கும் போர்டுகள் மிகவும் சாஃப்டானவை, எளிதில் பழுதடைந்துவிடும் என்பதால், எக்ஸ்டெண்ட் பாக்ஸ் கொண்டு பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இதைக் குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்பாடின்றி இருந்தால், பாகங்கள் செயலிழக்கத் துவங்கும். கேசட் போடும்போது கேசட் வைக்கும் பகுதி முழுவதுமாக வெளியில் வந்தபிறகு, கேசட்டை சரியாகப்
பொருத்தி, ஒருமுறை ஷேக் செய்து உறுதிபடுத்திக்கொள்ளவும்.  மூடிய பிறகு உடனே திறப்பதைத் தவிர்க்கவும். மெயின் பவர் பட்டனை பயன்படுத்தி மட்டும் ஆன்/ஆஃப் செய்யவும்.
செல்போன்
மணிக்கணக்கில் சார்ஜ் போட்டால் பேட்டரி பழுதடையும். அதிகபட்சமாக 3 மணி நேரம் சார்ஜ் போடலாம். தண்ணீர் பட்டுவிட்டால், உடனடியாக  செல்போனை ஆஃப் செய்துவிட்டு பேட்டரியைப் பிரித்து, சூரிய வெளிச்சத்தில் காய வைக்கலாம். அதிக தண்ணீர் பட்டிருந்தால் சர்வீஸ் சென்டரில் சரிசெய்ய வேண்டும். அந்தந்த மொபைல் மாடலுக்கு அதற்குரிய சார்ஜரையே பயன்படுத்த வேண்டும். டி.வி பக்கத்தில் வைக்கக்கூடாது. செல்போன் மெதுவாக வேலை செய்தால் ரீசெட் அல்லது பார்மட் செய்து
கொள்ளலாம். மிகமுக்கியமாக, செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது. இது செல்போன் தொலைந்து போகும் சமயத்தில் கண்டறிய உதவியாக இருக்கும்!
 வீட்டு உபயோக பொருட்களின் பராமரிப்பு பற்றி விலாவாரியாக சொன்ன ராமகிருஷ்ணன்... ``அனைத்து விதமான எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்
கும் ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது மிகஅவசியம். இன்று மின்சாரம் சரியான, சமமான விகிதத்தில் கிடைப்பதில்லை. அதனால் எந்த நேரத்திலும் பொருட்கள் பழுதடையலாம். ஸ்டெபிலைசர், பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய பொருட்களின் ஆயுளுக்கு அரண்!'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 21 மார்ச், 2017

பாசிப்பயறு – நன்மைகள் !

பாசிப்பயறுக்குப் பயத்தம் பருப்பு பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்கள் வழக்கில் உள்ளன. இது ஒரு வகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை உள்ளிட்ட உண் பொருள்கள் இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் பாசிப்பருப்புப் பாயசம் மிகவும் புகழ் பெற்றது.
பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள்ளன. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இப்பயறுகள் ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிகப் புரதம் கிடைத்திடச் செய்யும்.
தொன்று தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களைவிட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாகப் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளில்தான் அதிகச் சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின், மாவுச்சத்து ஆகியவை அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28 சதவிகிதம் புரதச்சத்தும் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயற்றில் 48 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. இது பயறு வகைகளிலேயே அதிகமாகும்.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையைத் தவிர்த்திடும். பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயற்றில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதை அப்படியே பயன்படுத்துவதைவிட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயற்றில் வாயுத்தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தறுவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளரக் கூடிக்கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிற்றை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம் அல்லது சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயிற்றைக் கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
புன்செய் நிலங்களில் விளையக்கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் செரிமானமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறு மாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.
பயறு பல வகைப்படும். பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு ஆகியவை. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்றபெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப்பயறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
பச்சைப் பயறு இரண்டு விதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சைத் தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாள்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சைத் தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதாம்.
பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் செரிமானமாகக் கூடியது. இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்றபின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
( இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு இதழ் மே 2015 )


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts