லேபிள்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2026

டிவி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இன்று எவ்வளவு தான் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும், பலரின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது என்னவோ தொலைக்காட்சிகள் தான்.

அப்படி நாம் வாங்கக்கூடிய தொலைக்காட்சிகளிலும் சில பல வழிமுறைகள் உள்ளது, எதையும் கவனிக்காமல் டிவிகளை வாங்கிவிட முடியாது. பல விஷயங்களை கருத்தில் வைத்து தான் டிவி வாங்க வேண்டும். சரியான அளவை கண்டறிந்து டிவி வாங்குவது முதல் படியாகும், சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ டிவி இருந்துவிடலாம். ஆனால் உங்கள் அறைக்கு எந்த அளவிலான டிவி பொருத்தமாக இருக்கும் என்பதை தெளிவாக தெரிந்த பின்னரே நீங்கள் அதனை வாங்க வேண்டும். ஓரளவு பெரிய அறையில் 55 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான டிவிகளை பொருத்திக்கொள்ளலாம்.

ஓஎல்இடி டிவிகள் விலையுயர்வானதாக உள்ளது, அதேசமயம் இது சிறந்த அனுபவத்தை தருகிறது, அதேபோல கியூஎல்இடி டிவிகளும் விலை மிகுதியானவை தான், இதுவும் சிறந்த தரத்தில் உள்ளது. பட்ஜெட் தொகையில் வாங்க நினைப்பவர்களுக்கு உகந்தது எல்இடி அல்லது எல்சிடி டிவிகள் தான், இரண்டு வகையான எல்சிடி பேனல்கள் உள்ளன. எட்ஜ் பேனல்கள் கொண்ட டிவிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. சந்தையில் உள்ள 8கே டிவிகள் போதுமான வசதிகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை, அதனால் நீங்கள் ஹெச்டி மற்றும் 4கே விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஹெச்டி டிவிகள் 1920x1080 பிக்சலையும், 4கே டிவிகள் 3840x2160 பிக்சல்களையும் கொண்டுள்ளது. 4கே டிவிகள், ஹெச்டி டிவிகளை விட நான்கு மடங்கு அதிகமான பிக்சல்களையும் கொண்டுள்ளது.

டிவிக்கு முக்கியமாக ஹெச்டிஎம்ஐ மற்றும் யூஎஸ்பி போர்ட் தேவை, ஹெச்டிஎம்ஐ 4.1க்கு பதிலாக ஹெச்டிஎம்ஐ 2.0 அல்லது ஹெச்டிஎம்ஐ 2.1 டிவியை தேர்வு செய்யலாம். டால்பின் விஷன் கொண்ட டிவிகள் சிறந்த பார்வை தரத்தை வழங்குகின்றன. டிவிக்கு மேலும் முக்கியமானது சிறந்த ஒலி, ஒளி இல்லாமல் படம் பார்ப்பது சிறந்ததல்ல. டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ் போன்ற ஸ்பீக்கர்களுக்கு பதிலாக நல்ல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்ட டிவியை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். ஸ்மார்ட் டிவியில் மூன்று முக்கியமான தளங்கள் உள்ளது, அதாவது ஆண்ட்ராய்டு டிவி, டைசெனோஸ் மற்றும் வெபோஸ் ஆகியன. இந்த மூன்றில் ஆண்ட்ராய்டு டிவி சிறந்ததாக கருதப் படுகிறது.



--

திங்கள், 13 ஏப்ரல், 2026

டீயில் வெல்லம் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடுங்கள்.

ஃபிட்னஸ் ஆர்வலர்கள் சர்க்கரையை ஆரோக்கியமான மாற்றுகளான வெல்லம் மற்றும் தேன் போன்றவற்றுடன் மாற்றும் சமீபத்திய டிரெண்ட் உருவாகியுள்ளது.

ஏனெனில் அவை இயற்கையான இனிப்புகள் மற்றும் சர்க்கரை வழங்காத கூடுதல் ஆரோக்கிய நன்மைகள் அவற்றில் உள்ளன. பலர் தங்கள் நாளை வெல்லம் கலந்த தேநீருடன் தொடங்க விரும்புகிறார்கள்.

பழங்கால மருத்துவ நடைமுறையின்படி, மோசமான உணவு சேர்க்கைகள் மோசமான செரிமானத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உடலில் நச்சுக் கழிவுகளை ஏற்படுத்தக்கூடும். இது செரிமானத்தை மேலும் பாதிக்கிறது. வெல்லத்தில் பல நன்மைகள் உள்ளன மற்றும் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. ஆனால் பாலுடன் அதனை சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.

ஆயுர்வேதத்தின் படி, உணவுகளின் தவறான கலவையானது உங்கள் செரிமானத்தை பாதிக்கும். ஆயுர்வேதத்தில், ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த குறிப்பிட்ட தரம், சுவை, ஆற்றல், பிந்தைய செரிமான விளைவு மற்றும் பல உள்ளன.

பால் குளிர்ச்சியடையும் போது வெல்லம் சூடாகிறது. மேலும் நீங்கள் ஒரு சூடான உணவுடன் அல்லது ஒரு குளிர் உணவை இணைக்கும்போது, அது பொருந்தாது என்று கூறப்படுகிறது. தேநீருக்கு ஆரோக்கியமான இயற்கை இனிப்பானைத் தேடும் நபர்களுக்கு, நாட்டுச் சர்க்கரையை சிறந்தது.

ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்ற உணவு சேர்க்கைகள்: வாழைப்பழம் மற்றும் பால், பால் மற்றும் மீன், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி, தேன் மற்றும் நெய். தவறான உணவு சேர்க்கைகள் வீக்கம், தோல் கோளாறுகள் முதல் ஆட்டோ இம்யூன் நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



--

வியாழன், 9 ஏப்ரல், 2026

தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்

கெட்ட கொழுப்பு உடலில் சேருவதைத் தவிர்க்க, 'சால்ட்' எனப்படும் உப்பு, 'சுகர்' என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை, இன்னொரு எஸ், 'சேச்சுரேட்டட் பேட்' எனப்படும் கரையாமல் படியும் கொழுப்பு.

வறுத்த, பொரித்த, முன்கூட்டியே சமைத்து, 'பேக்கிங்' செய்து விற்கப்படும் உணவுகள், மாடு, ஆடு போன்ற விலங்குகளின் மாமிசம் போன்றவை உடலுக்குள் சென்று கெட்ட, கரையாத கொழுப்பாக மாறுகின்றன.முந்திரி, பாதாம் போன்ற 'நட்ஸ்' வகைகள் சாப்பிடும் போது, வறுத்து, உப்பு துாவாமல், அப்படியே சாப்பிட வேண்டும். கோழி இறைச்சியில் புரதம் அதிகம் என்றாலும், வறுத்து, பொரித்தால், கெட்ட கொழுப்பாக மாறும்.



--

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பாம்பு அதன்சட்டையை உரிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா

தோலை உரிக்கும் நிகழ்வு உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று என்றாலும் பாம்பு சட்டை உரிப்பது மிகவும் விசேஷமானது. உடலில் விஷத்தை வைத்திருக்கும் பாம்பின் சட்டையிலும் நஞ்சு இருக்கும் என்ற பயமும் பலருக்கு உண்டு.

மனிதர்களாகிய நமது சருமத்தில் இருக்கும் தோல் திசுக்களும் அவ்வப்போது வெளியில் வந்துக் கொண்டு தானே இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் தோல் உரிதலில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.

பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும். பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப் படுகிறது.

பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.

தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும் என்று கூறப்படுகிறது. சருமத்தில் இளக்கத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த செயல்முறையை பாம்பு செய்யும். அதன்பிறகு, தனது மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்து பாம்பு தேய்க்கும்போது, அதன் தோல் உரியத் தொடங்கும்.

இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும். அதிக வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும். தோலை உரிக்கும் தன்மை என்பது வெப்பத்தைப்பொறுத்தும், அவற்றின் இரை எடுக்கும் தன்மையைப் பொறுத்தும் மாறும்.

ஆனால், தனது தோலை உரிப்பதற்கு முன்னரே உணவைத் தவிர்த்துவிடும் பாம்புகள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிவிடும். பாம்பின் உரித்த சட்டை முழுவதுமாக இருந்தால், அது ஆரோக்கியமான பாம்பின் சட்டை என்று கருதப் படுகிறது.



--

டிவி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இன்று எவ்வளவு தான் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் , பலரின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது என்னவோ தொலைக்காட்சிகள் தான். அப்படி நாம் வாங்க...

Popular Posts