லேபிள்கள்

சனி, 24 செப்டம்பர், 2011

ஜோரான ஜோக்ஸ்..!-1


#நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா 

பெண்: ஏன் ஐயா?
நீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..
பெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்
 
நீதிபதி: இதெல்லாம் செல்லாதுமா..!.
பெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..!
நீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்! Divorce granted..

#பாட்ஷா டயலாக் ..
ஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .
பாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்
ஹா ஹா ஹா

#பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே முடியாது
பயபுள்ள படிச்சிருப்பானோ!!!

#காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்
 
அழகான முகமா..? 
அன்பான மனமா..? 
பனிவான குனமா..?
காதலன் : "உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...!!!!

#ரயில்வே ஸ்டேசனில்
இரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்
கணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.?
 
கணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா!!
உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க..
கணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்!!

#சர்தார்ஜி
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.
மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,
"சே இன்னைக்கும் விழணுமா?"

#அவளை நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன்
அவள் படித்து விட்டு கேட்டால்
 
யாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...

#அவள் சிரித்தால் நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால் நான் parents என்றேன்
கடைசியாக
 
நான் மணவறையில் 
அவள் கல்லறையில் 
கொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...

#நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே!!
குழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....
அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...
பெட் ரூம் என்னாச்சு ???
என்னது ??? சமையல் ரூமா ??? அங்கே வேலைக்காரில்ல தூங்கினா...???
#டாக்டர்: நீங்க இன்னும்  2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறிங்களா?
நோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க
#பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......

  Today Punch -எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

format செய்யும் பிரச்சினையை சரி செய்ய ? 
நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை.
இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.

இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.
இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.

புரை ஊற்ற மோர் இல்லையா?பாலில் புரை ஊற்றுவதற்கு மோர்
அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி
 இருக்கும்.

குக்கரில் வெயிட் போடும்போது...
 

சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும்

சுத்தமான தேனா என்பதை அறிய...
 

தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.

வீட்டிலேயே பால்கோவா செய்ய...
 

சிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி!

அப்பளம் பொரிக்கும்போது...

எ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம்.

சப்பாத்தி சுடும்போது...
 

சப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும்.

அப்பம் மிருதுவாக இருக்க...
 

அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.


இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2)
 Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக
 E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும். 

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

·         நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
·         சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

குழந்தைகள் மனநிலை:குழந்தைகள் நாமே எதிர்பார்க்காத அளவுக்கு விடுதி வாழ்க்கைக்குத் தயாராகக் கூடும்.
·         அரைகுறை மனதோடு தயாராகக்கூடும்.
·         தயாரே இல்லாமல் இருக்கக்கூடும். மிகவும் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கக்கூடும்.
·         தயாராகி விடுதியில் சேர்த்தவுடன், குழந்தைகள் தரப்பில் விடுதிச் சூழலுக்கு ஒத்துப் போக முடியாத நிலமை இருப்பின் குழந்தையின் மனநிலை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
***************************************

·         இதில் முதல் நிலை பெற்றோர்க்கு மிகவும் எளிதாக அமையும்.
·         இரண்டாம் நிலை பேசித் தயார்ப்படுத்தி முடிவெடுக்க வழிவகுக்கும்.
·         மூன்றாம் மற்றும் நான்காம் நிலைதான் மிகவும் ஆபத்தானது., அந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட்டு, மாற்றுவழி யோசிப்பதே நல்லது.
இரண்டாம் நிலை - என்ன செய்ய வேண்டும்?

·         விடுதியில் சேர்ப்பதற்கான காரணத்தின் நன்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
·         அவரவர் வயதுக்கேற்ற பக்குவத்தோடு விளக்கங்கள் அமைய வேண்டும்.
·         விடுதியின் நடைமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்.
·         குழந்தைகளுக்கு முடிவெடுப்பதற்கான சரியான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
·         பெற்றோர் இருவருக்கும் இவ்விஷயத்தில் பரஸ்பரக் கருத்து வேறுபாடு அல்லது உறுதியற்ற தன்மை நிலவினாலும், அதைத் தனிமையில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, குழந்தை முன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைக் குழப்பாமல் இருக்க இது உதவும்.
விடுதி மற்றும் சூழல்:

விடுதியின் சூழல், விதிமுறைகள், வசதிகள் எல்லாமே பிறர் மூலம் தெரிய வந்திருந்தாலும், சரியான முறையில் விசாரித்து நாம் தெளிவு பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
·         பிறர் சொன்னார்கள் என்பதற்காக, சரியாக விசாரிக்காமல் சேர்த்து விடக்கூடாது.
·         விடுதியின் விதிமுறைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் பக்குவமும் பெற்றோர்க்கு மிகவும் அவசியம்.
·         எந்தத் தேவைக்காக / காரணத்துக்காகச் சேர்க்கிறோமோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வண்ணம் சூழல் இருக்கிறதா என்று அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அந்தத் தேவைகள் பூர்த்தியாகாத பட்சத்தில் நம் முயற்சிகள் அனைத்தும், பட்ட / படும் சிரமங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

முடிவுரை:

·         பலவிதக் கோணங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
·         நம் தேர்வு / முடிவு தவறாகிவிடவும் கூடும். எதிர்பார்ப்புகள் பலிக்காமல் போகும்போது, சற்றும் தயங்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.
·         சில பெற்றோர்க்கு அருகில் இருந்து, அவர்கள் அனுமதிக்கும் வேளையில் குழந்தைகளைச் சென்று பார்க்க, கூட வந்து வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இன்றிப்போகும். அப்போதுதான் உறவினர்களின் உறவு தேவைப்படும். பெற்றோர் கூட இருக்க முடியாத சூழலில் விடுதியில் இருந்து வெளிவரும் வேளையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
·         நிறைய முயற்சிகள், நிறைய ஒத்துழைப்பு பெற்றோர் தரப்பில் இருந்தால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
முயற்சி நல்லபடியாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!

விடுதியில் குழந்தைகள் - 2


 

பகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும். 

குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:

·         அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ?
·         நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்?
·         உணவு எப்படி இருக்கும்?
·         என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்?
·         புதிய மொழி எனக்குப் புரியுமா? என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா?
·         எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்?
·         எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்?
·         இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்?
குழப்பங்கள் - பெற்றோர்க்கு:

·         நாம் செய்வது சரிதானா?
·         நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா?
·         உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?
·         பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா?
·         உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா?
·         உணவு சரியாகக் கொடுப்பார்களா?
·         இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா?
·         உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical  security) எப்படியிருக்கும்?
இது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.

இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?

·         உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.
·         அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.
·         குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
·         குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.
·         எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.
·         விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.
·         அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.
·         குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.
·         விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
குழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன? 

விடுதியில் குழந்தைகள் - 1


சில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...


அந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள்.
 இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

பள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:
·         கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..
·         பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...
·         அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..
·         தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...
·         டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...
·         இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..
·         நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...
·         குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..
·         இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..
·         வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..
·         அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:

·         இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...
·         இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக  இல்லை...
·         வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..
·         இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..

இப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.
 

ஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..


குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts