லேபிள்கள்

சனி, 29 நவம்பர், 2014

நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.

நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.


டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும்.
நாற்றமும் நறுமணமும்

"அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா" ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன.
அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர்வையில் நீரும் சில உப்புக்களும் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் எந்த மணமும் கிடையாது. ஆனால் சுரக்கும் அந்த வியர்வையில் பக்றீரியா கிருமிகள் பெருகும்போதே மணம் ஏற்படுகிறது.

நாற்றமற்ற வியர்வைக்குக் காரணம் என்ன?

"எல்லோருக்குமே வியர்க்கிறது, எல்லோரது உடலிலும் கிருமிகள் இருக்கலாம் ஆனால் ஏன் எல்லோரது வியர்வையும் மணப்பதில்லை" என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். வியர்வையில் மணம் ஏற்படுவதானது எமது மரபணு சார்ந்தது.
அதைக் கொடுப்பற்குக் காரணமாக இருப்பது ABCC11 என்ற மரபணுவாகும். ஆனால் சிலரில் இந்த மரபணுவானது சிறிய மாற்றங்களுடன் செயலற்று இருப்பதுண்டு. அவ்வாறான மரபணு மாற்றமுற்றவர்களின் வியர்வை மணப்பதில்லை. மிகுதியான பெரும்பாலானவர்களுக்கு மணக்கவே செய்யும்
University of Bristol  லில் ஒரு ஆய்வானது 6,495  பெண்களிடையே செய்யப்பட்டது. இந்த ஆய்வின் பிரகாரம் மிகச் சிறிய எண்ணிக்கையானோருக்கு மட்டும் (2% -117 out of 6,495) அவ்வாறான மாற்றமுற்ற மரபணு இருந்தமை கண்டறியப்பட்டது. அதன் அர்த்தம் அவர்களது அக்குள் வியர்வையில் நாற்றம் இல்லை என்பதாகும்.
ஆய்வின் ஆச்சரியமான அம்சங்கள் இனித்தான் காத்திருக்கிறது.
  • இந்த ஆய்விற்கு உட்பட்டவர்களில் 117 பேரது வியர்வை மட்டுமே நாற்றமற்றது. அதை விகிதாசார ரீதியில் நோக்கினால் ஒவ்வொரு 50 பேருக்கு ஒருவரது வியர்வையே உடல் நாற்றம் அற்றதாகும்.
  • நாற்றமான வியர்வை சுரப்பவர்களில் 5 சதவிகிதமானவர்கள் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை.
  • வியர்வையில் நாற்றம் அற்றவர்களில் சுமார் 20 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை. அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லாததால் அது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியதே.
  • ஆனால் வியர்வை நாற்றமற்றவர்களில் சுமார் 78 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ் உபயோகிப்பதாக ஆய்வு கூறியது.
இதை இலகுவான மொழியில் சொன்னால் எப்படி இருக்கும். சமூகத்தில் பெரும்பாலானவர்களின் வியர்வையில் நாற்றமிருக்கிறது. இருந்தபோதும் அவர்களில் சிலர் தமது அக்குள் வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதில்லை. ஆனால் அக்குள் வியர்வை நாற்றம் அற்றவர்களில் மிகக் குறைந்தவர்களே தமக்கு நாற்றமில்லை என்பதை உணர்ந்து டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை.
மந்தை ஆடுகள் போல மனிதர்களும்

ஆனால் மிகப் பெரும்பான்னையான வியர்வை நாற்றமற்றவர்கள் மந்தை ஆடுகளை போல மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். அதாவது எந்தத் தேவையுமற்று டியோடரன்ஸ்சை உபயோகிக்கிறார்கள் என்பதுதான்.

இவர்கள் இப்படியாக தேவையற்றபோதும் டியோடரன்டஸ் உபயோகிப்பதற்குக் காரணம் என்ன? சமூகப் பழக்க வழக்கங்கள்தான். சமூகத்தில் பலரும் நாகரீகம் எனக் கருதுவதை தாமும் மறுகேள்வியின்றிப் பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் ஊடகங்களின் விளம்பர உத்திகளைப் புரிந்து கொள்ளாமல் கடைப்பிடிப்பதாகவும் இருக்கலாம்.

இது மேலை நாட்டில் செய்யப்பட்ட (University of Bristol) ஆய்வாகும். 'வடஆசிய நாட்டவர்கள் பெரும்பாலும் டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை' என அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான Professor Ian Day கூறினார். தெற்காசிய நாட்டவர்களான எங்களைப் பற்றி அந்த ஆய்வு எதையும் தனியாக எடுத்துரைக்கவில்லை.

காதில் கற்குடுமி

இந்த ஆய்வின்போது வியர்வையுடன் தொடர்பற்ற மற்றொரு விடயமும் தெரிய வந்தது. அது காதுக் குடுமி பற்றியது. பொதுவாகக் காதுக்குடுமி என்பது பசை போன்ற தன்மையானதாகும். ஆனால் மிகச் சிலரில் அது எப்பொழுதும் காய்ந்து இறுகி 'கற்குடுமி' யாகத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கும்

நாற்றமற்ற வியர்வையுள்ளவரின் அதே மாற்றமுற்ற ABCC11 மரபணு இருக்கிறதாம்.
ஆம் இயற்கை விசித்திரமானதுதான். கற்குடுமி என்ற தொல்லை ஒருசிலருக்கு கொடுத்துவிட்டு அதனை நட்ட ஈடு கொடுப்பதுபோல நாற்றமற்ற வியர்வையைக் கொடுத்திருக்கிறது.

தனித்துவமான உடல் மணங்கள்

பெரும்பாலானவர்களது உடலில் மணம் இருந்தாலும் எல்லோரது வியர்வையும் ஒரே மணத்தைக் கொடுப்பதில்லை. கைவிரல் அடையாளம்போலத் தனித்துவமானது. சில மணங்கள் மற்றவர்கள் ஆகர்ஸப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் சிலரது மணங்கள் மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது விலக வைத்துவிடுகின்றன.

அவ்வாறு கடுமையான உடல் நாற்றம் உண்டாவதை bromhidrosis என மருத்துவத்தில் கூறுவர்.

உடல் மணத்தைக் குறைக்க வழிகள்

உடல் மணமானது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான போதும் அதன்
வீச்சை நாம் சில நடைமுறைகள் மூலமாகச் குறையச் செய்யலாம்.

எடையைக் குறைப்பது முக்கியமானது. அதீத எடையானது உடலின் செயற்பாட்டிற்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. சிரமப்படும் உடல் அதீதமாக வியர்க்கிறது. அதனால் உடல் மணம் மோசமாகும். எனவே எடையைக் குறைப்பதானது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுடன் மணத்தையும் குறைக்கிறது.

தினமும் குளியுங்கள். முக்கியமாக வேலை முடிந்த பின்னர் குளிப்பது மிகவும் அவசியம். கிருமி கொல்லி சோப் வகைகளை உபயோகிக்க வேண்டியதில்லை. வழமையான சோப் போதுமானது. Soap free wash
மேலும் நல்லது

ஆடைகளை இயற்கையான துணியிலானதாக தேர்ந்தெடுங்கள். செயற்கை இழையத்திலான ஆடைகள் ஈரலிப்பை உறிஞ்ச முடியாதலால் வியர்வை தேங்கி நிற்கும் அதிக மணத்தைக் கொடுக்கலாம். தினமும் ஆடைகளை மாற்றுங்கள்.
உணவைப் பொறுத்த வரையில் ஆடு மாடு போன்றவற்றின் இறைச்சிகள்
(Red meat) அதிக மணத்தைக் கொடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதே போல இஞ்சி, மிளகு, மீன், போன்றவையும் உடல் மணத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மதுபானமும் அவ்வாறே.

ஆனால் அதிகளவு நீர் அருந்துவதும், உணவில் அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்ப்பது நல்லது. தீட்டாத தானியங்களும் நல்லது என்கிறார்கள்.

அவற்றிற்கு மேலாக அவசரம், அந்தரம் பதற்றம், பதகளிப்பு போன்றவை மன அமைதியைக் குலைத்து வியர்வையை அதிகமாக்கி மணத்தை ஏற்படுத்தலாம். முன அமைதிப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவையும் உதவும்.
'நீ என்ன Deodorants பாவிக்கிறாய். நல்ல வாசமாக இருக்கு' எனக் காதலியை முகத்திற்கு நேரே கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. அவற்றின் பாவனை அந்தளவிற்கு அதிகரித்துவிட்டது.

அழகிற்கு அழகு சேர்ப்பது என்றிருந்தவை அலங்கோலங்களை அலங்கரிப்பாக மாற்றவும் செய்கின்றன. தங்கள் அழகுகளை அலங்கோலமாக மாற்றுகிறோம் என்பது தெரியாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எங்களை நாங்களே அழகு படுத்தவும், மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் என பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் சந்தைகளை நிறைக்கின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/10/blog-post_16.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 27 நவம்பர், 2014

விண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…

விண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…!

வாங்கிய புதிதில் விண்டோஸ் சிஸ்டம் வேகமாக இயங்கும். அதுவே நாளாக நாளாக அதனுடைய வேகம் குறையும்.
 இந்த பிரச்னை விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் அனைவருமே எதிர்கொள்வதுதான்.
விண்டோஸ் வேகமாக புதிய கணினி போல் இயங்க என்ன செய்ய வேண்டும்?
விண்டோஸ் கம்பயூட்டர் வேகம் குறைய என்ன காரணம்?
1. தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது
2. அடிக்கடி பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்திருப்பது.
3. இந்த ஸ்டார்ட் அப் பைல்களை கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது அதுவும் பின்னணியில் இயங்க ஆரம்பிக்கும் என்ற விஷயம் தெரியாமல் இருப்பது.
4. இப்படி எத்தனையோ புரோகிராம்கள் உங்களுக்குத் தெரியாமலே பின்னணியில் இயங்கிக்கொண்டு இருக்கதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது.
5. இன்டர்நெட்டில் பயன்படுத்தும் புரோகிராம்கள் அனைத்தையும் இன்டால் செய்து செய்து சோதித்துப் பார்ப்பது.
6. சோதனை செய்த சாப்ட்வேர்களை அப்படியே நீக்காமல் விட்டுவிடுவது
7. விண்டோஸ் அப்டேட் செய்யாமல் இருப்பது.
8. டேட்டா கரப்ஷன், ஹார்ட் டிஸ்க் பிராக்மெண்டேஷன்
9. ஹார்ட் டிஸ்கில் போதுமான இடமில்லாமல் இருப்பது
இதைத் தடுப்பது எப்படி? இதற்கானதீர்வுதான் என்ன?
இதோ தீர்வு!
1. விண்டோஸ் விஸ்டா யூசர் என்றால் அதில் உள்ள யூசர் கண்ட்ரோல் என்ற புரோகிராம் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். அதை நிறுத்தலாம்.
2. அடிக்கடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் cookies, temporary file களை நீக்க வேண்டும். ஒவ்வொரு இணையதளமும் உங்களுடைய ஹார்ட் டிஸ்கில் தற்காலிக கோப்புகளை உருவாக்கி வைத்திருக்கும். அதை நீக்குங்கள்.
3. விண்டோஸ் இயக்கும் தொடங்குவதற்கான நேரத்தைக் குறைக்க அதனுடைய லோகோ தோன்றுவதை கூட நிறுத்திவிடலாம்.
4. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நீங்களே சிஸ்டம் பேக்கப் செய்பவர் என்றால் System Restore Point வசதியை முடக்கி வைக்கலாம்.
5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை வேறொரு டிரைவிற்கு மாற்றி வைக்கலாம்.
6. கம்ப்யூட்டரில் பயன்படுத்தாமல் இருக்கும் fort களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
7. பிரவுசிங் செய்யும்போது வெப் ஆக்சிலேட்டர்களை பயன்படுத்தலாம். இவைகள் நீங்கள் பார்க்கவிருக்கும் தளங்களை எடுத்து Cache Memoryயில் வைத்து உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.
8. கம்ப்யூட்டர் வாங்கி அதிக நாட்கள் ஆகிவிட்டதென்றால் அதிலுள்ள வேகமாக இயங்கும் பாகங்கள் சோதனை செய்து மாற்றி அமைக்கலாம்.
9. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்பி இயங்குதள கம்ப்யூட்டிரில் காப்பி செய்வதற்கு Tera Copy என்ற அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இதனால் சிஸ்டம் வேகமாக இயங்கும்.
10. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் 512 எம்பிக்கு குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
11. விண்டோஸ் விஸ்டாவில் 8 ஜிபியில் 4 ஜிக்கு குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய விண்டோஸ் கம்ப்யூட்டர் முன்பை விட வேகமாக இயங்கும்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 25 நவம்பர், 2014

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்


'காதும் காதும் வைச்சாப்போலை இரகசியம் பேசு'வதற்கு மட்டும் காதுகள் அவசியம் என்றில்லை. ஒலியை உணரும் திறன் உள்ளது என்பதால்தான் காதுகள் மிக முக்கிய உறுப்பாக இருக்கின்றன.
செவிப்புலன் இல்லாவிட்டால்?

பறவைகளில் கீச்சல்களும் வண்டுகளின் ரீங்காரங்களும், குழந்தைகளின் மழலைகளும் இல்லாத உலகில் வாழ்வது பற்றி என்றாவது சிந்தித்ருக்கிறீர்களா? 'அதிரும் இந்த ஒலிகளிலிருந்து விடுபட்டு நிசப்தமான உலகில் நிம்மதியாக இருக்க வேண்டும்' எனச் சொல்பவனின் காதுகளை ஒரு சில நிமிடங்களுக்கு செவிடாக்கிட்டால் வேண்டாம் இந்தச் சத்தமற்ற உலகு என அலறியடித்து ஓடுவான்.

ஆனால் காதுகள் செவிப்புலனுக்கான உறுப்பு மாத்திரமல்ல. அதற்கு வேறு பல பணிகளும் இருக்கின்றன. அவற்றில் சில அலங்காரத்திற்கானவை. சில அத்தியாவசியமானவை. எமது உடலின் சமநிலையைப்; பேணும் உறுப்பு காதின் உட்புறமாக உள்ளது. ஆனால் இன்று நாம் பேசப்போவது காதின் அலங்காரத்தோடு சம்பந்தப்பட்டது.

காதுமடல்

எமது முகத்தின் இரு பக்கங்களிலும் காது மடல்கள் இருக்கின்றன. குருத்தெலும்புகள் உள்ளே இருக்க அதைச் சுற்றி சிறிது கொழுப்பும், அதை மூடிய மென்மையான சருமமும் காது மடலில் இருக்கின்றன. மனிதக் காதுகளில்தான் எத்தனை அளவு வித்தியாசங்கள், மாறுபாடான நிறங்கள் தோற்றங்கள். இவற்றின் அமைப்புகள் மனிதர்களுக்கு தனித்துவமான அழகு சேர்க்கிறது.

அந்த அழகுக்கு அழகு சேர்க்க அணிகலன்கள் இணைந்து கொள்கின்றன. தோடுகளும் அவற்றை ஒத்த அணிகலங்களும் பெண்களின் தனியுடமையாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஆண்கள் முக்கியமாக இளைஞர்களும் இப்பொழுது அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அணிவதற்கு பொதுவாக காதுமடலில் துளையிட வேண்டியுள்ளது. அதுதான் காது குத்தல்.

காது குத்திய துவாரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலுமாக காது மடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக
  1. அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும். தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது. சிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு. அத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர் சிபார்சு செய்யும் கிறீம் வகைகளை பூசுவதன் மூலம் குணமாகும்.

  1. தோடு கழன்று விடுமளவு ஓட்டை பெரிதாகிவிடுவதுண்டு.

     3. காது ஓட்டை அறுந்துவிடுவதுண்டு.

பிரிந்த அல்லது பெரிதான துவாரங்களைச் சரி செய்தல்

பாரமான தோடுகளைத் அணிவதே துவாரம் பெரிதாவதற்கு முக்கிய காரணமாகும். ஒவ்வாமையால் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிப் பெரிதாவதும் உண்டு. காதணி எங்காவது மாட்டுப்பட்டு இழுபடுவதால் அல்லது குழந்தைகள் காது வளையத்தை விளையாட்டாக இழுப்பதால் பெரிதாவதும் அறுபடுவதும் உண்டு.
பெரிதான துவாரங்களை மறைக்க சிலர் நிறமற்ற ரேப்புகளைக் கொண்டு தற்காலிமாக ஒட்டிவிடுவதுண்டு. இது நல்ல முறையல்ல. சில மணிநேரத்திற்கு அவ்வாறு ஒட்டுவதால் பிரச்சனை ஏற்படாது. நீண்ட நேரம் ஒட்டினால் அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு எக்ஸிமாவாக மாறும்; ஆபத்து உண்டு.

அவ்வாறு இல்லாமல் இலகுவான சத்திரசிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்து நிரந்தரமாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம். இதைச் செய்வதற்கு சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. அதேபோல பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்களை நாட வேண்டியதும் இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் தமது ஆலோசனை அறையோடு இணைந்த சிறு சத்திரசிச்சை அறையில் வைத்தே செய்துவிடுகிறார்கள். மயக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரக்கச் செய்தல் போதுமானது.

துல்லியமும்
  நயமும் இணைந்த நுணுக்கமான சிகிச்சை இது. மென்மையான உறுப்பு என்பதாலும், காதின் அழகைக் கெடுக்கக் கூடாது என்பதால்தான் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.

அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்வதற்கான ஊசியை ஏற்றுவார்கள். அறுந்த அல்லது பிரிந்து துவாரத்தைச் சுற்றியுள்ள இடத்தைக் கீறி, மறுத்
(Scar) திசுக்களை அகற்றிய பின்னர் வெட்டிய அவ்விடத்தைப் பொருத்தி நுண்ணிய நூலால் தையல் இடுவார்கள். ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.
காயத்தை மூடி காதில் பன்டேஸ் போடுவார்கள். சுமார் ஒரு வார காலத்தின் பின்னர் தையலிட்ட நூலையும் பன்டேஜையும் அகற்றிவிடலாம். இடைப்பட்ட காலத்தில் அது நனையாமல் இருப்பது அவசியம். சுமார் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தை நனைக்கக் கூடாது என்பதால் முகம் கழுவும்போது பன்டேஜில் நீர் படாமல் அவதானமாக இருக்க வேண்டும். தலைமுடியைக் கழுவி சுத்தமாக்கிய பின்னர் இச் சத்திர சிகிச்சைக்கு செல்வது உசிதமானது. அக் காலப் பகுதியில் தலைக்கு எண்ணெய் தடவாதிருப்பதும் நல்லது.

பன்டேஸ் போட்டு காயத்தை மூடாது திறந்தபடி விட்டபடி அன்ரிபயோடிக் ஓயின்மன்ட் பூசி தையலிட்ட காயத்தை மாற வைக்கும் முறையும் உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்வதில்லை.
பொதுவாக முன்னைய துவாரத்தை முழுமையாக மூடி விடுவார்கள். பழைய இடத்தில் சிறிய துவாரத்தை மிச்சம் விடுவதில்லை. சத்திரசிகிச்சை செய்த இடம் முழுமையான உறுதி இல்லாமல் இருப்பதால் அதேயிடத்தில் மீண்டும் தோட்டை அணிந்தால் மடலின் திசுக்கள்; நொய்ந்து மீண்டும் துவாரம் பெரிதாகமல் இருப்பதற்காகவே முழுமையாக மூடுவார்கள்.

புதிதாகத் துவாரம் இடுதல்

சுமார் 1 மாத காலத்தின் பின்னர் புதிய துவாரம் இட வேண்டி நேரும். புதிய துவாரத்தை பழைய இடத்திற்கு அருகில் அவரது விருப்பதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். அவ்விடத்தை மரக்கச் செய்ய மருந்து பூசி செய்யலாம். அல்லது விறைப்பதற்கான ஊசி மருந்தும் போடலாம். தோட்டு நுனியில் துளையிடுவதற்காக அதன் தண்டில் சிறிய கூர் உள்ள பாரமற்ற தோடுகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். வேறு ஊசிகளால் துவாரமிட்டு அதில் தோட்டை அணியவும் முடியும்.

ஆயினும் மெல்லிய தண்டுள்ள பாரமற்ற தோடுகள் விரும்பப் படுகின்றன. பாரமற்ற காது வளையங்களும் உசிதமானவை. ஆனால் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இதனால் சிறிய ஆபத்தும் உண்டு. வளையத்திற்குள் கையை வைத்து குழந்தைகள் விளையாடும்போது இழுபட்டு துவாரம் கிழிவதையும் காது மடல் அறுந்துவிடுவதையும் காண முடிகிறது. இதைத் தடுக்க சிறிய ஸ்டற் போன்ற பாரமற்ற காதணிகளை சிறிது காலத்திற்கு அணிவது உசிதமானது.

குத்திய உடன் குருதி கசியும் காயம் இருக்கும் போதே தோடு அணிவதால் சிலருக்கு சிக்கல் ஏற்படுவதுண்டு. தோட்டில் உள்ள உலோகங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதைத் தடுப்பதற்காக துவாரம் இடப்பட்டதும் உடனடியாகத் தோடு அணிவதை தவிர்த்து துவாரத்தில் சிறிய நைலோன் நூலைச் செலுத்தி முடிந்து வைப்பதும் உண்டு. புண் நன்கு காய்ந்த பின் தோடு அணிந்தால் ஒவ்வாமை ஏற்படாது.

'ஒரு மாதம் காத்திருக்க முடியாது. வாற கிழமை கலியாணம் வருகிறது, சாமத்தியச் சடங்கு ஒன்று இருக்கிறது' என பலர் அவசரப்படுத்துவார்கள். ஸடட் வைத்து அழுத்தக் கூடிய தோடுகளை தற்காலிகமாக அணிய வேண்டியதுதான்.

வேறு பிரச்சனைகள்

காது மடல் பெரிதாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிறப்பிலேயே பெரிதாக இருந்து வளரும்போது மேலும் பருத்திருக்கும். சிலருக்கு அதில் சதைகள் மடிப்புற்று அழகைக் கெடுக்கும். சமுத்திரத்தில் மணற் துளியைப் போட்டதுபோல பெரிய மடிந்த காதில் காதணி மறைந்து விடுகிறது என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அப்படியான காதின் அளவைச் சிறிதாக்கவும் சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவற்றை அதற்கான சத்திரசிகிச்சை நிபுணர்களே செய்வது நல்லது.

செயற்கைக் காதுகள்

செயற்கைக் கால், செயற்கை மூட்டு எல்லாம் வந்துவிட்டன. செயற்கைக் காதும் வருவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. இவை வெறுமனே ரோபோவின் உலேகக் காதுகள் போன்றவை அல்ல. இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளும் கூடிய காதுகள். வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள காதுகள். Harvard Medical School in Boston, and the Kensey Nash Corporation in Philadelphia இணைந்து எலிகளுக்கான காதுகளை தயாரித்துள்ளார்கள்.

இத் தொழில் நுட்பம் வளர்ச்சியும்போது, விபத்துகளில் காதுகளை இழந்தவர்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் பயன்பெறுவார்கள் என நம்பலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/10/blog-post_8.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 23 நவம்பர், 2014

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-


உடல் பலம் பெற
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.
இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
வயிறுப் பொருமல் நீங்க
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை
1
லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
புகைச்சல் இருமல் நீங்க
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
மந்தம்
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
சுவாசகாசம், இருமல் நீங்க
காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.
ஓமம் – 252 கிராம்
ஆடாதோடைச் சாறு – 136 கிராம்
இஞ்சி ரசம் – 136 கிராம்
பழரசம் – 136 கிராம்
புதினாசாறு – 136 கிராம்
இந்துப்பு – 34 கிராம்
சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3. ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. சோர்வு நீங்க ஓமத்தண்­ர்
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம்.
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
7. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.
8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்
பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
10. தொப்பையை குறைக்க
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"
" ஓமம், சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. " ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.
செய்முறை :
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.
மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !
ஒழிக ஜெலுசில் !
12. இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 21 நவம்பர், 2014

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

தீபாவளிக்கு கிடைக்கும் போனஸ் பணத்தில் ஏசி வாங்க வேண்டும், டி.வி வாங்க வேண்டும், பிரிட்ஜ் வாங்க வேண்டும் என திட்டமிடுவது சகஜம். அப்படி காத்திருந்து காத்திருந்து வாங்கும் பொருள் நமக்கு தலைவலியாய் மாறி விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
1. எந்தப் பொருள் வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதைப் பாருங்கள். எந்தக் கம்பெனி நம்பிக்கையானது, எது அதிக கேரண்டி தருகிறது என்பதையெல்லாம் அறிந்தபின் முடிவெடுங்கள்.
2. இந்த விலையில் தான் பொருள் என முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் அந்த விலையில் கிடைக்கக் கூடிய நல்ல பொருள் எது என உங்கள் தேடுதல் கூர்மையாகும். தேவையில்லாமல் ஆசைப்பட்டு விழா நாளில் மனவருத்தம் கொள்ள வேண்டியிருக்காது.
3. பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாய் படியுங்கள். விளம்பரங்களைப் பார்த்து உடனே வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்கு வேறு ஆணி வேறாக தகவல்களை அள்ளித் தருவார்கள்.
4. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்றவற்றை "பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதே" என வாங்காதீர்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள். எந்த அறையில் அதை வைக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.
5. "மின்சாரத்தைச் சேமிக்கும்" என நட்சத்திர அடையாளம் போட்டிருக்கும் பொருட்களை வாங்குவது நல்லது. அவை உங்களுடைய செலவையும் குறைக்கும். நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை நீங்கள் சேமிக்கும் போதும் நாட்டுக்காய் ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாராக்குகிறீர்கள் என்பது தான் பொருள்.
6. பொருள் வாங்கும் போது கேரண்டி அட்டை, வாரண்டி அட்டை, மேனுவல், ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாய் கேட்டு வாங்குங்கள்.
7. பில்லைச் சரிபார்ப்பதும், கேரண்டி அட்டையில் சீல், கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவார்கள். பழுது என்று போனால் வேறு விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
8. பொருளை வாங்கி வீட்டிக் கொண்டு வைத்து விட்டு எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
9. வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருட்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்டா இணைப்புகளை இலவசமாகக் கொடுப்பார்கள். மேனுவலைப் பார்த்தால் தான் அது தெரியும்.
10. சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது ? ஒரு வருடத்துக்கான சர்வீஸ் ஒப்பந்தம் இட்டால் எவ்வளவு பணம் ஆகும் ? இந்த நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி இருக்கிறது ? சர்வீஸ் விலை எப்படி ? என்பதை முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள். பொருள் வாங்கியபின் நமக்குத் தேவை தரமான சர்வீஸ் தான். "சர்வீஸ் நல்லாயில்லை" என்றால் பொருளை வாங்காமல் இருப்பது விவேகம்.
http://seasonsnidur.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 19 நவம்பர், 2014

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?


வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.
ஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் முதியவர்கள் சிறு தொகைக்கான பரிமாற்றங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஒருபுறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக் கொண்ட மனம்.  மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள பயம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விவரங்களும் பாதுகாப்புக் கவசங்களும் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.
Ø    தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.
Ø
    தனது கணக்கிலிருந்து அதே வங்கியில் தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான பணப்பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின்வணிகம், தொலைபேசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது.  வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்க வேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச் சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும். (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).

ரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்
முதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து  இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும்.  விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப்  பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.
பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.
பாதுகாப்பு அடுக்குகள்
இன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச் சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  பரிமாற்றத்தின் போது பெரும்பாலான வங்கிகள் ஒருமுறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும்.  பணப்பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒருவகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.
இணையதளம் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.
கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள்.
வங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும்.            (Ex.: LTvn#45a) அவ்வப்பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணையதளங்கள் வழியோ முயல வேண்டாம்.
வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணைய தள முகவரி "https://" என்று துவங்க வேண்டும் ("http://" என்று அல்ல), முன்குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள 's' இணையதளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.
எந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.
இன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க் மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.  கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட  கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.
அறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொருநாளும் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன்னெச்சரிக்கைகளும் இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கிச் சேவையை லகுவாக்கித் தரும்.  அது இன்றைக்கு மனிதனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப்படும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா ? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அத...

Popular Posts