லேபிள்கள்

புதன், 29 மே, 2024

காய்ச்சல் பற்றி அறிவோமா!

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும்.

சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.--

ஞாயிறு, 26 மே, 2024

அல்சர் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

அல்சர் இருப்பவர்களுக்கு குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை: கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. தவிர்க்க வேண்டியவை: அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.--

வியாழன், 23 மே, 2024

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அதேநேரம்' வேறுபட்ட பால் சார்ந்த இரண்டு தயாரிப்புகளைப் பற்றிய ஒரு சிறிய விவரம் இங்கே.

தயிர் , யோகர்ட் என்ன வித்தியாசம்?

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டும்' தோற்றத்தில் ஒரே மாதிரியானவை, ஆனால் அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு தனித்துவமான வேறுபாடு உள்ளது.

தயிர் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் உட்கொள்ளப்படுகிறது. இது சில பழைய தயிர் அல்லது எலுமிச்சை சாற்றை' சூடான பாலுடன் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இப்படி செய்வதால், புரோபயாடிக் பாக்டீரியாத் தூண்டப்பட்டு, தயிர் உருவாகும்.

மறுபுறம், யோகர்ட்' பொதுவாக வணிக ரீதியாக தயாரிக்கப்படுகிறது. இது பாலை' செயற்கை அமிலங்களுடன் புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் சரியான சுவை மற்றும் மென்மையான அமைப்பைப் பெறுவதற்கு உகந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டிலும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் இருந்தாலும், யோகர்ட்டில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு' தயிருடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதற்கு தயாரிக்கும் முறைதான் காரணம்.

மறுபுறம், தயிரில் ஒப்பீட்டளவில் குறைவான அளவு பாக்டீரியாக்கள் உள்ளன.

உதாரணமாக, ஒரு மீடியம் சைஸ் கிண்ணத்தில் இருக்கும் தயிரில்' தோராயமாக 3-4 கிராம் புரதம் உள்ளது. ஆனால் அதே அளவு யோகர்ட்டில்' தோராயமாக 8-10 கிராம் உள்ளது.

எது ஆரோக்கியமானது ?

உடலை குளிர்விப்பதில் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, இந்திய உணவு வகைகளில் தயிர் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதில் சரியான அளவு பால் கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

மறுபுறம், யோகர்ட்' ஆரோக்கியமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. உண்மையில், யோகர்ட்டில் பல வகைகள் உள்ளன. அதில் சில வகைகளில் இருமடங்கு புரதம் உள்ளது, இது வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.--

ஞாயிறு, 19 மே, 2024

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை தழுவும்.

இன்னும் சிலர் புரண்டு புரண்டு படுத்து தான் தூக்கத்தை வரவ ழைத்து கொள்வார்கள்.இன்னும் சிலர் உண்டு. அவர்கள் தலைகீழாக நின்று குட்டிகரணம் போட்டாலும் கூட தூக்கம் வருவது பெரிய பாடாகவே இருக்கும். இதெல்லாம் இன்றைய காலத்தின் கொடுமை என்று கூட சொல்லலாம்.

தூக்கத்தின் நிலையை மூன்றாக பிரித்துவைத்திருக்கிறார்கள் ஒன்று மந்தமான தூக்கம். சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்துவிடுவார்கள். இரண்டாவது கும்பகர்ணன் தூக்கம் என்று சொல்லகூடிய அளவு இடியே விழுந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் விழிப்பு வராது. இவர்களை தட்டிஉலுக்கி எழுப்பினாலும் அந்த கலக்கத்திலிருந்து வெளியே வர அதிக நேரம் பிடிக்கும். மூன்றாவது நிலை தூக்கமானது ஆழமான தூக்கத்தில் இருந்தாலும் சிறு அசைவு அல்லது எழுப்பினால் உடனடியாக எழுந்துவிடுவது. இதில் நீங்கள் எந்த ரகம் என்பது உங்களுக்கு தெரியும்.

தினமும் வாடிக்கையாக அதிக நேரம் பகல் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். பகல் முழுவதும் உடல் உறுப்புகள் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கும். இப்படி இருக்கும் பொழுது திடீரென உடலுக்கு ஓய்வு அளிக்கும் பொழுது உடலானது குழம்பிப் போய்விடும். இந்த குழப்ப நிலை புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும். - இதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு மற்றவர்களை விட வயது முதிர்ந்தவர்கள் பகல் நேர தூக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து கூறியுள்ளனர். பகல் நேர தூக்கத்தை விட தூக்கமின்மை பிரச்சனை 2.3% அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரவில் சரியான தூக்கமும், பகலில் சரியான உடல் உழைப்பும் இருப்பவர்களுக்கு தேவையற்ற நோய்களும் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவதில்லை. மதிய உணவை சாப்பிட்ட உடன் பலருக்கு தூக்கம் வருவது உண்டு. இதனை உண்ட மயக்கமா? என்று கிண்டல் செய்வது உண்டு. இப்படி சாப்பிட்டவுடன் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை கணிசமாக உயர்ந்து விடுகிறது. இதனால் நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு, இரவில் சரியான தூக்கம் வருவது இல்லை. இப்படி மாறுபட்ட முறையில் தூக்கம் என்கிற நிகழ்வு நிகழ்வதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது எனவே ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தையும், தூங்கும் முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 45 வயதை கடந்தவர்கள் பகலில் அதிக நேரம் உறங்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.--

வியாழன், 16 மே, 2024

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி 4 டிப்ஸ் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சுவது. இப்போது, கிராமத்தில் கூட அதிக அளவில், விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, பயன்பாடு குறைய துவங்கியுள்ளது. பொங்கல் திருவிழா காலங்களில் மட்டுமே விறகு அடுப்பு பயன்பாட்டில் உள்ளது. அதிக அளவிலான வீட்டில் கேஸ் அடுப்புகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்றவை மலையேறிவிட்டன என்று தான் சொல்ல முடியும். ஏனெனில், கேஸ் அடுப்புகள் உபயோகப்படுத்துவது எளிதானது, விரைவாக சமைக்க முடியும் என பல நன்மைகள் இதில் இருக்கின்றன.

குறிப்பாக, காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என பிஸியாக இருக்கும் பெண்கள், கேஸ் அடுப்பை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உள்ளன. கேஸ் அடுப்பை கையாளும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி கீழே பார்ப்போம்.

1. சிறு தீயில் வைப்பது:

கேஸ் அடுப்பின் தீயை அதிகம், மிதமானது, குறைவானது என நமது தேவைக்கேற்ப வைத்து கொள்ளலாம். சமைக்கும்போது, தேவை ஏற்பட்டால் தவிர, மற்ற நேரங்களில் குறைவான தீயில் சமைப்பதையே பின்பற்றுங்கள். அடுப்பை 'ஆன்' செய்துவிட்டு, லைட்டர் அல்லது பர்னரை உடனே பற்ற வைக்க வேண்டும். ஒருவேளை பற்றவில்லை என்றால் தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் உடனே உடனே அதை அணைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து ஆன் செய்து பற்ற வைப்பது பாதுகாப்பானது.

2. சுத்தம் முக்கியமானது:

சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அடுப்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியமானது. தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ அடுப்பை சுத்தம் செய்வதற்கு மறவாதீர்கள். அடுப்பின் மீது எண்ணெய் கறை இருந்தால், எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் சோடா கொண்டு சுத்தம் செய்யுங்கள். இல்லையெனில் சுத்தம் செய்வதற்காகவே சந்தைகளில் கிடைக்கும் பிரத்யேகமான திரவங்களைப் பயன்படுத்தலாம்.

3. அதிக கவனம் தேவை:

கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது தவிர்க்க முடியாத காரணங்களால், அங்கிருந்து நகர்வதற்கு நேரிட்டால், அடுப்பை அணைத்துவிட்டோ அல்லது குறைவான தீயில் வைத்துவிட்டோ செல்லலாம். எண்ணெய், தண்ணீர் உபயோகிக்கும்போதும் கவனமாக இருங்கள். அடுப்பைச் சுற்றி எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். குளிர்சாதனப்பெட்டியை முடிந்த அளவிற்கு சமையல் அறையில் இருந்து வெளியே வைப்பது சிறந்தது.

4. நவீன காலத்து ஸ்மோக் அலாரம்:

சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், சமையல் அறை சாதனங்கள் போன்றவற்றைத் தவிர, சில அத்தியாவசியமான பொருட்களும் சமையல் அறையில் இருப்பது அவசியம். தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டாலோ அல்லது தீப்பிடித்தாலோ, சத்தம் எழுப்பும் 'ஸ்மோக் அலாரம்' எனப்படும் கருவியை சமையல் அறையில் பொருத்துவது உதவி கரமானதாக இருக்கும். தற்போது பெரும்பாலான நவீன சமையல் அறையில் இது பொருத்தப்படுகிறது.

அடுத்ததாக சமையல் அறையில் அவசியமாக இருக்க வேண்டியது 'சிம்னி'. அடுப்பிற்கு ஏற்றவாறு சரியான சிம்னியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது புகை வெளியே போவதற்கு மட்டுமல்லாமல், சமைக்கும்போது வெளியாகும் எண்ணெய் பிசுக்கு சுவரில் படிவதையும் தடுக்கும்.--

திங்கள், 13 மே, 2024

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு என்பதை பலரும் அறிந்திருப்போம்.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படும் என்பது தெரியுமா?

எடை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பது உண்மை தான் ஆனால் அதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, எடை அதிகரிக்கச் செய்யும் எனவே ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழம் அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ சாப்பிடக்கூடாது.

தலைவலி

ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்னும் சுரப்பி தான் காரணம் . இவை அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிட்டால் சுரக்கும்.

பற்கள்

வாழைப்பழத்தில் அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பதால் பற்சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உணவுப்பொருளை மெல்லும் போது ஸ்டார்ச்சுகள் பல் இடுக்குகள் போய் தங்கிவிடுகிறது. சரியாக சுத்தம் செய்யாத போது பல் இடுக்கில் இருக்கும் ஸ்டார்ச்சுகளிலிருந்து பாக்டீரியா பரவி பல் வலி, பற்சொத்தை போன்றவை ஏற்படும்.

வயிற்று வலி

தொடர்ந்து அதிகப்படியான வாழைப்பழம் எடுப்பவர்களுக்கு வயிற்று வலி உண்டாகும். இதில் இருக்கும் ஸ்டார்ச்சுகள் ஜீரணமாக தாமதமாகும். மேலும் மேலும் தொடர்ந்து அதே உணவை எடுத்துக் கொள்வதாலும் மற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் ஜீரணப்பதில் சிக்கல் ஏற்ப்பட்ட வயிற்று வலி ஏற்படலாம்.

சிறுநீரகம்

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றோலோ அல்லது சிறுநீரகத்தொற்று போன்ற பாதிப்புகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்.

நரம்புகள்

வாழைப்பழத்தில் விட்டமின் பி6 அதிகப்படியாக இருக்கிறது மருத்துவர்களின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி விட்டமின் பி6 எடுத்துக்கொண்டால் அது நரம்புகளை பாதிக்கும்.


--

வியாழன், 9 மே, 2024

நாற்பது வகை கீரைகளும் அதன் பயன்களும்...!!*

அகத்திக்கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

மணத்தக்காளி கீரை வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முருங்கைக்கீரை நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

பசலைக்கீரை தசைகளை பலமடையச் செய்யும்.

அரைக்கீரை ஆண்மையை பெருக்கும்.

கொடிபசலைக்கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

புளியங்கீரை சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை ரத்தசோகையை நீக்கும்.

வல்லாரை கீரை மூளைக்கு பலம் தரும்.

காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

புண்ணக்கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை விஷம் முறிக்கும்.

தும்பைகீரை அசதி, சோம்பல் நீக்கும்.

முரங்கைகீரை சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

முளைக்கீரை பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை இருமலை போக்கும்.

சாணக்கீரை காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை சளியை அகற்றும்.

நருதாளிகீரை ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.--

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts