லேபிள்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

சிரிப்பு

ரெண்டு பிசினெஸ்மேன் பேசிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு.  மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.
மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!
*****
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.
ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
*****
ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?
ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?
ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.
*****
காதலன் : “கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே”
காதலி : “மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”
*****
கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”
மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”
———————————————————————————–
நபர்: என்னுடைய பையனுக்கு வைட்டமின் மாத்திரை ஏதாவது கொடுங்க.
மருந்து கடைக்காரர்: எந்த வைட்டமின் மாத்திரை A, B (அ) C?
நபர்: அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால ஏதாவது ஒரு மாத்திரை கொடுங்க.
****
கடைக்காரர்: நீங்க உடைத்த பொருள் 100 வருஷம் பழையது தெரியுமா?
நபர்: அப்பாடா! நான் அதப் புதுசுனு நெனச்சு பயந்துட்டேன்.
****
முதலாளி: இனி நீ என்னுடைய கார் டிரைவர். உன்னுடைய ஆரம்ப சம்பளம் 3000 ரூபா. உனக்கு சந்தோஷமா?
பப்பு: ரொம்ப சந்தோஷம். வண்டி ஆரம்பிக்க 3000 ரூபா சம்பளம்னு சொன்னீங்க. ஆனா வண்டி ஓட்டறதுக்கு சம்பளம் எவ்வளவு? அத சொல்லலியே?
****
பப்பு: உன்னுடைய கார் பேர் என்ன?
அப்பு: சரியாக ஞாபகமில்லை. ஆனால் ‘T’ல ஆரம்பிக்கும்.
பப்பு: பரவாயில்லையே.. என்னுடைய கார் பெட்ரோல்லதான் ஆரம்பிக்கும்.
****
பப்பு தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் கை நீட்டி, நிறுத்த சைகை செய்தார். அப்போது,
பப்பு: கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏற்கெனவே 3 பேர் இருக்கோம். நாலாவதா நீங்க எங்க உக்காருவீங்க?
*************
“ நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”
“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்!”
***************
”எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு!”
” ஏன் என்னாச்சு!”
நடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல இலவசமாவருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க!”
***************
“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”
” ஏன் என்னாச்சு!”
” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”
***************
‘’ பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்?”
‘’ செல்போன் ரீ-சார்ஜ் கர்ர்ட சுரண்டிகிட்டு இருக்கார்.”
***************
”காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு எல்லாரும் வரிசையா நிக்கறாங்க?”
“ பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்!”
***************
“ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க!”
“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க!”
***************
” இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல!”
“ கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி நடிக்க முடியும்
***************
“ திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்?”
“ நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு கேட்டீங்க
***************
“மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?”
” கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!”
******
” நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?”
” எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய்ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!
****************
” மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!”
” ஏன் முடியாது?”
” எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்”
******************
” மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்”
” அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!”
**************
” இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?”
” டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாருமில்லங்கற பாட்டுத்தான்!”
****************
” செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!”
” போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதிமுடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!”
***************
” நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!”
” ஏன், என்ன நேர்ந்தது?”
” புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!’
***************
” நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!”
” அதென்ன பாய் அடி?”
” ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!”
**************
” மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!”
” நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல!”
**************
” நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்?”
” வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!”
***************
” ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்?”
” மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்!”
***************
” தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!”
” அப்படி என்ன கேட்டுட்டார்!”
” பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்!”
*****************
” எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?”
” தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!”
****************
” எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!”
 த்ரி-ஷா தான்”
****************
” போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு!”
” ஏன் என்னாச்சு?”
” லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!”
**********************
‘’ இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?’’
‘’ நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை பார்த்திருப்பான் மன்னா!’’
*******************
‘’ புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’
’’ வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’
**************************
‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு!’’
‘’ எப்பிடி?’’
‘’ லக்கு லக்குன்னு இருமுறாரு”
————————————————————

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? விழிப்புணர்வு பதிவு.

வீட்டில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் கூட விடுமுறை என்பதே கிடைப்பதில்லை. நாள் முழுவதும் பம்பரமாய் ...

Popular Posts