லேபிள்கள்

வியாழன், 30 ஜூலை, 2015

மாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன?

மாதவிடாய் டென்சன் தீர்வு என்ன?
பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு. ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome.. அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!

சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின் ஒற்றைத்
தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.
மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!
பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்! சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான்! பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவரசினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரிஎன்ன செய்யலாம்?
கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.
PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.
மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.
காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.
7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.
இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.
மனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!
இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!
றிவிஷி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 28 ஜூலை, 2015

மருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்

மருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்

தற்போது இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை இரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்" பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.

இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் இரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.

இந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது. மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த வழிமுறைகள்;

*
வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும்.

நடைபயணம் மேற்கொள்வதால் அனேக உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைபயணத்தை விட, ஜாக்கிங் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளித்து, உடலை சீராக வைக்க உதவும்.

*
இரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் தயிர் எடுத்து கொள்ளலாம். இயற்கையாக தயிரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது, இரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை தயிருக்கு உள்ளதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*
பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாழை பழத்திற்கு உண்டு.

*
அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.

*
உடல் எடை கூடாமல், கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும்.

*
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் வேண்டும். இதில் உள்ள நிகோடின் என்ற நஞ்சு இதய துடிப்பை வேகமாக துடிக்க வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.

*
இவர்கள் அதிக உடல் உழைப்பு உள்ள வேலைகளை தவிர்க்க வேண்டும். பளு தூக்கும் பயிற்சியை செய்யவே கூடாது.

*
மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது.

இரத்த கொதிப்பு உள்ளவர்கள், இவ்வாறு தினமும் பின்பற்றி வந்தால் நூறு வயது வரை இளமையுடன் நோயில்லாமல் வாழலாம்.
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 26 ஜூலை, 2015

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்


இலவங்கப்பட்டை

உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்ததொரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை ஆகும். ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது.
இஞ்சி
இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது.
ஏலக்காய்
ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.
மஞ்சள்
மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது.
அகாய் பெர்ரி (Acai Berry)
பிரேசில் நாட்டில் விளையும் ஒருவகை கருமை வண்ண பழம் தான் இது. பனை வகையைச் சேர்ந்தது. இதன் ஜூஸ் அல்லது இப்பழத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் பொடிக்கு உடல் எடையைக் குறைக்கும் வல்லமை உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கின்றன. உடலுக்கு சக்தியை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இப்பழத்திற்கு உண்டு.
நெட்டில் இலை (Nettle leaf)
இது ஒருவகை கண்டங்கத்திரி செடியின் இலை போன்ற இலையைக் கொண்டது. இவ்விலையில் உடலுக்கு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தை சுத்திகரித்து கொழுப்புக்களை எரிக்க உதவுகின்றது
குவாரனா (Guarana)
இது பிரேசில் நாட்டில் காணப்படும் காப்ஃபைன் நிறைந்த ஒரு ஆற்றல் தரும் பழமாகும். இது சிறுநீரை பிரிக்கும் சக்தி நிறைந்தது. எடை குறைப்பில் மிக உதவுகிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மன அழுத்தத்தினாலும், வெறுப்பினாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.
வரமிளகாய் (Cayenne pepper)
இதில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
சீரகம்
ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது
ஜின்செங் (Ginseng)
வட அமெரிக்கா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளில் விளையும் ஒரு தாவரம் தான் இது. இந்த ஜின்செங் உடலின் ஆற்றல் நிலைகளை தூண்டுவதற்கும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
கருப்பு மிளகு
நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.
டான்டேலியன் (Dandelions)
ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை மலர் தான் டான்டேலியன். இதற்கு நமது உடலை சுத்தப்படுத்தும் திறன் மற்றும் ஜீரண வேகத்தை மட்டுப்படுத்தும் திறன் உண்டு. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் இருக்கச் செய்யும் திறன் உண்டு. நிறைய சத்துக்கள் மிகுந்தது. குறிப்பாக உடல் எடை குறைய, இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஆளி விதை (Flax seeds)
ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.
கொத்தவரங்காய் (Guar gum)
கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.
கார்சினியா (Garcinia)
இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது.
கடுகு
உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.
தேங்காய் எண்ணெய்
உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.
சோம்பு
உணவு செரிப்பதற்கு இது சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.
சைலியம் (Psyllium)
இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும். அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும்.
செம்பருத்தி
உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது தான் இம்மலர்.'
குலசை.ஆ.சாமி
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 24 ஜூலை, 2015

கோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு

கோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு


கோடை வெயில் கொளுத்திட்டிருக்கு. வெயிலோட தாக்கத்தில இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், பழங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வர்ற இந்த நேரத்துல இயற்கையோட கொடையான நுங்கு சீசனும் தொடங்கியிருக்கு. நாம விரும்பி சாப்பிடற இந்த நுங்குல ஏராளமான நன்மைகள் இருக்கு.
உடலுக்கு குளிர்ச்சிய தர்றதுல முக்கிய பங்கு வகிக்கிது நுங்கு. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
பசியை தூண்டவல்ல இந்த நுங்கு சீதபேதியை சரி செய்யும் குணம் கொண்டது. நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா வேர்குரு மறையும். கால்சியம், வைட்டமின் பி, சி சத்துக்கள் நுங்குல இருக்கு. குடல் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. இதுபோன்று ஏராளமான நன்மைகள் கொண்ட நுங்கை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே.  நுங்கு சாப்பிடுபவர்கள் இளம் நுங்கைதான் சாப்பிட வேண்டும். இது சுவையாக இருக்கும். முற்றிய நிலையில் உள்ள நுங்கை சாப்பிட்டால் சுவை குறைவாக இருப்பதோடு, வயிற்றுவலி உண்டாக வாய்ப்புள்ளது.
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 22 ஜூலை, 2015

சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா…

சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா

புகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் அந்த பழத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். ஒரு பழக்கத்தை பழகுவது எளிதானது. ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீயப்பழக்கங்களை நிறுத்துவது தான் மிகவும் கஷ்டமான விஷயம். அந்த தீயப்பழக்கங்களில் புகைப்பிடித்தால், உடலுக்கு என்ன கேடு ஏற்படும் என்பது நன்கு தெரியும். அதிலும் அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் உடலில் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நுரையீரல் பாதிப்பப்பட்டு, நாளடைவில் அழிந்துவிடும்.
சிலர் இந்த விஷயம் தெரிந்து, இந்த மாதிரியான கெட்டப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் நீண்ட நாட்கள் பிடித்த சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உடலிலேயே தங்கியிருக்கும். இவை நீண்ட நாட்கள் உடலில் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அத்தகைய நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்ற சில உணவுகள் இருக்கின்றன. அந்த உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டின் வெளியேறிவிடும்.
பொதுவாக புகைப்பிடித்தால் உடலில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ சத்துக்கள் குறைந்துவிடும். இந்த சத்துக்கள் தான் நுரையீரலை பாதுகாக்கின்றன. ஆகவே இந்த சத்துக்கள் நிறைந்து உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றிவிடலாம். சரி, இப்போது உடலில் இருந்து நிக்கோட்டினை வெளியேற்றும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
ப்ராக்கோலி
இந்த காய்கறியில் வைட்டமின் சி மற்றும் பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிலும் புகைப்பிடித்தால், உடலில் உள்ள வைட்டமின் சி சத்தானது குறைந்துவிடும். ஆகவே இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டை தவிர்ப்பதோடு, புகைப்பிடிப்பதால் சேரும் நிக்கோடின் அளவை குறைத்துவிடும். அதுமட்மின்றி, இவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும்.
கேரட் ஜூஸ்
ஒரு முறை புகைப்பிடித்தால், அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் 3 நாட்களுக்கு உடலில் இருக்கும். அதிலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், நிக்கோட்டின் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்தின் பொலிவை கெடுத்துவிடுகிறது. எனவே அவ்வாறு பாதிப்படையும் சருமப் பொலிவை கேரட் ஜூஸ் மீட்டு தரும். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் தங்கியிருக்கும் நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் அதிக வைட்டமின்கள் இருப்பதோடு, ஃபோலிக் ஆசிட் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பிணிகள் உடலில் நிக்கோட்டின் அதிகமான உள்ளது என்று கவலைப்பட்டால், அப்போது பசலைக் கீரையை அதிகம் வாங்கி சாப்பிடுவது நல்லது.
மாதுளை
இந்த சிவப்பு நிற பழமானது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது. ஆகவே அதிக அளவு நிக்கோட்டின் உடலில் இருப்பது போல் உணர்ந்தால், அதாவது அதிக அளவில் புகைப்பிடித்துவிட்டால், மாதுளையை சாப்பிடுவது நல்லது. இதனால் நிக்கோட்டின் வெளியேறுவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
கிவி
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கிவி பழம், உடலில் உள்ள நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும் தன்மையுடையது. எனகே கிவிப் பழத்தை சாப்பிட்டு, நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்றிவிடுங்கள்.
பெர்ரி
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றுவதோடு, ஆபத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்களையும், உடலில் இருந்து வெளியேற்றிவிடுகிறது.
காய்ந்த மூலிகைகள்
காய்ந்த மூலிகைகளும் உடலில் உள்ள நிக்கோட்டின் அளவை குறைத்துவிடும். அதிலும் ரோஸ்மேரி, பார்ஸ்லே, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய், பூண்டு பொடி மற்றும் பல மூலிகைப் பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது.
தண்ணீர்
அதிகமாக புகைப்பிடித்தால், உடலில் வறட்சியை ஏற்படுவதோடு, தீங்கை விளைவிக்கும் நிக்கோட்டின் அளவும் அதிகமாகும். ஆகவே அதிக அளவில் தண்ணீர் குடித்தால், எந்த ஒரு நச்சுப் பொருளையும், உடலில் தங்க விடாமல் தடுக்கலாம்.
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts