லேபிள்கள்

MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 செப்டம்பர், 2025

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் கண்பார்வைக்கு மிகவும் பிரச்சனையாகிவிடும். ஒரு விஷயத்தை பார்த்து ரசிப்பதற்கு நமக்கு கண்கள் மிகவும் முக்கியம். அப்படி கண்கள் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கண் தெரியாதவர்கள், கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் என அனைவரும் கருப்பு கண்ணாடியை ஏன் அணிகிறார்கள்? அது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா?

கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத் தான் காண முடியாது. ஆனால், ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களைச் சுலபமாக பாதிக்கும். கண் தெரியாதவர்களின் கண்கள் சூரிய வெளிச்சம் அல்லது லைட் வெளிச்சத்தில் மிகவும் உணர்வு திறன் குறைவாக இருக்கும். அவர்கள் கண்ணாடி போடாமல் சாதாரணமாக வெளியில் செல்லும் போது சூரிய வெளிச்சம் அவர்களின் கண்களில் படும். இதனால் கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும். விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்குத் தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். நாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கண் தெரியாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார்கள். இதை போட்டால் அவர்கள் வெளியில் செல்லும் போதும் அவர்களுக்கு சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படாது.



--

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க அசத்தலான வழிகள்.

ஒருவரது வயிற்றில்    புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான்.

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை, கெட்டுப் போன உணவை உண்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அசுத்தமான நீரைக் குடிப்பது போன்றவற்றால் வயிற்றில் புழு க்கள் உருவாகின்றன.

இதனால் அடிக்கடி வயிற்றில் திடீர் வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

எனவே இவற்றை எளிய முறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட, 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து உட்கொண்டு வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

கேரட்டை தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை மலத்தின் வழியாக எளிதில் வெளியேற்ற உதவும்.

பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.

ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

பூண்டை அரைத்து, அதில் கல் உப்பு சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பால் கூட குடிக்கலாம். இவ்வாறு செய்தால், குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களின் வயிற்றில் உள்ள புழுக்களும் அழிந்துவிடும்.

தினமும் துளசியை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு வேளை துளசி இலைகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளையின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு நாளைக்கு 2 வேளை நீரில் கலந்து குடித்து வர, சில நாட்களில் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வருவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம் இல்லாவிட்டால் பாகற்காயின் விதைகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிடலாம்.

ஒரு கப் சுடுநீரில் 1-2 கிராம்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், புழு பிரச்சனை இல்லாமல் வாழலாம்.



--

சனி, 6 செப்டம்பர், 2025

வாட்டி எடுக்கும் முதுகு வலியைப் போக்கும் வழிகள்.

நாம் முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்க்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே (back pain home remedies) செய்து பார்க்கலாம், அவ்வாறு செய்தும் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுப்பது அவசியம்.

உங்கள் முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.

முதுகு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் செய்து அருந்தலாம், இதனால் முதுகு வலி குணமாகும். அதேபோல் தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி பின் பருகிவரலாம். இதனால் முதுகு வலி நீங்கும்

1. உட்காரும் விதம்

அலுவகத்திலோ வீட்டில் டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உட்காரும் போது நேராகவும், குனியாமல் நிமிர்ந்து அமர்ந்தாலும், வேலை பளுவால் நீங்கள் சற்று சாய்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இந்த சூழ்நிலைகளில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றி கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்துங்கள்.

3. வைட்டமின்கள்

கால்ஷியம் எலும்பின் வலிமைக்கு முக்கியமானதாகும். உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல் நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகளை உடல் ஏற்று கொள்ளாது. இது தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாகும்.

4. உணவு முறை

நாம் சாப்பிடும் உணவுகளில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

5. தாதுக்கள்

எலும்பின் வளர்ச்சி மற்றும் வலிமையை மேம்படுத்த கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

6. சூடான குளியல்

முதுகு வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் சூடான குளியல் மேற்கொள்வது நல்லது. இது முதுவலியை கட்டுபடுத்துவதோடு உடலுக்கு உற்சாகத்தையும் வழங்கும்.

முதுகு வலி நீங்க

7. கடுகு எண்ணெய்

எலும்புகளை வலுவாக்க கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடக்க வேண்டும். கடுகு எண்ணெய் எலும்பின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.



--

புதன், 6 ஆகஸ்ட், 2025

நிறைய செலவு வைக்கும் சிறுநீர் பிரச்சனைகளுக்கு செலவில்லாத சிகிச்சை முறைகள்.

ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதே போல் உள்ளுறுப்புகளின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1 ½ கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்

அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு சீராக சிறுநீர் வராது.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன.

நீர் கடுப்பு குணமாக

வெங்காயத்தை பொடி 6பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழத்தின் தோலைநீக்கிய பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி, அரைத்து சாறு பிழிந்து, அந்த அன்னாசிப்பழச் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

சிறுநீர் கோளாறுகள் குணமாக

நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அணைத்து கோளாறுகளும் குறையும்.urine_problem_004

தாமரை, ரோஜா இதழ்கள்

தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.urine_problem_005

பெர்ரி

சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட‌ எல்லா கோளாறுகள் குறையும்.urine_problem_006

எலுமிச்சையும், கற்கண்டும்

வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.



--

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஏ.டி.எம் கார்டில் பாதுகாப்பு அவசியம். இல்லையேல் Block..Block.. கவனமாக இருங்கள்.

ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதா?

இன்றைய காலக்கட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏ.டி.எம் கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏ.டி.எம் கொள்ளைகளும், பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டால், அச்சச்சோ ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதே... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே இருப்போம்.

அவ்வாறு தொலைந்துவிட்டால் உடனடியாக அதனை எப்படி பிளாக் செய்வது? எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்வது? என்ற விவரங்கள் தெரியுமா? தெரியாது எனில் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கானதே...!!

முதலில் பிளாக் செய்யுங்கள்:

நீங்கள் உங்களது ஏ.டி.எம் கார்டினை தொலைத்து விட்டால், பதற்றப்படாமல் உடனே பிளாக் செய்யுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் உங்களது கார்டினை எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம். அதற்காக பல வழிமுறைகளும் உள்ளன.

பலரும் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு எப்போது தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் இருந்து விடுகின்றனர். அதை நாம் பார்த்து அதற்காக வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும்.

மேலும் பின் நம்பரை அறிந்து கொள்ள இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனே தங்களது வங்கிக் கிளையை அணுகி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.

எவ்வாறு பத்திரமாக பார்த்துக்கொள்வது?

உங்கள் பின் நம்பரை யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்திருப்பது நல்லது.

பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும்.

அதே போல் பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனமான வேலையை தவிர்ப்பது சிறந்தது.

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்கள் நமது பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அதனால் ஏ.டி.எம் சென்டரை விட்டு வெளியேறும் போது கார்டு நம்மிடம் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.



--

சனி, 26 ஜூலை, 2025

முழு முட்டை அல்லது முட்டையின் வெள்ளைக்கரு - எது ஆரோக்கியமானது?

முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமா அல்லது முழு முட்டையும் சாப்பிடலாமா? இது ஒரு விடையில்லா கேள்வி. முட்டையின் வெள்ளைக்கரு மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறினாலும், பலர் அதை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

மஞ்சள் கரு முக்கியமாக கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`

ஒரு முட்டையின் பிரகாசமான மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள வெள்ளை திரவமானது, சுமார் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 10 சதவீதம் புரதத்தால் ஆனது. பயோட்டின் பிணைப்பு புரதமான அவிடின் அவற்றில் உள்ளது. அதேநேரம், மஞ்சள் கரு கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`

நீங்கள் முடிவெடுப்பதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.

முழு முட்டைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரம் மட்டுமல்ல, இதில் புரதம் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது இங்கே

முழு முட்டை உடலுக்கு அதிக புரதத்தை அளிக்கும் அதே வேளையில், அவை அதிக கலோரிகளையும் கொண்டு வருகின்றன.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதம் 'உயர்தர முழுமையான புரதம்' என்றும் கருதப்படுகிறது, அதாவது உடலுக்குத் தேவையான அளவு ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.

எப்படி தேர்வு செய்வது?

முழு முட்டைகளை உண்பது, உங்களை முழுதாக உணர வைப்பதோடு குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒப்பிடும்போது இது ஊட்டச்சத்துக்களில் அதிக நன்மை பயக்கும் என்றும் அறியப்படுகிறது.

தசையைப் பராமரிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும், உணவில் போதுமான புரதத்தைப் பெறுவது அவசியம், குறிப்பாக ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது. இதைக் கருத்தில் கொண்டு, எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த வழி என்று கூறலாம்.

முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அனைத்தும் மஞ்சள் கருவில் காணப்பட்டாலும், முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையும் இல்லை.

முட்டையின் வெள்ளைக்கரு' அதிக புரதம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கவர்ச்சியான தேர்வாக இருக்கும், ஆனால் விளையாட்டு வீரர்கள் அல்லது பாடி பில்டர்கள் போன்றவர்கள் அவர்களின் கலோரி உட்கொள்ளலைக் கவனிக்க வேண்டும்.



--

புதன், 23 ஜூலை, 2025

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவை!

சாப்பிட்ட பின் மறந்தும் கூட செய்யக் கூடாத சில செயல்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஏனெனில் இவை உடல நலத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

இது கோடை காலம் என்பதால், குளிப்பது மிகவும் புத்துணர்ச்சியைத் தரும். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, பெரும்பாலானோர் மூன்று முதல் நான்கு முறை குளிக்கிறார்கள். சிலருக்கு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இவை உடப சில பொதுவான தவறுகள் நோயை வரவேற்கும் செயல்கள்.

சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது

சிலருக்கு சாப்பிட்ட பின் குளிக்கும் வழக்கம் உள்ளது. இரவில் சாப்பிட்ட பின் குளிக்கும் அந்த தவறை செய்யக்கூடாது. இப்படி செய்வது பல நோய்களுக்கு வரவேற்பை அளிக்கும் செயல் என்று சொல்லலாம்.

உணவு உட்கொண்ட பிறகு குளிக்கும் பழக்கம் பெரும் உடல நல பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்கள் எடையும் அதிகரிக்கலாம் . அதோடு அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இதைத் தவிர, இதுபோன்ற சில பழக்கவழக்கங்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் பல நோய்களின் பிடியில் செல்லலாம்.

காலை உணவாக இருந்தாலும் சரி, இரவு உணவாக இருந்தாலும் சரி, சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது. இதைச் செய்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். குளித்த பிறகு, உடல் வெப்பநிலை உயர்கிறது, இதன் காரணமாக உணவு சரியாக ஜீரணமாகாது.

சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிட வேண்டாம்

பெரும்பாலானோர் சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடுவார்கள். இதைச் செய்வதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில், இதைச் செய்வது உங்களுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

உணவுக்குப் பிறகு புகைபிடித்தல்

சிலருக்கு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இதை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். அப்படி செய்தால் உடல் எடை கூடும்.

சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது

சிலருக்கு சாப்பிட்ட உடனேயே தூக்கம் வரும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலால் உணவை சரியாக ஜீரணிக்க முடியாது. இது உங்கள் செரிமானத்தை கெடுக்கும். அதனால்தான் சாப்பிட்ட உடனேயே 10-15 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.



--

சனி, 19 ஜூலை, 2025

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிமுறைகள்:

தலையில் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும்.

வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நுங்கு, இளநீர், மோர் போன்றவற்றை வாங்கி குடிக்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும். மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.



--

புதன், 16 ஜூலை, 2025

சிலிண்டர் எப்படி வெடிக்கிறது? அதற்கான காரணங்கள்.

நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப் பட்டிருப்பீர்கள்.

எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றது. சிலிண்டர் என்பது தற்போது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

அதில் முதலாவது நாம் சிலிண்டரை முறையாக கையாளாமல் இருப்பதால் வெடிக்கின்றது. அதாவது சிலிண்டருக்கும் அடுப்புக்கும் பயன்படுத்தப்படும் வயர்கள் பழுதடைந்த காரணத்தினால் அல்லது எலிகள் அந்த வயர்களை கடித்து இருந்தால் அதன் மூலம் வெளியேறும் எரிவாயு மூலமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

இரண்டாவது காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் வீடுகளில் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இப்போது நாம் எப்படி சிலிண்டர் காலாவதியாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரை A-07, B-06 என்று எழுதப்பட்டிருக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரைக்கும், C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும், D அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும், அடுத்து உள்ள இரண்டு எண்கள் வருடத்தைக் குறிக்கும். உதாரணதிற்கு சிலிண்டரில் B -21 என்று இருந்தால் அந்த சிலிண்டரை(கேஸ் இல்லை) 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம். எனவே சிலிண்டர் வாங்கும் போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.



--

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts