லேபிள்கள்

செவ்வாய், 31 மே, 2011

பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாதுபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
          தேன் என்றாலே  உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து  என்ற கருத்து பரவலாக  உள்ளது . ஆனால் தேன் மலரில் உள்ளபோது  சுத்தமாகவே உள்ளது பின்பு  தேனீயால் எடுக்கப்பட்டு  தேன்கூட்டில்  சேகரிக்கப்பட்டு அதனை  எடுத்து நாம் உபயோகிக்கும்போது   அதில்  அல்லேர்ஜியை உண்டாக்கும்  மகரந்த  தூள்களும்  , மிக  கடுமையான  பொடுலிசம்(BOTULISM ) என்ற  வியாதியை  உண்டாக்கும்   Clostridium bacteria  இருக்கலாம் .
எனவே குழந்தைகளுக்கு  குறிப்பாக  ஒரு வயதுக்கு  குறைவான  குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .
BOTULISM  வந்தால்  தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
உடல் தளர்ச்சி -குழந்தையை  தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது 
பால் குடிக்க  மறுப்பது
சோம்பலாக   அழுவது (WEAK  CRY )
மலச்சிக்கல்
எனவே தேனை  நேரடியாகவோ  மறைமுகமாகவோ ஒரு வயது  குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க  கூடாது  .
அலர்ஜி , ஆஸ்த்மா  உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும்  தேன் தராமல் இருப்பது  நல்லது 

துஆ


வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.  ஆதாரம்: நஸயீ 5391, 5444
 பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
 இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

சபையை முடிக்கும் போது

ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  ஆதாரம்: திர்மிதீ 3355
 ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
 இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
 அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
 ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.
 இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.  ஆதாரம்: நஸயீ 1327

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
 இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
 இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165

சாப்பிடும் போதும், பருகும் போதும்

பி(இ)ஸ்மில்லாஹ்
 அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 5376, 5378
 பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
 சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: திர்மிதீ 1781

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா
 இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.  ஆதாரம்: புகாரி 5858
 அல்லது
 அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்
 இதன் பொருள் : உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.  ஆதாரம்: புகாரி 5459
 அல்லது
 அல்ஹம்து லில்லாஹ் என்று கூறலாம்.  ஆதாரம்: முஸ்லிம் 4915

உணவளித்தவருக்காக

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
 இதன் பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 3805

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா
 இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.  ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396
  அல்லது
  பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா
  இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.  ஆதாரம்: புகாரி 5165, 3283

எல்லா நிலையிலும் கூற வேண்டியவை

பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும் பி(இ)ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 3280, 5623

கோபம் ஏற்படும் போது

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்
  இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282
  அல்லது
  அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115

தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 3276

கழுதை கணைக்கும் போது

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3303

கெட்ட கனவு கண்டால்

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 6995

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி முத்ஹிபல் ப(இ)ஃஸி இஷ்பி(எ) அன்தஷ் ஷாபீ(எ) லா ஷாபி(எ)ய இல்லா அன்(த்)த ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.
  இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742
  அல்லது
  அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி அத்ஹிபில் ப(இ)ஃஸ இஷ்பி(எ)ஹி வஅன்தஷ் ஷாபீ(எ) லாஷிபா(எ)அ இல்லா ஷிபா(எ)வு(க்)க ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!  ஆதாரம்: புகாரி 6743
அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து
பி(இ)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 4082
அல்லது
லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம்.  ஆதாரம்: புகாரி 3616

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(எ)னீ இதா கான(த்)தில் வபா(எ)(த்)து கைரன் லீ
இதன் பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 5671, 6351

இழப்புகள் ஏற்படும் போது

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  ஆதாரம்: முஸ்லிம் 1525
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா
இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

அல்லாஹும்மக்பி(எ)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(இ)ன் ஹஸனதன்
இதன் பொருள் : இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!  ஆதாரம்: முஸ்லிம் 1527

மழை வேண்டும் போது

இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹும்மஸ்கினா - அல்லாஹும்மஸ்கினா -  அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் : இறைவா! எங்களுக்கு மழையைத் தா.  ஆதாரம்: புகாரி 1013
அல்லது
அல்லாஹும்ம அகிஸ்னா - அல்லாஹும்ம அகிஸ்னா - அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!  ஆதாரம்: புகாரி 1014

அளவுக்கு மேல் மழை பெய்தால்

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!  ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
அல்லது
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி
இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.  ஆதாரம்: புகாரி 1013, 1016
அல்லது
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(இ)லி வல் ஆகாமி வபு(இ)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி ஆதாரம்: புகாரி 1017

மழை பொழியும் போது

அல்லாஹும்ம ஸய்யிப(இ)ன் நாபி(எ)அன்
இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!  ஆதாரம்: புகாரி 1032

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ), ஸரீஅல் ஹிஸாபி(இ), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(இ), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.
இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!  ஆதாரம்: புகாரி 2933, 4115
அல்லது
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ) வமுஜ்ரியஸ் ஸஹாபி(இ) வஹாஸிமல் அஹ்ஸாபி(இ) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.
இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!  ஆதாரம்: புகாரி 2966, 3024

புயல் வீசும் போது

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(எ)ஹா வகைர மா உர்ஸிலத் பி(இ)ஹி. வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(எ)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(இ)ஹி
இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 1496

பயணத்தின் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
அல்லாஹு அக்ப(இ)ர் - அல்லாஹு அக்ப(இ)ர் - அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள்.
பின்னர் ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.
இதன் பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 2392

பயணத்திலிருந்து திரும்பும் போது

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
இதன் பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.  ஆதாரம்: முஸ்லிம் 2392

வெளியூரில் தங்கும் போது

அவூது பி(இ) (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
இதன் பொருள் : முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882

பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(இ)ர்
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 5565, 7399
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால் அல்லாஹு அக்ப(இ)ர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3348, 4741

மேட்டில் ஏறும் போது

உயரமான இடத்தில் ஏறும் போது அல்லாஹு அக்ப(இ)ர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994

கீழே இறங்கும் போது

உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது ஸுப்(இ)ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 2993, 2994

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய

ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(இ)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(இ)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(எ)ள்லி(க்)கல் அளீம். ப(எ)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(இ) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(எ) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(இ)(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப(எ)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(இ)ரிக் லீ பீ(எ)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(எ) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(இ)(த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப(எ)ஸ்ரிப்(எ)ஹு அன்னீ வஸ்ரிப்(எ)னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ
இதன் பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன். இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.  ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

தும்மல் வந்தால்

தும்மல் வந்தால் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர் யர்ஹமு(க்)கல்லாஹ்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர் யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும் எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!  ஆதாரம்: புகாரி 6224

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்................. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹும்மக்பி(எ)ர் லி ................... வர்ப(எ)ஃ தரஜ(த்)தஹு பி(எ)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(எ) ஹு பீ(எ) அகிபி(இ)ஹி பி(எ)ல் காபிரீன் வக்பி(எ)ர் லனா வலஹு யாரப்ப(இ)ல் ஆலமீன் வப்(எ)ஸஹ் லஹு பீ(எ) கப்(இ)ரிஹி வநவ்விர் லஹு பீ(எ)ஹி.
இதன் பொருள் : இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1528

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

அல்லாஹும்மபி(எ)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(எ)ஹி வபு(எ) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(இ)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(இ)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(இ)ல் அப்(இ)யள மினத் தனஸி வ அப்(இ)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(இ)ல் கப்(இ)ரி
இதன் பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(இ)கும் லாஹி(க்)கூன்.
இதன் பொருள் : இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ஆதாரம்: முஸ்லிம் 367
அல்லது
அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(இ)கும் லாஹி(க்)கூன். ஆதாரம்: முஸ்லிம் 1618
அல்லது
அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்லிமீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(இ)(க்)கும் லலாஹி(க்)கூன்.
இதன் பொருள் : முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.  ஆதாரம்: முஸ்லிம் 1619
அல்லது
அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி(எ)ய(த்)த
இதன் பொருள் : முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 1620

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

அல்லாஹும்மபி(எ)ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ
இதன் பொருள் : இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக! ஆதாரம்: முஸ்லிம் 4863, 4864

மணமக்களை வாழ்த்த

பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க ஆதாரம்: புகாரி 5367, 5155, 6386
அல்லது
பா(இ)ர(க்)கல்லாஹு அலை(க்)க  ஆதாரம்: புகாரி 6387
அல்லது
பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(இ)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(இ)ன(க்)குமா பி(எ)ல் கைர் ஆதாரம்: திர்மிதீ 1011
அல்லது
பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(இ)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(இ)ன(க்)குமா பீ(எ) கைரின் ஆதாரம்: அபூதாவூத் 1819

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா ? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அத...

Popular Posts