லேபிள்கள்

வியாழன், 29 நவம்பர், 2012

ஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா!


நாம் பல நாட்களில் நேரம் மற்றும் உழைப்பைப் பயன்படுத்தி உருவாக்கும் பைல்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் வைக்கப்படுகின்றன. ஹார்ட் டிஸ்க் எப்போது கிராஷ் ஆகி காலை வாரும் என்று யாரும் கணிக்க முடியாது.  ஹார்ட் டிஸ்க் நல்ல கம்பெனி ஹார்ட் டிஸ்க் எனப் பலர் பேக் அப் எடுப்பதே கிடையாது. இவர்களின் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் அதோ கதிதான். ஒரு சிலர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேக் அப் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். என்னதான் பேக் அப் எடுக்கும் பழக்கம் இருந்தாலும் பலர் இதில் கோட்டை விட்டுவிடுகின்றனர். ஒரு நாள் பணி முடிக்கையில் தொடர்ந்து பேக் அப் எடுப்பது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். இருப்பினும் இன்னொரு வழியிலும் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஏன் ஹார்ட் டிஸ்க்கை சரியான முறையில் பராமரித்து வரக் கூடாது. அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.

ஹார்ட் டிஸ்க் நம் கம்ப்யூட்டரில் மிக மிக முக்கியமான ஒரு சாதனம் என்பதனை நாம் யாரும் மறுக்க முடியாது. சரியாகக் கவனிக்கப்படாத ஒரு ஹார்ட் டிஸ்க் மூன்று ஆண்டுகள் வரைதான் வரும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு ஹார்ட் டிரைவ் எந்த முன் எச்சரிக்கையுமின்றி கெட்டுப் போகும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. இதனால் தான் இதனை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
ஸ்டெப் 1:
1. ஹார்ட் டிரைவில் உள்ள எர்ரர்களை கண்டறிய வேண்டும். இதற்கு Start >> My Computer  சென்று சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
2. இந்த விண்டோவில் Tools  என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Check Now  என்ற பட்டனைத் தட்டவும்.
3. பின் இதில் கிடைக்கும் இரண்டு டிஸ்க் ஆப்ஷன்ஸ் இடத்திலும் செக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடவும்.
4. ரீ ஸ்டார்ட் செய்வதற்கு டயலாக் வந்தால் யெஸ் கிளிக் செய்திடவும்.
5. இதன் பின் விண்டோஸ் ரீ ஸ்டார்ட் ஆகி டிஸ்க் முழுவதையும் டெஸ்ட் செய்து கரப்ட் ஆன பைல்களை ரிப்பேர் செய்திடும்.
ஸ்டெப் 2:
நம் பைல்கள் அனைத்தையும் பதிந்து வைத்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS)  அல்லது பேட் 32 (FAT 32) பைல் வடிவத்தினைப் பயன்படுத்துகிறது. என்.டி.எப்.எஸ். பயன்படுத்துவதில் ஒரு அனுகூலம் உள்ளது. சிஸ்டம் கிராஷ் ஆனால் பைல்களில் ஏற்படும் பிரச்சினையை சிஸ்டம் தானாகவே தீர்த்துக் கொள்கிறது. டிஸ்க்கில் உள்ள பேட் செக்டார் எனப்படும் பழுதடைந்த பகுதிகளைக் கண்டறிந்து தானாகவே பைல் மேலும் எழுதப்படாத வகையில் ஒதுக்கி வைக்கிறது. பழைய FAT32 பைல் சிஸ்டத்தில் இந்த வசதி இல்லை. உங்கள் கம்ப்யூட்டர் என்.டி.எப்.எஸ். வகையைப் பயன்படுத்துவதனை உறுதி செய்திட கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.
1) Start > Run  செல்லவும்.
2) ரன் விண்டோவில் cmd  என டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும்.
3) இப்போது டாஸ் ப்ராம்ப்ட் விண்டோ கிடைக்கும். இதில் convert j: /fs:nfs என டைப் செய்திடவும். இதில் J: என்பது நீங்கள் உங்கள் கட்டளைக்கு உள்ளாக்கும் டிரைவின் அடையாள எழுத்து.
ஸ்டெப் 3:
ஒரு ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் பதியப்பட்டு பின் அழிக்கப்பட்டுப் பின் மீண்டும் பதியப்படுகையில் அங்கு பிராக்மென்டேஷன் என்னும் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. பதியப்படும் பைல் வரிசையாகப் பதியப்படாமல் துண்டு துண்டாக ஆங்காங்கே பதியப்படுகிறது. இதைத்தான் பிராக்மென்டேஷன் (fragmentation) என அழைக்கிறார்கள். பைல்கள் இவ்வாறு துண்டு துண்டாக அமைக்கப்படுவதால் அந்த பைல்களைப் படித்துக் கொண்டு வருவதற்கு ஹார்ட் டிஸ்க் வழக்கமாக செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாகச் சுழன்று செயல்பட வேண்டியதுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது. ஹார்ட் டிஸ்க் பயன்தரும் காலம் குறைகிறது. இதனைச் சரி செய்திட டிபிராக்மென்டர் என்னும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இந்த டிஸ்க் டிபிராக்மெண்ட் பயன்பாட்டினைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start >> My Computer செல்லவும். சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
2. இந்த விண்டோவில் Tools  என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Defragment Now என்ற பட்டனைத் தட்டவும்.
3. இனி டிரைவ் அனலைஸ் செய்யப்படும். இதன் பின்னர் Defragment என்பதில் தட்டவும்.
4. இந்த செயல்பாட்டினை மாதம் ஒரு முறையாவது உங்கள் ஹார்ட் டிரைவில் மேற்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொண்டால் ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் கூடுதலாக இருக்கும்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க


மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரேஎன்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.

 ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.
புரோட்டியோ கிளைகான் (புரோ ட்டீன் + கார்போஹைட்ரேட்) கொல்லாஜன், தண்ணீர் மற்றும் குறைந்த அளவில் கொஞ்சம் எலாஸ்டிக் பைபர் சேர்ந்த கூட்டு ப்பொருளால் ஆனது தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்ஆகு ம். ஒரு பட்டர் பிஸ்கெட் எப்படி இருக்குமோ, அநேகமாக, அதே வடிவில், அதே சைஸில் தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்இருக்கும். தண்டுவடம், மொத்தமாக முன்னே, பின்னே, குனிய, நிமி ர, வளைய, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் பெரிதும் உபயோகப் படுகிறது.
மேலும் தண்டு வடத்திலுள்ள எல்லா குருத்தெலும்புகளும் தனித்தனியாக ஒன்றோடொன்று சேர்ந்திருக் கவும் இந்த டிஸ்க் பயன்படுகிறது. மனி தனின் தண்டுவடத்தில், மொத்தம் 23 டிஸ்க் இருக்கிறது. கழுத்துப்பகுதியில் ஆறும், முதுகின் நடுப்பகுதியில் பன்னி ரெண்டும், இடுப்பின் பின்பகுதியில் ஐந் தும் இருக்கின்றன. இந்த டிஸ்க்கின் வெளிப்பகுதி `ஆன்னுலஸ் பைபர்என்கி ற அடுக்கினாலும் உருவாக்கபட்டிருக்கி றது.

உடம்பில், குறிப்பாக முதுகுப்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தை, ஒரே சீராக பிரித் தனுப்பும் வேலையை, வெளிப்புற `ஆன் னுலஸ் பைபர்செய்கிறது. உள் புறமுள்ள `நியூக்ளியஸ் பைபர்ஒரு டூத் பேஸ்ட் போன்று, ஒரு ஜெல்லி போன்று வழவழவென்று இருக்கு ம். இதுதான் `ஷாக் அப்ஸார்பர்வேலையைச் செய்கிறது. அதாவதுதண்டு வடத்துக்கு வரும் பிரஷர் முழுவ தையும் தாங்கிக் கொள்ளும் வேலை யை, இந்த நியூக்ளியஸ் பைபர் தான் செய்கிறது.

உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடு ம்போது, தாவும்போது, தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச் சுமை யாக தூக்கும்போது, குனியும்போது, நிமிரு ம்போது, வளையும்போது, நெளியும் போது ம் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தை யும், இந்த `டிஸ்க்தான், தாங்கிக் கொண்டு குருத்தெலும்புகள் பாதிப்படையாமல், உடை ந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.
அதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் இருநூறு கிலோ எடை யைத் தூக்கி தலையில் வைத்தால், இந்த `டிஸ்க்தாங்காது. ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உய ரத்திலிருந்து குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா செயல்களிலுமே, ஒரு குறிப் பிட்ட அளவுக்குத்தான் இந்த `டிஸ்க்கால் கண்ட் ரோல் பண்ணி, உடம் பை பாதுகா க்க முடியும்.

அளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்கால் ஒன்றும் செய்ய முடியாது. மனி த உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டத ல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள ஆன்னு லஸ் பைபரில், சுமார் 65 சத வீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில், சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப் ளை இந்த டிஸ்க்குகளுக்குக் கிடை யாது. வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக் கிலுள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.

இதனால், அதனுடைய பலமும் குறைந்து கொண்டே வரும். அதனால்தான் வயதான காலத்தில், சின்னப்பிள்ளை மா திரி, ஓடியாடி வி ளையாடாதீர்கள் என்று பயமு றுத்துவதுண்டு. வயதான காலத்தில் முதுகெலு ம்பில் அடிபட்டாலோ, கீழே விழுந் தாலோ, அந்த ஷாக், அந்த அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி குறைந்து விடும். எனவே வயதான கால த்தில் அதிக ஓட்டம் ஓடாதீர்கள்.
விபத்தின் போதோ அல்லது தாறுமாறாக மேலே யிலிருந்து கீழே குதிக்கும்போதோ, பைக், ஸ்கூ ட்டரில் போகும்போது, பள்ளத்தில் தூக்கிப்போ டும்போதோ, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்கு க்கு உள்ளேயிருக்கும் ஜெல்லி போன்ற பொருள், பிய்த்துக் கொண் டு, பிதுங் கிக் கொண்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பிக்கும்.

இப்படி பிதுங்கிக்கொண்டு வெளியே வரும் `ஜெல்லிதான், அருகிலுள்ள நரம்பை அழுத்தும். சிலபேருக்கு இந்த நரம்பு அழுத்தப்படுவ தால் தான், தொடையில் ஆரம்பித்து, காலின் கீழ் பகுதி வரை, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இடுப்பின் பின்பகுதியில் இருக்கும் ஐந்து டிஸ்க்குகளுக்கு `லம் பார் டிஸ்க்என்று பெயர்.

உடலில் ஏறும் எடையையும், உடல் எடையையும், அதிகமாக தாங் கக்கூடியது, இந்த `லம்பார் டிஸ்க்தான். அதே மாதிரி இடுப்பு வளைய, குனிய, நிமிர, இடுப்பைச் சுற்ற இந்த `லம்பார் டிஸ்க்
நிறைய வே பயன்படுகிறது. அதே மாதிரி இந்த `லம்பார் டிஸ்க்கில் ஏற்படு ம் பாதிப்பு தான், இடுப்பு வலியாக நமக்கு காட்டுகிறது.

கல்யாணம், கச்சேரி போன்ற விழாக்களுக்கோ, மற்ற காரிய ங்களுக்கோ, வெளிïருக்கு குடும் பத்துடன் செல்லும் போது, கூட்ட ம் அதிகமாக இருப்பதால், படுக்க இடம் கிடைக்காது. இம்மாதிரி நேரங்களில், படுக்க இடம் கிடைத்தால் போதும் என்பதை விட, தூ ங்க இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்குஇடநெருக்கடி ஏற்பட்டு விடும்.

இப்படி இடைஞ்சலில் இட நெருக்கடியில் தூங்கும்போது, நம் இஷ்டத்துக்கு கையை, காலை நீட்டியெல்லாம் தூங்க முடியாது. இப்படித் தூங்கினா ல், மறுநாள் காலையில் இடுப் பு வலி கண்டிப்பாக வரத்தான் செய்யும். டிரெயினில் பயணம் செய்யும்போது கூட, பெர்த்தில் நன்றாக நீட்டி, மடக்கி, உருண்டு, புரண்டு எல்லாம் தூங்க முடியாது.

கார், பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும் இதே நிலைதான். மறு நாள் காலையில் இடுப்பு வலி ஏற் படத்தான் செய்யும். சிலபேர் ஆட் டோவில் போகும்போது, அந்த ஆட் டோவையே சொந்தமாக விலைக் கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, கால்களையும் விரித்து, ஒரு சோபாவில் ஜமீன்தார் சாய்ந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி, உட்கார் ந்து கொண்டு வருவார்கள்.

ஆட்டோ திடீரென்று ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கும் போது , `அய்யோ, இடுப்பு போயிடுச்சேஎன்று கத்துவார்கள். இது தேவையா? ஆட்டோவில் மட்டுமல்ல, கார், பஸ் முதலிய எதில் பய ணம் செய்யும்போது, பின்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கா ராமல், முன்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, முன் னாலிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண் டும்.

இப்படி உட்கார்ந்திருந்தால் வ ண்டி தூக்கிப் போடும் போது, நமது தண்டு வடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இடுப்பு வலியும் வராது. அமெரிக்காவுக்கு, விமானத்தில் சுமார் 15 மணி நேரம் ஒரே இடத் தில் உட்கார்ந்து பயணம் செய்தால் கூட, இடுப்பு வலி ஏற்படும். எனவே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து, விமானத்துக்குள்ளேயே, ஒரு ரவுண் ட் அடித்து விட்டு, மறுபடியும் வந்து உட்காருங்கள்.

சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திரு க்கும்போது கூட, கூன் போடாமல், தோள்பட்டை யெல்லாம் நேராக இல்லாமல், ஒரு பக்கமாக உடலை சாய்த்து, மிகவும் சோர்வாக இருப்ப து போல், எப்பொழுதும் உட்காராம ல், முன்பக்கம் குனிந்து உட்காராமல், முதுகை நேராக நிமிர்த்தி வைத்து உட்கார கற்றுக் கொள்ளுங்கள். ஆபீஸில் வேலை பார்ப்ப வர்கள், நாற்காலியில் சுமார் பத்து மணி நேரமாவது உட்கார வேண் டி வரும்.

இவர்கள் எல்லோருமே, குனியாமல், கூன் போ டாமல் நிமிர்ந்து உட்கா ர பழகுங்கள். உட்கார்ந் து கொண்டே போன் பேசுவதைத் தவிர்த்து, நின்றுகொண்டு அல்ல து நடந்து கொண்டு பே சுங்கள். முடிந்த வரை நின்று கொண்டு செய்கிற வேலைகளை, உட்கார்ந்து கொண்டு செய் யாதீர்கள். இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.

அதிக எடையுள்ள பொருளைத் தூக்காதீர்கள். தூக்க முயற்சி செய் யாதீர்கள். எவ்வளவு எடை நீங்கள் தூக்குகிறீர்கள் என்பது முக்கிய மல்ல. அதை எப்படித் தூக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இடுப்பு வலி வராமல் இருக்க, மேற்கண்ட விஷயங்களை கையாண்டு பாரு ங்கள். இடுப்பு வலியிலிருந்து தப்பிக்கலாம்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!


 பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்
 
பச்சைப்
 பூண்டின் வாசனை பற்றிய மேற்கூறிய  நபி மொழியும் அதனோடு ஒத்துப்போகும் மற்றும் அதனை மெய்ப்பிக்கும் அறிவியல் விளக்கம் பற்றியதே இப்பதிவு.

முதலில், எப்படி ஒரு பொருளின் வாசனையை நுகர்கிறோம் என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்:
 

பொருட்கள் வைக்கப்படும்போது அவற்றிலிருந்து சில இரசாயனக் கூறுகள் (odorent) வளியில் பரவுகிறது. அவை எமது மூக்கின் உட்பகுதியை போர்த்திக் கொண்டிருக்கும் மென்சவ்வினை அடைகிறது. அங்கேதான்நுகர்வு வாங்கி
 எனப்படும் கலங்கள் உள்ளன. இரசாயன கூறுகள் இந்த நுகர்வு வாங்கிகளைத் தூண்டிவிடுகிறது. எனவே அங்கிருந்து நரம்பு கணத்தாக்கத்தின் மூலம் மூளையில் உள்ள ஒல்பெக்டரி கோர்டெக்ஸ் (olfactory cortex) எனும் பகுதிக்கு தகவல் அனுப்பப்படுவதால் மூளையால் அந்த வாசனையை நுகரக் கூடியதாக உள்ளது.
             
பொதுவாக எல்லாப் பொருட்களிற்கும் வாசனை உண்டு. என்றாலும் எம்மால் எல்லா வாசனையையும் நுகரமுடிவதில்லையே!??
இது ஏனெனில்,

ஒவ்வொரு பொருளில் இருந்தும் இரசாயனக்கூறு வெவ்வேறு அளவில் வெளிவிடப்படும். அதனால்தான் அவை வளிமண்டலத்தில் வெவ்வேறு செறிவுகளில் காணப்படுகிறது. ஆனால் அது குறித்த
 அடிப்படை செறிவைவிட அதிகமாக உள்ளபோது மட்டும்தான் அதை விலங்குகளால் நுகர முடிகிறது. அடிப்படை செறிவைவிட குறையும்போது நரம்புக் கணத்தாக்கம் இல்லாமல் போவதால் மூளைக்கு செய்தி அனுப்பப்படுவதில்லை.

வாசனையை அறிவதற்கு தேவையான
 ஆகக் குறைந்த செறிவு மட்டம்’(Threshold for olfaction) வெவ்வேறு விலங்கினங்களிற்கிடையிலும், அதேபோல வெவ்வேறு பொருட்களிற்கும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு, 
 
நாய்களிற்கு மனிதர்களைவிட நுகர்வு திறன்
 2.5 log மடங்கு அதிகம். அதனாலேதான் மனிதனால் அடையாளம் காணமுடியாத மிகக் குறைந்த செறிவில் உள்ள வாசனைகளைக்கூட நாயால் அடையாளம் காணமுடிகிறது.
அதேபோல ஒரு குறித்த விலங்கினத்தை எடுத்தோமென்றால் வாசனையை அடையாளம் காணத்
 தேவையான threshold  ஒவ்வொரு பொருட்களிற்கும் வேறுபடுகிறது. உதாரணமாக மனிதன் peppermint ஐ நுகர்வதற்கு அது வளி மண்டலத்தில் (குறைந்தது) 1 லீற்றரிற்கு 0.02mg என்ற அளவில் காணப்பட வேண்டும். அதேவேளை chloroform வாசனையை நுகரவேண்டுமெனில் அது ஆகக் குறைந்தது 1 லீற்றர் வளியில் 3.3mg அளவிற்கேனும் இருக்கவேண்டும்.
அதுபோலவே பொருட்களிற்கு அருகில் உள்ளபோது வாசனை அதிகமாகவும் தூரம் செல்ல செல்ல அது குறைந்து இல்லாமல் போவதையும் பார்க்கிறோம். இதற்கு கூட செறிவு வித்தியாசம்தான் காரணம். பரவும் இரசாயனக்கூறு பொருட்களிற்கு அருகில் அதிக செறிவிலும் அப்பால் பரவிச் செல்லும்போது செறிவு குறைந்துக்
 கொண்டே வந்து THRESHOLD விட குறையும் இடத்தில் வாசனை அற்றுப் போகும்.
பூண்டு பற்றி அறிவியல்:
‘Ganong Review Of Medical Physoilogy’ என்பது prof. Ganong ஆல் எழுதப்பட்ட, மருத்துவப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, மருத்துவம் சார்ந்த கற்கைகளிற்காக உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகம். இந்நூலில் prof.Ganong குறிப்பிட்டுள்ள ஒரு வசனத்தை அறிய நேர்ந்தபோது என்னால் ஆச்சர்யம் தாங்கவே முடியவில்லை. எனவே இதை எல்லோரிடமும் பகிரவேண்டும் என்ற ஆவல் என்னை தூண்டிவிட்டது.
Some olfactory thresholds:
Substance
mg/L of air
Ethyl ether
Chloroform
Pyridine
Oil of peppermint
Lodoform
Butyric acid
Propyl mercaptan
Artificial musk
Methyl mercaptan
5.83
3.30
0.03
0.02
0.02
 
0.009
0.006
0.00004
0.0000004
The olfactory thresholds for substances shown in table 14-1 illustrate the remarkable sensitivity of the odorant receptors. For example, methyl mercaptan, one of the substances in garlic, can be smelled at a concentration of less than 500 pg/L of air”

(“அட்டவணையில் காட்டப் பட்டுள்ள, பொருட்களை நுகர்தலிற்கான Threshold ஆனது (மூக்கிலுள்ள) நுகர்வு வாங்கிகளின் குறிப்பிடத்தக்க உணர்திறனை விவரிக்கிறது. உதாரணமாக
 பூண்டிலுள்ள மீதைல் மேர்கப்டன் எனும் கூறானது 500pg/L செறிவில் உள்ளபோதே நுகர முடிகிறது”)

ஒரு லீற்றர் வளியில் 500 pg (5*10-6
 mg) ??????????
கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத மிக நுண்ணிய அளவு……
மீதைல் மேர்கப்டன் வியக்கத்தக்க அளவில் குறைந்த Threshold எல்லையை கொண்டிருந்தமையால் prof.Ganong ன் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, தன் நூலில் விஷேடமாக அவரை குறிப்பிடத் தூண்டிய அதே பூண்டுஎனும் வார்த்தை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்!

சரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு... பார்ப்போம்!
பூண்டு பற்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் :
 “'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: புகாரி (855)
அநேக துர்மணம் கொண்ட உணவுகளின் வாசனை எம்மை உடனடியாக சூழவுள்ள ஓரிருவரால்தான் உணரக்கூடியதாக இருக்கும். ஆனால் 500 pg/L செறிவென்பது ஏறத்தாள வெள்ளைப் பூண்டு உண்டவர் உள்ள மண்டபம் முழுதும் நுகரப்பட்டு ஒரு வித சங்கடத்தை உருவாக்கிவிடும்.

ஆண்கள் பள்ளியிலே தொழவேண்டும் என்ற கட்டளையின் முக்கியத்துவம் காரணமாக
 பச்சைப் பூண்டு, பச்சை வெங்காயம் உண்டவர்கள் கட்டாயம் பல் துலக்கியே ஆக வேண்டியுள்ளது. இல்லையெனில் வீட்டை விட்டு வெளியிறங்கியது முதல், பாதையில் கடந்து செல்பவர்கள் உள்பட பள்ளிவாயிலில் உள்ள அனைவரிற்கும் தொந்தரவை ஏற்படுத்தியவராக கணிக்கப்படுவார். சின்ன விடயங்களில் கூட இஸ்லாம் தனி மனித உரிமை மீறலை எவ்வளவு அழகாக கண்டிக்கிறதென்பதை பாருங்கள்….அல்லாஹு அக்பர்!
அதே வேளை தொழுகை தூய்மையான நிலையில் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். எனவே பச்சையாக
 பூண்டு, வெங்காயம் உண்டால், உண்ட பின் பல் துலக்குவது ஒரு சுத்தமான நிலை என்று இஸ்லாம் கற்று தருகிறது.

சில மாற்று மத நண்பர்கள்
 உங்களிற்கு நற்பண்புகளை பெற்றோர் கற்றுத்தரவில்லையா? இஸ்லாம் தான் கற்றுத்தந்ததா? என்று அடிக்கடி கேட்பதை நாம் காண முடிகிறது. அவர்களில் எத்தனை பெற்றோர் இவ்வாறு பல் துலக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அரிதாகதான் இருக்கும். ஆனால் எங்களிற்கும், எம் பெற்றோரிற்கும் நற்பண்புகளை போதித்தது இஸ்லாம்தான்! அதற்காக பச்சைப்  பூண்டு சாப்பிட வேண்டாம் என்று இஸ்லாம் தடை செய்யவில்லை. பச்சைப்பூண்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் வாசனையை போக்க முடியும் என நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள். 
முஆவியா இப்னு குர்ரத்(ரலி) அவர்கள் த‌னது தந்தையிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார்கள்:
இரண்டு செடிகளைச் சாப்பிடுவதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். மேலும் எவர் அவற்றை சாப்பிடுகிறாரோ அவர் தொழுமிடத்துக்கு (மஸ்ஜிதுக்கு) நெருங்கவேண்டாம் என்றும், அதனை சாப்பிடுவது யாருக்கு அவசியமாகிறதோ அவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கிவிடுமாறும் கூறினார்கள். அந்த இரண்டு செடிகள் வெங்காயமும், பூண்டுமாகும்.  ஆதாரம்: அபூதாவூத் (3331)
அறிவியலின் படி சமைப்பதன் மூலம் வாசனைக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
இவற்றிலுள்ள மீதைல் மேர்கப்டனில் அதிக எண்ணிக்கையில் டைசல்பைட்டு பிணைப்புகள் உள்ளமையினால் வெப்பத்திற்கு இலகுவில் ஆவியாகிவிடும் பண்பை கொண்டுள்ளது. எனவேதான் சமைக்கப்பட்ட வெள்ளைப்பூண்டில் இக்கூறுகள் அதிகளவில் ஆவியாகிவிட பெருமளவான துர்வாடை அற்றுப் போய்விடுகிறது. ஆக  சமைக்கப்பட்ட பூண்டு எனில் சாப்பிட எத்தடையும் இல்லை! 

மேலும் வெங்காயம், பூண்டு என்பன பல மருத்துவக் குணங்கள் நிறைந்த, அவசியம் உண்ணவேண்டிய உணவுகள் என்பதாலோ தொந்தரவு கொடுப்பதாகினும் தடை செய்யப்படாமல்
 வாசனை போக்கிக்கொள்ள வழிமுறையை சொல்லப்பட்டது!!! :-)

எனவே,
 பூண்டு சமைத்து  உண்ணுங்கள். பச்சையாக உண்டால்  பல் துலக்க மட்டும் மறந்துவிடாதீர்கள் please…………………

இவ்விடயத்தை என்கவனத்திற்கு கொண்டு வந்த Dr.Mathani Sir (Katankudy,Srilanka) அவர்களிற்கு ஜஸாக்கல்லாஹு கைர்!

வஸ்ஸலாம்.
உங்களில் ஒரு சகோதரி,
அஷ்பா.

வெள்ளி, 23 நவம்பர், 2012

மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது


هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن 

அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
 

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!
இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.
 

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.
 

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.
 

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.
 

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
 

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!
 

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!
 

அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).
 

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.
 

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.
 

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது
 

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا 

மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)
 

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
 

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ 

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).
 

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.
 

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.
 


திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.
 

பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.
 

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.
 

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
 

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.
 

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?
 

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.
 

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
 

உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.
 

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
 

விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.
 

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
 
சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல்
 அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்: 

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ 

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
 
இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:
 

இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.
 

தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.
 

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு

ஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..?

ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...! ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...! ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...! ....... இதெல்லாம்... எப...