லேபிள்கள்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

உங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா?

 

இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால், அவர்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அதற்கான சில சிம்பிள் வழிகளை இங்கே சொல்லித்தருகிறார், கல்வியாளர் ஜெயா சாஸ்திரி.
1. நடிகை ஜோதிகா, ஒரு வசனத்தைப் பேசும்போது, அவரின் வாயுடன் சேர்ந்து கண்கள், கைகள் எல்லாமே பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதேமாதிரி, ஒரு புதுத் தகவலை உங்கள் பிள்ளையிடம் சொல்லும்போது, அதை வார்த்தைகள் மட்டுமின்றி, உடல் மொழியாலும் நன்கு வெளிப்படுத்துங்கள். இது டிராமா மாதிரி இருந்தாலும், நீங்கள் சொல்கிற தகவலைப் பிள்ளைகள் சுலபமாகப் பிடித்துக்கொள்வார்கள்.

2. குழந்தையை உங்கள் மடியில் உட்காரவைத்து, அவர்கள் மடியில் கதைப் புத்தகத்தை வைத்து, வரிவரியாகப் படித்து, கதையைச் சொல்லுங்கள். கான்செப்ட் புத்தகங்களையும் அறிமுகப்படுத்துங்கள். அதாவது, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றின் கான்செப்ட் புத்தகங்களை முதலில் அறிமுகப்படுத்துங்கள். பிறகு இந்தியாவில் உள்ள நாடுகளின் பெயர்கள், மொழிகள், தலைநகரங்கள் என ஆரம்பியுங்கள். ஐ.க்யூ. நன்கு வளரும்.
3. 'டாக்கிங் டாம்' விளையாட்டில், கார்டு விளையாட்டு ஒன்று வரும். அதில் நிறைய கார்டுகள் வரும். அவற்றில் இரண்டு கார்டுகளில் ஒரே படம் வரும். சில நொடிகளில் மாறிவிடும் அந்த கார்டுகளில் எந்த இரண்டு கார்டுகளில் ஒரே படம் வருகிறது என்று கண்டுபிடிக்கும் விளையாட்டு அது. அதுபோல, பத்து, பதினைந்து படங்களை குழந்தையிடம் காட்டிவிட்டு, மறைத்துவிடுங்கள். பிறகு, அந்தப் படங்களை வரிசையாகவோ, வரிசை மாறியோ சொல்லச் சொல்லுங்கள். ஐ.க்யூ. வளர்ச்சிக்கு இதுபோன்ற ஞாபகசக்தி வெகு அவசியம்.
4. 'உன்னிடம் பத்து சாக்லெட் இருக்கிறது. அதில் ஐந்தை தம்பி பாப்பாவுக்குக் கொடுத்துவிட்டால், மீதம் எவ்வளவு இருக்கும்?' என்பது போன்ற சின்னச் சின்ன கணக்குகளைப் பிள்ளைகளிடம் தினமும் கேளுங்கள். கணிதத்தில் ஸ்டிராங்காக இருக்கும் குழந்தைகள், ஐ.க்யூ.விலும் அசத்துவார்கள். கணிதம் என்றாலே அல்ஜீப்ரா ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு, பிள்ளைகளுக்கும் அலர்ஜியை ஏற்படுத்திவிடாதீர்கள்.

5. பில்டிங் பிளாக்ஸில் விதவிதமாக வீடுகள் கட்டுவது, டோரா புஜ்ஜி, மோட்டு பட்லு போன்ற ஜிக்ஸாக் புதிர்களைக் கொடுத்து பயிற்றுவியுங்கள். பிரித்துச் சேர்ப்பதை அவர்களே தனியாகச் செய்யும் அளவுக்குப் பழக்குங்கள். ஐ.க்யூ. செம ஷார்ப்பாகும்.

6. பிள்ளைகள் உங்களிடம் ஏதாவது பிரச்னையைச் சொல்ல வந்தால், காது கொடுத்துக் கேளுங்கள். ஆனால், உடனடியாக தீர்வைச் சொல்லிவிடாதீர்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேளுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வை தானே கண்டுபிடிக்கும் குழந்தைகள், ஐ.க்யூ.வில் ஸ்டிராங்காக வளர்வார்கள்.
7. பிள்ளைகள் நன்றாக ஓடியாடி விளையாடுவதும் ஐ.க்யூ வளர்வதற்கான வழி. எப்படி என்கிறீர்களா? நன்றாக விளையாடும் பிள்ளைகளுக்கு கால் நரம்புகளில் ஆரம்பித்து மூளை வரை ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கும். இது ஐ.க்யூவை வளர்க்கும் அவ்வளவுதான்.

8. பரமபதம், தாயக்கட்டை மாதிரி குழந்தைகளுக்கும் சில போர்டு கேம்கள் இருக்கின்றன. இவை, பிள்ளைகளின் லாஜிக்கலைத் தூண்டுவதோடு, குழுவாகச் சேர்ந்து விளையாடும் மனப்பான்மையையும் வளர்க்கும்.

9. உங்கள் தெருவில் உள்ள பிள்ளைகள், அப்பார்ட்மென்ட் பிள்ளைகள், சொந்தக்காரப் பிள்ளைகள் என எல்லோருடனும் விளையாட அனுமதியுங்கள். தன் வயது பிள்ளைகளுடன் உறவாடுவது அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும். சமூகத்துடன் ஒட்டி உறவாடும் பிள்ளைகள், ஐ.க்யூ.வில் சிறந்து விளங்குவதாகச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.
10. நம் சிறு வயதில், ஒரு படத்தின் பெயரை யாராவது ஒருத்தர் நடித்துக்காட்ட, அதை மற்றவர்கள் கண்டுபிடிப்பார்கள் இல்லையா? இந்த ஊகித்தல், யோசித்தல், கண்டுபிடித்தல் போன்ற விஷயங்களும் பிள்ளைகளின் அறிவுத்திறனை வளர்க்கும்.

11. பெயின்டிங், டிராயிங், இசை கேட்பது போன்ற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால், அதற்கான கோச்சிங் சென்டருக்கு அனுப்புங்கள். இந்த ரசனைகள் எல்லாமே ஐ.க்யூ.வை வளர்க்கும் அற்புத விஷயங்களே.--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஆண் பெண் வேறுபட்ட சிந்தனைக்கு இது தான் உண்மையான காரணமா?*

ஆண்களும் - பெண்களும் உடலளவில் வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர். மேலும் , மனம் , மூளை ...

Popular Posts