லேபிள்கள்

COMPUTER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COMPUTER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி மற்றும் தலை சுற்றல் வருவது ஏன்?

அலுவகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து பணியாற்றுவது கழுத்து வலியை உண்டாக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருபக்க கழுத்து வலியால் அவதியுற்று வருவோர் சிலருக்கு வலது அல்லது இடது புறம் தலையைத் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

இது எதனால் ஏற்படுகிறது எனத் தெரிந்துகொள்வோம்.எதனால் ஏற்படுகிறது?இதயத்தில் இருந்து கழுத்து வழியாக மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும். தொடர்ந்து கணினி திரையைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் தங்களை அறியாமல் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து பல மணிநேரமாக வேலை செய்வர். இவ்வாறு செய்யும்போது மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் அழுத்தப்படும். இதனால் போதுமான அளவு ரத்தம் மூளைக்குச் செல்லாமல் ரத்தக் குழாயில் தேங்கும்.

இதனால் வலது அல்லது இடது பின்னங்கழுத்தில் உள்ள குழாய்கள் விரிவடையும். இதன்காரணமாக வலி ஏற்படும். மூளைக்கு போதுமான ரத்தம் செல்லாமல் இருந்தால் கழுத்தை வலது அல்லது இடப்புறம் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு அல்லது தலை சுற்றல் ஏற்படும்.தீர்வுஇதற்கு நரம்பியல் மருத்துவர்கள் எளிதான தீர்வைக் கூறுகின்றனர். பணிக்கு இடையே அவ்வப்போது கழுத்தை அசைத்தல், எழுந்து உட்காருதல், கை, கால்களை நீட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ரத்தக் குழாயில் ரத்தம் சீராகப் பாயும்.

இதனால் மூளை சுறுசுறுப்படையும். நாம் நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்து எழுந்தால் சோம்பல் முறிக்க உடல் ஏங்குவதை நாம் உணர்ந்து இருப்போம். இதனால் ரத்த குழாய்களுக்குள் ரத்த ஓட்டம் சீராகும். அதேபோல கழுத்துக்கு அவ்வப்போது அசைவு கொடுப்பது எதிர்காலத்தில் வெர்டிகோ உள்ளிட்ட எலும்பு நோய்கள் வருவதைத் தவிர்க்கும்.



--

சனி, 3 ஜனவரி, 2026

லேப்டாப் கீபோர்டைசுத்தம் செய்ய சில வழி முறைகள்.

லேப்டாப் சாதனங்களை பொறுத்த வரையில் அவ்வப்போது சுத்தம் செய்தால் அதன் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக மாறிவது லேப்டாப்பும், கம்ப்யூட்டரும் தான். அதுவும் இந்த கொரோனா வந்ததிற்கு பிறகு லேப்டாப் மட்டும் தான் கதி என்று இருக்கிறோம். நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த பொருட்களில் மற்ற இடங்களில் இருக்கும் கிறுமிகளை விட பல மடங்கு அதிகமாக இருக்குமாம்.

அதனால், மவுஸ், கீபோர்டு, கம்ப்யூட்டர் போன்றவற்றை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் என நோய் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைக்கிறது. அதிக விலை கொண்ட பொருள் என்பதால் சற்று கவனத்தோடு சுத்தம் செய்வது நல்லது. இப்போது, லேப்டாப், கீபோர், மவுஸ் போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்று இப்பதில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்டெப் 1: முதலில் உங்கள் லேப்டாப்பை ஷட் டவுன் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்க லேப்டாப் பேட்டரி அகற்றுவது போல இணைக்கப்பட்டிருந்தால், பேட்டரியை அகற்றிக் கொள்ளவும். அப்படி அகற்ற முடியாதவாறு அட்டாச்டு பேட்டரியாக இருந்தால் அகற்ற தேவையில்லை.

ஸ்டெப் 2: லேப்டாபின் கருப்பு ஸ்கிரீனின் மீது மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். துணியை சதுர வடிவில் மடித்துக் கொண்டு இடது வலமாக லேப்டாப்பின் ஒரு மூலையிலிருந்து மறுமுலை வரை துடைக்கவும்.

துணியை நன்றாக உதறிவிட்டு, மறுபடியும் மேலிருந்து கீழாகத் துடைக்கவும். இவ்வாறு திரை முழுவதும் துடைக்க வேண்டும். குறிப்பாக, ரொம்ப அழுத்தம் துடைக்கக் கூடாது. ஏனெனில் ஸ்கிரீனில் கீரல்கள் விழ வாய்ப்புள்ளது.

குறிப்பு: எக்காரணத்திற்காகவும் லேப்டாப் ஸ்கிரீனை துடைக்க நியூஸ் பேப்பர், டிஷ்யூ பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது

ஸ்டெப் 3: இப்படி துடைக்கும் போது ஸ்கிரீனில் ஏதேனும் எண்ணெய் பசை இருந்தால், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை காய்ச்சி, (ரொம்ப சூடாக இருக்க கூடாது) அதில் மைக்ரோஃபைபர் துணியை நனைத்து, நன்றாக பிழிந்து அதை முன்பு கூறியது போலவே இடது-வலது, மேல்-கீழ் என்ற திசையில் துடைக்கவும்.

குறிப்பு: இப்படி செய்வதற்கு முன்பு உங்களுடைய லேப்டாப் அணைந்திருக்கிறதா அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4: கீபோர்டை சுத்தம் செய்ய, கடைகளில் விற்கும் அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

குறிப்பு: லேப்டாப்பை வாரத்திற்கு மூன்று முறையாச்சும் சுத்தம் செய்வது நல்லது. அதேபோல், எந்த கெமிக்கலையும் நேரடியாக தெளிக்க கூடாது. துணியில் தொட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

எத்தில் ஆல்கஹால், அசிட்டோன், அமோனியா, எத்தில் அமிலம், மெத்தில் குளோரைடு, மெத்தில் ஆல்கஹால், டோலுயீன் போன்ற கெமிக்கல் உள்ள கிளீனர்களை பயன்படுத்த வேண்டாம்.



--

வியாழன், 23 ஜனவரி, 2025

லேப்டாப் டிஸ்ப்ளே, கீபோர்ட் சுத்தம் செய்வது எப்படி?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் மிக அதிக நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பொருள்களில் ஒன்று, மடிக்கணினி மற்றும் கணினி.

ஆனால், சீரான இடைவெளியில் இவற்றை சுத்தம் செய்வதைப் பலரும் பின்பற்றுவதில்லை. தூசு மட்டுமல்லாமல், கிருமிகளும் இதில் சேரலாம். அவற்றை சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள் இங்கே.

ஸ்டெப் 1:

லேப்டாப்பை/டெஸ்க்டாப்பை சுத்தம் செய்யும் முன் ஷட்டௌன் செய்யவும். கறுப்பாக இருக்கும் ஸ்க்ரீனில் தூசுகள் நன்றாகத் தெரியும் என்பதால் துடைப்பது எளிதாக இருக்கும்.

ஸ்டெப் 2:

மைக்ரோ ஃபைபர் (Micro fibre) துணியைக் கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும். மைக்ரோஃபைபர் துணியை சதுர வடிவில் மடித்துக்கொள்ளவும். இடது வலமாக, திரையின் ஒரு மூலையில் தொடங்கி மறுமுனை வரை துடைக்கவும். துணியை நன்றாக உதறிவிட்டு, மறுபடியும் மேலிருந்து கீழாகத் துடைக்கவும். இப்படி திரை முழுக்கத் துடைக்கவும். அதிகமான அழுத்தம் கொடுத்துத் துடைக்க வேண்டாம், திரையில் ஸ்க்ராட்ச் விழ வாய்ப்புள்ளது. எந்தக் காரணம் கொண்டும் டிஷ்யூ பேப்பர், செய்தித்தாள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

ஸ்டெப் 3:

திரையில் ஏதேனும் நீங்காத அழுக்கு, கறை இருந்தால் சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைபர் துணி மட்டும் போதாது. அதற்கு ஈரப்பதமான துணி தேவைப்படும் என்பதால், நன்றாகக் காய்ச்சி வடிகட்டிய நீரில், மைக்ரோ ஃபைபர் துணியை நனைத்து, பிழிந்து, அதைக்கொண்டு திரையை மேல் - கீழ், இடம் - வலமாகத் துடைக்கவும். இதை செய்வதற்கு முன், கண்டிப்பாக லேப்டாப்/டெஸ்க்டாப்பின் மின் இணைப்பை அணைத்து விட வேண்டும்.

ஸ்டெப் 4:

ஒருவேளை, எண்ணெய்ப் பசை போன்ற கறைகள் நீர் தொட்டுத் துடைத்தும் நீங்கவில்லை என்றால், ஒரு கப் காய்ச்சி வடிகட்டிய நீருடன், ஒரு கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகரை கலந்து, அதை மைக்ரோ ஃபைபர் துணியில் தொட்டுத் துடைக்கவும். மேலும் நீர் கொண்டு துடைக்கும்போது கீபோர்டில் படாமல் இருக்க, அதை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு மூடி வைக்கவும்.

இந்த வெந்நீர், வினிகர் கலவை வேண்டாமென்றால், கடைகளில் லேப்டாப்/டெக்ஸ்டாப் திரையைத் துடைக்கக் கிடைக்கும் கிளீனர்களை வாங்கிப் பயன் படுத்தலாம்.

ஆனால், எதையும் நேரடியாகத் திரையில் தெளிக்கக் கூடாது. மைக்ரோ ஃபைபர் துணியில் தொட்டு, அல்லது தெளித்து, அதன் பின்தான் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அசிட்டோன், அமோனியா, எத்தில் அமிலம், எத்தில் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால், மெத்தில் குளோரைடு, டோலுயீன் போன்ற கெமிக்கல் உள்ள கிளீனர்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஸ்டெப் 5:

கீபோர்டை சுத்தம் செய்ய, அதற்கெனக் கடைகளில் விற்கும் பிரத்யேக பிரஷ் கொண்டு, ஒவ்வொரு எழுத்திற்கும் இடையே உள்ள தூசுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

லேப்டாப்/டெஸ்க்டாப்பை வாரத்துக்கு மூன்று முறை, முடிந்தால் தினமும்கூட சுத்தம் செய்யலாம்.



--

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

*நாள் முழுவதும் லேப்டாப் ஸ்கிரீன் பார்ப்பதால் பார்வைத் திறன் பாதிக்கப் படுகிறதா? உங்களுக்கான ஆயுர்வேத டிப்ஸ்.

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பணியாளர்கள் வொர்க் பிரம் ஹோம் முறையில் பணிபுரிவதாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலமாக படிப்பதாலும் நாளொன்றுக்கு அவர்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் ஃபோன் ஸ்கிரீன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ப்ளூ லைட் முன்பு பல மணி நேரம் அமர்ந்திருப்பதால், அவர்களது கண்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கண்களின் நலனை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் அவ்வபோது கண் பரிசோதனை செய்து கொள்வது ஆகியவற்றின் மூலமாக கண் நலனை பராமரிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், உங்கள் அன்றாட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் கண்களுக்கான ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்த முடியும். நெல்லிக்காய், நெய், உலர் திராட்சை, இந்து உப்பு மற்றும் திரிபலா போன்றவை உங்கள் பார்வை திறனை மேம்படுத்தும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கு விட்டமின் சி சத்தை காட்டிலும், நெல்லிக்காயில் 20 மடங்கு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்களில் கேபிளரீஸ் நலனை மேம்படுத்துவதோடு, ரெடினல் செல்ஸ் நலனை பாதுகாப்பதிலும் விட்டமின் சி சத்து மிக முக்கியமானது. குறிப்பாக, சர்க்கை நோய் பாதிப்பு காரணமாக ரெடினோபதி என்ற சிக்கலை எதிர் கொண்டிருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமைகிறது. இதேபோன்று, நெய் அல்லது தேனுடன் சேர்த்து இரவு நேரத்தில் திரிபலா பவுடர் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஐஸ்வர்யா சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இருக்கும் உப்புகளிலேயே, பாறை உப்பு வகைகள் மட்டுமே கண் நலனுக்கு நல்லது என்று அவர் குறிப்பிடுவதால், உங்கள் வீட்டில் உள்ள வெள்ளை உப்பை தவிர்த்துவிட்டு, இதை பயன்படுத்த தொடங்குவது நல்ல. கண் தசைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் உலர் திராட்சை பழங்களில் இருக்கிறது. இதேபோன்று தேனிலும் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் நிரம்பியிருக்கிறது. இந்தப் பட்டியலில் இறுதியாக நாம் பார்க்க இருப்பது நெய். இருப்பதிலேயே மிக அதிகமான பலன்களை கண்களுக்கு கொடுக்க கூடியது இது.

கூடுதல் டிப்ஸ்.

அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பதால் உங்கள் கண்களில் சூடு பிடித்துக் கொள்ளும். இதை தவிர்க்க வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலமாக கண்களை குளிர்விக்க முடியும். இது தவிர பச்சை நிற தாவரங்கள், மரங்கள் போன்றவற்றை சிறிது நேரம் ஒதுக்கி கூர்ந்து கவனிப்பதன் மூலமாக கண்களுக்கு குளுமையை ஏற்படுத்த முடியும்.



--

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

கணினி முன்பாக அமர்ந்து வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ்.

உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.

ஆனால் இதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறோமா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்துடன், உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக மாறிவரும் உணவுப்பழக்கங்கள், அதிக உடல் உழைப்பின்மை, முறையான உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த ஊடரங்கு காலக்கட்டத்தில் பலர் வீட்டில் இருந்தே கணினி முன்பாக அமர்ந்து பணிபுரிந்துவருவதாலும் உடல் எடை அதிகரிப்பை உணர்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? அதிகரித்த எடையைக்குறைக்க முடியவில்லை என்ற கவலை மட்டும் தான் உள்ளது. அதிலும் வீட்டிலிருந்து வேலைப்பார்ப்பதால், எந்த நேரமும் பணியாற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்குத் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதோடு மட்டுமின்றி உடல் பருமனைக்குறைக்க சில நடைமுறைகளையும் உங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என கூறப்படும் நிலையில் அவை என்ன என்பது நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளுதல்:

இன்றைய சூழலில் ஒருவரின் பணி நேரம் என்பது 8 மணி நேரத்திற்கு மேலாக உள்ளது. சிலருக்கு 24 மணி நேரமும் ஏதாவது ஒரு வேலையைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் யாருக்குமே இல்லை. நீங்கள் உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்றால், உங்களது உணவு உட்கொள்ளும் நேரத்தை மாற்றிக்கொள்ளவது அவசியமான ஒன்று.

குறிப்பாக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது 8 மணிக்கு பிறகு இரவு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது போல காலை நேர டிபனை 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவு தவிர்க்கக்கூடாது:

பரபரப்பாக அலுவலகம், கல்லூரிகள்,பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களில் பெரும்பாலோனார் காலை உணவை முறையாக எடுத்துக்கொள்வதில்லை. இது தவறான ஒன்று. காலை நேரத்தில் 8 மணிக்குள் ஏதாவது ஒன்றைச்சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். இதனை ஸ்கிப் செய்யும் பட்சத்தில் தேவையில் உடல் நலப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

மேலும் உடல் எடையைக்குறைக்க விரும்பும் நபர்கள், அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு சில சமயங்களில் ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் பருகலாம்.

உடற்பயிற்சி செய்தல்:

உடற்பயிற்சியா? அப்படின்னு கேட்கும் அளவிற்கு மக்களிடம் மறந்துப்போன ஒன்றாகிவிட்டது. ஆம் முறையாக ஜிம்களுக்கு சென்றவர்கள் கூட கொரோனா காலக்கட்டத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளமுடியவில்லை. எனவே ஜிம்களுக்கு தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. உடல் ஆரோக்கியத்துடனும், உடல் எடையைக்குறைப்பதற்கு குறைந்த திறன் கொண்ட உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அதாவது வாக்கிங், ஸ்கிப்பிங், தோப்புக்கரணம் போடுவது போன்ற சிறு சிறு பயிற்சிகளை தினமும் அரை மணி நேரமாவது மேற்கொண்டுவாருங்கள்.இது உங்களுக்கு நல்ல ரிசல்டைக்கொடுக்கும்.

மேலும் அதிகளவில் உணவை எடுத்துக்கொள்ளமால் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுங்கள். உணவின் அளவைக்குறைத்துக்கொள்ளும் போது உங்களுக்கு ஆரோக்கியமாகவும், உடல் புத்துணர்ச்சியோடும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதுப்போன்ற முறைகளை நீங்கள் மேற்கொண்டால் உடனே எடையைக்குறைக்க முடியாது..படிப்படியாக தான் குறைக்க முடியும். ஆனால் இதில் எவ்வித உடல் நல பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. இனி நீங்களும் கொஞ்சம் இத டிரை பண்ணிப்பாருங்க. நிச்சயம் நல்ல ரிசஸ்ட் கிடைக்கும்.



--

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

கணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க !

கணினி பயன்பாடு என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. எனினும் அதை முறையாக பயன்படுத்துவதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது. நம்மைப் போன்று தான் கணினியும். அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால், இடையில் ஏதேனும் பிரச்னை என்றாலும் மிகச் சுலபமாக அதை எதிர்கொண்டுவிடலாம்.
கணினியில் நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்கள்

1. ரீஸ்டார்ட் அவசியம்:

தொடர்ந்து பல மணி நேரங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை "ரீஸ்டார்ட்" செய்திட வேண்டும். இதனால் கம்ப்யூட்டர் "ரெப்ரஸ்" ஆகி புத்துணர்வுடன் செயல்படும்.

2. பேக்கப் - ரொம்ப முக்கியம்

பெரும்பாலானவர்கள் நம் கணினிதானே என்ற அசட்டையில் "பேக்கப்" எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும், கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை பென்டிரைவ், DVD, Memory Card, External Hard Disk போன்ற ஏதேனும் சேமிப்பகங்களில் அவ்வப்பொழுது "பேக்கப்"எடுத்து வைப்பது நல்லது. எந்த நேரத்திலும் கணினி செயல்படாமல் போகும் ஆபத்து உள்ளதால் இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

3. இடைவேளை அவசியம்

கண்கெட்ட சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை. நமக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். எனவேதான் மருத்துவர்கள் கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிவது மிக ஆபத்து என எச்சரிக்கின்றனர். தவிர்க்க முடியாமல் தொடர்ந்து பணிபுரிபவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு  முறையாவது எழுந்து சென்று உடல் பொசிசனை மாற்றுவது அவசியம்.

4. பாஸ்வேர்ட் 

ஆரம்ப நாட்களிலிருந்து பல வருடங்களாக பாஸ்வேர்ட் மாற்றாமல் பயன்படுத்துபவர்கள் இன்றும் இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பாஸ்வேர்ட் மாற்றினால் கூட கம்ப்யூட்டரை Hack செய்து கண்டுபிடித்துவிடுகின்றனர். எனவே அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது மிக நல்லது.

5. பல புரோகிராம்கள்

கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை திறந்து வைத்து வேலை செய்திடும்பொழுது கணினிக்கு வேலை பளு கூடுகிறது. இதனால் கம்ப்யூட்டர் வேகம் குறையும்.  தேவையில்லாத புரோகிராம்களை மூடிவிட்டு, தற்பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் பயன்படுத்தினால் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.

6. கணினி முன் உணவு

கட்டாயம் கணினி முன்பு அமர்ந்தவாறு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பலர் கணினியில் பணிபுரிந்துகொண்டே நொறுக்குத் தீனி, டீ, காபி என கலந்து கட்டுகிறார்கள். அது மிகப்பெரிய கெட்டப்பழக்கம். உணவு எடுக்கும்பொழுது தனி அறையில் அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் கீபோர்ட், மௌஸ் போன்ற கருவிகளின் இடுக்குகளில் குப்பைகள் சேருவதை தவிர்ப்பதோடு, உடல் நலத்தினையும் காத்திடலாம்.

7. தகவல் அழிப்பு

தேவையில்லை என நினைக்கும் கம்ப்யூட்டரை விற்பதற்கு முன்பு, அதில் உள்ள தகவல்களை அனைத்தையும் அழித்து விடுங்கள். தகவல்களை அழிப்பதால் பிறர் அதை பயன்படுத்த முடியாமல் தடுக்கப்படுகிறது.
https://www.softwareshops.net/2018/11/how-to-maintain-computer-in-tamil.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

கம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் !

கம்ப்யூட்டர் மௌசை சாதாரணமாக ஒரு புரோகிராமை திறக்க, மூட, டெக்ஸ்ட்டை செலக்ட் செய்ய, காப்பி-பேஸ்ட் செய்ய, லிங்க் ஒன்றை திறக்க என பொதுவாக சில பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது நமக்குத் தெரியும்.

ஆனால் மௌசைப் பயன்படுத்தி பலவிதமான வேலைகளை மிக சுலபமாக செய்யலாம். மறைந்திருக்கும் அந்த வசதிகள் என்னென்ன என பார்ப்போமா?

ஷிப்ட் கீ பயன்படுத்தி டெக்ஸ்ட் தேர்வு

வேர்டில் டாகுமெண்ட் பயன்படுத்துகையில், அல்லது பைல் பெயர் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், மவுஸைப் பயன்படுத்தலாம். மவுஸின் இடது பட்டனை அழுத்தி இழுத்தாலே, டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு கேரக்டரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். அது போன்ற வேளைகளில், ஷிப்ட் கீ அழுத்தி மவுஸினை முன்பு போல, இடது பட்டன் மூலம் இழுப்பது, தேர்ந்தெடுப்பதில் நமக்கு உதவியாய் இருக்கும்.

கண்ட்ரோல் கீ அழுத்தி டெக்ஸ்ட் தேர்வு

இது பொதுவாகப் பலரால் பயன்படுத்தப்படுவது இல்லை. டாகுமெண்ட் ஒன்றில், பல இடங்களில் உள்ள டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்க, இதனைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு அமைந்துள்ள டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்க இது உதவும். முதலில் தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டை, கண்ட்ரோல் கீ அழுத்தி, மவுஸின் இடது பட்டனை அழுத்தி இழுக்கவும்.

தேர்ந்தெடுக்க வேண்டிய அளவு, தேர்ந்தெடுத்த பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு, அடுத்த பகுதி டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீ அழுத்தப்பட்டிருப்பதை விட்டுவிட்டால், முதலில் தேர்ந்தெடுத்தது விடுபட்டுப் போகும். எனவே, அடுத்தடுத்து டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கும் முன், கண்ட்ரோல் கீயை அழுத்தி இழுப்பது நல்லது.

இப்படியே இடைவெளி விட்டு எத்தனை தொகுதி டெக்ஸ்ட்டை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கண்ட்ரோல் கீயைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டால், நீங்கள் முதலில் இருந்து தேர்ந்தெடுத்து ரத்தாகும். மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியதிருக்கும்.

நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் தேர்வு

தொடர்ந்தும், இடைவெளி விட்டும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பதில், மவுஸ் எப்படி உதவுகிறது எனப் பார்த்தோம். சில வேளைகளில் நெட்டுவாக்கில் உள்ள டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இதற்கு ஆல்ட் [ALT] கீயுடன் மவுஸைப் பயன்படுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் பகுதித் தொடக்கத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின்னர், ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு, நெட்டுவாக்கில் மவுஸின் கர்சரை, அதன் இடது பட்டனை அழுத்திக் கொண்டு இழுத்தால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆல்ட் கீயினை விட்டுவிடலாம்.

டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதனை வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை என்னவெல்லாம் செய்திடுவோமோ, அந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

இதனை காப்பி செய்து, வேறொரு இடத்தில் ஒட்டலாம். அல்லது அதனை அழிக்கலாம். மீண்டும் பெறலாம். நெட்டுவாக்கில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க இது மட்டுமே நமக்கு உதவுகிறது. ஆனால், இது ஆன்லைன் பக்கங்களில் செயல்படாது. வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில் மட்டுமே செயல்படும்.

திரையைப் பெரிதாக்கி சுருக்குதல்

வயதானவர்கள் மற்றும் கண் பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், எழுத்துக்களைப் பெரிதாக்கிப் பார்க்க எண்ணுபவர்களுக்கு இந்த டூல் வசதியாக இருக்கும்.

முழுத் திரையில் உள்ள டெக்ஸ்ட்டைப் பெரிதாக்கிப் பார்க்க எண்ணுபவர்கள், [CTRL] கீயை அழுத்திக் கொண்டு, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால் போதும். மேல் கீழாக உருட்டிச் செல்கையில், பக்கம் பெரிதாவதையும், சிறியதாக மாறுவதையும் பார்க்கலாம்.

விண்டோ இயக்கம்

விண்டோ ஒன்றினை பெரிது படுத்துவதற்கும், மூடுவதற்கும் மவுஸ் பயன்படுத்தலாம். விண்டோ ஒன்றினை மூட வேண்டும் என நினைத்தால், விண்டோவில் இடது மேல் மூலையில் உள்ள விண்டோஸ் லோகோவில் இரு முறை கிளிக் செய்தால் போதும்.

விண்டோவினை பெரிதாக்கவும் அல்லது மீண்டும் பழைய படி அமைக்கவும், டைட்டில் பாரில், இருமுறை கிளிக் செய்தால் போதும்.

லிங்க் தளம் திறக்க

இணைய தளங்களில், டாகுமெண்ட்களில், இணைய தளத்திற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். லிங்க் காட்டும் தளத்தினை விண்டோவில் புதிய டேப்பில் திறக்க, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, லிங்க்கில் கிளிக் செய்தால் போதும்.

இணைய தளமானது புதிய டேப்பில் திறக்கப்படும். இருப்பினும், லிங்க்கில் ரைட் கிளிக் செய்தால், அந்த தளம் திறக்கப்படுவது குறித்து நமக்கு கூடுதல் ஆப்ஷன்கள் கிடைக்கும். புதிய விண்டோ, புதிய டேப், தடம் அறியா வகை (Incognito Window/private Window) என மூன்று வகைகளில் திறக்கக் கூடிய ஆப்ஷன்கள் காட்டப்படும்.

நாம் நமக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பெறலாம். மவுஸின் ரைட் கிளிக் சரியாகச் செயல்படாத போது, இந்த செயல்பாடு நமக்கு அதிகம் உதவும்.

கூடுதல் வழிகளுடன் மெனு

மவுஸில் ரைட் கிளிக் செய்தால், காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்த மெனுவில், கூடுதலாகச் சில விருப்பத் தேர்வுகள் பெற, மவுஸ் உதவுகிறது.

காண்டெக்ஸ்ட் மெனுவிற்கென, ரைட் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயினை அழுத்திப் பிடித்தால், நமக்குக் கூடுதல் விருப்பத் தேர்வு வழிகள் அடங்கிய மெனு கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல லிங்க்குகள்

பல வேளைகளில், ஒரே நேரத்தில் பல லிங்க்குகளில் உள்ள இணைய தளங்களைத் திறக்க வேண்டியதிருக்கும். இதற்கு, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அனைத்து லிங்க்குகளிலும் கிளிக் செய்திட வேண்டும். அனைத்தும் புதிய டேப் ஒன்றில் திறக்கப்படும்.

விண்டோ தானாக ஸ்குரோல் செய்திட

இணையத்தில் உலா வருகையில், சில தளங்கள் நீளமான பட்டியலைக் கொண்டிருக்கும்; அல்லது அதிக பக்கங்களைக் கொண்டிருக்கும். இதற்காக, நாம் மவுஸை ஸ்குரோலிங் பாரில் தொடர்ந்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இது தேவையற்ற ஒன்றாகும். இதற்குப் பதிலாக auto scroll டூல் பயன்படுத்தலாம். மவுஸ் கர்சரை டெக்ஸ்ட் உள்ள இடத்தில் வைத்துவிட்டு, மவுஸில் உள்ள ஸ்குரோல் வீலை தொடர்ந்து அழுத்திப் பிடிக்கவும். மேலாகவும், கீழாகவும் அம்புக்குறி அடையாளத்துடன் கூடிய கர்சர் ஒன்று கிடைக்கும்.

இப்போது, ஸ்குரோல் வீலில் உள்ள விரலை எடுத்துவிட்டு, மவுஸை மேலாகவோ, கீழாகவோ நகர்த்தினால், டாகுமெண்ட் உள்ள பக்கம் மேலாகவும், கீழாகவும் செல்லும். மேலாகச் செல்கையில், மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறி காட்டப்படும்.

கீழாகச் செல்கையில், கீழ் நோக்கி இருக்கும் அம்புக் குறி காட்டப்படும். மேல், கீழ் செல்வதனை நிறுத்த, மவுஸின் இடது பட்டனை அழுத்தினால் போதும். தானாக ஸ்குரோல் செய்யப்படுவது நிறுத்தப்படும்.
https://www.softwareshops.net/2018/12/blog-post.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

உயில் எழுதுவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குடும்பத்திற்கு உணவளித்து வந்த முக்கிய நபர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டை சொத்து சம்பந்தமானதா...

Popular Posts