லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2022

ஒற்றை தலைவலி குணமாக சில எளிய வழிமுறைகள் !!

ஒற்றைத் தலைவலி சிலருக்கு பரம்பரையாகவே தோன்றும். வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும்  பாதிப்புகளினால் அதிகமாக ஒற்றைத்தலைவலி தோன்றும்.

ஒற்றைத் தலைவலி பரம்பரையாகவும், பணி சூழல், உணவு முறைகளாலும் ஏற்படக்கூடியது. ஆண்களை விட பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்ஒற்றைத் தலைவலியில் கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, பக்கவாத ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என வகைகள் உண்டு.

ஒற்றை தலைவலி வந்தவுடன் சிலருக்கு வாந்தி உண்டாகும். படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும். மூக்கிலிருந்து நீர் கசியும். அதிக மன அழுத்தத்துடன்  காணப்படுவார்கள். லேசான தலைவலியுடன் ஆரம்பித்து தீவிர தலைவலியாக தொடர்ந்து நீடிக்கும் சிலருக்கு 72 மணி நேரம் கூட தொடர்ந்து நீடிக்கும்.

நல்லெண்ணெய் 100 மிலியுடன் 5 மிலி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர  ஒற்றைத்தலைவலி குணமாகும்.

நல்லெண்ணெய் கால் லிட்டரில் கருஞ்சீரகப்பொடி 50 கிராம், நெய் 10 கிராம், எலுமிச்சை சாறு 10 மிலி, வெற்றிலைச்சாறு 10 மிலி கலந்து நன்றாக காய்ச்சி வடித்து  வைத்துக்கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலைவலி குணமாகும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-simple-steps-to-cure-migraine-120122100051_1.html


--

வியாழன், 26 மே, 2022

தொடர்ந்து நடைப்பயிற்சி செல்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?

இன்றைய சூழலில் நம் உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் டெக்னாலஜி என்ற பெயரில் பல்வேறு உபகரணங்களையும், மின்சாதன இயந்திரங்களையும் பயன்படுத்தி உடலுக்கு அசைவும், பயிற்சியும் அளிக்காமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரே வழி தினமும் ஒரு மணிநேரம், வேண்டாம் ஒரு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்வது தான். ஒரு  நாளைக்கு முடிந்த அளவு அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும்கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

அதிகாலையில் செய்யும் நடைப்பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனனும் வேலை செய்ய முடியும். முடிந்தவரை  மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து  வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நன்மைகள்:

 ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்கள் வாக்கிங் செல்வது அவர்களின் இதயத்திற்கும், மனதிற்கும் மிகச் சிறந்தது. நடை பயிற்சி மேற்கொள்வதால் இதயம் பலமடைகிறது. மேலும் மூச்சு குழாய் சீராக செயல்படுகிறது.

 செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறைந்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து செரிமானம் சீராகும்.

 நடைப்பயிற்சி செல்வதால் நரம்புகளுக்கும், சதைகளுக்கு நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம்குறைகிறது.

 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை என்பது நோயல்ல. இது ஒரு வகையான ஆரோக்கிய குறைபாடு. இக்குறைபாட்டை நாம் தினமும் நடை பயிற்சி மேற்கொண்டே சரிசெய்து விடலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-regular-walking-120122100054_1.html


--

திங்கள், 23 மே, 2022

தேங்காய் பால் மட்டுமே போதும் உடலை சுத்தமாக்க...!!

ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது

தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.  

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது

செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது

மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்

தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்

தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது

https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/benefits-of-drinking-coconut-milk-120122500024_1.html


--

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts