லேபிள்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

மண்பாத்திரத்தில் சமைத்துசாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்....!!


மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும்  மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. 
மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால்  உணவில் உள்ள  சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.
மண்பாத்திரத்துல சமைப்பதால் உணவு விரைவில் கெட்டுப் போகாது. குறிப்பாக மண்பானையில் செய்கின்ற மீன் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு வாரம்கூட  கெட்டுப்போகாமல் இருக்கும். மத்த பாத்திரங்களில் வைக்கின்ற உணவுப் பொருள்கள், வெயியில் நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானையோட தன்மையால் அது நீர்த்துப் போகாது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது, மண்பானை  தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.  
மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.  இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும்.  இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். 
மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.  மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பொடுகு தொல்லையை போக்க இதைசெய்தாலே போதும்...!!


தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை  இருக்காது.
பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளித்து வரலாம். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
மருதாணி இலையை அரைத்து, அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து இந்த கலவையை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து பின்பு குளித்தால் பொடுகு  மறையும்,
தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப எண்ணெய்யும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு  குறையும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

வறட்டு இருமலை போக்கும் இயற்கைமருத்துவ குறிப்புகள்...!!


வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.
எலுமிச்சை: எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது, சளி தொல்லை இருக்கும்போது உடலுக்கு வைட்டமின் சி மிகவும் அத்தியாவசியம்.
தூதுவளை: சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை இலைகளை காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம். ஒரு ஸ்பூன் தூதுவளை  பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
புதினா: வறட்டு இருமலுக்கு நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
திப்பிலி: திப்பிலியை பொடியாக்கி அதில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், சளி, வரட்டு இருமல் மற்றும் தொண்டை கமறல் குணமாகும்.
மிளகு, மஞ்சள் பால்: இளஞ்சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக போய்விடும்.  வறட்டு இருமலும் குறையும். இது இருமலுக்கு கைகொடுக்கும் வைத்தியம்.
சீரகம்: 10 கிராம் பொடி செய்த சீரகத்துடன் பொடி செய்த பனங்கற்கண்டை சேர்த்து இரண்டும் சம அளவில் கலந்து காலை, மாலை என இருவேளை சூடான நீரில்  கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

வைரஸ்களுக்கு எதிராகசெயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்...!!


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை  வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும். 
வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து  கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மஞ்சள் இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுகள், குடற்  பூச்சிகள் போன்றவை அழிகின்றன.
2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி  அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
சுவாசகோளாறை சரிசெய்வதில் துளசி முக்கிய பங்காற்றுகிறது. எனவே, துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 அன்னாசி பூ ரத்தத்தில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை உள்ளது. எனவே, இந்த பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு  குடித்துவருவது நல்லது.
 எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் இஞ்சி சிறிது சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இஞ்சியில் உள்ள வேதிப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க உதவுகிறது. இந்த சாறை உணவிற்கு பின் எடுக்க வேண்டும்.
 ஒமேகா 3 அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வால்ட் நட் மற்றும் மீன்களில் மற்றும் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் காணப்படுகிறது. மீன்  சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.
 தினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள உயிர் வேதியியல் சத்துகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  உதவுகிறது.
 சர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி  மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன.
 முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளை  வலுப்படுத்த உதவுகிறது.
 பப்பாளி : பப்பாளியும் வைட்டமின் C சத்துக்கு சிறந்த பழம். இது செரிமானத்தை எளிதாகத் தூண்டி தேவையான சத்துக்களை அளிக்கவல்லது. பொட்டாசியம்,  வைட்டமின் B போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

வெறும் வயிற்றில்நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!


நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெய்யை சேர்க்க தவறாதீர்கள்.
மலச்சிக்கல்: நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
கெட்ட கொழுப்பு: நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட  கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி: உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
இரத்த அழுத்தம்: நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.  குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.
நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ்  என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
மூட்டு வலிகள்: மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
பல் பிரச்சனைகள்: நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 13 பிப்ரவரி, 2021

கபசுரக் குடிநீரைஅருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?


கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி  ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.
நாட்டு மருந்து கடைகளில்: 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9.  கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம்  செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.
கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது: குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.  பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.  மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள 15-க்கும்  மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும்  சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது. 
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

முகத்திற்கு ஆவிபிடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?


முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து  முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும்  வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால்  துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை  தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக  மாற்றுங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts