லேபிள்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2022

மோர் தானேனு ஈசியா சொல்லாதீங்க... எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா??

 

மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அறிந்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதன் பயன்கள் இதோ... 

வயிறு எரிச்சல் இருக்கும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.
 

அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதியுறுபவர்கள் இதனை அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்
 

மோர் ஜீரணத்திற்கு அதிகம் உதவுவது. அதிக ஏப்பம் ஏற்படுவதினை தடுக்கிறது
 

உணவு உண்டபின் மோர் குடிக்கும்பொழுது நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றினை உணவு குழாயில் இருந்து கழுவி எடுத்து விடுகின்றது.
 

பொட்டாசியம், வைட்டமின் 'பி' சத்து, மற்ற வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியினை  கூடுகின்றது
 

தூக்கம் நன்கு வரும். ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும்.
 

 கொழுப்பினை குறைக்கின்றது. இரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது.
 

புற்று நோயை தவிர்க்கின்றது. உடலில் நீர் வற்றாமல் இருக்கச் செய்கின்றது.
 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.

https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/health-benefits-of-buttermilk-121011600025_1.html


--

செவ்வாய், 26 ஜூலை, 2022

தினமும் உலர்ந்த அத்திப்பழத்தினை சாப்பிடுவதால் இத்தனை பயன்களா...?

 

உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி ரத்தத்தின் உற்பத்தியையும்  அதிகப்படுத்துகிறது.

அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது

தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் 5 கிராம் அளவிலான நார் சத்து நம் உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதனால் மலச்சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது. ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். இதயம் ஆரோக்கியமாகும்

புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்லகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது. ஒரு அத்திப்பழத்தில் 3% கால்சியம் உள்ளது.நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது. இதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல்  தடுக்கலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-eating-dried-figs-every-day-121011300060_1.html


--

சனி, 23 ஜூலை, 2022

தினமும்இரவில் படுக்கும்முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன்பலன்கள் !!

 

தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.

முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது.

பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.

பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-massaging-the-feet-before-going-to-bed-every-night-121012900025_1.html


--

செவ்வாய், 19 ஜூலை, 2022

உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!

 

தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.

அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை  அளிக்கும்.

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.

உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள்.

எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக  ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/ellu-urundai-to-help-increase-body-strength-121011300061_1.html


--

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts