லேபிள்கள்

புதன், 29 ஜூலை, 2020

எப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான்தொழுவது என்பதே மேல்!

  டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)     
வாழ்வியல் நெறியினை பின்பற்றி வாழ்வது எவ்வாறு என்று அணைத்து மதங்களும், இஸ்லாமிய மார்க்கமும் சில கட்டளைகளையும், விதி முறைகளையும் விதித்துள்ளன. ஆனால் எப்படி எல்லாமும் வாழெல்லாம் என்று சிலர் நினைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன.
அதே போன்று தான் அகிலத்தினைப் படைத்து, அனைத்துக் கண்டங்களையும் அதன், அதன் இடங்களிலேயே நிறுத்தி, கடலைப் படைத்து மனிதன் பயணம் செல்லும் கப்பலையும், எண்ணெய், வாயு, ஆபரண முத்து போன்றவையினயும், உணவு வகைகளையும் படைத்து, மனிதன் பூமியில் வசதியாக வாழ பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வசதியாக தொழுகையினை அல்லாஹ் கட்டாயப் படுத்தியுள்ளான்.
வீட்டில் இருந்து தொழுவதினை விட பள்ளிக்கு நடந்து வந்து ஜமாத்துடன் தொழுபவர்களுக்கு அல்லாஹ் பல நன்மையினை வழங்குவதாக இமாம் புகாரி சொல்லி உள்ளார்கள்.
தொழும்போது நெற்றி, இருக்கைகள், இரண்டு கால்கள், இரண்டு கால் மூட்டுகள் ஆகிய ஏழு உறுப்புகள் சஜ்தா செய்யும் அளவிற்கு தொழ வேண்டும் என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
மன அமைதிக்காகவும், உடல் உறுப்புகள் கட்டுபாடுடன் வைதிருப்பதிற்காகவும் சிலர் பணத்தினை செலவழித்து 'யோகா' கற்றுக் கொள்கிறார்கள். சென்னையில் சில பூங்காக்களில் யோகா பயிற்ச்சியில் முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும் கூட கலந்து கொள்கிறார்கள். ஆனால் பயிற்சி முடிந்ததும் யோகா குருக்கள், 'பாரத் மாதாகி கி ஜே' என்று சொல்லும் போதும் முஸ்லிம் சகோதரர்களும் அறியாமல் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு நமது நாடு இந்திய நாடு என்று தெரியாமலில்லையே! பின் ஏன் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழாமலில்லைதானே! அப்படி யோகா நடத்தும் பயிற்சியில் யோகா குரு ராம்தேவ் படம் பெரிதாக வைக்கப் பட்டு இருக்கும். ஆகவே உருவமில்லா இறைவனுக்கு உருவம் கொடுத்து முஸ்லிம்களையும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலை அல்லவா இது?
ஏன் அதே அமைதியினையும், உள், புற சுத்ததினையும் தொழுகை தரவில்லையா? மனதில் பல்வேறு அலை பாயும் முஸ்லிம்கள் தான் தொழுகையினைப் புறக்கணித்து வேறு பயிற்சிகளை தேடுவார்கள். ஈமானுள்ள எவரும் யோகா பக்கம் தலைக் காட்டாது தொழுகையில் அத்தனை உடல், உளப் பயிற்சியும் உள்ளது என்று ஐவேளை தொழுகையினை கட்டாயமாக கடைப் பிடிப்பார்கள்.
சிலர் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டுள்ளதினை சில எடுத்துக் காட்டுதல் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்:
1) வெள்ளி தோறும் ஜும்மா தொழுகைக்கு முந்தி அடித்துக் கொண்டு வருவதினைப் பார்க்கலாம். 'ஜும்மா தொளுகையினைப் பற்றி முஸ்லிம் 1500 யில் ரசூலல்லாஹ் கூறியிருப்பதாக சொல்லும்போது, 'மக்கள் ஜும்மா தொழுகையினை கைவிடுவதினை விலகியிருக்கட்டும், ஏனென்றால் அவர்கள் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி அலட்சிய வாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்' என்று கூறியதாக சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அப்படி முந்தி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறவர்கள், குத்பா பிரசங்கத்தினையும், குத்பாவினையும் செவி மடுத்துக் கேளாது எங்கிருந்துதான் அந்தத் தூக்கம் வருமோ, அதில் ஆழ்ந்து விடுவார்கள். அதற்கு வசதியாக தற்போது பள்ளிகளில் குளிர் சாதன வசதியும் செய்துள்ளார்கள பின் கேட்கவா வேண்டும்.
திர்மிதி 484-இல் ரசூலல்லா கூறியிருப்பதாக சொல்லப் பட்டுள்ளதாவது, 'ஜும்மா நாளில் உங்களில் எவருக்கும் உறக்கம் வந்தால், அவர் தம் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்' என்பதினை கூட அவர்கள் செய்வதில்லை.
ஆகவே தூக்கமும் கண்களை 'தழுவட்டுமே' என்ற நிலையினை மாற்றி தூக்கமும் கண்களை விட்டு ஜும்மாத் தொழுகையில் 'அகலட்டுமே' என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இடம் பிடிப்பதிற்காக பிந்தி வந்தவர்கள் இடம் இல்லாவிட்டாலும் உட்கார்ந்து இருப்பவர்கள் முதுகினை மிதித்துக் கொண்டு முன்னே செல்வது மட்டு மல்லாமல், ஜும்மா பயான் இமாம் உரத்தக் குரலில் சொல்லும்போது விட்ட தொழுகையெல்லாம் எனக்கென்ன என்று உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் வரும் அளவிற்கு தொழுது கொண்டு இருப்பார்கள்.
அது மட்டுமா! சிலர் தொழ தக்பீர் கட்டும்போது இரண்டடி அகலத்திற்கு காலை விரித்துக் கொண்டு அடுத்தவர்க்கு இடைஞ்சல் செய்யும் அளவிற்கு நின்று கொண்டிருப்பதினைக் காணலாம். ரசூலல்லா சபைக்கோ அல்லது தொழுகைக்கோ பின்னால் வந்தால் பின் சப்பில் அமருவதையும், தொழுவதையும் கடைப் பிடித்தார்கள் என்று ஹதீசுகள் சொல்கிறதே! பின் ஏன் நாம் ரசூலல்லா வழி பின்பற்றக்கூடாது? ஒரு சிலர் பய பக்தி இல்லாமல் காலை கிப்லா நோக்கி நீட்டிக் கொண்டும், சுவரிலோ, தூணிலோ சாய்ந்து கொண்டும் உட்கார்ந்து இருப்பதினை ஜும்மா தொழுகையினில் காணலாம். அப்படி நடப்பவர்கள் 'எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டவர்கள் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
2) 2011 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் ஹான்ஸ்பி நகரில் உள்ள ஜும்மா தொழும் இடத்திற்கு சென்றேன். அது சிட்டி கவுன்சில் கம்யுனிட்டி சென்டர் ஆகும். வெள்ளி அன்று வாடகைக்கு எடுத்து தொழுகை நடத்துகிறார்கள். வருகை தந்தவர் மொத்தம் முப்பது பேர் ஆகும் அதில் நான்கு பேர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு லெபனான் நாட்டுக் காரர் ஆங்கிலத்தில் பயான் செய்து கொண்டு இருந்தார். அப்போது தொழிலாளர் மூவர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து வந்தார்கள். அதில் இருவர் பேகி என்ற முழங்கால் வரை உள்ள அரை ஆடையும், ஒருவர் முழங்கால் மேல் உள்ள கால் சட்டையும் அணிந்து இருந்தார். அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒருவர் உட்கார்ந்து கொண்டே தனது கைலியினை கழட்டிக் கொடுத்துக் கட்டிக்கொள்ள கேட்டுக் கொண்டார். அப்போது அவருடைய கால்கள் முட்டிக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப் பட்டு, பேகி என்ற முட்டுக்குக் கீழ் உள்ள டவுசர் அணிந்து இருந்தார். தொழுகை முடிந்ததும் அவரை சந்தித்து நலம் விசாரித்து அவர் பெயர் ஹுசைன் என்றும் அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும்போது கால்களை இழந்ததாக சொன்னார். நான் அவருடைய ஈமானையும், ஈகைக் குணத்தினையும் பாராட்டாமல் இருக்கவில்லை. அவர் தனது கைலியினைக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபரும் முழங்காலுக்கு மேலுள்ள டவுசரை அணிந்து தொழுதிருப்பார்.
3) 5.5.2012 அன்று இளையான்குடி மேலப் பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கு ஒரு ஹாலில் முப்பது சேர்களுக்கு மேல் போடப்பட்டு அதில் பலர் உட்கார்ந்து தொழுதும், சஜ்தாவில் தரையில் நெற்றி வைப்பதிற்க்குப் பதிலாக எழுதும் மரப் பலகையில் நெற்றியினை வைத்து தொழுவதினையும் கண்டேன். தொழுகை முடித்து வெளியே வரும்போது என் பள்ளித்தோழன் கமால் கையில் ஒரு துணிப் பையினை கொண்டு வந்தான். அவனிடம் பையில் என்ன என்று கேட்டேன். அவன் சொன்னான், 'முன்பு நானும் கால் வலியால் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவேன். ஆனால் ஒரு தடவை இமாம் பயான் செய்யும் பொது நெற்றி தரையில் பட தொழுவது நல்லது என்பதால், நான் தரையில் தொழும்போது முட்டி வலிக்காமல் இருப்பதிற்காக துண்டை முட்டிக்குக் கீழ் வைத்துத் தொழுவேன் என்றான். முடியாவிட்டாலும் எனது பள்ளித் தோழனின் ஈமானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
4) சென்னை மண்ணடி செம்புதாஸ் பள்ளிக்கு ஜும்மா தொழுகச் செல்வேன். அங்கு ஒரு 22-25 வயது மதிக்கத் தகுந்த வாலிபர் சிறிது தாமதித்து தொழுக வந்தார். அவருடைய இடது கால் முட்டிக்கு மேல் 'ட' வடிவில் வளைந்து இருந்து, வலது காலில் மாடிப் படிகளில் தத்தி தத்தி ஏறி இரண்டாவது மாடிக்கு தொழுகச் செல்வதினைக் கண்டேன். அவர் நினைத்து இருந்தால் முதல் மாடியிலே ஒரு நாற்காலியினை தயார் செய்து உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் சற்று காலந்தாழ்த்தி வந்ததால் அவர் இரண்டாவது மாடிக்கு செல்வதுதான் சிறந்தது என்று நினைத்து சென்றார். அங்கு தொழுகச் செல்லும் பலரும் ஜும்மா நாள் அன்று காணலாம். அவருடைய ஈமானும், தொழுகையின் ஒழுக்கமும் எவ்வளவுச் சாலச் சிறந்தது என்று எண்ணி வியந்தேன்.
தொழுவதினை ஒரு சடங்காக கருதும் சிலர் இனிமேல் வாகனத்தில் அமர்ந்து சினிமா பார்ப்பது போல் வாகனங்களில் பள்ளிவாசல் முன்பு உட்கார்ந்து தொழுதாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. ஆகவே தொழுவது ஒரு சடங்காகக் கருதாது, அது கடமையாகக் கருதி, நம்மைப் படைத்து, பலன் பல வகை தந்து, அழகு பார்க்கும் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதிற்காக செய்யும் கடமையாக கருதி பய பக்த்தியுடன் நாமும் தொழுது, நமது சந்ததிகளையும் தொழச் செய்வது நமது கடமையல்லவா?
-posted by: AP Mohamed Ali,

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 26 ஜூலை, 2020

ஒற்றுமையைக்கொண்டுபற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்

  டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ)  
புனித குர்ஆனின் ஆலு இம்ரான் அத்தியாயத்தில், "இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;" என்று ஒற்றுமையினை வலியுறுத்தி உள்ளது.' அதனையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் முஸ்லிம்களிடையே 5.5.1970 ஆம் ஆண்டு பேசும்போது 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம், சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக, மிக அவசியம். சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ முடியாது, அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும்' என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
இந்திய அரசியல் வானின் இரு துருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஹிந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடி அவர்கள், மற்ற இருவரும் ஹிந்துத்துவா கொள்கைக்கு எதிரான பீகாரினைச் சார்ந்த லாலுப் பிரசாத் யாதவும், உத்தரப் பிரதேசத்தினைச் சார்ந்த முலாயம் சிங் யாதவும் ஆகும்.
அரசியல் வானில் இரு துருவங்களானாலும், 20.2.2015 அன்று நடந்த குடும்ப நிகழ்வில் மூன்று தலைவர்களும் சிரித்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள் அதே போன்ற நிகழ்ச்சியில் நமது சமூதாய தலைவர்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் பேசி நட்புடன் பழகியதினை நான் பார்த்ததில்லை, நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற முடிவில் இந்தக் கட்டுரையினை வரைகிறேன்.
உள்ளன்புள்ள நட்பு என்பது ஒருவருக்கொருவர் முகமன் கூறுவது, பண்புடன் நடந்து கொள்வது, அன்பு பாராட்டுவது ஆகும்.
பலவகையாகும் உறவு:
1) நண்பருடன் பழகுவது, சக ஊழியர்களுடன் பழகுவது, குடும்பத்தில் உறவு கொள்வது ஆகும்.
2) நண்பர்களுடன் உறவு கொள்வது ஏனென்றால் ஒரு செயல் நல்லதா அல்லது கேடு விளைவிப்பதா என்று எடுத்துச் சொல்ல ஒருவரின் துணை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதனால்.
3) நல்ல நட்பு வேலை பார்க்கும் இடத்தில் வெற்றிக்கு வழி வகுக்கும்.
4) பெற்றோர், உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவு குடும்பத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
சிலர் வானளாவிய ஒற்றுமையினைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுவர். ஆனால் நடைமுறையில் அவர்கள் எதனையும் கடைப் பிடிப்பதில்லை. நாமெல்லாம் ஒரு மரத்தில் உள்ள இலைகள் என்றோ, அல்லது மொழி, இனம் நிறத்தால் வேறு பட்டிருந்தாலும் மார்க்கத்தால் ஒன்று பட்டிருக்கின்றோம் என்றோ நினைப்பதில்லை. இஸ்லாம் என்ற மார்க்கம் இருப்பதால் தான் பல்வேறு இயக்கங்களை நாம் நடத்தி வருகிறோம், ஆகவே அந்த மார்க்கத்தினர் ந ல்வழி, நட்புடன், நலத்தோடு வாழக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு தலைவரின் கடமை என்று நினைத்துப் பணியாற்றுவதில்லையே, அது ஏன் என்று உங்களுக்கு கேள்வி கேட்கத் தோனுமல்லவா?
22.2.2015 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.ஆர்.எஸ். சக்கா என்ற ஊழியர் பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத், 'அனைத்து ஹிந்து அமைப்பினரையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகள் அமைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விட்டிருக்கின்றார். அந்த ஒற்றுமை உணர்வினை ஒருவரும் குறை கூறமுடியாது. அதே ஒற்றுமை அறைகூவல் ஏன் சமூதாய இயக்கங்களிடையே அதன் தலைவர்கள் வேண்டுகோள் விடக்கூடாது. குறைந்தது பொது நன்மைக்காவது இனைந்து வேண்டுகோள் வைக்கக்கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவு வைத்துக் கொண்டால் தானே அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கப் போகின்றார்கள் என்று கேள்வி கேட்க உங்களுக்கு தோனுகின்றதல்லவா?
21/22.2.2015 ஆகிய நாட்களில் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள அலமாதி என்ற ஊரில் 'இஸ்த்திமா' நடந்தது.
மார்க்க செற்பொழிவினைக் கேட்க ஆயிரக் கணக்கானோர் திரண்டதாக அங்கே சென்று வந்த நண்பர்கள் சொல்ல மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மாநாட்டின் நிறைவேற்றிய தீர்மானம் என்ன என வினவினேன். அதற்கு மார்க்க பயான்கள் நடந்தன, ஐந்து தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது, இறுதியாக துவா ஓதப்பட்டது என்றார்கள். ஏழு சதவீத தமிழ் மக்களில் ஆயிரக் கணக்கானோர் ஒரு சேரப் பார்ப்பதே அரிது. அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இன்று சிறுபான்மையினர் இந்தியாவில் எதிர் கொள்ளும் சவால்கள், உலக முஸ்லிம்களின் நிலைப்பாடு, இளைஞர்கள் சிறந்த வழியில் நடப்பதிற்கு உரிய அறிவுரைகள் ஆகியவற்றினை போதித்திருந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமல்லவா?
உதாரணமாக:
1) 1) முத்துபேட்டை தர்கா புது வருடப்பிறப்பு அன்று தாக்குதல், புது டெல்லி சர்ச், நாகர்கோவில் ஜெபக் கூடாரம் தாக்குதல் போன்ற சிறுபான்மையினர் வழிபடும் தளங்களை தாக்குதலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்ற அறிவுரை.
2) உ.பி. போன்ற மாநிலம் முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம், பெண்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாக நேர்ந்த சம்பவம் போன்று சிறுபான்மையினர் வாழும் கிராமம், நகரங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்வது.
3) முஸ்லிம்கள் தனிப்பட்ட விரோதங்கள், மொழி, இனத்தால், குடும்பத்தால் வரும் பிரிவினைகள் மறந்து ஒற்றுமையுடன் வாழ என்ன செய்யலாம்.
4) இளைஞர்கள் தீவிர வாத கொள்கைகளுக்கு தங்களை பலிகிடாவாக்கக் கூடாது என்ற போதனைகள் சொல்லலாம். சமீபத்தில் பெங்களூரு நகர முஸ்லிம் பொறியியல் எஞ்சினீயர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கப் போய் பட்ட துன்பங்கள், இங்கிலாந்து நாட்டின் முஸ்லிம் பள்ளி சிறுமிகள் மூவர் ஐ.எஸ்.தீவிர வாத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்க பள்ளிப் படிப்பு, குடும்ப பாசத்தினை விட்டு சிரியா சென்றிருப்பதும், 22.2.2015 அன்று நைஜீரியா நாட்டில் ஏழு வயது சிறுமி வெடிகுண்டாக மாறி பலரை சாகடித்திருப்பது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தாமலில்லை! அதுபோன்ற தீய போதனைகளிடமிருந்து இளைஞர்களை காப்பது எப்படி என்று அறிவுரை புகன்றிருக்கலாம்.
5) இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் பிரதிநிதிகளாக இருந்தால் தான் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆகவே பிரிந்து கிடக்கும் சமூதாய தலைவர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்று அங்கு கூடியிருந்த அமைப்பாளர்கள் சொல்லி இருந்தால் சாலச் சிறந்ததாக இருந்து இருக்கும்.
ஆகவே இனி வரும் காலங்களில்லாவது சமூதாய ஒற்றுமை, தலைவர்கள் ஒருங்கிணைப்பு, வழிபாடு தளங்கள் பாது காப்பு, முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு, இளைஞர்கள் நல் வழிப் படுத்துதல் போன்ற செயல்களில் முஸ்லிம்கள் கூடும் கூட்டங்களில் கொள்கை முடிவெடுத்தால் சிறப்பாக இருக்குமல்லவா?

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 ஜூலை, 2020

சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை!

      Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)      
நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று'. ஆகவே செல்லும் நாடுகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டால் சங்கடங்கள் தவிர்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மக்கள் பஸ், ரயில், வணிக வளாகம் ஆகியவற்றில் வரிசைப் படி நிர்ப்பதினை காணலாம். ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தான் நன்றிருந்தாலும் அடுத்தவர் முந்தி சென்று ஏறமாட்டார். வரிசையில் நிற்கும் பொது ஒட்டி, இடித்துக் கொண்டு நிற்கவும் மாட்டார்கள். ஆனால் இங்கு ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு வயதான மூதாட்டியார், பெரியவர் என்றும் பாராது இடித்து தள்ளிக் கொண்டு சென்றதினை தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது நவம்பர் மாதத்தில்.
பின்லாந்து நாட்டில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் அமைக்கப் பட்டிருக்கும். வீட்டினை சுற்றி நீர் நிலை ஓடிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை காணலாம். அவர்கள் அதிர்ந்து பேசுவதினை விரும்பமாட்டார்கள். காலணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வருவதினையோ, விருந்தாளிகள் புகை பிடிப்பதினையோ விரும்பவும் மாட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டில் மிகுந்த மரியாதையுடன் ஐயா(ஸார்), மேடம் என்று அழைப்பார்கள். விருந்தாளிகளை உபசரிக்கும் போது சம்பிரதாயத்திற்கு முத்தமிடுவார்கள்.
ஜெர்மன் நாட்டினர் சுறுசுறுப்புடன், ஒழுக்கத்துடனும், கட்டுப் பாடுகளுடனும் நடந்து கொள்வார்கள். போக்குவரத்து விதிகளை கடுமையாக அனுசரிப்பார்கள். நேரந்தவராமை அவர்களுக்கு முக்கியம். ஒரு இடத்தில் மீட்டிங் என்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுவார்கள்.
இத்தாலி நாட்டில் பிட்ஸா, பாஸ்டா, ஆண்டிபாஸ்டி போன்ற உணவு வகைகள் எந்த மூளை முடுக்குகள் உள்ள கடைகளிலும் கிடைத்தும். சாப்பிட்டவுடன் சர்வர் குபில்லுக் கொடுக்கும் பில்லுக்கு ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியே பட்டியல் போட்டு கொண்டு வரச்சொல்லலாதீர்கள், மாறாக சாப்பிட்டவர் எண்ணிக்கையினை மொத்த பில்லிலிருந்து வகுத்தால் தெரிந்து விடும் ஒவ்வொரு உணவிற்கான சார்ஜ்.
போலந்து நாட்டில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். காரில் வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கீழே இறங்க வசதியாக கார் கதவினை திறந்து விடுவார்கள், அவர்கள் கோட்டினை கழட்டுவதிற்கு உதவி செய்வார்கள். பெண்கள் ஆண்களிடம் பயமில்லாமல் பழகலாம். பெரும்பாலும் முறைகேடாக நடக்க மாட்டார்கள்.
ஸ்பெயின் நாட்டினருக்கு சப்தம் சக்கரைப் பொங்கல் போன்றது. மோட்டார் சைக்கிள், கார் சப்தமாக செல்வதும், தொலைக்காட்சிப் பெட்டிகள் அலறலும் நாம் கேட்கலாம். ஹோட்டலில் தங்குபவர்களுக்கு நடு இரவில் வேலைக் காரர்கள் குப்பைப் பெட்டியினை இழுத்துச் செல்லும் சப்தம் கேட்கலாம். அங்கு ஒருவருக்கொருவர் சப்தமாக பேசுவதை காணலாம்.
பிரேசில் நாட்டினர் மாசற்ற பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். ஒருவரை பார்க்கும்போது, அவர் குளித்து, தலைவாரி, நேர்த்தியான ஆடை உடுத்தி, வாசனை திரவியம் தடவி காணப் படுவார். அவர்கள் போன்று நீங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடற்கரை பீச்சில் குளிப்பதற்கும், சூரிய ஒளியில் பீச்சில் ரசிப்பதற்கும் விரும்புவர். ஆனால் கோவா பீச்சில் இருப்பது போல பிக்கினி மாதுகளை பார்க்க முடியாது. எல்லா நகரங்களிலும் உள்ளது போன்ற குற்ற செயல்களை காணலாம். சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியினை காண வந்த ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடியாரம், செல் போன், கைப்பை போன்றவைகளை பறித்துச் செல்லும் இளைஞர்களைக் காணலாம்.
மெக்ஸிகோவில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஸ்பேனிஷ் மொழியில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் கூட கலிபோர்னியா மாநிலத்தில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசுவதினைக் காணலாம். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய மாட்டார்கள். 'மன்னா' என்ற வார்த்தை வருவதினை காணலாம். மன்னா என்றால் நாளை என்று அர்த்தமாகும். அதாவது 'இன்று போய் நாளை வா' என்று எடுத்துக் கொள்ளலாம். பகல் சாப்பாட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்றால் நாம் தாராளமாக மாலை 2 மணியளவில் செல்லாம்.
அமரிக்காவினைப் பொறுத்த மாட்டில் நீங்கள் விட்டு விட்டுப் பேசுவதினை எதிர் பார்ப்பார்கள், ஏனென்றால் இடையிடையே அவர்களும் பேசுவதினை விரும்புவார்கள். உங்கள் உரையாடலோடு சில பழமொழிகளைச் சொன்னால் அதனை ஞாபகப் படுத்தி நண்பர்கள் கூட்டத்தில் சொல்லுவார்கள். நீங்கள் லிப்ட்டில் செல்லும் போது அவர்கள் பேசிலாலொழிய நாம் பேசக் கூடாது. அவர்கள் முகம் நோக்கிப் பார்க்கக் கூடாது. சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் அனுமதியில்லாமல் உரையாடல் செய்யவோ, தொடவோ கூடாது. காவலர்கள் உங்களை எச்சரித்தால் உடனே கைகளை மேலே தூக்க வேண்டும். இல்லையென்றால் சுடப்படுவீர் என்பதினை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
ஆஸ்திரேலியா மக்கள் நட்புடனும், திறந்த மனத்துடனும் பழகுவார்கள். ஆகவே தான் அகதிகளை வரவேற்று அவர்களுக்கென்று ஒரு தனி புகலிடம் கொடுத்து பராமரிக்கின்றார்கள். இன்று அங்கு இருக்கும் ஆசிய, அராபிய மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் அவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தான். இந்திய, இலங்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு திறந்த வெளியில் சாப்பிடுவது(பார்பிக்கு) மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட விருந்திற்கு உங்களை அழைத்து 'நீங்கள் ஒரு பிளேட்' கொண்டு வாருங்கள் என்றால் வெறும் தட்டுடன் சென்று விடாதீர்கள். நீங்களும் ஒரு உணவு வகையினை கொண்டு வரவேண்டும் என்று அர்த்தமாகும். சட்டம், நீதிக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.
சீன நாட்டிற்கு சென்றால் சீனர் உணவிற்கு என்ன கிடைக்கின்றதோ அதனை உண்பர். சீனாவில் 2015 ஆம் ஆண்டு உணவிற்காக 40 லட்சம் பூனைகளை கொண்டிருக்கின்றார்கள் என்றால் பாருங்களேன். ஆகவே விருந்தாளிகளாக செல்லும்போது அவர்கள் உணவினை நாதவிர்ப்பது நாசுக்காக தவிர்ப்பது நல்லது. அவர்கள் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பி பெறுவதுடன், உங்கள் முன்னாள் அதனைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக நீங்கள் சென்றதும் பார்ப்பார்கள்.
ஜப்பான் நாட்டு மக்கள் எதிலும் மாசற்ற சடங்குகளை எதிர்பார்ப்பார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் காலனியை வெளியே விட்டு விட்டு, வீட்டுக்குள் அணிந்து செல்லும் காலணியினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறைக்கு செல்லும்போது அதற்கான பிரத்தியோக காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மறந்தும் அதனை வீட்டுக்குள் உபயோகிக்க வேண்டாம். அவைளை வீட்டினை விட்டு வரும்போது அந்த அந்த இடத்தில் விட்டு விட்டு வரவேண்டும்.
தாய்லாந்து மக்கள் உங்கள் உணர்வுகளை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் கோபத்தினை எதிர்பார்க்க மாட்டார்கள். 
நான் மேலே கூறிய அறிவுரைகள் சிறு துளிகளே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவே.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 19 ஜூலை, 2020

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின்துணை இருக்கையிலே!

      Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)       
உலக தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு செய்தியினை மட்டும் திரும்பத் திரும்பத் வெளிச்சம் போட்டுக் காட்டின. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு மாலி தீவின் வாலிபர் செய்த ரத்தம் உறைய வைக்கும் அதிசயத்தை!
மேற்கு ஆப்ரிக்காவின் குட்டித் தீவான மாலி சமீப காலங்களில் உள் நாட்டு போரில் உழன்று கொண்டிருக்கின்றது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அதனைத் தடுக்க உலக நாடுகள் சபை அமைதி காக்கும் படையும் அங்கே நிறுத்தப் பட்டிருக்கிறது என்ற செய்தியும் அறிந்திருப்பீர்கள். மாலி தீவானது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. 1960 ம் ஆண்டு மாலி தீவு பிரான்ஸ் பிடியிலிருந்து மீண்டு விடுதலை பெற்றது. அந்த நாட்டின் 90 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள் ஆவர்.
ஆனால் உள்நாட்டுப் போரில் பல மக்கள் கள்ளத் தோனியில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அப்படி தஞ்சம் புக வந்தவர் தான் 22 வயதான  முஹம்மது கசமா என்ற இளைஞர்.
27-5-2018 அன்று பாரிஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்தவர் அனைவரும் மேல் நோக்கி கூக்குரலுடன் பார்த்துக் கொண்டு பரபரப்பாக இருந்தனர். அப்போது அந்த குடியிருப்பு பகுதியில் தனது முதுகில் ஏற்றப்பட்ட சிறிய பையுடன் ஹோட்டலில் தேநீர் அருந்த வந்திருந்த முஹம்மது அவர்கள் பார்க்கும் திசை நோக்கி தனது கண்ணை நோக்கினார்.
அங்கே நான்காவது மாடியில் வெளியில் உள்ள கண்ணாடி பால்கனி விளிம்பை பிடித்துக் கொண்டு நான்கு வயது சிறுவன் தொங்கி கொண்டு இருப்பதனை பார்த்து அதிர்ச்சியுற்று சிறிதும் யோசிக்காது தனது முதுகுப் பையனை வைத்து விட்டு மட மட என்று 38 வினாடியில் நான்காவது மாடியினை எந்த உறுதுணையுமின்றி ஏறி அந்த சிறுவனை அலாக்காக தூக்கி பால்கனி உள்ளே இழுத்து காப்பாற்றி விட்டான்.
உலகில் ஸ்பைடர் மேன் சாகசங்கள் என்று வரும் தொலைக் காட்சி செய்திகளை கண்டுள்ளோம். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகின்ற அதிசயங்கள். மாலி தீவின் மோமோது செய்தது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செய்த சாதனையாகும் என்றால் அதிசத்திலும் அதிசய சாதனை தானே. அதுவும் கள்ளத்தோணியில் தஞ்சம் புக வந்த வாலிபருக்கு உள்ள வீரமும் தீரமும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே!
அந்த சிறுவனின் தாயார் தனது தாயாரைப் பார்க்க பக்கத்து நகருக்கு கணவரின் பொறுப்பில் விட்டு விட்டு சென்றிருக்கின்றார். தந்தையோ தனது 4 வயது தனயனை வீட்டில் வைத்து விட்டு பூட்டிவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். கடையில் சாமான்கள் வாங்கி விட்டு நேரே வீட்டுக்கு வராமல் வரும் வழியில் உள்ள வீடியோ கேம்ஸ் கடையில் விளையாடிக் கொண்டிருந்ததால் சிறுவனைப் பற்றிய கவலை அவருக்கு தெரியவில்லை.
சிறுவனோ எவ்வளவு நேரம் வீட்டில் அடைபட்டு இருப்பான். ஆகவே அந்த அறியா பாலகன் வேடிக்கை பார்க்க பால்கனியியை திறந்து கொண்டு வந்தவன் அதன் வழியே அப்பாவை தேடி போய் விடலாம் என்று எத்தனித்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தொலைக் காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்து அலறிய தாய் தன் தாய் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து அன்பு மகனை அள்ளிக் கொஞ்சி அவனைப் காப்பாற்றிய மோமோதை வானளாவ பாராட்டியுள்ளார்.
அவர் மட்டுமா தொலைக் காட்சி நேரலையினைக் கண்ட லட்சோப லட்சோப பாரிஸ் நகர மக்கள் பாராட்டியுள்ளனர். இதனை அறிந்த பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன், மோமோதை தன்னுடைய மாளிகைக்கு அழைத்து நாட்டின் உயர்ந்த விருது வழங்கி, குடியுரிமையும் கொடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்சி பணியில் ஒரு வேலையும் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கே வந்த நிருபர்கள் மோமோதை சூழ்ந்து கொண்டு, நீங்கள் எப்படி இந்த அதிசயத்தினை செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர், கூக்குரல் கேட்டு தேநீர் அருந்திய நான் ஓடி வந்து பார்த்தபோது அந்த சிறுவன் தொங்கி கொண்டு இருந்தான், எனக்கு உடனே அவனை காப்பாற்ற வேண்டும் என்று எந்த உறுதுணையும் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஏறினேன், அதற்கு என் இறைவன் உறுதுணையாக இருந்தான் என்று கூறி இருப்பது எப்படி ஒரு முஸ்லிம் இறைவன் மீது அசையா நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்று ஒரு சிறந்த உதாரணமாக உங்களுக்கு தெரியவில்லையா?
சிலர் ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்கின்றார்கள், சிலர் வசதி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையென்று வருத்தப்படுகிறார்கள் அவர்களுக்கு இறை பக்தியுடன் சோம்பேறித்தனமாக இல்லாமல் எந்த வேலையும் ஆரம்பித்தால், வெற்றிமேல் வெற்றி வந்து உங்களை சேராதா சகோதர, சகோதரிகளே!
உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர்   'போக்பா'
உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்! கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் 'போக்பா' என்ற வீரரை தெரியாமல் இருக்க முடியாது.
அவர் பிரான்ஸ் நாட்டில் 15 மார்ச் 1993 ல் பிறந்த ஆப்ரிக்க இனத்தவர்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவர் உலக 21 வயதிற்குட்டபட்ட வர்களின் கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தினை பெற்றுத் தந்த சிறப்புப் பெட்டவர். அதன் மூலம் கோல்டன் பாய் விருதை 2013 னிலும், பிராவோ விருதினை 2014 லிலும் பெற்றவர்.
அவருடைய கால்கள் 'ஆக்டொபஸ்' போன்று நீளமாக இருப்பதால் எதிரிகள் கொண்டு செல்லும் பந்தினை லாவகமாக கைப்பற்றி அதனை எதிரி வீரர்கள் பறிக்காமல் தட்டி சென்று கோலில் தள்ளும் வெற்றி வீரரானதால் அவரை 'பொலபொ பால்' என்று பிரான்ஸ் மக்கள் அழைப்பார்களாம்.
அப்படி பெயரும், புகழும் பெற்ற வீரர் சமீபத்தில்(மே 2018) இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி மக்காவிற்கு உம்ரா ஆர்ப்பாட்டமில்லாமல் சென்ற புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
அவருக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட ரூ 811 கோடிகள் கொடுக்கப் படுகின்றது. இப்போது அவர் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற அணியில் விளையாடி வருகிறார். அவர் 29 3 2018 ல் ரசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான கோலினை அடித்ததும் தனது மேல் சட்டையினை கீழிலிருந்து மேலே தூக்கி காட்டினார். அதனில், என்ன எழுதியிருந்தது என்றால், தனது தந்தை பிறந்த தின வாழ்த்தும், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டும்படியும் எழுதியிருந்தது. அவருடைய தகப்பனார் தனது 80 வது வயதில் நோயால் இறைவனடி சேர்ந்ததினை நினைவூட்டுவதாகவும் அது இருந்ததாம்.
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் தான் எப்படியும் கோல் அடித்துவிடுவோம் என்றும் அதனை தந்தை நினைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எல்லாம் வல்ல அல்லாஹ் கருணையுனடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும் என்றால் சரிதானே!
AP,Mohamed Ali

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 16 ஜூலை, 2020

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!

    Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) Phd     
2019 ம் ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதம் முஸ்லிம் பெண்களின் மாதம் என்று உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. பொதுவாக முஸ்லிம் பெண்கள் மென்மையானவர்கள், புகுந்த வீட்டில் அடிமை போலவும், அடுக்களையே கதியென்று அடைந்து கிடப்பவர்கள் என்று உலகில் வேற்று மதத்தவர் அல்ல. மாறாக முஸ்லிமாக பிறந்து கற்றுக் குட்டிபோல சில கதைகள், கவிதைகள் எழுதி புகழ் வரவேண்டுமென்று இஸ்லாமிய மார்க்கத்தினையே குறைகூறும் சிலரை நம்மிடையே கண்டிருப்பீர்கள்.
அவர்கெளுக்கெல்லாம் சவுக்கடி கொடுப்பதுபோல அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜோனா பிரான்சிஸ், 'முஸ்லிம் பெண்கள் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக் கற்கள் போன்றவர்கள், ஆனால் அமெரிக்க பெண்கள் விலை மாதுகளைப் போன்றவர்கள்' என்று சொல்லி அதிர்ச்சி உண்டாக்கின்றார்.
அதற்கான காரணத்தினை அவர் சொல்லும்போது, 'நான் முஸ்லிம் பெண்கள் பால் உள்ள ஒழுக்கம், அழகு, மனக் கட்டுப் பாடு, நளினமாக செயல் படுதல் ஆகியவற்றினைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.   அமெரிக்க பெண்கள் ஹாலிவுட் படங்களில் வருகின்ற பொய் மூட்டைகளையும், மாய ஜாலங்களையும் நம்பி வாழ்கின்றனர். பாலுணர்வு என்பது இயற்கையாகவே வருகின்ற ஒன்று அதனைக் கட்டுப்படுத்துதலோ, மண வாழ்க்கைக்கு முன்பு உடலுறவு கொள்வதையோ வெறுக்கவேண்டியதில்லை என்று சினிமாவில் வரும் வசனம் போல பேசுகின்றனர். ஆனால் அவ்வாறு சொல்வது கட்டுக் கோப்பான குடும்ப-சமூக வாழ்வு அடித்தளத்தினையே தகர்க்கக் கூடிய ஒன்றாகும் என்பதினை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
அவர் முஸ்லிம் எழுத்தாளர்களைப் பார்த்து, 'நீங்கள் மேலை நாட்டினவரைப் பார்த்து உங்கள் எழுத்துக்களை பதிவு செய்யாதீர்கள், அவர்களுக்கென்று தனியான குடும்ப அமைப்புக் கிடையாது, விலைமாது போல உடை அணிவதுதான் நாகரீகம் என்று எண்ணக் கூடியவர்கள். ஆனால் அவர்களின் உண்மையான வாழ்க்கை மகிழ்ச்சி அடையக் கூடியதில்லை.
பல லட்சக் கணக்கான மேலை நாட்டவர் போதைக்கு அடிமையாகி இரவில் கூட மன உலைச்சலால் சரியாக தூங்குவது இல்லை. அவர்கள் திருமணம் என்பது அடிமையாகும், பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது உடல் அழகினை கெடுக்கும் அநாகரீயமான செயல் என்று சபிக்கின்றனர். அவர்கள் சொல்லுவதிலெல்லாம் எப்படி  ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இப்லிஸ் ஆசை வார்த்தை சொல்லி ஆப்பிள் பழத்தினை சாப்பிட வைத்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி பூமியில் ஆதம் அலைவஹி ஸல்லம் உடன் பூமிக்கு அனுப்பப் பட்டார்களோ அதேபோன்று சாத்தான் வேதம் ஓதுவது போல உங்களை உடை, நடை, பாவனை, வார்த்தை, செயல் மூலம் தீய வழிக்கு ஆளாக்கி விடுவர்.'
'அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்கள் மிகவும் அடக்கமான அங்க அடையாளங்கள் வெளியே தெரிந்து அதன் மூலம் அந்நியர் கழுகுப் பார்வையிலிருந்து மற்றும் தீய எண்ணங்களிருந்தும் உணர்வுகளை தூண்டாத அளவிற்கு உடை அணிவதிலும், போற்றக் கூடியவர்கள்.'
ஜோனா பிரான்சிஸ் முஸ்லிம் பெண்களைப் பார்த்து, 'நீங்கள் எல்லாம் வைரம் போன்று ஜொலிக்கக் கூடியவர்கள், ஆகவே மேலை நாட்டு மோகத்தில் நீங்கள் பலிக்கடாவாகி விடாதீர்கள், உங்கள் மார்க்கம் சொல்லும் கற்பொழுக்கம், பண்பு, பரிவு, நாணம் மற்றும் மடமையினை பின்பற்றுங்கள்' என்று அறிவுரை கூறுகின்றார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் முதன் முதலில் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தவர், 'நுசாமி பின்த் காப் அல்' எனற பெண் தான். அவர் ஒரு தடவை ரஸூலல்லாவிஹ்னை பார்த்து, 'ரஸூலல்லாஹ்வே ஏன் அல்லாஹ் ஆண்களைப் குறிப்பிட்டே வஹிக்கள் இறக்குகின்றான், பெண்களைப் பார்த்து வஹி வருவதில்லையே என்று கேட்டார்'.
அப்போது அல்லாஹ் ரஸூலல்லாவிற்கு அத்தியாயம் 33 வசனம் 35னை இறக்கினான்.
"நிச்சயமாக முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், அல்லாஹ் வழியில் வழிபடும் பெண்களும், அல்லாஹ்வினை தொழும் ஆண்களும், உண்மையே கூறும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும், பொறுமையான பெண்களும், பொறுமையான ஆண்களும், உள்ளச்சத்தோடு அல்லாஹ்வினை பயந்து நடக்கும் பெண்களும், உள்ளச்சத்தோடு அல்லாஹ்வினை பயந்து நடக்கும் ஆண்களும், தானம் செய்யும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், தங்கள் மர்மஸ்தானத்தினை மறைக்கும் பெண்களும், அதேபோல் உள்ள ஆண்களும், அலாஹ்வினை அதிகமாக நினைவு கூறும் பெண்களும், அதேபோல் நினைவு கூறும் ஆண்களும், அல்லாஹ்வின் மன்னிப்பையும், நற்கூலியையும் சமமாக வாரி வழங்குவான்' என்று.

அந்த வஹியினை உண்மையாக்குவது போல பெண்கள் பல துறைகளில் சிறப்பு பெற்று விளங்கினர். அவர்கள் சிலரை உங்கள் முன்பு நிறுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
1) மார்க்க அறிஞர்:
ராபியா அல் அதாவியா என்பவர் 800 வது நூற்றாண்டில் வாழ்ந்த சூபி பெண் ஞானியாவார். அவர் அங்குள்ள ஒரு சீமாட்டி வீட்டில் அடிமையாக இருந்தார். ஒரு நடு இரவு அவர் ஸஜ்தா செய்து இறைவனை வணங்கிக் கொண்டு இருக்கும் போது தற்செயலாக சீமாட்டி அதனை பார்த்து விட்டார். ராபியா ஸஜ்தா செய்த தலைக்கு மேல் ஒரு விளக்கு எந்த பிடிமானமுமில்லாமல் ஒளி விட்டு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்து பயந்த சீமாட்டி ராபியாவிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது என்று எண்ணி அவரை விடுதலை செய்தார். அதன் பிறகு அவர் ஒரு ஞானியாக வலம் வந்தார்.
ஒரு தடவை அவர் தெருவில் ஒரு கையில் வாளியில் தண்ணீரும், மற்றொரு கையில் எரியும் விளக்கினையும் ஏந்திச் சென்றார். அதனைப் பார்த்து வியந்த ஒருவர் கேட்டார், இது ஒரு வினோதமான செயலாக உள்ளதே அதற்குக் காரணம் என்ன என்று கேட்டார்.
மனிதன் நரக நெருப்பிலிருந்து தப்பித்து சுவர்க்கத்தின் சுகத்தினை அனுபவிக்கவே தொழுகின்றான், அதனைப் போக்கி அவன் இறைவனுக்கு மனிதனாக படைத்த நன்றிக்காக தொழ வைக்க வேண்டுமென்றால், ஒரு கையில் உள்ள நெருப்பினைக் கொண்டு சுவனத்தினை எரித்து விட்டு, மறு கையிலுள்ள தண்ணீர் கொண்டு நரக நெருப்பினை அணைத்து விட வேண்டுமென்றார். இன்றும் கூட பல பயான்களில் சுவர்க்கம், நரகம் என்று பயமுறுத்தும் கூற்று நடந்து கொண்டு தான் இருக்கின்றது.மாறாக இறைவன் மனிதனை புனிதனாக படைத்து பரிபாளம் செய்ததிற்கே நன்றி சொல்லவேண்டும் என்று கூறினால் அறிவு பொருத்தமாகுமல்லவா?
2) கல்விக்கு வித்திட்டவர்:
பாத்திமா அல் பஹ்ரி மொரோக்கோ நாட்டின் செல்வ சீமாட்டி. அவர் தனக்கு கிடைத்த செல்வத்தினை இறை வழியில் பல பள்ளிவாசல்களும் காட்டியதோடு, அல் காரா என்ற பெரிய பள்ளியினை கட்டி அங்கே கல்விக் கண்ணை திறக்கும் சிறந்த பல்கலைகழகத்தினை அபூர்வ புத்தகங்களைக் கொண்டு நிலைநாட்டியது மூலம் உலகிலேயே மிக பழமையான பல்கலைக் கழகமாக கின்னஸ் ரெக்கார்டில் பதியப் பட்டும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப் பட்டதாகவும் உள்ளது.
3) ஆளுமை:
டெல்லியில் பதிமூன்றாம் ஆண்டு சுல்த்தான் ரசியா ஆட்சி செய்தார். அவர் ஒரு ஆணுக்கு இணையாக காட்சி அளிக்க வேண்டுமென்று தன்னை யாரும் 'சுல்தானா ரசியா' என்று அழைக்கக் கூடாது, மாறாக சுல்தான் ரசியா என்று தான் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஒரு ஆண் அரசர் எப்படி உடை அணிந்தாரோ அதேபோன்று உடை அணிந்து காட்சி தந்தார். ஆனால் அவர், 'ஒருவர் இறை பக்தியினை உடையில் பகட்டாகக் காட்டக் கூடாது, மாறாக உள்ளத்தில் இறை அச்சத்துடன் இறைஞ்சி வழிபட வேண்டும் என்று நினைப்பவர். இவர் காலத்தில் பதிப்பகங்களும், நூலகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவினார்.
4) மேலை நாட்டு அறிஞர்:
லாலே பக்தியார் என்ற அமெரிக்க பெண்மணி 2007 ல் அல் குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் பெண்மணியாவார் இவருடைய மொழிபெயர்ப்பு தான் இன்று உலகமெங்கும் இருக்கின்ற நூல் நிலையங்களிலும், பள்ளி வாசல்களிலும், பல்கலைக் கழகங்களிலும் மாதிரியாக உள்ளது.
5) பெண் இயக்கம்:
நானா அஸ்மா என்பவர் 19 ம் நூற்றாண்டினைச் சார்ந்த நைஜீரியா இளவரசியாவார். இவர் அராபிக், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் கை தேர்ந்தவராவார். இவர் ஆப்ரிக்க கண்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பெண்களின் கல்வியினை வழியுறுத்தியுள்ளார். இன்று கூட நைஜீரியாவில் இவர் பெயர் தாங்கிய பெண்கள் இயக்கம், கல்வி நிலையங்கள் உள்ளன.
6) நீதியரசர்:
ஈரானில் தலைமை நீதிபதி 'சிரின் அல் அபாடி' என்ற பெண் மிகவும் சிறந்த நீதிமான். அவருடைய சிறந்த நீதி பரிபாலனுக்காக நோபல் பரிசையும் பெற்றுள்ளார். இவர்தான் முதன் முதலில் ஆண், பெண் இணக்கமாக, ஜனநாயகப் படி வாழும் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

மேலே சுட்டிக் காட்டிய பெண்களின் போராளிகளால் இந்த நவீன உலகில், பங்களா தேசில் சேக்ஹ் ஹஸீனா, ஹாலிதா ஷியா, மாலித் தீவில் கிளாஸே மரியம், கொசாவோ நாட்டில் ஆட்டி ஜாஜாக, இந்தோனேசிய மெகாவாதி, பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ, செனிகல் மடியோர் போயி, துருக்கி டன்சி சில்வர், சிங்கப்பூர் ஆமினா கரீம், இந்திய நாட்டின் பாத்திமா பீவி ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகளாக முடிந்தது. ஆகவே தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு முன்னோடிகளாக இருந்தோர் நினைவாக முஸ்லிம் பெண்கள் மாதம் கொண்டாடப் படுகின்றது. நமது பெண் பிள்ளைகளையும் சிறந்த கல்விமான்களாக, நீதிபதிகளாக, சமூக சேவகர்களாக, அரசில் முக்கிய பங்கு வகிக்கும் பிரமுகர்களாக ஆக்குவதோடு அவர்களை மார்க்கத்தின் வழிமுறைகளை விட்டு பிறழாமல் பார்த்துக் கொள்வோமா?

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 13 ஜூலை, 2020

உணவில் உள்ளநச்சுக்கிருமிகளை ஈர்த்திடுமா வாழை இலை....?

வாழையிலையில் சாப்பிடுவது என்பது, தமிழர்களுக்கே உள்ள தனிப்பெருமை. மேலை நாடுகளை விடுங்கள், இந்தியாவில் வடமாநிலங்களில் கூட இந்த பழக்கம் கிடையாது. அவர்களுக்கு இதன் அருமையும் தெரியாது.
விருந்துகளில் அல்லது அன்ன தானங்களில் வாழையிலையில் உணவுண்பது தமிழர்கள் தொன்று தொட்டு பழகி வந்த வழக்கம்.
 தமிழர்கள் மற்ற நேரங்களை விட அதி முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர்.
 வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்:
 வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். 
 வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
 வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். 
 மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
 வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்  புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. 
 நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts