லேபிள்கள்

புதன், 13 மே, 2026

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கால் புண் விரைவில் குணம் பெற உதவும் குறிப்புகள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு புண் ஏற்பட்டால் அது விரைவில் ஆறாது. ஒரு சிலருக்கு புண் மேலும் பெரிதாகி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மா இலை மற்றும் அத்தி இலை ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு மண் பாத்திரம் வைத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த அரைத்த இலைகளை போட்டு அது பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பின்பு இதை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தினமும் காலை உணவுக்கு முன்பு 50 மில்லி குடிக்க வேண்டும். அதேப்போல் இரவு உணவுக்கு பிறகு 50 மில்லி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்பட்ட புண் விரைவில் சரியாகும்.

அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் எண்ணெய்யில் போட்டு கலந்து புண் ஏற்பட்ட இடத்தில் இரவில் தூங்கும் முன்பு தடவி வந்தால் தீராத புண்களும் சரியாகிவிடும். அதேப்போல் பகலில் உணவிற்கு முன்பு பப்பாளி பழம் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும், புண் சரியாவதற்கும் மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாலியின் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும்.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீழ் கோர்க்கும்.

ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே, சர்க்கரை நோயாளிகள் கால்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



--

சனி, 9 மே, 2026

எளிதாகக்கிடைக்கும் ரோஜாப்பூவில் உள்ள நன்மைகள்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காயவைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4, 5 பூலாங் கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரைமணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணிநேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.

உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும்.

பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும்.

ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும்.

வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.



--

புதன், 6 மே, 2026

குளியலறை மற்றும்உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவைக் கண்டு பிடிப்பது எப்படி?

ரகசிய கெமரா மூலம் பெண்களை படம்பிடிக்கும் சம்பவங்கள் உலகளவில் அதிகரித்துள்ளன. அந்த பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டும் பகீர் சம்பவங்களியும் அவ்வப்போது நடப்பதை கேள்விப் படுகிறோம்.

முக்கியமாக ஹொட்டல் அறைகள், துணிக்கடைகளில் ஆடைகள் மாற்றும் அறை, பொதுகழிப்பறை, குளியலைறை ஷவர், அறையின் கூரை பகுதி, கதவு துளைகள் போன்ற இடங்களில் ரகசிய கெமரா வைக்கப்படுகிறது.

இது போன்ற இடங்களில் ரகசிய கெமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?

இருட்டாக்கவும்

ரகசிய கெமராவில் பச்சை அல்லது சிவப்பு LED விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் தொடர்ந்து ஒளிரும். அவற்றைக் கண்காணிக்க, சந்தேகம் இருக்கும் அறையை முற்றிலும் இருட்டாக மாற்ற வேண்டும். இப்போது அங்கு ரகசிய கெமரா இருந்தால் அது இருட்டில் ஒளிரும்.

செல்போன்

செல்போனில் இருந்து ரேடியோ அலைவரிசைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. கெமரா பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில், ஏதேனும் ஒரு எண்ணை டயல் செய்யவும். அங்கு கெமரா இருந்தால், ரேடியோ அலைவரிசை காரணமாக அழைப்பில் சிக்கல் ஏற்படும்.

செயலிகள்

ரகசிய கெமராவை கண்டறிய ப்ளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.



--

ஞாயிறு, 3 மே, 2026

ஆர்கானிக் அறிவது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

'எங்க வீட்டுல எல்லாமே ஆர்கானிக்தான்' என்று சொல்வது இப்போதைய ட்ரெண்டாகி விட்டது.

காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து படுக்கப்போகும் போது ஏற்றும் கொசுவத்தி வரை சகலமும் ஆர்கானிக்கில் வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் இந்த ஆர்கானிக் மோகத்தைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் விதவிதமான ஆர்கானிக் பொருட்களை சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றன. ரேப்பரில் விதவிதமான வகையில் எழுதப்பட்டிருக்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு என்ன அர்த்தம்?

எதுவெல்லாம் அசல் ஆர்கானிக். வாங்க பார்க்கலாம்!

100% ஆர்கானிக்

இப்படி அச்சிடப்பட்டிருந்தால் இவை முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றை நம்பி வாங்கலாம்.

ஆர்கானிக்

இவற்றில், 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில் (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் எய்டுகள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும். இதற்கென சர்வதேச தரச் சான்று நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் இதனை அங்கீகரித்து இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்

இவற்றில் 70 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஊறுகாய் என்றால் அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கக்கூடும் என்பதால் கவனம். இவை ஆர்கானிக்கால் தயாரானவையே தவிரவும் முழு ஆர்கானிக்காக இருக்க வேண்டியதில்லை.

ஆர்கானிக் இன்கிரிடெண்ட்ஸ்

இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருட்கள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடெண்ட்ஸ் உள்ளதென குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்டுகள். இதுவும் ஆர்கானிக்கால் தயாராவையே தவிரவும் முழுமையான ஆர்கானிக் பண்புடையவை அல்ல.

நேச்சுரல்

இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவைகளுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகார சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவைகள் போலியானவையாகவும் இருக்கக்கூடும். இன்று பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் முதல் அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள் வரை ஆர்கானிக் நேச்சுரல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வரன்முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஃபேர் டிரேடு

என்.ஜி.ஓ-க்கள் மூலமாகச் சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள் சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள்.

ஆர்கானிக் பை டிரஸ்ட்

சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் பெறுவது பெரிய அளவில் சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், 'ஆர்கானிக் பை டிரஸ்ட்' எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது ஒருவகை சுயசான்றிதழ் என்பதால் இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ

இந்தியாவில் கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறி குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை கேஜ் ஃப்ரீ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்

தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றில் இருந்து பெறப்படும் பால் பொருட்களில் கிராஸ் ஃபெட் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

நோ ஏடட் ஹார்மோன்ஸ்

ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் நோ ஏடட் ஹார்மோன்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் முறையாக இந்த சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.



--

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கால் புண் விரைவில் குணம் பெற உதவும் குறிப்புகள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு , பாரம்பரியம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சர்க்கரை நோய் உ...

Popular Posts