லேபிள்கள்

திங்கள், 29 ஜூலை, 2019

வாழ்க்கையின் ரகசியம் என்ன?..


ஒரு பொன்மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா ஒன்றில் நான்கு தத்துவ ஞானிகள் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மெல்லிய பூங்காற்று வீசவே கொடி ஒன்று அசைந்து ஆடியது. அதைக் கண்டு ரசித்த ஒரு ஞானி, " இந்தப் பூங்கொடி அசைவது எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்றார். உடனே அடுத்தவர், "பூங்கொடியா அசைகிறது? காற்றல்லவா அசைகிறது?" என்றார். அதற்கு மூன்றாமவர், "அதுவும் இல்லை, மனம்தான் அசைகிறது" என்றார். நான்காவது ஞானியோ நிதானமாகச் சொன்னார். "எதுவுமே அசையவில்லை!"
தத்துவ ஞானிகளுக்கு இடையே நடைபெறும் இந்தச் சின்னஞ்சிறு உரையாடல் காட்சி தத்துவக் கருத்தோட்டங்களை புலப்படுத்தி நிற்கிறது.
'ஒவ்வொரு கணமும் இனிமை!'
ஜென் குரு ஒருவர் எப்போதும் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர். சீடர்கள் சிலர் அவரைக் கேட்டார்கள், "உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம் என்ன?"
குருநாதர் சிரித்துக் கொண்டே சொன்னார் "பெரிதாக ஒன்றுமில்லை.
மிக எளிமையான விஷயங்கள் தான்"
1.காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, நறுமணம் உள்ள ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
2.வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கட்டும்.
3. கண்ட நேரத்தில் துாங்க வேண்டாம்.தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்.
4.பெரும் கூட்டத்திலும் தனிமையைப் பழகுங்கள். தனிமையில் கூட்டத்துக்கு நடுவே இருக்கிற உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
5.நன்றாக, தெளிவாகப் பேசுங்கள். அதன்படி நடந்தும் காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள்.
6.ஒவ்வொரு வாய்ப்பையும், ஒரு முறைக்குப் பலமுறை நன்கு சிந்தித்த பிறகே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7.முடிந்து போன விஷயங்களை எண்ணி வருந்தாதீர்கள்.
8.போர் வீரர்களைப் போல் தைரியம் பழகுங்கள். அதே சமயம், சிறு குழந்தைகளைப் போல் வாழ்க்கையை நேசியுங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 26 ஜூலை, 2019

நேர்மறை ஆற்றல்


நீங்கள் எந்த சூழ்நிலையிலும், புன்முறுவலோடு இருந்தால் நீங்கள் நேர்மறை ஆற்றலோடு இருக்கிறீர்கள்.
நன்றியுணர்வு, எப்போதும் இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜி, உங்களை சூழ்ந்திருக்கும்…..
எனக்கு யாருமே உதவவில்லை, நான் எப்படி நன்றி உணர்வோடு இருப்பது என்று கேட்டால்………
முதலில் உங்கள் உடலுக்கு நன்றி சொல்லுங்கள், இந்த உடலில் தான் நீங்கள் வசிக்கிறீர்கள், அதற்கு நன்றி சொல்லுங்கள்…..
உங்கள் காலையே தொட்டு வணங்கி பாருங்கள், நன்றிணர்வு மேலெலும்பும்…..
அந்த உடலை பூமிக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்…..
கண்களை மூடி அப்பா, அம்மா ஒவ்வொறுவர் காலிலும் (கற்பனையில் தான்) விழுந்து நன்றி சொல்லுங்கள், ஆனந்தக் கண்ணீரோடு நன்றிணர்வு பொங்கி வரும்…..
இப்படி உங்களுக்கு ஏதாவது சூழ்நிலையில் உதவுபவர்களுக்கு நன்றி சொல்லலாம்….
சாப்பிடும் போது நன்றியுணர்வோடு சாபிடுங்கள்,
அந்த உணவில் ஆயிரக்கணக்கானோர் உழைப்பு உள்ளது, விதைத்தவன், உழுதவன், அறுவடை செய்தவன், விற்பனையாளன், சமைத்தவன் இப்படி,,,,,,,,,,,,,
ஒரு பிடி சோற்றில் உலக ஒற்றுமை கண்டிடு' என்று சொல்லின் பொருள் இதுவே
இப்படி, குளிக்கும் போதும், நன்றியோடு தண்ணீரை மேலே ஊற்றுங்கள்….
உடை அணியும் போதும், காலில் செருப்பு அணியும் போதும் நன்றியுணர்வோடு இருங்கள்…..
பொதுவாக இந்த மாதிரி வேலை செய்யும் போது, உங்களுக்கே தெரியாமல், மனம் கொந்தலைப்போடுத்தான் இருக்கும், யாருக்காவது பதில் சொல்லும், தொணத் தொணவென்று பேசிக் கொண்டிருக்கும்….
இப்படி விழிப்போடு, நன்றியுணர்வோடு செய்யும் போது விழிப்புணர்வும், நேர்மறை ஆற்றலும் உங்களை ஆட் கொள்ளும்……
சரி, இப்படியே இருபத்தி நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா என்று கேட்டால்….
எப்போது எல்லாம், நினைவுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் முயற்சிக்கவும்….
முயற்சியில் தொடங்கி, முயற்சியற்ற நிலைக்கு வரும் போது, முழுமையான நேர்மறை ஆற்றலோடு இருப்பீர்கள்……
ஏற்பு விதி, ஏற்றுக் கொள்ளும் தன்மை!
இதை புரிந்து கொள்வது அவசியம்….
உங்கள் எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஏற்று கொள்ளாமை தான்….
மனஅழுத்தம், மனசிதைவு, டென்ஷன், வெறுப்புணர்வு எல்லாத்துக்குமே காரணம், ஏற்று கொள்ளாமை தான்….
ஏற்றுக் கொள்ளாததால், உங்கள் மனதுக்கு எதிராக, நீங்களே செயல் பட்டு, உங்கள் மனதுக்கு துன்பத்தை கொடுக்கிறீர்கள்.
நமக்கு சொல்லப் பட்டது, எதிர்த்து நில், எதிர்த்து போராடு, புரட்சி செய் இப்படி,,,,,,,,
இது கூட்டு மனப்பான்மைக்கு, சமூக அரசியலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்….
தனி மனித மனதுக்கல்ல…..
ஒரு தவறு நடக்கிறது, எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்டால்…….
எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்…..
உங்கள் வீட்டிலேயே ஒருவருடைய செயல்பாடு, உங்களுக்கு பிடிக்கவில்லை, முரண்பாடு உள்ளது என்றால்……
முதலில் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் குணத்தை ஏற்று கொள்ளுங்கள்….
இப்போது, முதலில் உங்கள் மனம் அமைதியடையும், இந்த அமைதியில் மனமே உங்களுக்கு எப்படி எதிர் கொள்வது என்று சொல்லும்…..
இப்படித் தான் எந்த சம்பவம் நடந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் மனம் சம்பந்தப் பட்டிருக்கும்…..
இதை எதிர்த்தால், உங்கள் மனதை எதிர்க்கிறீர்கள், ஏற்றுக் கொள்ளும் போது, மனமே தீர்வுக்கு வழி காட்டும்…..
சரியென்று, முழு மனதோடு, ஆழ்ந்த சுவாசத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்…..
ஓஷோ சொல்வார், ஒரு நாள் முழுவதும், எது நடந்தாலும், சரி, சரி…, எல்லாம் சரி என்று சொல்லிப் பாருங்கள், என்ன நடக்கிறது என்று…..
எப்போதும், புன்முறுவலோடு, நன்றியுணர்வோடு, ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருந்தால்……
நேர்மறை ஆற்றலோடு, பிரபஞ்ச உணர்வோடு இருப்பீர்கள்….
இப்படி இருந்தால், உடல், மனத் தேவையை பிரபஞ்ச ஆற்றல் பூர்த்தி செய்யும்…!!!!
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

--
v
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 23 ஜூலை, 2019

!! தண்ணீர் !!!By Dr. Gouse MD, (Acu.,Tcm)., Singapore.
மனிதன் உயிர் வாழ தண்ணீர் அவசியத் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் மிக அத்தியாவசியமானது.
தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர் என்று அர்த்தம். ஆனால் வழக்கு சொல்லில் சாதாரண நீரைத்தான் தண்ணீர் என்று சொல்கின்றோம். அதனால் அதே சொல்லையே
நானும் இங்கு பயன்படுத்துகிறேன்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும்?
தண்ணீர் அதிகம் குடித்தால் உடலுக்கு நல்லது என அனைவரும் கூற கேட்டிருப்போம். அதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என பார்ப்போம்.
பொதுவாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவு சரியானது?
ஒரு மனிதனுக்கு எப்போது தாகம் ஏற்படுகிதோ அப்போது தான் அவன் தண்ணீர்த் தேடிச் செல்வான்.
உடலுக்கு எப்போது தண்ணீரின் தேவை ஏற்படுகிறதோ அப்போது தான் தாகம் என்கிற உணர்வு ஏற்படும். இதுதான் இயற்கை.
ஒருவர் ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும், இந்தெந்த வயதிற்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் அறிவுக்கும், ஆரோக்கியத்திற்கும் புறம்பானதாகும்.
உடல் உழைப்பு அதிகம் உள்ள தொழிலாளிகள், வெய்யிலில் வேலை செய்யும் விவசாயிகள், அதிக வியர்வையை உண்டாக்கும் வேலையை செய்பவர்கள், போன்றவர்களுக்கு சற்று அதிகமாக தண்ணீர் தேவை ஏற்படும்.
குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் மற்றும் அதிக நேரம் ஏசியில் உள்ளவர்களுக்கு குறைவான அளவு தண்ணீர் தான் தேவைப்படும். ஒருவரின் தண்ணீர் தேவையை அவரவர் உடல் தான் தீர்மானிக்க வேண்டும். ஆவரேஜ் ஆராய்ச்சிகள் அல்ல.
அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது என்றும், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால் இந்தெந்த வியாதிகள் குனமாகும் என்றும்
Japanese Water Therapy என ஒரு செய்தி அடிக்கடி சோசியல் மீடியாக்கள் மூலம் பரப்பப்படுகிறது.
இதுவும் தவறானதாகும். Japan Medical Society ம் இதை அங்கீகரிக்க வில்லை.
உங்களுக்கு எப்போது, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை உணர்த்த தான் தாகம் என்கிற ஒரு உணர்வு இருக்கின்றது. இது அனைத்து உரியிரினங்களுக்கும் பொதுவானது.
நமது உடலுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது. (Weather)
அக்குபங்சர் மருத்துவர்கள் Organ Clock Theory என்றும், ஆங்கில மருத்துவர்கள் Biological Clock என்று படித்திருப்பார்கள். அது தான் காலச் சூழ்நிலையின் மாற்றத்திற்கு தகுந்தவாறு நமது உடலின் தட்பவெப்ப நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
அதனால் தான் கால சூழ்நிலையான வெப்பம், குளிர், மழை, வறட்சி என மாறும் போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற் போல் நமது உடல் ஒத்துப் போகிறது. இல்லையேல் நாம் நோய்வாய் பட்டுவிடுவோம்.
உதாரணமாக சிலருக்கு வெய்யிலின் உஷ்ணம் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது. வேறு சிலருக்கு வெளியூர் சென்றால் அங்குள்ள தண்ணீர் ஒத்துக்கொள்ளாது.
இப்படி யாருக்கெல்லாம் காலச் சூழ்நிலையின் மாற்றம் ஓத்துக்கொள்ள வில்லையோ, அவர்களின் உடலில் உள்ள சில உள்ளுறுப்புகளின் சக்தி ஓட்டத்தில் குறைபாடு உள்ளது என அறியவேண்டும்.
நமக்கான தாகத்தில் அளவை நிர்ணயிப்பது நமது உடலில் உள்ள மண்ணீரல் என்னும் உறுப்புத்தான். (Spleen).
தண்ணீர் என்பது நான்கு, ஐந்து லிட்டர் சாதாரனமாக குடித்துவிட்டு, பிறகு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதற்காக அல்ல.
நீங்கள் அருந்தும் ஒவ்வொரு சொட்டு நீரும் உடலில் உள்ள செல்களால் ஜீரணிக்கப்பட்டு, அதில் உள்ள உயிர்ச் சத்துக்கள் கிறகிக்கப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட அவசியமானதாக அமையவேண்டும்.
தேவைக்கு மீறி நீங்கள் தண்ணீர் அருந்தும் போது, உடலின் தேவை போக மீதமுள்ள நீர் உங்கள் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படும்.
ஏற்கனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் உங்கள் சிறுநீரகங்கள், நீங்கள் அதிகமாக குடிக்கும் நீரையும் வெளியேற்ற பாடுபட வேண்டும். இது சிறுநீரகத்திற்கு அதிகப்படியான வேலை பளுவாகும். (Over Load to Kidneys).
இந்த நிலை தொடருமானால் நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். (Kidney Failure).
தாகமில்லாமல் தண்ணீர் மட்டுமல்ல, குளிர்பானங்கள், பீர் போன்ற எதைக் குடித்தாலும் அது உடல் தேவைக்கு அதிகமான நீராகத்தான் அமையும். பெரும்பாலும் பீர் குடிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2, 3 லிட்டர்கள் குடிப்பார்கள். சிறிது நேரத்தில் அவ்வளவு நீரும் சிறுநீர் மூலம் வெளியேறும். இது கிட்னிக்கு கடுமையான நெருக்கடி என்பதை அவர்கள் உணருவதில்லை.
சோர்வடைந்த சிறுநீரகங்களால் கழிவுகளை முழுமையாக நீக்க முடியாது. அதனால் அதில் உள்ள கால்ஷியம், ஆக்சலேட்ஸ் போன்ற உப்புக்கள் ஒன்றுசேர்ந்து எளிதில் கிட்னியில் கற்கள் உருவாகும்.
யாரெல்லாம் அதிகமாக செயற்கை குளிர்பானங்கள் மற்றும் பீர் குடிகின்றார்களோ அவர்களுக்கு எளிதில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
பொதுவாக ஜீரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் தான் ஜீரணமாவது என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாகுவது போல், குடிக்கும் நீர்ம வகைகளும் ஜீரணிக்கப்பட வேண்டும். (Water Metabolism).
நாம் உட்கொள்ளும் தண்ணீர் வகைகள் முறையாக ஜீரணிக்கப்பட்டு பிறகு உடல் தேவைகளுக்காகவும், கழிவுகள் நீக்கப்படுவதற்காகவும்,(Toxins Removal) நமது அனைத்து செல்களுக்கும், திசுக்களுக்கும் முறையாக அனுப்பப்பட வேண்டும். (Distribution).
நாம் குடிக்கும் நீர் முறையாக ஜீரணிப்படா விட்டால், அது நமது செல்களாலும், திசுக்களாலும் கிரகிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். அதனால் அந்த நீர் சேகரமாகி பல உள் உறுப்புகளிலும், செல்களுக்கு இடையிலும் தேக்கம் கொள்ள ஆரம்பிக்கும். (Water Lodging).
வளர்ச்சிதை மாற்றத்தின் குறைவால் இந்த நீர் உடலால் கிரகிக்கப்படாமல் அதிக அளவில் உடலில் தேக்கம் கொள்ளும்போது செல்கள் தளர்ந்து உடல் பருமன் அடையும். அப்படிப்பட்டவர்கள் ஊளை சதையுடன் தோற்றமளிப்பார்கள். (Obesity).
மேலும் உடலின் உள்ள நீர் தேக்கத்தின் காரணமாக இரத்த நாளங்களிலும் நீர் சேர்ந்து இரத்த அழுத்தத்தை (Blood Pressure) ஏற்படுத்தும்.
எனவே இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேற வேண்டும். இல்லையேல் நுண்ணிய நரம்புகள் வெடிக்க நேரிடும். அதனால் மூளையில் இரத்த கசிவு, கை கால்கள் வாதமடித்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். (Rupture, Paresis, Paralysis).
உடலில் உள்ள அதிப்படியான நீர், சிறுநீர் மூலம் தான் வெளியேற்றப்பட வேண்டும்.
உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் வேலையை செய்து கொண்டிருப்பாதால், நமது சிறுநீரகங்கள் சோர்வடைந்து இருக்கும். அதனால் உடலில் உள்ள அதிப்படியான நீரை வெளியேற்ற முடியாது. அப்போது கைக், கால்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். கைக், கால்கள் வீங்குவதற்கு இதுவே காரணமாகும்.
எனவே சோர்வடைந்த சிறுநீரகங்கள் மேலும் வேலை செய்ய, ஆங்கில மருத்துவத்தில் சிறுநீர் பிரியும் இரசாயன மருந்துகள் கொடுக்கப்படும். (Diuretics).
இந்த செயல்பாடு, ஏற்கனவே சோர்வுடன் இயங்கி கொண்டிருக்கும் சிறுநீரகங்களை மேலும் மோசமாக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். (Kidney Failure).
நாம் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவிலும் உள்ள நீர் சத்துக்கள் ஒவ்வொருவருடைய உடல் அமைப்புக்கும், ஜீரண சக்திக்கும், தேவைகளுக்கும் தகுந்தவாறு உடல் ஏற்றுக் கொண்டு, கழிவுகளை வெளியேற்றும்.
கழிவுகள் வெளியேறாமல் தேக்கம் கொள்வதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் கிரகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதன் காரணமாக நுரையீரலிலும், பெருங்குடலிலும் நோய்கள் உண்டாக ஆரம்பிக்கும். (Disease Forms in Metal Element).
ஆக்சிஜன் குறைபாடு நீர் மூலகங்களான சிறுநீரகத்தையும், சிறுநீர் பையையும் (Kidneys and Urinary bladder) பாதிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் நீர்மூலம் வெளியேறாது. அப்போது யூரினரி டிராக்ட் இன்பெக்ஷ்ன் (UTI), மலசிக்கல் ஏற்படும்.
உடலில் ஆக்சிஜன் கிரகிப்பு தன்மை குறைந்தால் மூச்சு திணறல், மூச்சு அடைத்தல், சிறு வேலை செய்தாலும், மாடிப்படி ஏறினாலும் மூச்சு வாங்குதல் போன்ற சுவாச கோளாறுகள் உண்டாகும். குண்டாக உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.
யாருக்கெல்லாம் நுரையீரல் இயக்க சக்தியில் குறைபாடு உள்ளதோ, அவர்களுக்கு மனக் குழப்பங்களும் (OCD), பிடிவாத குணங்களும் அதிகமாகும்.
உதாரணமாக சளி பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு பிடிவாத தன்மை அதிகமாக இருப்பதை பார்க்கலாம். யாருகெல்லாம் பிடிவாத குனம் அதிகமாக உள்ளதோ அவர்களின் நுரையீரல் இயக்கச் சக்தியில் குறைபாடு உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
(OCD என்றால் ஒரே செயலை திரும்ப திரும்ப செய்தல்)
நாம் குடிக்கும் தண்ணீர் நாக்கிலோ, தொண்டையிலோ நேரடியாக படக்கூடாது. முதலில் தண்ணீர் நமது உதடுகளை ஈரப்படுத்தி பிறகு தான் வயிற்றுக்குள் செல்ல வேண்டும்.
எப்போது உதடுகளில் நீர் படுகிறதோ, அப்போது தான் அந்த நீரை ஜீரணிக்க கூடிய சக்தி வயிற்றிலும், மண்ணீரலிலும் உருவாகும்.
உதடுகள் நீரில் உள்ள சக்தியை உறிஞ்சும் தன்மையை உடையது. அதனால் தான் இறைவன் படைப்பில் உதடுகள் வியர்வை சுரப்பிகள் இல்லாமல் படைக்கபட்டிருக்கிறது. வியர்வை சுரப்பிகள் உள்ள இடங்கள் உடற்கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது.
வியர்வை சுரப்பி இல்லாத உதடுகள் சக்திகளை உறிஞ்சி உள்வாங்கும் தன்மையுடையது. எனவே பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் (Chemicals) உங்கள் உதடுகளால் உறிஞ்சப்படும்.
எப்போதெல்லாம் உதடு உலர்ந்து காய்ந்து போகிறதோ, அப்போது நமது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துக் கொள்ளலாம்.
தாகமில்லாமல் உதடுகள் உலர்ந்துபோனால் அப்போது நாக்கால் உதடுகளை சிறிது தண்ணீரால் ஈரப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் எப்போது, எவ்வாறு, எந்த முறையில் தண்ணீர் அருந்துவது போன்ற தகவல்களை அடுத்தக் கட்டுரையில் காண்போம். நன்றி.
By Dr. Gouse MD (Acu., Tcm)., Singapore. WhatsApp: 9790740990.
--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 ஜூலை, 2019

வயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி….


குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும்
பத்து முக்கிய ஆலோசனைகள்:
_1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்._
_2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்.தன்னை திட்டுவதற்கும்,சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்._
_3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்._
_4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்._
_5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை._
_6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று.நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்._
_7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை.இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்._
_8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள்.உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்._
_9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள்.உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது._
_10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல.அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்._
*_குறிப்பு:_*
_இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல,உங்கள் நண்பர்கள்,சொந்தங்கள், பெற்றோர்கள்,பிள்ளைகள்,கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்…. எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்._
நன்றி வெங்கடசாமி ராமசாமி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 16 ஜூலை, 2019

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*


20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)
30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)
40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்)
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)
90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)
என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப் படுறத விட்றுவோம்!
நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் "The power of positive thinking" என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்
தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.
தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்ப மயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.
பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.
கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.
வந்தவரோ "என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது" என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.
சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.
இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
"உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?" என்று பீலே கேட்டார்.
அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.
"இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே" என்றார்.
தொடர்ந்து "உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?" என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.
"எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?" என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.
"உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?" என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.
இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.
இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.
கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.
அது போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.
இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை
ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்
கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது
அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.
என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்
மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்
வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா…?
மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஆண் பெண் வேறுபட்ட சிந்தனைக்கு இது தான் உண்மையான காரணமா?*

ஆண்களும் - பெண்களும் உடலளவில் வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர். மேலும் , மனம் , மூளை ...

Popular Posts