லேபிள்கள்

வியாழன், 29 டிசம்பர், 2022

இத்தனை வகை TEA-ஆ...? வாய பிளக்காதீங்க மக்கா!!

இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பல விதமான தேநீர்களை போட்டுக்குடிக்கலாம். அவை பின்வருமாறு... 

செம்பருத்திப்பூ தேநீர்: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர்ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை  அளிக்கும்.

ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம்.   இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

கொத்தமல்லி தேநீர்: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை தேநீர்: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை தேநீர்: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

https://tamil.webdunia.com/article/home-remedies/wide-variety-of-herbal-teas-and-benefits-121031200076_1.html


--

திங்கள், 26 டிசம்பர், 2022

முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது நல்லதா...?

 

எப்படி சமைத்த உணவை ப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லையோ, அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும்  குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.

நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

ஒருவேளை  முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமெனில் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க கூடாது. ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும்  முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக்கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.

முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/is-it-good-to-use-eggs-in-the-fridge-121030600021_1.html

--

வெள்ளி, 23 டிசம்பர், 2022

தைராய்டு பிரச்சனைகளை போக்கும் மருத்துவ குறிப்புகள் !!

 

தைராய்டு நமது முன் கழுத்தில் சுரக்கும் ஒரு சுரப்பி. அந்த சுரப்பி அதிகரித்தாலோ, அல்லது குறைந்தாலோ அது நோய். ஆண்களை விட பெண்களே இந்த நோய்யால் அதிகம் பாதிக்க்படுகின்றனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இயற்கை மருத்துவ முறைகளில் இதுவரை வந்த நோய்கள் வர போகின்ற நோய்கள் அனைத்திற்குமே தீர்வு  இருக்கிறது.

தைராய்ட் மூலம். உடல் எடை அதிகரித்தல், குறைதல், ரத்த போக்கு, உடல் வலி. மற்றும் மன சிக்கல் முதல் மல சிக்கல் வரை பல வியாதிகள் வரும். துதுவளை சாரை தினமும் காலையில் குடிப்பதும், மந்தாரை மலர் மொட்டும். சிறந்த தீர்வு.

மந்தாரை என்றால் என்ன. வாழை இலைக்கு மாற்றாக. தையல் இலை என்று ஒன்று வைப்பார்களே அதுதான். தெய்த்த மந்தாரை இலையை தான் சாப்பிட  முடியாது.

மந்தாரை இலையில். குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள்ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின் போன்ற உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல வேதி பொருட்கள் உள்ளன.
இதன் வேர் முதல் மலர், இலை, பட்டை என  ஒவ்வொன்றும் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொட்டுகளை சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும்மாலையிலும் குடித்து வந்தால். தைராய்ட் மட்டும் அல்லாமல் அல்சர், ரத்த போக்கு போன்ற பல நோய்களை குணப்படுத்தும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/medical-tips-to-cure-thyroid-problems-121030400106_1.html


--

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts