லேபிள்கள்

திங்கள், 29 ஜூன், 2020

உப்பு தண்ணீரில்குளிப்பதால் என்னவெல்லாம் பயன்கள் உண்டாகின்றன தெரியுமா...?

நாம் அன்றாட குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சேர்த்து குளித்து வர உடலில் உள்ள தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் சரியாகிவிடும்.அதிலும் குறிப்பாக சொறி சிரங்கு உள்ளவர்கள் இவ்வாறு செய்து வந்தால் தோலில் உள்ள கிருமிகள் அழிந்து தோல்  பிரச்சனைகள் குணமாகும்.
வெள்ளை வினிகரை நீரில் சரியாக கலந்து காட்டனில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான  எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். 
 ங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை உடம்பில் தடவி பிறகு கடலைமாவுடன் கற்றாழையைக் கலந்து தடவி குளித்து வர  உடல் பளபளக்கும்.
 துணி சோப்புகளை நேரடியாகப் பயன்படுத்தாமல், கைகளில் ஹேண்ட் க்ரீம் தடவிக்கொண்டோ, காட்டன் கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக்  கிளவுஸ் போட்டுக்கொண்டோ சலவை வேலைகளைச் செய்யலாம்.
 கால்கள் சோர்வாக இருந்தால் ஒரு பக்கட் தண்ணீரில் கல் உப்பு, ப்ரூட் சால்ட் தலா ஒரு ஸ்பூன் மற்றும் ரோஜா இதழ்கள் அல்லது ரோஸ்  வாட்டரைக் கலந்து பாதங்களை அதில் வைத்தால், கால் நகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். கால்களுக்கு புத்துணர்வூட்டும். பின் ஷாம்பு  போட்டு கால்களைக் கழுவி பாடி லோஷன் தடவினால் மிருதுவாகும்.
மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு  கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
 அடிக்கடி உப்பு நீரில் குளித்து வருவது நல்லது. ஏனெனில் உப்பு நீர் ஆண்டிசெப்டிக், ஆண்டி பாக்டீரியாவாக செயல்படும். மேலும் இவ்வாறு தண்ணீரில் உப்பு சேர்த்து குளிப்பதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 26 ஜூன், 2020

பழங்களின் தோல்களும்அவற்றின் நன்மைகளும் என்ன...?

ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். புற்று நோயை தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும் ஆரஞ்சு தோலில் புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால் சுவையும் சத்துக்களும் அபாரமாய் இருக்கும்.
வாழைப்பழத் தோல்: வாழைப்பழத்தோலை பற்களில் தினமும் தேய்த்து வந்தால், மஞ்சள் பற்களை வெள்ளையாகும். காயங்கள் மீது தடவினால், புண் மிக விரைவில் ஆறும். பாத வெடிப்புகளில் தினமும் இந்த தோலை தேய்த்து வந்தால், ஒரு வாரத்தில் வெடிப்பு மறையும்.
 மாதுளை தோல்: மாதுளம் பழத் தோல் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த அதனை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.
 வெள்ளரிக்காய் தோல்: வெள்ளரிக்காய் தோலில் நிறைய ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருக்கிறது. நார்ச்சத்தும் நிறைந்தது. உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தும். கண்பார்வையை அதிகப்படுத்தும்.
 ஆப்பிள் தோல்: ஆப்பிளின் தோலில் ஃப்ளேவினாய்டு உள்ளது. இது புற்று நோயை எதிர்க்கும். நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும்.  இதிலுள்ள அர்சோலிக் அமிலம் உடல் பருமனை குறைக்கும்.
 எலுமிச்சை தோல்: எலுமிச்சையின் தோல் பற்களில் உண்டாகும் தொற்றுக்களை அழிக்கும். இதிலுள்ள லெமனோன் மற்றும் சல்வெஸ்ட்ரால் இரண்டுமே புற்று நோயை விரட்டும். நச்சுக்களை உடலிருந்து வெளியேற்றும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 23 ஜூன், 2020

எண்ணெய் தேய்த்துகுளிக்கும் நாட்களில் நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது...?

எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால்  எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும்.
நல்லெண்ணெயில் நீங்கள் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு பின் குளிப்பது உத்தமம். நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், நாம்  சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு காரணம், சூரிய ஒளி நம் உடலில்  படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உருஞ்சும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். அதிகாலையில்  நான்கு, ஐந்து மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
 எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று  ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. தலைக்கு சீயக்காய், அரப்பு, சாதம் கஞ்சி போன்றவைகளை பயன்படுத்தலாம்.
 தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி, பிறந்த நாள், விரத நாட்கள் போன்ற நாட்களாக  இருக்கக் கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. ஏனென்றால் இந்த நாட்கள்  குளிர்ச்சியான நாட்கள் ஆகும்
 குளிர்ச்சியான நாட்களில் பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பது விதி. நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்  குளிக்கலாம். பெண்களுக்கு வெள்ளி, செவ்வாய் நாட்களும், ஆண்களுக்கு சனியும், புதனும் ஆகும்.
 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது, பழைய சாதம், கற்றாழை, மோர், இளநீர், தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.  மேலும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நம் உடல் சிறிது சோர்வாக இருக்கும். அதைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சிறிது  நடை பயிற்சி அல்லது வீட்டிலுள்ள சிறிய வேலைகளை செய்தாலும் உங்கள் சோர்வு நீங்கி விடும். உடல் சோர்வாக இருப்பதற்காக உறங்கச் செல்லக்கூடாது.  அப்படி நீங்கள் உறங்கினால், உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணம் உடலிலேயே தங்கி விடும். இதனால் கண் எரிச்சல், வயிற்று வலி, தலைவலி  போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 ஜூன், 2020

உலர் திராட்சையில் உள்ளஊட்டச்சத்துக்கள் என்ன.....?

உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான  சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.
 தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.
 சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும்.
 சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு  காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-nutrients-in-dry-grapes-120022500024_1.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 16 ஜூன், 2020

பூண்டை பச்சையாக வெறும்வயிற்றில் சாப்பிடுவதால் என்ன பயன்...?

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும்.  அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான்  புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது. 
 வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
 பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும்  பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
 இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.
 பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு  நல்லது.ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 13 ஜூன், 2020

பொடுகு வருவதற்கானகாரணங்களும் அதை போக்கும் மருத்துவ குறிப்புகளும்...!!

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். வறட்சியான சருமத்தினால் வரும். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.
அவசரமாக தலைக்கு குளித்துவிட்டு, தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோ்ப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு  உற்பத்தியாகும்.

ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும். "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
 கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம்  பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.
 பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம். வாரம் ஒரு முறையாவது  நல்லண்ணெய் தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து  நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
 வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம். தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப  எண்ணெய்யையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
 தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
 மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தலையில் தடவி ஊறவைத்து குளித்து வரலாம். வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கனு

--
V
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts