லேபிள்கள்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நான் – ஸ்டிக் பாத்திரம்

நான் ஸ்டிக் பாத்திரம்

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் நா‌ன்‌ ‌ஸ்டி‌க் வாண‌லி ம‌ற்று‌ம் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா? ஆ‌ம் எ‌ன்றா‌ல் இ‌னி முழு‌ச் சமையலு‌க்கு‌ம் அதையே‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.
அதாவது ம‌ற்ற பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ய்க‌றிகளை‌ச் சமை‌க்கு‌ம் போது அத‌ன் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியா‌கி ‌விரையமா‌கி‌ன்றன.
எனவே நா‌ன் ‌ஸ்டி‌க் அதாவது எ‌ண்ணெ‌ய் ஒ‌ட்டாத வகை‌யி‌ல் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ற்க‌‌றிகளை சமை‌ப்பத‌ற்கு‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் அத‌ன் மூல‌ம் கா‌ய்க‌றிக‌ளி‌ல் இரு‌ந்து முழு ச‌க்‌தியு‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் சமைய‌ல் ‌நிபுண‌ர்க‌ள்.
மேலு‌ம், மு‌ட்டை பொ‌ரி‌ப்பத‌ற்கு‌ இதுபோ‌ன்ற நா‌ன் ‌ஸ்டி‌க் வாண‌லி அ‌ல்லது தவாவை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஆலோசனை வழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள்.
எதுவாக இரு‌ந்தாலு‌ம் ‌நா‌ன் ‌ஸ்டி‌க் பொரு‌ட்க‌ளி‌ல் அத‌ற்கென இரு‌க்கு‌ம் மர‌க் கர‌ண்டியை ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தவு‌ம். ‌மிருதுவான நா‌ர்களை‌க் கொ‌ண்டு தே‌ய்‌த்து கழு‌வினா‌ல் ‌நீ‌ண்ட நாளை‌க்கு நா‌ன் ‌ஸ்டி‌க் தவா‌க்க‌ள் ‌நிலை‌த்து வரு‌ம்.
நான் ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? கீழே உள்ள குறிப்புகளை படித்து, மனதில் பதித்துக் கொள்ளவும்.
* குறைந்த மிதமான சூடு போதுமானது.
* சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.
* மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.
* உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
* சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.
* கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.
* மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.
* நான் ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.
* பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில், ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?
  இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது....
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!
http://iminder.blogspot.in/2013/11/blog-post_18.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது

வேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில
வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக
இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம்
எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.
உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.
அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.
தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக்
செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.

4.
பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.
அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.
அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக்
செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும்
வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி
இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல்
ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove
hardware
என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து
நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள்
பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!
http://www.pettagum.blogspot.in/2013/10/blog-post_13.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 22 ஏப்ரல், 2015

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..

ஒட்டகம் ஓர் ஒப்பற்ற அதிசயம்..

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் 'பாலைவனக்கப்பல்'.
ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் 'தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்' என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான 'கப்பலில்', மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. 'கடலுக்கு கப்பல்பிரயாணம் பாலைக்கு ஒட்டகபிரயாணம்' என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது…., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பானஒட்டகத்துக்கு…. எப்படி ஒப்பாகும்?
(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ…..ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ' ..! ' போட்ட இடங்களுக்கு அடுத்து 'சுபஹானல்லாஹ்'சொல்லிக்கொள்ளுங்கள்.)
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும்இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்உணவில்லாமல்பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும்செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில்
50°செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரைதன் எடையில்22%இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8%எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- 'அவன் உடம்பில் 88%நீர்ச்சத்துதான் இருந்தது' என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில்12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம்கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்கேட்கவே வேண்டாம்அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர்அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்துஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர்அறைகளில்நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிசேமித்துக்கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள்அதன் உண்மையானஅளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோதன்னுடைய சிறுநீரையும்குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள்8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடைகிட்னியாகஇருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும்.அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் 'விசேஷ லிவர்' ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசுசிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன்கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்புநின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட 'குளுகுளு' இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு விட்டமின் 'C' அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரிபாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றிஅதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°Cலிருந்து 41.7°Cவரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில்55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றைசுவாசித்து வெளியேற்றினோம் என்றால்16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும்வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..!மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இருகுளம்புகளையும் சேர்த்து மிக அகன்றவட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும்பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டுமடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும்இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள்அதன்மீதுஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும்,  கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போதுகொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்றுமணற்புயல்பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன் 'கை'யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோதூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன்
உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு 
மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்புவாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்திகூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..! அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும்,நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
"அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது" என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடிவிளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீபயணம்செய்யும் ஒட்டகம்…, நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும்தாரளமாககிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும்முட்டாள் ஒட்டகம் எப்போதோஓடிபோயிருக்கலாமே..! இப்படிபாலைவனத்தில் கஷ்டப்படவேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்…) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்
"(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே…! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள்பகுத்தறிவைகேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் போலிவார்த்தைகள்பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில்உணராலாம்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 20 ஏப்ரல், 2015

புது வருடமும் புனித பணிகளும்

புது வருடமும் புனித பணிகளும்

 மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.
 முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி? அது எத்தனை? எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.
 முஹர்ரம் மாதம் சங்கைமிக்கதாகும்
நபியவர்கள் கூறினார்கள் 'ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|' (முஸ்லிம்:1982)
 இம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
 நபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது 'முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)
 அதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1 வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந்து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்டுகிறது.
 இது கட்டாயக் கடமையல்ல
இந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.
 அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹி லியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷுறா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)
 எனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.
 இதை எப்போது நிறைவேற்ற வேண்டும்?
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷ_ரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் "மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே! என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்கள்" (புஹாரி:2004)
 நாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்கவில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்கிறார்கள்.
 ஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.
 எத்தனை நோன்புகள்?
முஹர்ரம் பிறை 9,10 (அதாவது கத்தாரில் வரும் 13ம் 14ம் தேதிகளில் புதன் வியாழன்) ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.
 இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ்! வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் "நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்" என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)
 இந்நோன்பின் சிறப்புக்கள்
  • இத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.
  • முன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரம்.
  • மூஸா (அலை)யை கண்ணியப் படுத்துதல்.
  • யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.
ஆகியவை இந்நோன்புக்குரிய சிறப்பம்சங்களாகும்.
 இத்தினத்தில் செய்யக்கூடாதவை
குறிப்பாக "ஷீஆ"க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹுசைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி "யா ஹு சைன் யாஅலீ" என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து ஆடைகளை கிழித்து வாள் கத்தி போன்றவற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: "யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும் ஆடையை கிழித்துக் கொண்டும் அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல".(புஹாரி:1212)
 முஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அமைந்துள்ளது. குறிப்பாக ஷீஆ"க்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.
 இன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாரியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.
 இந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும்! இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா? அதில் என்ன தவறு? என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்!
 அவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? என்று கேட்கப் படும்."(முலக்:8)
 அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.
அன்புடன்  அபூ அத்லாஃ


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற...

Popular Posts