லேபிள்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்னசெய்யவேண்டும் தெரியுமா...?

உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில்நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.

அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும் இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாக இருந்தால் இது உடல் உஷ்ணத்தை தூண்டி பித்தத்திற்கு வழிவகுக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது பித்தம் குணமாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்தது.

அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது.

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும். எனவே உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் இரண்டு நாட்கள் ஊறவைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/flaxseed-which-dissolves-bad-fats-and-increases-the-amount-of-good-fats-121062600046_1.html


--

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

பல் கூச்சத்தை போக்குவதற்கான சில எளியவழிகள் !!

பல் வலியைக் கூட தாங்கிக் கொள்ளும் பலரால் பல் கூச்சத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. கல் உப்பினை சிறிது வெது வெதுப்பான நீருடன் சேர்த்து வாயினுள் நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் செய்து வந்தால் பல் கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறை ஆரம்பிக்கும்.

கிராம்பு: கிராம்கராம்பை வாயினுள் வைத்து கொப்பளித்து உமிழ்வதன் மூலமும் பல் கூச்சத்தை குறைக்க முடியும். வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கும் கிராம்பு பயன்படுகின்றது.

புதினா இலை: புதினா இலையை வெயிலில் உலர வைத்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும். இதை வெறுமனே வாயில் போட்டு மென்று வந்தாலும் பற்களில் ஏற்படும் கூச்சம் குறையும்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய்யை பல் துலக்குவதற்கு முன் நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும். இந்த தேங்காய் எண்ணெய் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்துவிடும்.

கொய்யா இலை: கொய்யா இலையினை நன்றாக வாயினுள் போட்டு மென்று ஈறுகளில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு தடவைகள் செய்து வந்தால் பல்கூச்சம் வேகமாக மறையும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/here-are-some-simple-ways-to-get-rid-of-tooth-sensitive-121062600052_1.html


--

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

மருத்துவ குணங்களை கொண்டதா முல்லை பூ?

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பூ மட்டுமல்லாமல்அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

 

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும். முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை  குறைவு குணமாகும்.

முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும். ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி  பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணிநேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-nutrients-in-green-peas-and-its-amazing-benefits-121062800027_1.html


--

வியாழன், 16 பிப்ரவரி, 2023

சிறுநீர்க்கடுப்பை குணப்படுத்தும் அற்புதபயன்கள் நிறைந்த கரும்புச்சாறு...!!

குளிர்ச்சியூட்டும், மலமிளக்கியாக செயல்படும். சிறுநீர் பெருக்கியாக செயல்படும். பித்தத்தை நீக்கும்.

சிறுநீர்க்கடுப்பை குணப்படுத்தும். குடல்புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும். புண்களை ஆற்றும். கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு கலந்து அருந்த வலிப்பு குணமாகும். ஒரு கப் சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி  பெறும்.

வெல்லத்துடன் மஞ்சள் தூளை குழைத்து தீப்புண்கள் மேல் தடவ புண் ஆறும். கரும்பு சர்க்கரையும் சிலவகை மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.

கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்திவர பித்தம் குறையும். உள் சூடு, குடல்புண், மூலம் போன்றவை குணமாகும். கரும்புச் சாறுடன் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து அருந்த மலச்சிக்கல் தீரும்.

கரும்பு கற்கண்டு தாதுவலிமையை கூட்டும். பாலில் கரும்பு கற்கண்டு, முருங்கைப்பூ சேர்த்து காய்த்து தினசரி இரவு ஒரு கப் சாப்பிட்டு வர தாது புஷ்டி ஏற்படும். தணலில் சர்க்கரையோடு சாம்பிராணிப் பொடி சேர்த்து புகைக்க கிருமிகள் அழியும், கரப்பான், கொசுத்தொல்லை மறையும்.

நீரில் கரும்பு வேரை இட்டு காய்த்து அரை கப் வீதம் இருமுறை குடிக்க சிறுநீர்க்கடுப்பு தீரும். சர்க்கரை கலந்த நீரால் கண்களை கழுவி வர புகையால் பாதிப்பான  கண்கள் நலம் பெறும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/sugarcane-juice-is-full-of-amazing-benefits-to-cure-urinary-incontinence-121062900058_1.html


--

திங்கள், 13 பிப்ரவரி, 2023

அரிப்பு ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் !!


உணவு பழக்க வழக்கங்கள் கூட அரிப்பை அதிகரிக்கலாம். பசும்பால் மற்றும் முட்டைகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் சாப்பிட வேண்டிய உணவுகள் கீழே பின்வருமாறு.

சிக்கன் சூப்: சிக்கன் சூப் அரிப்பு ஏற்பட்டால் சாப்பிடுவது நல்லது. சிக்கன் சூப் அரிப்பு ஏற்படாமல் தடுக்க மற்றும் குடி போதையில் இருந்து வெளியேற உதவுகிறது. அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் அமினோ அமிலம் உதவுகிறது.

மீன் எண்ணெய்: மீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை  குறைக்கிறது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை தோல் மேல் ஏற்படும்  அரிப்பை தடுக்கிறது.

விதைகள்: பூசணிக்காய் விதைகள், எள்ளு போன்ற விதைகளில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.

காய்கறிகள்: சுத்தமான காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் அழற்சியை தடுக்கிறது.

அரிப்பு ஏற்படாமல் இருக்க சாப்பிட கூடாத உணவுகள்: எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படுகிறது. இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/itching-to-avoid-foods-that-should-be-avoided-121062900093_1.html


--

வியாழன், 9 பிப்ரவரி, 2023

டீ பேக்குகளை பயன்படுத்தி சில எளிய அழகு குறிப்புகள்...!!டீ பேக்குகளின் மிகவும் பொதுவான அழகு பயன்பாடுகளில் ஒன்று, கண்களின் வீக்கத்தை குறைப்பதாகும்.

டீயில் உள்ள காஃபின் இரத்த நாளங்களை சுருக்க உதவுகிறது. அதனால் இது வீக்கத்தைக் குறைக்கிறது. இதற்கு பிளாக் டீ அல்லது க்ரீன் டீ என எந்த டீ பேக்கை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பிளாக் சர்கிள்ஸ் எனப்படும் கண்களை சுற்றி கானப்படும் கரு வளையத்தை அகற்றவும் பிளாக் டீ அல்லது க்ரீன் டீ பேக்கை பயன்படுத்தலாம். இதனால் கண்  பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களை சுருங்க உதவுகிறது.

க்ரீன் டீ தயார் செய்த பிறகு அந்த டீ பேக்கை குப்பைத் தொட்டியில் வீசாமல் அந்த டீ பையைத் திறந்து நாம் பயன்படுத்தும் ஃபேஸ் பேக்கில் அதன் டீ இலைகளைப் பயன்படுத்தலாம். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. இது இறந்த தோல் செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு இவற்றை பயன்படுத்தலாம். கொதிக்கும் நீரில் ஒரு சில கிரீன் டீ பைகளைச் போட வேண்டும்.  பின்னர் அந்த டீயை ஆற வைத்து குளிர்ந்தவுடன், ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு நீரில் கூந்தலை அலச  வேண்டும்.

வெண்படல அல்லது கண் தொற்று இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் குளிர்ந்த தேநீர் பைகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கத்தையும், பாதிப்பையும் குறைக்கவும் உதவும்

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/some-simple-beauty-tips-for-using-tea-bags-121062900094_1.html

--

திங்கள், 6 பிப்ரவரி, 2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் பழங்கள்...!!


உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும்  நிறைய உள்ளன.

உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 

பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும்.

பழங்களை உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.

உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு  எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான  ஆரோக்கியத்தை அடையலாம்.

இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு  சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும். 

அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/let-s-learn-about-the-main-medicinal-properties-of-seetha-fruit-121063000044_1.html


--

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கு நிவாரணம் தரும் பாதாம் பிசின் !!

உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கு நிவாரணம் தரும் பாதாம் பிசின் !!

பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல், செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/almond-resin-gives-relief-from-heat-related-diseases-121063000068_1.html


--

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts