லேபிள்கள்

சனி, 29 ஜூன், 2024

க்ரில் சிக்கன்பிரியரா? கருகிப் போனஎலும்பை சாப்பிட்டால் புற்று நோய் வரும் அபாயம்.

இன்று எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுகளில் க்ரில் சிக்கனும் ஒன்றாகும்.

ரோட்டோர ஹோட்டல் கடைகளில் எங்கு பார்த்தாலும் இந்த க்ரில் மாமிச உணவுகள் தான் தொங்க விடப்பட்டு சுடச்சுட பரிமாறப் படுகிறது.

என்ன தான் இது சுவையைத்  தந்தாலும் இதில் பக்க விளைவுகளும் உண்டு.

பக்கவிளைவு:

க்ரில் வகை மாமிச உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் வருகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பார்பிக்யூ போன்ற ரெஸ்டாரென்ட்களில் பயன் படுத்தப்படும் எண்ணெயில் PHA என்ற நச்சுப்  பொருள் உள்ளது.

இது சருமத்தின் வழியாக ஊடுருவி உடலுக்கு கேடு விளைக்க கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றிக்கறி, வான்கோழி என எந்த வகையான இறைச்சியை கிரில்லில் வைத்து சுடும் போதும், அதில் இருந்து வெளிப்படும் பாலிசைக்ளிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் மற்றும் ஹீடெரோசைக்ளிக் அமைன்ஸ் என்ற வேதிப்பொருளே புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது.

இதனைத்  தடுக்க என்ன செய்யலாம்?

இந்த வேதிப்பொருள் வெளியேறுவதை தடுக்க கிரில் செய்யக்கூடிய இறைச்சி துண்டுகளுக்கு இடையே வெங்காயம், குடை மிளகாயை குத்தி சமைக்க வேண்டும். அப்படி செய்தால் பாலிசைக்ளிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் மற்றும் ஹீடெரோசைக்ளிக் அமைன்ஸ் சுரக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியகுறிப்பு

க்ரில் சிக்கனில் உள்ள கருகிப் போன எலும்பை சாப்பிடக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றினால் பாதுகாப்பாக கிரில் உணவை சுவைக்கலாம்.



--

புதன், 26 ஜூன், 2024

மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கக் கூடாத உணவுகள்.

மைக்ரோவேவில் நீங்கள் சிக்கன் அல்லது சிக்கன் சேர்த்து செய்யப்படும் எந்த உணவுப் பொருட்களையும் சூடு செய்யக் கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட மைக்ரோவேவ், இன்று கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகளில் இருப்பதைக் காணமுடிகிறது. மைக்ரோவேவ் சமையலை எளிதாக்குகிறது மற்றும் துரிதப்படுத்துகிறது.

மேலும் சமைப்பதற்கு மட்டுமின்றி உணவை சூடுபடுத்தவும் மைக்ரோவேவ் ஓவன் பலர் வீட்டில் பயன்படுத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட உணவு வகைகளை மைக்ரோவேவில் தான் செய்ய முடியும்.

ஆனால் எல்லா உணவுகளையும் மைக்ரோவேவ் ஓவனில் செய்து பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஒரு சில உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் எப்போதும் செய்யக்கூடாது. அந்த உணவு வகைகளின் பட்டியல் இங்கே.

சிக்கன் : மைக்ரோவேவில் நீங்கள் சிக்கன் அல்லது சிக்கன் சேர்த்து செய்யப்படும் எந்த உணவுப் பொருட்களையும் சூடு செய்யக் கூடாது. அப்படி செய்தால் அதில் இருக்கும் புரதச்சத்து குறைந்து விடும். அது மட்டுமின்றி, சுவையும் குறையும். இதனால் தான் எப்பொழுதுமே சிக்கனை சூடு படுத்த மைக்ரோவேவவைப் பயன்படுத்தக் கூடாது என்று பலரும் கூறுகிறார்கள்.

முட்டைகள் : ஒரு சில நிமிடங்களில் பல இனிப்பு வகைகளை மைக்ரோவேவ் அவனில் செய்துவிடலாம். கடினமான உணவுகளையே சமைக்கிரோமே, முட்டைகளை சமைக்க முடியாதா என்று பலரும் அவசரத்தில் முட்டையை மைக்ரோ ஓவனில் வேக வைப்பார்கள். ஆனால் மைக்ரோவேவ் ஓவனின் இன்ப்ரா ரெட் கதிர்களின் அடிப்படையில் செயல்படுவதால், முட்டையில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும் எனவே முட்டையை எப்போதுமே மைக்ரோவேவ் ஓவனில் வேக வைக்கக்கூடாது.

எண்ணெயை சூடு செய்வது : முட்டையைப் போலவே மைக்ரோவேவில் எண்ணையை எப்போதுமே சூடு படுத்த கூடாது. அனைத்து எண்ணெய் வகைகளுக்கும் இது பொருந்தும். எண்ணையை ஓவனில் சூடாக்கும் பொழுது அதில் இருக்கும் நல்ல கொழுப்பு நீங்கிவிடுகிறது. அதேபோல அதில் இருக்கும் வெப்ப கதிர்கள் கெட்ட கொழுப்பினை உருவாக்கி, நச்சுத்தன்மை நிறைந்ததாக வெளிப்படுத்துகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் நச்சுத் தன்மை நிறைந்ததாக மாறும்.

காளான்கள் : ஓவன் பயன்படுத்தும் பொழுது ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் அதன் சத்துக்களை இழக்கும் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்தது. அந்தப் பட்டியலில் காளானும் உள்ளது. எப்போதுமே மைக்ரோவேவ் ஓவனில் காளானை சமைக்கக் கூடாது. அது உணவை நஞ்சாக்கும்.

அரிசி : அரிசி சாதம் செய்வது ஒரு கலை. சாதம் உதிர் உதிராக, குழையாமல் அதே சமயத்தில் பதமாக வெந்திருக்க வேண்டும். பல உணவு வகைகளை எளிதாக ஓவனில் சமைப்பது போல அரிசியையும் சிலர் செய்கிறார்கள். ஆனால் அரிசியை ஓவனில் சமைத்தால் ஃபுட் பாய்சன் ஏற்படும் ஆபத்து உள்ளது. அரிசி நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.



--

ஞாயிறு, 23 ஜூன், 2024

ஆண் பெண் வேறுபட்ட சிந்தனைக்கு இது தான் உண்மையான காரணமா?*

ஆண்களும் - பெண்களும் உடலளவில் வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர். மேலும், மனம், மூளை போன்றவை அனைவர்க்கும் பொதுவானது என்ற எண்ணம் இருக்கிறது.

ஆனால், இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது.

இவ்வாறு இருபாலருக்கும் மூளை வித்தியாசப்படும் காரணத்தால், இருவரும் தங்களை முழுமையாக புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு கோணங்களில் செயலாற்றுகிறது என்பதே உளவியல் கூற்று.

பெண்களின் மூளை அமைப்பானது 3 மையத்தை கொண்டுள்ளது. முதல் மானியம் உணர்ச்சியை உணரவும், இரண்டாவது மொழிவளத்திற்கும், வார்த்தை மற்றும் உரையாடலை ரசிக்கவும், மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு தனிநபரை எடைபோடவும் உதவி செய்கிறது.

ஆனால், ஆண்களிடமும் உள்ள மூளையின் 3 மையங்கள் வேறு கோணத்தில் செயல்படுகிறது. பெண்களை போல ஆண்களால் பேச இயலாது. தான் உணரும் விஷயத்தை பெண்ணைப்போல விவரித்து கூற இயலாது. எதிராளியின் முகத்தை பார்த்து மனதை அறியும் திறனும் குறைவு.

ஆண்களுக்கான மூளை அமைப்பு கண்களின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும். அழகான பெண்களை விரும்புவதற்கு காரணமும் இதுதான். பெண்களின் மூளையில் இன்பம் என்பது கிடையாது. அதனால் கட்சிகளால் இன்பம் கிடைக்காமல், பேசினால் இன்பம் கிடைக்கிறது.

அதனாலேயே ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது. இதற்கு ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



--

புதன், 19 ஜூன், 2024

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?*

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால், ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் வாங்குவதா அல்லது டாப் லோடிங் வாஷிங் மெஷின் வாங்குவதா என்பதே ஆகும்.

செயல்திறன் மற்றும் தனி விருப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இவற்றில் எதை தேர்வு செய்வது என்பது குறித்து தீர்மானிக்கின்றன. ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் பெரும்பாலும் அதிகமான வசதிகளை கொண்டிருக்கும். இவற்றின் செயல்திறன் அதிகம், நீர் பயன்பாடு குறைவு. டாப் லோடிங் வாஷிங் மெஷின் என்பது துணிகளை போடவும், எடுக்கவும் சௌகரியமாக இருக்கும். அத்துடன் இதில் பராமரிப்பும் குறைவு. இந்த இரண்டு வகையான வாஷிங் மெஷின்களுக்கு இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசங்களை நாம் பார்க்கலாம்.

சுத்தமாக சலவை செய்தல் : வாஷிங் மெஷினில் சுத்தமாக துணிகளை சலவை செய்வது என்பது தண்ணீரின் தன்மை, பயன்படுத்தும் சோப்புத் தூள், எத்தனை முறை சுற்றுகிறது என்பதை பொறுத்து மாறுபடும். டாப் லோடிங் மிஷின்களை காட்டிலும், ஃபிரண்ட் லோடிங் மெஷினில் துணிகளில் உள்ள அழுக்கு மற்றும் கறைகள் நன்றாக நீங்கும். ஃபிரண்ட் லோடிங் மெஷினில் உள்ள ட்ரம்களில் நல்ல சுத்தும் திறன் இருப்பதால் துணிகள் நன்றாக துவைக்கப்படும்.

வேகமாக சலவை செய்தல் : துணிகளை துவைக்கும் நேரம் முழுமைக்கும், டாப் லோடிங் மெஷின்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும் என்பதால் இதில் துணிகள் துவைக்கப்படும் வேக கொஞ்சம் அதிகம். ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் ஒருமுறை துணிகளை சுத்தம் செய்வதற்கு 60 நிமிடங்கள் தேவைப்படும். பெரும்பாலான மெஷின்கள் 30 நிமிட சலவை திறனுடன் வருகின்றது என்றாலும், அது லேசான துணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வேகமாக காய வைத்தல் : ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் இருந்து டிரையருக்கு துணிகள் மாற்றப்படுவதற்கு முன்பாகவே ஏராளமான தண்ணீரை பிழிந்து எடுத்துவிடும். மேலும், இந்த டிரையர்களில் துணிகள் வேகமாக காய்ந்து விடும். ஆனால், இந்த மெஷினில் வைப்ரேஷன் ஏற்படும் என்பதால் அதிக சத்தம் கேட்கும். ஆனால், டாப் லோடிங் வாஷிங் மெஷினில் துணிகளை காய வைக்க மிகுந்த நேரம் எடுக்கும்.

சௌகரியமான பயன்பாடு : டாப் லோடிங் வாஷிங் மெஷின்கள் பொதுவாக நுகர்வோரின் உயரத்துக்கு ஏற்ற பயன்பாட்டில் இருக்கும். ஆனால், ஃபிரண்ட் லோடிங் மிஷின்களை பயன்படுத்த நாம் குனிந்து சிரமப்பட வேண்டியிருக்கும்.

சத்தமின்றி இயக்கம் : ஃபிரண்ட் லோடிங் மற்றும் டாப் லோடிங் ஆகிய இரண்டு வகை வாஷிங் மெஷின்களிலும் வைப்ரேஷனை குறைக்கும் நவீன மாடல்கள் உள்ளன. பெட்ரூம் அல்லது லிவிங் ரூம் அருகே வைப்பதற்கு இவை உகந்தவை ஆகும். எனினும், டாப் லோடிங் மெஷினில் சலவை செய்யும்போது சத்தம் வரும்

பராமரிப்பு : டாப் லோடிங் மெஷின்களை காட்டிலும் ஃபிரண்ட் லோடிங் மெஷின்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், டாப் லோடிங் மெஷின்களில் தண்ணீர் தாமாகவே கீழ் இறங்கி விடும் என்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.



--

ஞாயிறு, 16 ஜூன், 2024

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப்புண் ஏற்படாது.

1/4 தேக்கரண்டி கரு மிளகுத்தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3, 4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும் ,3, 4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும் 3, 4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

கடுமையான இருமல் இருந்தால் 3கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும், இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.



--

வியாழன், 13 ஜூன், 2024

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?


குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர்.

இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம்.

வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்.

துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம்.

குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும்.

சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.



--

ஞாயிறு, 9 ஜூன், 2024

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர், " நாம் பயன்படுத்தும் எண்ணெய் பொருட்கள் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சமையலில் முக்கியப்பொருள் எண்ணெய். எண்ணெய்யின் தன்மை பொறுத்து உணவின் சுவையே மாறும். ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிட்டத்தட்ட 40 கலோரிகள் வரை கொண்டது. நம் ஊர் சமையலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட பலதரப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், நாம் சமையலில் தினசரிப் பயன்படுத்தும் இந்த எண்ணெய்க்கு எக்ஸ்பயரி தேதி உண்டா என என்றைக்காவது யோசித்திருக்கிறோமா. நம் விகடன் வாசகர் ஒருவருக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

சமையல் எண்ணெய்

நம் வாசகரின் கேள்வியை 'தமிழ்நாடு ஆயில் அண்ட் சீட்ஸ் அசோசியேசனிடம்' முன்வைத்தோம். அவர்கள் கூறியதாவது, "மற்ற சமையல் பொருட்களைப் போல எண்ணெய்க்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. பொதுவாக எண்ணெய் உற்பத்தி தேதியில் இருந்து 6 முதல் 9 மாதம் வரை நன்றாக இருக்கும். ஒரு வருட காலம் வரை கூடக் கெடாமல் இருக்கும். அது எண்ணெய்யின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்தது. நீங்கள் எண்ணெய் வாங்கும்போதே அந்த பாக்கெட்டின் பின்புறம் அதன் காலாவதித் தேதி போடப்பட்டிருக்கும். அதனைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.

எண்ணெய்க்கு நிறமும் மனமும் மிகவும் முக்கியம். நிறமும் அல்லது மனம் இரண்டில் ஏதாவது ஒன்றில் மாற்றம் தெரிந்தாலும் அந்த எண்ணெய் பயன்படுத்தத் தகுதியற்றது என அர்த்தம். அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது." என்று கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

 சமையல் எண்ணெய்

மேலும், எண்ணெய்களை எப்படி வைத்திருக்கிறோம் என்பதும் முக்கியம். பெரும்பாலானோர் எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைச் சரியாக மூடாமல் வைத்திருப்பார்கள். மேலும் சிலர், பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என நாம் சமைப்பதற்குப் பயன்படுத்தும் கேஸ் அடுப்புக்கு அருகிலேயே எண்ணெய்களை வைத்திருப்பார்கள். ஆனால், அப்படி வைத்திருக்கக் கூடாது. எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைப் பயன்படுத்தி முடித்தவுடன் காற்றும் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். அதோடு காற்றோட்டமான இடங்களிலும் எண்ணெய்யை வைக்க வேண்டும். நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி அல்லது சூடான இடங்களிலோ எண்ணெய்யை வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு சரியான முறையில் வைத்திருந்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய்யை நம்மால் பயன்படுத்த முடியும்.


--

வியாழன், 6 ஜூன், 2024

வைட்டமின் டி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து.

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. உலகெங்கிலும் இதே நிலை தான்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என்பதோடு, கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்களும் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிகின்றனர். எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதனால், விட்டமின் டி (Vitamin D) குறைபாட்டை போக்க மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின் டி இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உடலில் வைட்டமின் டி அளவு 30 முதல் 60 ng/ml வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது தீவிர உடல் பிரச்சனையாக மாறும். வைட்டமின் டி குறைபாட்டால் (Vitamin D Deficiency) ஏற்படும் பாதிப்பை பற்றி மருத்துவர்களிடம் பலமுறை கேட்டிருப்பீர்கள். ஆனால் உடலில் வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை டாக்டர் ரேணு சாவ்லா தெரிவித்தார்.

வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் சோர்வு:

வைட்டமின் டி நம் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்து கொள்ள உதவுகிறது. உடலுக்கு 8.5 முதல் 10.8 mg/dL கால்சியம் மட்டுமே தேவை. கால்சியம் அதிகமானால், நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படும். வயிற்றில் வலி, மலச்சிக்கல், சோர்வு போன்றவை ஏற்படும். அதிக அளவில் சிறுநீர் கழித்தல், பசியின்மை, சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இதயம் தொடர்பான நோய்களூம் ஏற்படும். அதிகப்படியான கால்சியம் வாழ்க்கையை பாதிக்கலாம்.

மனச்சோர்வு மற்றும் மன நோய்:

உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், கால்சியமும் அதிகமாக உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. மனச்சோர்வு, குழப்பம் மற்றும் மனநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக மன உளைச்சல் இருந்தாலோ, தேவையில்லாத கலக்க ஏற்பட்டாலோ, அல்லது சிறிய விஷயம் கூட உங்களை மனச்சோர்வடையச் செய்து குழப்பத்தில் ஆழ்த்தினாலோ, உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து, விட்டமின் டி அதிகம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பு:

அதிகப்படியான வைட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

பசியின்மை மற்றும் வாந்தி:

வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். பசியின்மை ஏற்படுவதோடு, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வும் பல சமயங்களில் ஏற்படும்.



--

திங்கள், 3 ஜூன், 2024

காஃபி பழக்கத்தை கைவிட நினைக்திறீர்களா? உங்களுக்கான 5 ஆரோக்கியமான மாற்று பானங்கள்.

காஃபி சிலரை அடிமையாக்கிவிடும்.

அது சிலருக்கு உடல் நல பாதிப்புகளையும் உண்டாக்கலாம். கஃபைன் அதிகரிக்கும்போது உண்டாகும் பக்கவிளைவுகள் ஏராளம் உள்ளன. அதுமட்டுமன்றி சிலர் உடல் எடையை குறைக்க வேண்டி காஃபி பழக்கத்தை கைவிட நினைக்கலாம். உங்களுடைய காரணம் எதுவாக இருந்தாலும் காஃபி பழக்கத்தை கைவிட இந்த 5 பானங்கள் உதவலாம். டிரை பண்ணி பாருங்க.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு குறைந்த கலோரி பானம். இது எடையைக் குறைக்கவும் உதவும். இது சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் அசிட்டிக் அமிலம் என்ற கலவை உள்ளது கூடுதல் சிறப்பு. வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மெதுவாக பருகவும். பானத்தை இனிமையாக்க ½ தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம்.

மட்சா டீ : இதுதான் இப்போது ஃபிட்னஸ் பிரியர்களின் டிரெண்டாக உள்ளது. மட்சா டீ என்பது ஒரு பச்சை நிற பானமாகும். ஜப்பானியர்களின் ஆரோக்கிய ரகசியத்திற்கு காரணம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. மட்சா டீயில் காஃபின் உள்ளது. ஆனால் காபி அளவுக்கு இல்லை. இது ஒரு வேர் செடியாகும். வெந்நீரில் 1-2 டீஸ்பூன் மட்சா பவுடரை கலந்து நன்றாக கிளறி குடிக்க வேண்டும்.

ஹாட் சாக்லெட் : குளிர்கால இரவில் சூடான ஒரு கப் ஹாட் சாக்லேட் பானம் என்றால் யார்தான் விரும்ப மாட்டார்கள்? கோகோ மற்றும் பால் கலவையான இது காஃபின் இல்லாத மாற்றாகும். சூடான சாக்லேட் காபிக்கு உங்கள் காலையையும் சுருசுருப்பாக மாற்றும்.

ஸ்மூதி : ஸ்மூத்தி என்பது ஒரு முழுமையான உணவு போன்றது. இரவு அதிகமாக உணவு சாப்பிட விரும்பவில்லை எனில் ஒரு கிளாஸ் ஸ்மூத்தி சாப்பிடுங்கள். உங்கள் விருப்பம்போல் பால் அல்லது தயிர் கலந்து ஸ்மூத்திகளை செய்யலாம். பால், வாழைப்பழம் மற்றும் பீனட் பட்டர் ஆகியவற்றின் கலவை குடித்தால் கூடுதல் ஆற்றல் கிடைக்கும் , இதனால் நீங்கள் நீண்ட நேரம் உற்சாகமாக இருப்பீர்கள். ஸ்மூத்தியில் பெர்ரி, ஆப்பிள் அல்லது உங்களுக்குப் பிடித்த பழங்களையும் சேர்க்கலாம்.

மஞ்சள் பால் : மஞ்சள் பால் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும். இது உடனடி ஆற்றலை வழங்க பயன்படுகிறது. இது உங்களை மேலும் நீண்ட நேரம் ஆற்றலுடன் வைக்க உதவுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மஞ்சள் அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாகும். மஞ்சள் பாலை இரவில் உட்கொள்வதால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஏனெனில் இது செரிமானம் மற்றும் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. பாலில் இலவங்கப்பட்டை, இஞ்சி, வெல்லம் மற்றும் கருப்பு மிளகுத் தூள் கூட சேர்க்கலாம், சுவையாகவும் இருக்கும்.



--

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts