லேபிள்கள்

COMEDY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COMEDY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..


1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க?

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்?

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...?

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில சூர்யா படங்களுக்கு தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..?

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..?

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..?(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..?
http://www.muthamilmantram.com
www.sahabudeen.com

திங்கள், 16 ஏப்ரல், 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி ?


1. படிச்சவரும் முட்டாளும் 

படிச்சவர் யாரு? முட்டாள் யாரு? இது ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம். ஆனா எப்படி யோசிக்கிறது?
 

படிச்சவர் அனாவசியமா யோசிப்பார் . முட்டாள் யோசிக்கவே மாட்டார் அப்படினு ஒரு பொது கருத்து வைச்சிப்போம். ஒரு பக்கத்துல படிச்சவரே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். மறு பக்கத்துல முட்டாளே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். இவங்க சொல்ற கருத்தை எல்லாம் எடுத்து ஒரு குறிப்பு வைச்சிப்போம். அப்புறம் யாரு படிச்சவர், யாரு முட்டாளு அப்படினு தெரிஞ்சி போயிரும். இவங்க பேசி முடிக்கிறவரைக்கும் நாம காத்திருப்பது சரிதானுங்களா, அதுதான் இல்லை. இவங்க பேசறதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்காங்க பாருங்க அவங்க தான் முட்டாளுங்க. இதுவும் சரிதானா, அதுதான் இல்லை.
 

சரி, தமிழ் விக்கிபீடியாவில , ஆங்கில விக்கிபீடியாவில அப்படி இப்படி பீடியாவில் எல்லாம் போய் தேடித்தான் பாருங்க. படிச்சவர், முட்டாள் அப்படிங்கிறதுக்கு என்ன விளக்கம் அப்படினு. ஒரு மண்ணும் இருக்காது. எதுக்குனா இதை எல்லாம் ஒரு கட்டத்துக்குள்ள விளக்க முடியாது. இது ஒரு பெரிய வட்டம். சுத்தி சுத்தி வரும்.
 

படிச்சவர் : குறைந்தது ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். இவருக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை பாகுபடுத்தி பார்க்கத் தெரியும். சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவதில் சிறப்பானவர்.
 

முட்டாள் : இவருக்கு குறைந்தபட்சம் ஒரு மொழியை கூட எழுதவோப் படிக்கவோ தெரியாது. சமயோசிதமாக சிந்திப்பதில் சற்று குறைபாடு இவரிடம் இருக்கும். என்ன பேசுகிறார் என்பதற்கான சிந்தனை கூட இவரிடம் இருப்பதில்லை.
 

சரி படிச்சவங்களுல முட்டாளுங்க இல்லையா அப்படினு சமயோசிதமா ஒரு கேள்வி வரும். முட்டாளுங்க படிச்சவங்க மாதிரி நடந்துக்க முடியாதா அப்படினு இன்னொரு கேள்வி வரும். இப்படி கேள்வி கேள்வி கேட்கறவங்க எல்லாம் படிச்சவங்கனு சொல்ல முடியாது. எதுக்குனா முட்டாத்தனமா கேள்வி கேட்கறவங்க முக்காவாசி பேரு படிச்சவங்கதான்.
 

ஆக மொத்தம் படிச்சவங்களுல முட்டாளுங்க இருக்காங்க. அவங்கதான் படித்த முட்டாள்கள். இப்ப இருக்கிற வாழ்க்கையில நூத்துக்கு ஐம்பது சதவிகிதம் இப்படிப்பட்ட படித்த முட்டாள்கள் தான் உலகை ஆக்கிரமிச்சிட்டு இருக்காங்க. மீதி ஐம்பது சதவிகிதம் படிச்ச விரக்தியில ஒன்னும் செய்ய முடியாதா அப்படிங்கிற மன அழுத்தத்துல இருக்காங்க. அவங்களும் ஒரு முட்டாள் கூட்டம் தான். ஆக இது, மொத்தத்துல ஒரு முட்டாள்களின் உலகம். இல்லை, இல்லை நான் முட்டாள் இல்லை, அப்படி இப்படினு நீங்க குதிச்சா நல்லா குறிச்சி வைச்சிகோங்க, நீங்கதான் உண்மையிலேயே முட்டாள். 'எப்படி மன நிலை பிறழ்ந்தவர் தன மனநிலையை குறித்த சிந்தனையை அறிய இயலாதோ அதைப் போலவே முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தை ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை. அப்படி முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டாலும் முட்டாள்களாகவே வாழ்பவர்கள் இருப்பவர்கள் அதிகம்'.
 

ஒரு பாட்டு கேள்வி பட்டுருப்பீங்க, அந்த பாட்டை இன்னொருதரம் கேட்டு பாருங்க. நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவனு நாலு பேரு சொன்னாங்க, ஏற்கனவே சொன்னவங்க ஏமாளியானாங்க, எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க.
 

எப்படி சீரும் சிறப்புமா வாழ்க்கையில வாழறது அப்படினு புத்தி சொல்றதை விட, எப்படி சீரழிஞ்சி போறதுனு சொன்னா ரொம்பவே நல்லா இருக்கும்.
 

நல்லது கெட்டது பாகுபாடு படுத்தி பார்க்கிறவங்க நல்லவர், கெட்டவர் அப்படினு பிரிச்சி பார்க்கலாம். படித்த நல்லவர், படித்த கெட்டவர். நல்ல முட்டாள், கெட்ட முட்டாள். ஆனா எப்ப கெடுதலை குறித்த சிந்தனை இருக்கோ அவங்க முட்டாள் அப்படினு ஆயிரும், அதனால படித்த கெட்டவர் எல்லாம் சரியில்லை. அவர் முட்டாள். அதுதான் முன்னமே சொல்லிட்டமே முட்டாள்களின் உலகம் இது. படித்த, படிக்காத முட்டாள்களின் உலகம்.
 

சரி படித்த முட்டாளைத் தவிர்த்து முட்டாள்களுல, ஓரளவு சிந்திக்க தெரிந்த முட்டாள், அடி முட்டாள், வடிகட்டின முட்டாள் அப்படிங்கிற பிரிவினை எல்லாம் உண்டு. அதனால அவங்ககளை எந்த பிரிவுல சேர்க்கிறது அப்படிங்கிற சிந்தனையை அப்புறம் பார்த்துக்கிரலாம்.
 

எதுக்கு இப்படி ஒரு விவரிப்பு அப்படினா வாழ்க்கையில் சீரழிய முதல் தேவை நீங்கள் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்படிப்பட்ட முட்டாள் என்பதை உங்கள் செயல்பாடுகள் தீர்மானிக்கும்.

இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் என்ன தெரியுமா? என்னதான் நான் இது முட்டாள்களின் உலகம் அப்படினு ஒரு பொது கருத்தை சொன்னாலும் உங்க கடமைனு ஒன்னு இருக்கு இல்லையா? அது என்னனா...

நீங்க முட்டாளா, இல்லையா அப்படிங்கிற ஒரு முடிவுக்கு இதுநாள் வரை நீங்க நடந்து கொண்ட முறையை, இப்ப நடந்துகிட்ட முறையை ஒரு அலசு அலசுனும். அது உங்க நடத்தை, படிப்பு, பிறர் கிட்ட எப்படி நடந்து கிட்டீங்க, துரோகம், நட்பு, காதல், கத்தரிக்காய், திருமணம், புடலங்காய், வியாபாரம், கல்வி, கலவி பொருளாதாரம், கடன், உடன், ரசிக கூட்டம், தொண்டர் கூட்டம் அது, இது அப்படினு ஒன்னு விடாம அலசனும். அலசிட்டு நீங்க முட்டாளா இல்லையானு ஒரு முடிவுக்கு வரனும், அப்படி நீங்க உங்களை முட்டாள் அப்படினு முடிவு கட்டிட்டா வாழ்க்கையில் சீரழியறதுக்கு உங்களை தயார் படுத்திட்டீங்கனு மார் தட்டி சொல்லிகிரலாம்.
 
Muthamilmantram

புதன், 25 ஜனவரி, 2012

சர்தார்ஜி டூ வீலரில்


சர்தார்ஜி டூ வீலரில் ஒரு லாரியை பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.

அவரின் வினோதமான ஆக்சனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்க, லாரியின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது!

ஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்."மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்"
ஒரு மாணவன் கேட்டான்."இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்?"

ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.
ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 200 ரூபாய் குறைவாக இருந்தது.
எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 200 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான். 
ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!
"இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான்.
"என் தாத்தா...அந்த காலத்துலே பெரிய ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன்.
" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 200 ரூபாய் கூடுதலா இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன்
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.
" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் டென்ஷனாக

செவ்வாய், 24 ஜனவரி, 2012

என்னா மீட்டிங்கு.......


இந்த மீட்டிங்கு இருக்கு பாருங்க மீட்டிங்கு..........அதாங்க நம்ம ஆப்பீசுகள்ல போடுவாய்ங்களே மீட்டிங்கு அதைத்தான் சொல்றேன்......ஆபீஸ்ல சில நாதாரிங்க சும்மாவே கலக்டர் மாதிரி பில்டப் கொடுத்திட்டிருப்பானுங்க, மீட்டிங் வேற வந்துட்டாபோதும் அவ்ளோதான் கெவர்னர் ரேஞ்சுக்கு ஆகிடுவானுங்க......  சம்பந்தமே இல்லாம கைய கால ஆட்டி பேசுறது, வானத்த வளைக்கிறேன், பூமிய சுத்த வெக்கிறேன்னு சலம்புறது. அவனுக மட்டும் இல்லேன்னா கம்பேனிய இன்னேரம் காக்கா தூக்கிட்டு போயிருக்கும்னு அலப்பறை பண்றதுன்னு நல்லா எண்டர்டெயின் பண்ணுவானுங்க. பாசும் எதையுமே கண்டுக்காம காப்பிய சப்பி சப்பி குடிச்சிக்கிட்டு ஜாலியா ஐபேடை நோண்டிக்கிட்டு இருப்பாரு. 

சில நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க.... எப்படியோ மீட்டிங்கு நடந்து முடியும். மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க. அப்புறம் அதை கரெக்ட் பண்றதுக்குள்ள அடுத்த மீட்டிங்கே வந்துடும்....

அப்புறம் பாருங்க, மீட்டிங்ல பார்த்து திடீர்னு சில பேருக்கு கொம்பு மொளச்சிக்கும். அதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கூட உக்காந்து ஓசி டீ அடிச்சிட்டு அண்ணே ஆபீஸ்லயே நீங்கதாண்ணே ரொம்ப நல்லவரு வல்லவருன்னு பிட்ட போட்டுக்கிட்டு இருப்பானுங்க. நாமலும் ஆஹா நமக்கும் ஒரு அல்லக்கை சிக்கிட்டான்டான்னு குளுந்து போய் மீட்டிங்குக்கு வருவோம். ங்கொக்காமக்கா மீட்டிங் தொடங்குனதும் அவனுக ஃபர்ஸ்ட் குறியே நாமளாத்தான் இருக்கும், இவருனாலதாங்க அந்த பஸ் ஓடலை, இந்த ரயில் ஓடலைன்னு பக்காவா மனப்பாடம் பண்ணி வெச்சி பிரிச்சி மேஞ்சி நம்மளை கப்பலேத்திருவாய்ங்க. அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள காலைல குடிச்ச கஞ்சியெல்லாம் காலியாகிடும்.......

சரி அத விடுங்க, ஆபீஸ்ல பாவம் போல இருப்பானுங்க சில பேரு, அவனுங்களும் மீட்டிங்குன்னு வந்துட்டா மட்டும் சலங்க கட்டி ஆடுவானுங்க...  எங்கேருந்துதான் கெளம்புவானுங்களோ? ஒரு ஆட்டம் ஆடித்தான் நிப்பானுங்க. எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல மாட்டை தொழுவத்துல கட்டுன மாதிரி போய் உக்காந்துடுவானுங்க, இனி அடுத்த மீட்டிங் வரைக்கும் நம்மாளு கெணத்துல விழுந்த கல்லுதான்.......

இன்னும் சில பேரு இருப்பானுங்க, யாருன்னே யாருக்கும் தெரியாது. சும்மா வந்து உக்கார்ந்து எதையோ முறைச்சி பார்த்துட்டே இருப்பானுங்க, மேலேயும் கீழேயும் பாத்துட்டு என்னமோ பரிட்சை எழுதுற மாதிரி விறுவிறுப்பா எழுதுவானுங்க. காப்பி வந்ததும் காப்பி சாப்புடுவானுங்க, மீட்டிங் முடிஞ்சதும் அப்படியே எந்திரிச்சி போய்டுவானுங்க. எதுக்கு மீட்டிங் வந்தானுங்க, என்ன பண்றானுங்க எல்லாம் படு சீக்ரெட்டா இருக்கும்...... அது யாருன்னு கேட்கவே எல்லாரும் பயப்படுவானுங்க..

இப்படி எல்லாரும் என்னத்தையாவது பேசி முடிச்ச உடனே பாஸ் வாய தொறப்பாரு. ஏற்கனவே அவரு அவர் பாசோட பேசி எடுத்த எல்லா முடிவையும் வரிசையா சொல்லுவாரு, சொல்லிட்டு பெருமையா(?)   ஒரு பார்வை வேற பார்ப்பாரு... ங்கொக்காமக்கா அதான் முடிவு பண்ணிட்டீங்கள்ல அப்புறம் என்ன கருமத்துக்குய்யா மீட்டிங்க கூட்டி ரணகளம் பண்றீங்க? பாஸ் சொன்னதைக் கேட்டது ஆடுனவன்லாம் பொட்டிப்பாம்பா அடங்கிருவானுங்க. எஸ்சார், அப்படியே பண்ணிடலாம் சார், முடிச்சிடலாம் சார்னு கோசம் போடுவானுங்க.  தலைவரும் உடனே கேனத்தனமா ஒரு இளிப்பு இளிச்சிக்கிட்டே ஓகே, எனக்கு இன்னொரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு, அப்புறம் பேசுவோம் அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சி வைங்கன்னு ஆர்டர் போட்டுட்டு நைசா எஸ்கேப் ஆகிடுவாரு.... நம்ம திரும்ப நம்ம சீட்டுக்கு வந்து என்ன செய்ய சொன்னாருன்னு அவர் வர்ர வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.

முடியலடா சாமி, வாரா வாரம் மீட்டிங் போட்டுக் கொல்றாய்ங்க......... இந்தக் கருமத்தக் கண்டுப்புடிச்சவன் எவன்டா........ அவனுக்கு நான் எமன்டா.......

புதன், 4 ஜனவரி, 2012

ஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்


நண்பர்களே...உங்கள் ஆபீசில் போர் அடிக்கும் பொது நேரத்தைக் கழிக்க சில வழிகளை இங்கு காணலாம்.

     // நீங்கள் மாட்டிக் கொண்டால் கம்பேனி பொறுப்பேற்காது //

1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை (அல்லது ஃபிகர்களை)  எண்ணிக்கொண்டிருக்கலாம்.

3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.

4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.

5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.

6.பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.

7.இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை

பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.

8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.

9.கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம்,ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.

10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவிஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.

11.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)

12.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

13.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையாபிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.

14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்டகோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.

15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.

16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.

18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.

19.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.

20.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.

21.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.

22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.

23.உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.

24.உங்களுக்குள் கலைத்திறன் அதிகம் இருந்தால் அதை வெளியில் கொண்டு வரலாம்.
உதாரணத்திற்கு உங்கள் டேபிள் க்கு அடியில் உள்ள செத்துப்போன ஈக்களை எடுத்துக் கொண்டு உங்கள் கலைக் குதிரையில் ஏறி சவாரி செய்யலாம்.

திங்கள், 2 ஜனவரி, 2012

காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.

வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.

கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,

இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்
இறையருளால் தப்பித்த உன்னுடைய,

முன்னாள் காதலன்

வியாழன், 1 டிசம்பர், 2011

ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!


# மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி ஒருத்தர சாவடிச்சிடுச்சி. 
பக்கத்து கூண்டிலிருந்த குரங்கு ஏன் அவர அநியாயமா சாவடிச்சே?
அதுக்கு புலி சொல்லிச்சி: அந்த லூசு 3 மணி நேரமா என்ன உத்து பார்த்துட்டு சொல்றான்!!
இவ்வளவு பெரிய பூனையா?
# சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது 
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
 
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
 
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
சுவாமி: குவாட்டாரானந்தா

# ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க "அடுத்து உனக்குதான்" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன்,,,,,

ஒரு சாவு வீட்ல!
# லவ் லட்டருக்கும், எக்ஸாம்'க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
# ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க…"
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
# நம்ம பய :மச்சான் நான் ரொம்ப "upset"la இருக்கேன் டா...
பயலோட பிரண்டு :எதுக்குடா மச்சான் வாத்தியார் ஹோம் வொர்க் குடுத்துருகான்களா ..??
நம்ம பய:இல்லடா மச்சான்....நேற்று "slate"வாங்க "shop"போயிருந்தேன்...அங்க ஒரு செம "figure"ரூ சுமார் ஒன்ற வயசு இருக்கும்...அவங்க அம்மா மடியில படுத்துட்டு வாயில வெரல வச்சுட்டு என்ன பார்த்து ஒரு லுக்கு விட்டா பாரு....ஐய்யோ "
பயலோட பிரண்டு :அப்புறம் என்ன ஆச்சு டா மாப்பிள ...?
நம்ம பய :அப்புறம் என்ன ...எங்க அப்பன் அத பார்த்துட்டு பொறாமைல என் தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு வச்சான்..கோபத்துல ரெண்டு நாளா "ceralak"கூட சாப்டலடா ...

LKG" last bench terror guys;
#
 புன்னகை என்பது எதிரியை 
கூட நண்பனாக்கும்...ஆனால் brush பண்ணாம
 
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே....சிரிங்க...நல்லா சிரிங்க
 
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க...
 
சுவாமி:பல்லானந்தா
# அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.

என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....
# எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Gentleman.... Girls are Selfish.... (Sorry Just funny)

வாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ..............


தத்துவம் 01
செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.........
தத்துவம் 02
குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது
தத்துவம்  03
இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

தத்துவம் 04
என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
தத்துவம் 05
என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
தத்துவம் 06
குலவி கொட்டுனா வலிக்கும்
தேள் கொட்டுனா வலிக்கும்
ஆனா முடி கொட்டுனா வலிக்குமா?
 
தத்துவம் 07
ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம் ஆனா
1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது...
தத்துவம் 08
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
 
தத்துவம் 09
1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
தத்துவம் 10
அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!.

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts