லேபிள்கள்

புதன், 29 ஜூன், 2022

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க என்ன செய்யவேண்டும்...?

சிறுநீரக கற்களானது உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும் ஏற்படும். சிறுநீரக  கற்கள் உருவாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்றும், சிறுநீரக கற்கள் உருவாவதைத் எவ்வாறு தடுக்கலாம் என்றும் பார்க்கலாம்.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும்  அவசியமானது.

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றால் செய்யப்பட்ட ஜூஸ் குடித்து வருவதும் நல்லது. ஏனெனில் இவையும் சிறுநீரக கற்கள் உருவாவதைத்  தடுக்கக்கூடியவை ஆகும்.

உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் சோடியம் நிறைந்த உப்பை குறைவாக சேர்த்து வருவது, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதுடன், உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமலும் இருக்கும்.

மாட்டிறைச்சி, முட்டை, கோழி போன்றவற்றை அளவாக எடுத்து வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஏனெனில் இவற்றில் விலங்குகளின் புரோட்டீன் அளவுக்கு அதிகம் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்து, உடலில் உள்ள சிட்ரேட்டின் அளவை குறைத்து, சிறுநீரக கற்களை  ஏற்படுத்தும். எனவே இந்த அசைவ உணவுகளை அளவாக எடுத்து வருவது மிகவும் நல்லது.

சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகக்கற்கள்  கரைந்துவிடும்.

சில வகையான உணவுப் பொருட்கள் சிறுநீரக கற்களை உருவாக்கும். அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம். அந்த உணவுகளாவன பீட்ரூட், பசலைக்கீரை மற்றும் சாக்லெட் போன்றவையும், ஆக்சலேட் அதிகம் நிறைந்த நட்ஸ் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த கோலாக்கள்  போன்றவையும் சிறுநீரக கற்கள் உருவாக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-can-be-done-to-prevent-the-formation-of-kidney-stones-120121400097_1.html


--

ஞாயிறு, 26 ஜூன், 2022

காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

சளி தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும்  எடுப்பான இடையைப் பெறலாம்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக  இருக்கும். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின்  அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற  பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.

வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை அரைத்து உருண்டையாகச் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும். கறிவேப்பிலையை அரைத்து  வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தாலும் இளநரை மறையும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-curry-leaves-in-the-morning-on-an-empty-stomach-120121500044_1.html


--

வியாழன், 23 ஜூன், 2022

காலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் என்ன பயன்கள்...?

நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெய்யை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல்: நல்லெண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

 கெட்ட கொழுப்பு: நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட  கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.

 உடலுக்கு குளிர்ச்சி: உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

 இரத்த அழுத்தம்: நல்லெண்ணெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

 மூட்டு வலிகள்: மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெய்யை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

 பல் பிரச்சனைகள்: நல்லெண்ணெய்யில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெய்யைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-drinking-sesame-oil-on-an-empty-stomach-in-the-morning-120121600021_1.html


--

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts