லேபிள்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தேங்காய் எண்ணெய்யைஎவ்வாறு பயன்படுத்துவதால் பலன்கள் உண்டு...?

மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால்  மலச்சிக்கலை போக்கும்.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன. தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.

தேங்காய் எண்ணெய் நல்ல சன்ஸ்கிரீன். வெயிலில் வெளியே செல்வதற்கு முன் இதை தடவிக் கொண்டால் போதும். விலையுயர்ந்த சன்ஸ்கிரீன் எதுவும் தேவையில்லை. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். கொரோனா காலமாக இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க தேங்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமானத பலன்கள் கொண்டது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-use-coconut-oil-for-benefits-120100100022_1.html


--

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

குழந்தைகளின்நினைவாற்றலை அதிகரிக்க இதை செய்தாலே போதும் !!

தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது. 

இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன. இறுக்கம் சம்மந்த பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால்  குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மாற்றங்ளை காணலாம் என்று ஆராய்ச்சியாளர்  கூறுகின்றனர்.

மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின்  வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிப்பது மட்டுமல்லாது அறிவு கூர்மையையும் வெளிபடுத்துகிறது.

இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் இரத்த ஓட்டம் சீராக  செல்வதால் மூலை பலம் அடைகிறது.

நினைவாற்றலை பெருக்கும்:

தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கிறது. மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை  சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/just-doing-this-is-enough-to-enhance-the-memory-of-the-children-120100300031_1.html


--

சனி, 23 ஏப்ரல், 2022

வெங்காயத்தைதேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் !!

தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம். 

வெங்காயம்  ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும்.  மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரப்படும் சிறந்த உணவு தேன். உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சிறந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை எப்படி செய்வது, இதன் மூலம் பெறும் நன்மைகள் என்னென்ன? இனிக் காண்போம்..

தேவையான பொருட்கள்: வெங்காயம் - அரை கிலோ, தேன் - அரை லிட்டர். செய்முறை: மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சிறிய சைஸ் வெங்காயமாக இருந்தால் அப்படியே முழுசாகவும் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். ஒரு பவுலில் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தேன் சிரப்பை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்: காய்ச்சலை போக்கும். தூக்கமின்மை கோளாறை சரி செய்யும். சளி தொல்லை நீங்கும்.

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும். நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் - தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.

இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-soaking-onions-in-honey-120100500080_1.html


--

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

ருத்ர முத்திரைசெய்வதால் ஏற்படும் நன்மைகள் !!

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம் என்றே சொல்லலாம். விரிப்பில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

* கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.

* சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

* தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும்.

* பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.

* மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

* ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

* வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர  முன்னேற்றம் காணலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-doing-rudra-mudra-120100500081_1.html


--

சனி, 16 ஏப்ரல், 2022

பாதங்களை நல்லமுறையில் பராமரிக்க உதவும் டிப்ஸ் !!

வெதுவெதுப்பான தண்ணீரில் ஷாம்பூ, சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தின் சாரை கலந்து அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை நனைத்து வைத்து பின்பு பியூமிக் கற்களால் கால் பாதங்களையும் நகங்களையும் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கால்களைக் கழுவி நன்றாக துடைத்து  எடுக்கவேண்டும்.

உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள், பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும்.

பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணெய்யை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதம் மிருதுவாகி விடும்.

சிறிது கற்றாழை ஜெல் மற்றும் கடலை மாவையும் கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால்கள், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்து கழுவ வேண்டும்.

4 துளி விளக்கெண்ணெய் உள்ளங் கையில் எடுத்து நன்றாக சூடு பறக்கத் இரண்டு பாதங்களிலும் தேய்த்து வந்தால் மினுமினுப்பாக மாறும். மாதத்தில் இரண்டு முறை வெள்ளை எள் அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்து அதை விரல்கள், பாத வெடிப்புகள் மீது தேய்த்து வந்தால் பாத வெடிப்புகளும் நகங்களும் பட்டு போல  மாறிவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக காலணிகளையும் சரியான அளவில் போடவேண்டும் தரமானதாகவும் சரியான அளவில் வாங்கி அணியும் போது தான் பாதம் கறுத்துப்  போகாமல் இயல்பாக இருக்கும்.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/tips-to-help-maintain-good-feet-120100800023_1.html


--

புதன், 13 ஏப்ரல், 2022

அதிக அளவு பாகற்காய்எடுத்துக்கொள்வதால் ஆபத்தை ஏற்படுத்துமா.....?

கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். 

பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை  கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை  சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால்  அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து  சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். 

பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/is-it-dangerous-to-take-too-much-bitter-gourd-120100900038_1.html


--

சனி, 9 ஏப்ரல், 2022

பயனுள்ள இயற்கைமருத்துவ குறிப்புகளும் அதன் பயன்களும் !!

ஞாபக சக்தி: வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

மாரடைப்பு: சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால்  மாரடைப்பைத் தடுக்கலாம்

ரத்தக்கொதிப்பு: வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில்  கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

கை சுளுக்கு: கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு  உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

நீரிழிவு: அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

மாதவிடாய் கோளாறு: உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

கக்குவான்: புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

உடல் வலுவலுப்பு: ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு  பெறும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/useful-natural-medicine-tips-and-its-benefits-120100900060_1.html


--

புதன், 6 ஏப்ரல், 2022

பகல் நேரத்தில்தூங்குவதால் பாதிப்புகள் ஏற்படுமா...?

காலையில் சாப்பிடும் நேரம் தாண்டித் தூங்கிக் கொண்டிருப்பது அல்லது மதியம் முதல் மாலை வரை தூங்குவது போன்ற செய்கைகளால் உடலின் சமநிலை  பாதிக்கப்பட்டு விடும். அதனால் தேவையில்லா நோய்கள் உடலைத் தாக்கலாம்.

இரவு நேரம் வெகு நேரம் வரை வேலை செய்வதால் உடல் சூடு அடையும். இதனால் பல்வேறு வியாதிகளைச் சந்திக்க நேரும். குறிப்பாக கண்களும், மூளையும்  தாக்கப்படும்.

உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் விட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப்பெற இயலும். இவர்கள் காலை நேரத்தில் தூங்குவதால் இளஞ்சூரிய வெயில் உடலில் பட வாய்ப்பு ஏற்படாது. இதனால் இவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். ஆக இயற்கையாக பெற இயலும் ஒரு சத்தை, காலை  நேர தூக்கம் கிடைக்காமல் செய்துவிடும்.

தாமதமாக எழும் பொழுது தேவையில்லாத மன அழுத்தங்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும். ஒரு ஒழுங்கான தூக்க முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த  பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி, யோகாசனங்கள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம், உடலின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும். அந்த வாய்ப்பை இழக்காமல் இருக்க இரவில் சீக்கிரம் தூங்கி பகலில் நேரமாக எழுந்து கொள்வது நல்லது.

வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு காலையில் படுக்கவே கூடாது.இதனால் செரிமான பிரச்சனை,உடல் எடை அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/does-sleeping-during-the-day-cause-dangers-120101200035_1.html


--

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

சித்த மருத்துவகுறிப்புகளும் அதன் பயன்களும் !!

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/siddha-medical-tips-and-its-benefits-120101900058_1.html


--

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts