லேபிள்கள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து

உபயோகமான தகவல்கள் !!!

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து' என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!
அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்எரிபொருள் அதிகம் செலவாகும்.
2.மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்… 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.
3.பெட்ரோல் சிக்கனம்!
சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.
4. 'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்!
ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.
5.தவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்!
உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடுஇந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
6.தண்ணீர்தண்ணீர்!
வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
7.குண்டு பல்பு வேண்டாமே!
குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.
8. கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?
அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.
9.நேரத்தை பணமாக்குங்கள்!
வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
10.செலவு குறைக்கும் செல்போன் 'பேக்கேஜ்'!
குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்தல் வேண்டும்--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 25 பிப்ரவரி, 2015

வாசனை வைத்தியம்:-

மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது. இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.
எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும். இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர். அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.
இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது. இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும். சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம். எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது. ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.
எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.
மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
மசாஜ்
வாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ்செய்யலாம்.
சனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல் பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.
புருவத்தின் மேலும் கீழும் நெற்றியிலும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ்செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ்செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ்செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ்செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.
கழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம். கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம். பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.
உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை உதறவேண்டும். உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.
வாசனை செய்திகள்
வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன்? நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது. நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன. நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும். இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது.
http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பெண்கள் மருத்துவம்

1. கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும்.
2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும். 
தாய்ப்பால் சுரக்க
3. சுத்தமான திடம் கோரோசனையைப் பாலில் கலக்கி காய்ச்சிய பின் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெரும்.
4. முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சமைத்து உண்டு வந்தால் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.
கண் உறுத்தல்
5. குங்குமப் பூவை தாய்ப்பாலில் இழைத்து கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்ணில் நீர் வருவது, கண் உறுத்தல் முதலான கண் வியாதி குணமாகும்.
வாய்ப்புண்
1. சுமார் இருபது மணத்தக்காளி இலையை காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு அத்துடன் ஓரு டம்ளர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
2. அகத்திக் கீரையுடன் தேங்காய், பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதை உணவுடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப் புனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதுடன் கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பேன் தொல்லை

3. பாகற்காயிலிருந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற விட வேண்டும். பிறகு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
இடுப்பு பிடிப்பு
இடுப்புப் பிடித்துக்கொண்டால் உட்காருவதற்கும், எலும்புவதற்கும் கஷ்டமாக இருக்கும். முருங்கைக் கீரையுடன் உப்பைச் சேர்த்து சாறு எடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்பு பிடிப்பு விட்டுப் போகும். மூன்று வேலை இதைச் செய்தால் நல்ல குணம் தெரியும்.
வயிற்றுப் பூச்சி
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். பூச்சிகளை வெளியேற்ற வேப்பிலையை இடித்துச் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து வேளைக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.
சீதபேதி குணமாக
பசும்பாலை சுண்டக் காய்ச்சி அதில் மூன்று ஸ்பூன் கசகசாவை அரைத்துக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இதில் 50 கிராம் நெய் சேர்த்து மூன்று வேலை சாப்பிட்டால் சீதபேதி  நின்றுவிடும்.
தலைவலி
இஞ்சிச் சாறு 25 மில்லியுடன் 250 மில்லி பால் கலந்து அடுப்பில் வைத்து நன்றாகத் காய்ச்ச வேண்டும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். தலைவலிக்கான அறிகுறி இருக்கும் போதே இதைச் சாப்பிடுவதால் முன்கூட்டியே தலைவலி வராமல் தடுக்கலாம்.
வயிற்றுப் போக்கு
வசம்பைத் தீயில் சுட்டு கரியாக்கி தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும்.
பித்த வெடிப்பு
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் சுண்ணாம்பைச் செர்த்துகுழைக்க வேண்டும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகி விடும்.
உடல் சூடு தணிய
அதிமதுரம் 25 கிராம் எடுத்துக்கொண்டு வெந்நீர் விட்டு அரைத்துத் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட உடல் சூடும் தணிந்து விடும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை உட்கொள்ள வேண்டும்.
குமட்டல், வாந்தி
1. குமட்டல், வாந்தி, மயக்கம், மசக்கை, குழந்தைகள் வாந்தி இவைகளுக்கு எலுமிச்சப்பழச் சாரும் தேனும் சம அளவு கலந்து சாப்பிட்டால் குணம் காணலாம்.
2. குழந்தைகளுக்கும் 2 கரண்டி சாறு 2 தேன் கலந்து அருந்த வாந்தி நிற்கும்.
3. மசக்கைக்கு 15, 20 நாள் தினம் கொடுக்க மசக்கை நீங்கி உணவருந்தி கர்ப்பிணிகள் உடல் தேறலாம்.
தேன் மருத்துவம்
1. அதிக எடை கொண்டவர்கள் எலுமிச்சை பழச்சாரில் தேன் கலந்து அடிக்கடி குடித்தால் எடை குறையவும்
ஆரோக்கியம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

2. உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டதாக இருந்தால், லேசான சுடுநீரில் தேன் கலந்து கொடுத்து தூங்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நல்லது.
3. ஒரு துண்டு இஞ்சியை இடித்து தேனில் போட்டு தினமும் பிழிந்து சாப்பிட்டால், குண்டு உடல் குறையும்.
தாய்ப்பால்
1. பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.
2. சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதை.
வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.
வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும்.
கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.
http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 21 பிப்ரவரி, 2015

HACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி??

FIRST நீங்க உங்க COMPUTER VIRUS இருக்கான்னு SCAN பண்ணுங்க. நல்ல ANTI VIRUS மட்டும் பத்தாது அத அடிக்கடி UPDATE பண்ணனும். பெரும்பாலும் உங்கள் ACCOUNT இதனால் தான் (HACK)ஹாக் செய்யப்படும். அப்படி HACK பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது ACCOUNT ஐ திரும்ப பெறுவது?.
முதலாவதா GOOGLE CHROME PAGEல் இருந்து உங்கள் ACCOUNTக்கு sign in ஆகுங்க இப்போ ACCOUNT SETTINGல நீங்க இருக்கணும்.
இதுல "Personal Settings " "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.
எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.
அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.
இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?
இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??
உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.
2 . security question மூலம் பெறலாம்.
3 . account recovery form fill up செய்து பெறலாம்.
இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.
இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.
அதற்கான லிங்க்: account recovery form
உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.
இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.
இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்
உங்கள் வலைப்பூ முகவரி
உங்கள் orkut profile முகவரி
கடைசியாக வைத்திருந்த password .
நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்
உங்கள் நான்கு label களின் name .
!!!"Computer and software tips"!!
http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 19 பிப்ரவரி, 2015

வயிற்றுப்புண்ணால் அவதியா?

 'அல்சர்' எனப்படும் குடல் புண்ணால் பலரும் அவதிப்பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவாவதாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுவதுதான் 'அல்சர்' எனப்படுகிறது. இதனால், சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். 
நெஞ்செரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும். வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என அல்சர் வாட்டியெடுத்துவிடும்.
சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் விடுவதும், துரித உணவு, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ அதிகம் அருந்துவது போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்ஷன், மனஅழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்படக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனஅழுத்தத்தால்ஒரு சிலருக்கு பாரம்பரிய ரீதியிலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். டென்ஷன் ஏற்படும்போது குடலில் அமிலம் அதிகமாகச் சுரக்கிறது. இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது.
மருந்தின் வீரியத்தால் பாதிப்பு பலர், சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில், ஆன்டிபயாடிக் உட்கொள்ளும்போது மருத்துவர்கள் தரும் பி.காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம்.
தவிர்க்கும் பட்சத்தில் மருந்தின் வீரியத்தினால் வயிற்றில் புண்கள் ஏற்படலாம். உணவைத் தவிர்க்கக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் உணவு வேளைகளைத் தவிர்க்க கூடாது. நம் வயிற்றுக்குள் குடலைப் பாதுகாக்கும் மெல்லிய திரை போன்ற அமைப்பு கூடாது.
மேலும், அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிடாமல், கொஞ்சமாக, அடிக்கடி சாப்பிடலாம்.
எதையும் நன்கு கடித்து, மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும். குழைய வேகவைத்த அரிசிச் சாதம், அவல் பொரியில் கஞ்சி போன்றவை செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நன்றாக வேகவைத்து, மசித்துச் சாப்பிட வேண்டும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
எண்ணெய் பலகாரங்கள் கூடாது வயிற்றுப்புண் ஏற்பட்டவர்கள், ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சைக் காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, மசாலா, காரமான குழம்பு இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.
உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்குச் செல்லக்கூடாது. ஏனெனில் அது நெஞ்செரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். எனவே, சாப்பிட்டபின் மூன்று மணி நேரம் கழித்தே உறங்கவேண்டும். நேரம் கெட்ட நேரத்தில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது அவதியை அளிக்கும். பொதுவாக, வயிற்றுப்புண் உள்ளவர்கள், தங்கள் குடலை கண்ணும் கருத்துமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.
ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு மிக அதிகமான நன்மைகள் உள்ளன.
ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என கேட்க்கப்பட்டது அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள்       அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி
மற்றத் தொழுகைகளுக்கு உளு அவசியம் போல இதற்கும் அவசியமாகும்.
தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ)ஆகும் அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹீ அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள் அறிவிப்பவர்:- அலீ(ரலி) நூல்கள்: அபூதாவூத்,திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்
இத்தொழுகை ஜமா அத்தாக நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜனாஸா இமாமுக்கு முன்னால் வைக்கப்பட வேண்டும்.
ஜனாஸாத் தொழுகையை வாரிசுரிமை பெறக்கூடிய தந்தை, மகன் போன்ற உறவுக்காரர்கள் தொழுவிப்பதே சிறந்தது.
தொழுவிப்பவர் ஆண் ஜனாஸாவின் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் உடம்பின் நடுப்பகுதிக்கு நேராகவும் நிற்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் இருப்பின் தனித்தனியாகவோ அல்லது அனைத்திற்கும் பொதுவாக ஒரே முறையிலேயும் தொழுகை நடத்தலாம்.
மார்க்கத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்தவர் பெரும் பாவங்களில் திளைத்திருந்தவர், கடன்காரர், தொழுவிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டோர், தொழுகை நடத்த எவரும் இல்லாத ஓர் இடத்தில் மரணித்தவர் போன்ற அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.
ஜனாஸா தொழுகை முறை: -
1) பிற தொழுகைகளைப் போலவே ஜனாஸா தொழுகைக்கும் உடல், உடை சுத்தமாக இருத்தல், உளு செய்தல், ஜனாஸா தொழுகைக்காக நிய்யத்து செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்றவைகள் முக்கியமானதாகும்.
2) மய்யித் ஆணாக இருந்தால் இமாம் அதனுடைய தலைக்கு அருகிலும், பெண்ணாக இருந்தால் இமாம் அதற்கு மத்தியிலும் நிற்பார்.
3) தொழக் கூடியவர்கள் இமாமின் பின்னால் நிற்க வேண்டும்.
4) ஜனாஸா தொழுகைக்கு இமாம் நான்கு தக்பீர் கூறுவார்.
5) முதல் தக்பீருக்குப் பிறகு, அவூது பிஸ்மியுடன் சூரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்
6) இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும். (ஸலவாத்து என்பது பிற தொழுகையில் அத்தஹிய்யாத்துக்குப் பிறகு நாம் ஓதக் கூடிய ஸலவாத்து ஆகும்)
7) மூன்றாவது தக்பீருக்குப் பிறகு மய்யித்துக்காக நாம் துஆச் செய்ய வேண்டும். (கீழே பார்க்கவும்).
8.) நான்காம் தக்பீருக்குப் பிறகு சிறிது நேரம் நின்று விட்டு வலது பக்கம் மட்டும் திரும்பி ஒரே ஒரு சலாம் கொடுக்க வேண்டும். (ஒரு சலாம் மட்டுமா அல்லது இரண்டு சலாம் கொடுக்க வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளது)
முதல் தக்பீருக்கு பின்
ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை (அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…..)
  முழுமையாக ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

الرَّحْمـنِ الرَّحِيمِ

مَـالِكِ يَوْمِ الدِّينِ

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ

غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

பொருள்:
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

இரண்டாவது தக்பீருக்கு பின்
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

உச்சரிப்பு: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.
பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
மூன்றாவது நான்காவது தக்பீருக்கு பின்
மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

உச்சரிப்பு: அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்
பொருள் : இறைவா இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள் பாலிப்பாயாக. இவருக்கு நற்சுகம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது விருந்துபச்சாரத்தைக் கண்ணியமாக்குவாயாக. இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக. வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக. இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும் இவரது மனைவிக்குப் பகரமாக சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்குவாயாக. மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக.
ஜனாஸா தொழுகையில் ஓதக் கூடிய மற்றொரு துஆ: -

اللَّهُمَّ اغْفِرْ لحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا ، فَأَحْيِهِ عَلَى الإِسْلامِ ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ

உச்சரிப்பு:அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா  வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,  அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.
பொருள் : இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.
இவைதான் ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அவருக்காக நாம் செய்யக் கூடிய குறைந்த பட்ச பிரார்த்தனைகளாகும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts