ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும்.
குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்துக்கு பிறகு திட உணவுகளும் தாய்ப்பாலும் கொடுப்பது அவசியம்.
ஒரு வாழைப்பழத்தில் 100 + க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. இயற்கையாகவே அதிக எனர்ஜி தரும் பழம் இது.
மாவுச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை நிறைந்துள்ளன.
6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம்.
பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது.
8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.
குழந்தைகளுக்கு முதல் உணவாக தருவதில் மிக சிறந்த உணவு, கேழ்வரகு.
6 மாத குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிட ஏற்றது, இந்த கேழ்வரகு சிறுதானியம்.
கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் பி1, பி2, தாதுக்கள் ஆகியவை உள்ளன.
குழந்தைக்கு ராகி எளிமையாக செரிமானமாகும். ராகி கஞ்சி, ராகி கூழ், ராகி இட்லி, ராகி தோசை, ராகி ரொட்டி, ராகி புட்டு, ராகி லட்டு, ராகி கேக், ராகி குக்கீஸ் போன்ற வகைகளில் ராகியை கொடுப்பது நல்லது.
முட்டை
முட்டையில் பல விதமான நல்ல சத்துக்கள் அடங்கியுள்ளன. புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும்.
முட்டை உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. அத்துடன் செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் ஒரு வேகவைத்த முட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமையும்.
முழு தானியங்கள்
பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும்.
பால்
பாலில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுகிறது. தினமும் பால் குடிப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுபடுத்துகிறது.
சிக்கன்
பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். பிராய்லர் கோழியில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே அதை தவிர்த்து நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.
சோயா பீன்ஸ்
ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.
காய்கறிகள்
குழந்தைகளின் உணவில் இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, ஏ, கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
--