லேபிள்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

உங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா

உங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா, நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா, இன்டெர்நெட் தானாக டிஸ்கனெக்ட் ஆகிடுதா, இதே பிரச்சனை வைபை பயன்படுத்தும் எல்லோருக்குமே இருக்குங்க. சரி டென்ஷன் ஆகாதீங்க இந்த பிரச்சனைக்கு என்ன பன்னலாம்னு முதல்ல பாருங்க, அடுத்து வரும் ஸ்லைடரில் உங்க வைபை நெட்வர்க்கில் பிரச்சனை இல்லாமல் வேகமான இன்டெர்நெட்வசதியை பெருவது எப்படினு பாருங்க.

ஹார்டுவேர்
வேகமான வைபைக்கு முக்கியமாக அப்-டூ-டேட் ஹார்டுவேரை பயன்படுத்துங்கள் இதற்கு வயல்ரெஸ் என் சிறந்ததாக இருக்கும்

ரவுட்டர்
உங்க ரவுட்டர் பார்க்க அழகாக இல்லை என்று அதை மறைத்து வைக்க கூடாது, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் தான் முழுமையான சிக்னல் கிடைக்கும்

வயர்லெஸ் சேனல்
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வைபை உங்களது வைபைக்கு இடையூறாக இருக்கலாம், இதை சரி செய்ய வைபை ஸ்டம்ப்ளர் அல்லது வைபை அனலைஸர் போன்றவற்றை பயன்படுத்தி உங்க வைபையை சரியான சேனல் கிடைக்கும் இடத்தில் பொருத்துங்கள்

மற்ற சாதனங்கள்
நீங்க உங்க வீட்டில் பயன்படுத்தும் கார்டுலெஸ் போன், மைக்ரோவேவ் போன்றவகளும் உங்க வைபை சிக்னலை பாதிக்கும் இதனால் டூயல் பேன்ட் ரவுட்டரை பயன்படுத்துங்கள்

வைபை திருடர்கள்
உங்க ரவுட்டருக்கு பாஸ்வேர்டு இருந்தாலும் அதை சுலபமாக களவாட முடியும், அதனால் WPA பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள்

பேன்ட்வித்
வைபை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி வீடியோ சாட், டோரென்ட் டவுன்லோடு என எதையவது செய்யலாம், இது மற்ற எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இதை சரிகட்ட QoS பயன்படுத்தலாம்

சிக்னல்
உங்க ரவுட்டர் சரியாக சிக்னல் கிடைக்காத சமயத்தில் பழைய பாட்டில்களை ரவுட்டர் மேல் பொருத்தலாம், இது ஓரளவு கைகொடுக்கும்

ஹாக்கிங்
உங்க வைபை ரேன்ஜ் அதிகரிக்க DD-WRT firmware இன்ஸ்டால் செய்யலாம், இது ஒரு வகையில் ஆபத்தானது என்றாலும் சில ரவுட்டர்கள் 70 மெகாவாட் வரை தாங்கும் திறன் கொண்டது

வைபை ரிப்பீட்டர்
உங்க பழைய வயர்லெஸ் ரவுட்டரை எக்ஸ்டென்டர் ஆக பயன்படுத்தலாம், இதற்கு DD-WRT firmware அவசியம் தேவை.

ரீபூட்
உங்க ரவுட்டரை நாள் ஒன்றுக்கு ஒரு முறை ரீபூட் செய்யுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 27 ஆகஸ்ட், 2016

காலை எழுந்தவுடன்...

காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச்செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். 

பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்', காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

 நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீர்
ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

வெந்தயத் தண்ணீர்  
சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். 

வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில்  ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். 

வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். 

வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.

அருகம்புல் சாறு  
அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. 

அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

வெள்ளைப்பூசணி  சாறு
வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

 இஞ்சிச் சாறு
இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய்ச் சாறு
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்' அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

இளநீர்
இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 
இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.

எலுமிச்சைச் சாறு
பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.  இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!

பச்சை முட்டை
ஒல்லியாக இருப்பவர்கள், 'ஜிம்' பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்
http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_72.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள்.

இந்த ஓம திரவம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும்.
 

மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
 

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது
http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_64.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஹலாலான உழைப்பின் சிறப்பு!

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்
 

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், "இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. "பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அசத்தல் வெற்றி வியூகங்கள்


ந்தியாவை நிர்வகிக்கும், அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது குடியுரிமைப் பணித் தேர்வுகள் (Civil Services Examination). இந்தத் தேர்வுகளில், தமிழர்களால் அழுத்தமான முத்திரைப் பதிக்க முடிவது இல்லை என்ற வருத்தங்களுக்கு இடையே, இந்தியாவுக்குத் தேவையான பெரும்பாலான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழர் என்பது எத்தனை நகைமுரண். அந்தத் தமிழர், ராசிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன்!

டெல்லியில் ரவீந்திரன் நடத்திவரும் 'வாஜிராம் அண்ட் ரவி ஐ.ஏ.எஸ் இன்ஸ்டிட்யூட்'தான் இந்தியாவின் நம்பர் ஒன் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் என்று வட இந்திய ஊடகங்கள் கொண்டாடுகின்றன. இந்த வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வில், டாப் 10 இடங்களில் முதல் இடம் பிடித்த மாணவர் உட்பட 8 பேர் இங்கே பயிற்சி பெற்றவர்களே. அதோடு முதல் 100 ரேங்க் பிடித்தவர்களுள் 70 மாணவர்கள் ரவீந்திரனின் தயாரிப்புதான். ஆனால், ரவீந்திரனிடம் ஒரு இ-மெயில் ஐ.டி-கூட இல்லை. கணினி, வாட்ஸ்-அப் போன்ற தவிர்க்க முடியாத தொழில்நுட்பங்களுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு வேலை பளு. கடந்த 35 வருடங்களில் 5,000 சிவில் சர்வீசஸ் அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறார் என்றால், அந்தப் பளுவின் வீரியத்தை உணர முடிகிறது. சென்னை வந்திருந்த ரவீந்திரனை, தேநீர் இடைவேளை ஒன்றில் சந்தித்தேன்...

''நாமக்கல் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமம் எனக்குச் சொந்த ஊர். பஞ்சாயத்து போர்டு, அரசாங்கப் பள்ளிகளில்தான் படிப்பு. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பட்டம். எம்.ஏ அரசியல், எல்.எல்.பி படிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். ஏஷியன் ஆப்பிரிக்கன் கன்சல்டன்ட் கமிட்டியில் சட்ட ஆலோசனை நிபுணராக இருந்த வேலாயுதம்தான் 1976-ல் இந்த இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பித்தார். நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு நான் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டிருந்தேன். அந்த அனுபவம்தான் வேலாயுதம் இன்ஸ்டிட்யூட்டில் என்னைச் சேர்த்தது. 48 வருடங்களுக்கு முன் சின்ன அறை ஒன்றில் மிகச் சில மாணவர்களோடு ஆரம்பித்தோம். இப்போது 25 ஆயிரம் சதுர அடிக்கு பரந்து விரிந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறது எங்கள் இன்ஸ்டிட்யூட். பொது அறிவு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், புவியியல், சமூகவியல், உளவியல், வணிகவியல்... இந்த எட்டுப் பாடங்களுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.

எங்கள் மையத்தில் சேர, தகுதி தேர்வு எதுவும் கிடையாது. அது கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகளும் உண்டு!'' என்றவரிடம் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவது தொடர்பான கேள்விகளை அடுக்கினேன்.

''சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எப்படித் தயாராவது?''
'''எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது' என்பதில்தான் இந்தத் தேர்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. எப்படிப் படிப்பது எனத் தெரியாமல் எதைப் படித்தாலும் பயன் இல்லை. 'எப்படிப் படிப்பது?' என்பதைப் புரிந்துகொள்ள, 'ப்ரிசிஸ் ரைட்டிங்' (Precis writing) எனப்படும் சுருக்கமாக எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். 300 வார்த்தைகள் உள்ள ஒரு பத்தியில் இருக்கும் செய்தியை, அதன் சுவாரஸ்யமும் உண்மைத்தன்மையும் குலையாமல் 100 வார்த்தைகளுக்குள் சுருக்கி எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் திறமை இருந்தாலே எந்தத் தேர்வையும் எளிதில் சமாளிக்கலாம்.

ஒரு புத்தகத்தைப் படித்தால், அதன் அனைத்து பக்கங்களில் இருக்கும் செய்திகளையும் பதிந்துகொள்ள நம் மூளை, கம்ப்யூட்டர் இல்லை. குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளும். அதனால் நாமே ஒரு செய்தி அல்லது கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் புரிந்துகொண்டு, அதை மட்டும் நினைவில் நிறுத்தப் பழக வேண்டும். பிறகு, அந்த நினைவுக் குறிப்புகளைக்கொண்டே, நான்கு பக்கக் கட்டுரையோ, நாலாயிரம் வார்த்தை கட்டுரையோ எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை திறமையைத்தான் முதலில் எங்கள் பயிற்சி மைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம்!

அடுத்து, 'என்கொய்ரிங் மைண்ட்' பயிற்சி கொடுப்போம். அதாவது கேள்வி கேட்டு, அதற்குப் பதில் கண்டுபிடிப்பது. எதைப் படித்தாலும் அதில் சரியான இடத்தில் சரியான கேள்வி கேட்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி, என்ன - இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்தால் தெளிவு அதிகரிக்கும். இதில் ஒரு கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டால் அது இன்னொரு கேள்விக்குக் கொண்டுபோகும். அந்தக் கேள்விக்கான பதில் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கு அழைத்துச்செல்லும். இப்படித் தெளிவு ஏற்படுத்திக்கொண்டு படித்தால் தேர்வில் வெற்றி சுலபம்.
ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வு என்பது, ஒரே நேரத்தில் மூன்று முதுகலைப் பட்டத்துக்கான தேர்வுகளை எழுதுவதுபோல சிரமமானது. அவ்வளவு பாடங்களைப் படிக்கும்போது அதில் எதைப் படிக்க வேண்டும்,

எதைப் படிக்கக் கூடாது என்ற தெளிவு வேண்டும்!''
''சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் புதிய பாடத் திட்டம், தமிழக மாணவர்களைத் திணறச்செய்கிறதே?''
''திணறுகிறார்கள் என்று சொல்ல வேண்டாம்; சின்னத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிசாட் சிலபஸ் புதுசு, ஜெனரல் ஸ்டடீஸ் மதிப்பீட்டு முறைகள் புதுசு என்பதால் இந்தச் சிக்கல் இருக்கலாம்! அதற்கு முதல் காரணம் யூ.பி.எஸ்.சி கொண்டுவந்த Civil Services Aptitude Test (CSAT)  என்ற புதிய பாடத் திட்டம்தான். இரண்டாவது காரணம், முதல் நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸுக்கு முக்கியத்துவம் அளித்து, விருப்பப் பாடத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், இந்தத் தற்காலிகத் தொய்வில் இருந்து தமிழக மாணவர்கள் விரைவில் பிக்-அப் ஆவார்கள். சிசாட் கஷ்டமாக இருக்கும் என்பது ஒரு மாயை. அந்தப் பாடத் திட்டத்தின் தரம் 10-ம் வகுப்பு பாடத் திட்டத்துக்கு ஒப்பானது.

முதல் நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸுக்கு 200 மார்க். சிசாட்-க்கு 200 மார்க். இதில் இரண்டிலும் சேர்த்து 250 மார்க் வாங்கினால், முதல் நிலைத் தேர்வை கிளியர் செய்துவிடலாம். ஜெனரல் ஸ்டடீஸில், 100 கேள்விகளுக்கு 200 மார்க். அதற்கு 2 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். சிசாட்டில் 80 கேள்விகளுக்கு 200 மார்க். அதே இரண்டு மணி நேரம்தான். ஆனால், 70 சதவிகித மாணவர்கள், அந்தப் பேப்பரை எழுதி முடிப்பது இல்லை. சிசாட்டில் 65 முதல் 72 கேள்விகளுக்கேனும் கண்டிப்பாகப் பதில் எழுதியாக வேண்டும். அப்போதுதான் தேர்ச்சிபெற முடியும். ஏனெனில், ஜெனரல் ஸ்டடீஸில் சராசரியாக 110 மதிப்பெண்கள் வரைதான் வாங்க முடியும். ஆனால், முதல் நிலைத் தேர்வை கிளியர் செய்ய குறைந்தபட்சமே 210 மதிப்பெண்கள் தேவை. எனவே, சிசாட்டில் 120 மதிப்பெண்களேனும் பெற முயற்சிக்க வேண்டும். சிசாட்டில் 55 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க முடிந்தால், தேர்வு அறையிலேயே நமது ரிசல்ட்டைக் கணித்துவிடலாம்! சிசாட்டில் ஜெயிக்க நிறையப் பயிற்சி, கடுமையான முயற்சி மூலம் பதில் அளிக்கும் வேகத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று நாட்களேனும் சிசாட் தேர்வுக்குப் பயிற்சியெடுக்க வேண்டும். எத்தனை இன்ஸ்டிட்யூட் பேப்பர்களை வாங்கி பயிற்சி எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு சிசாட் தேர்ச்சி எளிமையாக இருக்கும்!''

''ஜெனரல் ஸ்டடீஸுக்கு எந்த மாதிரி உழைக்க வேண்டும்?''
''இந்திய வரலாறு, இந்தியா மற்றும் உலகப் புவியியல், இந்தியப் பொருளாதாரம், பொது அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்.சி.ஆர்.டி பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதே தலைப்புகளில் கிராஜுவேட் லெவல் புத்தகங்களையும் ஊன்றிப் படிக்கலாம். செய்தித்தாள்களை தினமும் வாசிக்க வேண்டும். பாடப் புத்தக அறிவை மட்டுமே கொண்டு ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாது. நடப்பு விஷயங்களைச் சம்பந்தப்படுத்தித்தான் கேள்வித்தாள்களையே அமைப்பார்கள். உதாரணமாக, 'முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்' என்று செய்தி வந்தால், 'முன்ஜாமீன் என்றால் என்ன, யாரெல்லாம் முன்ஜாமீன் கொடுக்க முடியும், முன்ஜாமீனுக்கான நிபந்தனைகள் என்ன, யாருக்கு எல்லாம் முன்ஜாமீன் தர முடியாது?' போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்!''

''நேர்முகத் தேர்வுக்கான டிப்ஸ்?''
''அது இன்டர்வியூ மட்டுமல்ல... உங்கள் ஆளுமையை முழுமையாகப் பரிசோதிக்கும் பெர்சனாலிட்டி டெஸ்ட்டும்கூட. நேர்முகத் தேர்வில் பொய் சொல்லக் கூடாது. ஏனென்றால், ஜீனியஸ் அறிவாளியாக இருந்தாலும் உங்களின் அடிப்படை குணநலன்கள் சரியில்லை என்றால், தேர்வு செய்ய மாட்டார்கள். அதனால் தெரிந்ததைச் சொல்ல வேண்டும். தெரியாவிட்டால் 'தெரியவில்லை' என நேர்மையாகச் சொல்லிவிட வேண்டும். 'இதுவாகத்தான் இருக்கும்' என யூகம் செய்துகொண்டு பதில் சொல்லக் கூடாது. குடிமைப்பணிகளுக்கு இரக்க மனப்பான்மை, உதவும் குணம் அவசியம். அதனால், எளியவர்களுக்கு உதவும் மனம் உள்ளவர்கள் என்று நினைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் முன்னுரிமை அளிப்பார்கள்.

'ஐ.ஏ.எஸ்-ல் ஏன் சேர வேண்டும் என நினைக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, 'சேவை செய்வதற்காக' என்று நீங்கள் பதில் அளித்தால், 'எந்தப் பிரிவில் சேவை செய்ய விருப்பம்?' என்று அடுத்த கேள்வி எழும். 'ஊரக வளர்ச்சி' என்று பதில் அளித்தால், அது தொடர்பான ஆழமான கேள்வி கேட்கப்படும். ஆக, பொய் சொன்னால், ஒரு கட்டத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.

நேர்முகத் தேர்வு நடத்தும் உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்வது, நீங்கள் இருக்கையில் அமரும் பாங்கு, பதில் தெரியாவிட்டால் அதை வெளிப்படுத்தும் தன்மை... என உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் அங்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு கமிட்டியில் ஓர் ஆண் சேர்மனாக இருந்தாலும், பெண் உறுப்பினர் ஒருவர் இருந்தால், அந்தப் பெண் உறுப்பினருக்குத்தான் முதலில் வணக்கம் சொல்ல வேண்டும். இப்படியான நுணுக்கமான விஷயங்கள் முதல் தேர்வு முடிந்து நீங்கள் வெளியேறும் போக்கு வரை அனைத்துக்கும் அங்கு மதிப்பெண் உண்டு. ஆகவே, சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்துவிட்டால், உங்களுக்கே நீங்கள் உண்மையாக இருங்கள். அதுதான் வெற்றிக்கான ஒரே வழி!''

''சிவில் சர்வீசஸ் தேர்வுப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழ்நாடு வரமுடியவில்லையே ஏன்?''
''இந்த வருடம் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, முதல் இடத்தைக்கூடப் பிடித்தது. நாலைந்து வருடங்களுக்கு முன்பு அகில இந்திய அளவில் 90 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் தமிழகத்தில் இருந்தே 18 பேர் தேர்வானார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தின் பங்களிப்பு சற்றே குறைவு என்பது உண்மைதான்!''

''சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு எங்கே தடுமாற்றம் ஏற்படுகிறது?''
''கல்லூரி பட்டப்படிப்பு வரையில் தமிழ் மாணவர்கள் ஒரு போட்டித் தேர்வைக்கூட எதிர்கொள்வது கிடையாது. தமிழ்நாட்டுக் கல்வித் திட்டம் அதுமாதிரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது இல்லை. ஆனால், வட இந்தியாவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டால்தான் பட்டப்படிப்புகளில் சேர முடியும். இதனால் அவர்கள் போட்டித் துடிப்பை மிக இளம் வயதில் இருந்தே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

அதனால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும்போது அது அவர்களுக்கு பாரமாகத் தெரிவது இல்லை. ஆனால், தமிழ் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகே, போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகிறார்கள். அதனாலேயே முதல் அட்டெம்ப்ட் அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இதையும் சுலபமாகச் சமாளிக்கலாம்.

11-ம் வகுப்பில் இருந்தே செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இணையத்தில் கிடைக்கும் போட்டித் தேர்வு கேள்வித்தாள்களை அவர்களாகவே நிரப்பி, திருத்தி தங்கள் தகுதிகளை அளவிட்டுக்கொள்ள வேண்டும். லோக்சபா சேனலில் வரும் பேனல் டிஸ்கஷன், பி.பி.சி உலகச் செய்தி, டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் ஆகியவற்றைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். அதில் புதுப் புது விஷயங்களைப் பற்றிய விவாதமோ, செய்திகளோ ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். போட்டித் தேர்வை எதிர்கொள்ளாத தமிழ் மாணவர்கள், இப்படித் தங்கள் பொழுதுபோக்கின் மூலமும்

பொது அறிவை வளர்த்துக்கொள்வது நிச்சயம் கை கொடுக்கும்!''
''சமீபமாக தமிழ் இலக்கியம் படித்தவர்கள் அதிகளவில் வெற்றி பெறுகிறார்களே?''
''தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, எல்லா விருப்பப் பாடங்களும் ஒரு வருடத்தில் நல்ல மார்க் வாங்கும். அடுத்த வருடம் தேர்ச்சியே கிடைக்காமல் போகும். 2012-ல் பொது நிர்வாகத்தில் 300-க்கு 90 என இரட்டை இலக்க மதிப்பெண்கள்தான் பெற்றார்கள். ஆனால், அதற்கு முன்பு பொது நிர்வாகம் நல்ல மார்க் வாங்கிக் கொடுத்தது. விருப்பப் பாடத்தின் டிரெண்ட் மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் தமிழ் இலக்கியம் நல்ல ஸ்கோர் கொடுத்திருக்கிறது. அதை எல்லாம் மனதில்கொண்டு நாம் விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஒரு மாணவனின் ஆர்வம், பரிச்சயத்தைக்கொண்டே விருப்பப் பாடத்தைத் தீர்மானிக்க வேண்டும்!''

''முழுக்கவே தமிழ் வழியில் தேர்வு எழுதி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?''
''தற்கும் அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். ஏனென்றால், தமிழில் எல்லாப் புத்தங்களும் கிடைப்பது இல்லை. ஆங்கிலப் புத்தங்களை மொழிபெயர்த்துப் படிக்கவேண்டிய நிலையே இருக்கிறது. பயிற்சி மையங்களிலும் ஆங்கிலவழி வகுப்புகள்தான் உண்டு. எனவே, அடிப்படை ஆங்கில அறிவு இல்லாமல் தேர்வில் வெற்றிபெறுவது மிக மிகக் கடினம். ஆனால், பள்ளிப் பாடத் திட்ட அளவுக்கான ஆங்கிலப் பரிச்சயம் இருந்தால்கூட, எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும் என்பது அவசியம் இல்லை. பேசினால் புரிந்துகொள்ளக்கூடிய, வாசித்தால் அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்கான புலமை இருந்தால் போதும்.

தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்வழியில் பயிற்சியளிக்க பயிற்சி நிறுவனங்களுக்குப் பொருளாதாரப் பலன் இல்லை. அதோடு தேர்வின் பாடத் திட்டங்களை தமிழில் எழுத ஆசிரியர்கள் முன்வருவதும் இல்லை. கவலைகொள்ள வேண்டாம். ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான அளவுக்குத் தமிழில் புத்தங்கள் கிடைக்கின்றன.

'நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா' என்ற அரசு பதிப்பகம், நல்ல புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து விற்கிறது. இந்திய அரசின் வெளியீடான 'யோஜனா' என்ற பத்திரிகை 'திட்டம்' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. அதில் அருமையான ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை தமிழக அரசே வெளியிட்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிறைய வரலாற்றுப் புத்தகங்ளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. ஆல் இந்தியா ரேடியா தினமும் இரவு 9.15 மணி முதல் 9.30 வரை 'நியூஸ் அனலைஸ்' நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறது. அதை அவசியம் கேட்கலாம். இணையதளத்தில் அந்த நிகழ்ச்சியின் ஆடியோ பதிவுகள் உள்ளன. இந்த நியூஸ் அனலைஸ் தகவல்கள் தேர்வுகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்
http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_44.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

மீன்களை பொறிக்கும்போது!

மீ‌ன்களை எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌றி‌த்து சா‌ப்‌பி‌ட்டு இரு‌க்‌கி‌றீ‌ர்களா? அத‌ன் சுவை ஊரையே அ‌ள்‌ளி‌க் கொ‌ண்டு போகு‌ம்.
ஒரு முறை அ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு ‌வி‌ட்டா‌ல் எ‌ப்போதுமே ‌மீனை பொ‌றி‌த்தே சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணு‌வீ‌ர்க‌ள்.

அ‌ப்படி மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும்.

அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள்.

இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

மெழுகுவ‌ர்‌த்‌தியை ஏ‌ற்‌றிவை‌த்து‌வி‌ட்டு ‌‌‌மீ‌ன்களை‌ப் பொ‌றி‌த்‌தா‌ல் வாசனை ந‌ம் ‌வீ‌ட்டை‌த் தா‌ண்டாது.

 கா‌ய்க‌றிகளை நறு‌க்குவத‌ற்கு மு‌‌ன்பே ந‌ன்கு கழு‌வி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

கு‌றி‌ப்பாக கேர‌ட், ‌பீ‌ன்‌ஸ், ‌பீ‌ட்ரூ‌ட் போ‌ன்றவ‌ற்றை ந‌ன்கு கழு‌விய ‌பி‌ன்ன‌ர் நறு‌க்கு‌ங்க‌ள்.

ஆனா‌ல் க‌த்‌தி‌ரி‌க்கா‌ய், வாழை‌த்த‌ண்டு போ‌ன்றவ‌ற்றை நறு‌க்‌கிய‌ப் ‌பி‌ன்ன‌ர் சம‌ை‌க்கு‌ம் வரை த‌ண்‌ணீ‌ரிலேயே‌ப் போ‌ட்டு வையு‌ங்க‌ள்.

வெ‌ங்காய‌த்தை நா‌ன்கு பாகமாக‌ நறு‌க்‌கி த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் பொடியாக நறு‌க்கு‌ம்போது க‌ண்க‌ள் எ‌ரியாது.

பூ‌ண்டை தோ‌ல் ஊ‌ரி‌த்து ஆற வை‌த்து ‌‌பி‌ன்ன‌ர் சமை‌த்தா‌ல் உடலு‌க்கு ந‌ல்லது.
பூ‌ட்டை த‌ட்டி‌‌ப் போடுவதை ‌விட, தோ‌ல் ‌உ‌ரி‌த்து கா‌ற்றாட ‌வி‌ட்டு சமை‌ப்பதே ‌சிற‌ந்தது.

 மு‌ட்டையை‌ப் பய‌ன்படு‌த்‌தி எ‌ந்த உணவு செ‌ய்தாலு‌ம் அ‌தி‌ல் ‌நி‌ச்சயமாக ம‌ஞ்ச‌ள் தூளு‌ம், ‌சி‌றிது ‌மிளகு தூளு‌ம் சே‌ர்‌த்து‌ செ‌ய்வது ந‌ல்லது.
பொ‌றிய‌ல் அ‌ல்லது நூடு‌ல்‌ஸ் வகைக‌ளி‌ல் மு‌ட்டையை சே‌ர்‌ப்பதாக இரு‌ந்தா‌ல் த‌னியாக அதனை பொ‌றி‌த்து ‌பி‌ன்ன‌ர் சே‌ர்‌ப்பது சுவையாக இரு‌க்கு‌ம்.
பொ‌றிய‌ல் ம‌ற்று‌ம் நூடு‌ல்‌ஸ் வகைக‌ளி‌ல் நேரடியாக ப‌ச்சை மு‌ட்டையை சே‌ர்‌த்து ‌கிளறுவதா‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் உணவு பொரு‌ள் குழகுழ‌ப்பாக மாறுவதுட‌ன் ஆ‌றியது‌ம் மு‌ட்டை நா‌ற்ற‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.

பொ‌ங்க‌ல் செ‌ய்யு‌ம் போது, தா‌ளி‌க்க பய‌ன்படு‌த்து‌ம் ‌மிளகை அ‌ப்படியே முழுசாக போடுவதா‌ல் அத‌ன் ந‌ன்மை உடலு‌க்கு முழுதாக‌‌ப் போ‌ய்‌‌ச் சேருவ‌தி‌ல்லை. பலரு‌ம் அதனை த‌னியாக எடு‌த்து வெ‌ளியே போ‌ட்டு ‌விடுவா‌ர்க‌ள்.
அ‌ப்படி இ‌ல்லாம‌ல் ‌மிளகை ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக உடை‌த்து போ‌ட்டா‌ல் குறைவான ‌மிளகு போ‌ட்டாலு‌ம் கார‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம், ‌மிளகை தூ‌க்‌கி எ‌றிய முடியாது.

 தோசை சுடுவது எ‌ன்பது ஒரு பெ‌ரிய ‌விஷய‌‌ம்தா‌ன். ஏ‌ன் எ‌னி‌ல் ‌சில‌ர் தோசையையே இ‌ட்‌லி போல சுடுவா‌ர்க‌ள். ‌சில‌ரு‌க்கு தோசையை ச‌ப்பா‌த்‌தி போல‌த்தா‌ன் செ‌ய்ய‌த் தெ‌ரியு‌ம்.
ஆனா‌ல் ‌சில ‌மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை செ‌ய்தா‌ல் தோசை, தோசை போலவே வரு‌ம்.
அதாவது, தோசை‌க்கு மாவு ‌மிகவு‌ம் தள‌ர்வாக இ‌ல்லாம‌ல் ‌சி‌றிது கெ‌ட்டியாகவே இரு‌க்க வே‌ண்டு‌ம்.

தோசை‌க் க‌ல் ந‌ன்கு அடு‌ப்‌பி‌ல் வை‌த்து கா‌ய்‌ந்த ‌பி‌ன்ன‌ர் தா‌ன் தோசையை வா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.
ஒ‌வ்வொரு முறை தோசை சுடு‌ம்போது‌ம், வெ‌ங்காய‌ம் அ‌ல்லது எ‌ண்ணெ‌யி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் கொ‌ண்டு தோசை‌க் க‌ல்லை முழுவதுமாக துடை‌ப்பது ந‌ல்லது.
தோசை வராம‌ல் போனால‌் உடனடியாக தோசை‌க் க‌ல்‌லி‌ன் ‌மீது உ‌ப்பு‌த் தூளை‌‌க் கொ‌‌ட்டி முழுவதுமாக தட‌வி ‌பி‌‌ன்ன‌ர் உ‌ப்பை த‌ள்‌ளி‌வி‌ட்டு தோசை வா‌ர்‌த்தா‌ல் அழகாக வரு‌ம்.

 கொழுக்கட்டை செ‌ய்யு‌ம் போது ‌சில சமய‌ம் கெ‌ட்டியாக இரு‌க்‌கிறதா அத‌ற்கு ஒரு ந‌ல்ல யோசனை.
அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக (தோசைமாவு பதத்துக்கு) அரைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
அதனை அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து மாவை‌க் கொ‌ட்டி கெ‌ட்டியான பத‌த்‌தி‌ற்கு கிளறு‌ங்க‌ள். பந்து போல் உருண்டு வரும்.
அப்புறம் மாவை எடுத்து மெல்லியதாய் உங்களுக்கு வேண்டிய வடிவத்தை செய்யுங்கள்.
மெல்லிய வடிவில் வாயில் போட்டால் கரைந்துவிடக்கூடிய கொழுக்கட்டை
 

ஜா‌ம் பொதுவாக குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌ம் ஒரு பொருளாகு‌ம். ரொ‌ட்டி‌க்கு ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் தோசை‌க்கு, ச‌ப்பா‌த்‌தி‌க்கு என எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் ஜா‌ம் இணை உணவாக அமையு‌ம்.

அ‌ப்படி‌ப்ப‌ட்ட ஜாமை ‌வீ‌ட்டி‌ல் தயா‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ல் ‌சில மு‌க்‌கிய கு‌றி‌ப்புகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்.

ஜா‌ம் தயா‌ரி‌க்கு‌ம்போது அ‌தி‌ல் ‌சில து‌ண்டு ஆ‌ப்‌பி‌ள் பழ‌த்தை சே‌ர்‌த்தா‌ல் சுவை அலா‌தியாக இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ஜா‌ம் தயா‌ரி‌க்கு‌ம்போது அ‌தி‌ல் ‌சில சொ‌ட்டு எலு‌மி‌ச்சை சாறு சே‌ர்‌ப்பதா‌ல், ஜா‌ம் கெ‌ட்டியாக இ‌ல்லாம‌ல் தள‌ர்‌த்‌தியாக இரு‌க்கு‌ம்.

வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

பழ‌ங்களை பத‌ப்படு‌த்‌தி தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் ஜா‌ம்களை சா‌ப்‌பிடுவதா‌ல் முதுமை‌யி‌ல் க‌ண்க‌ளி‌‌ன் ‌திரை‌யி‌ல் வரு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை‌த் தடு‌க்கலா‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.

  சாத‌ம் ‌மீ‌ந்து ‌வி‌ட்டா‌லோ அ‌ல்லது குழ‌‌ம்பு ‌மீ‌ந்து ‌வி‌ட்டாலோ உடனடியாக அதனை‌த் தேவ‌ை‌ப்படுபவ‌ர்களு‌க்கு‌க் கொடு‌த்து ‌விடலா‌ம்.

இ‌ல்லை அதனை ‌கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து நாளை பய‌ன்படு‌த்த முடியு‌ம் எ‌ன்றா‌ல் அ‌வ்வாறு செ‌ய்யலா‌ம்.

இது அ‌ல்லாம‌ல் கெ‌ட்டு‌ப்போன உணவு‌ப் பொரு‌ட்களை யாரு‌க்கு‌ம் ‌பி‌ச்சையாக‌க் கூட கொடு‌க்க வே‌ண்டா‌ம். ‌நீ‌ங்களு‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டா‌ம்.

கெ‌ட்டு‌ப் போன பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ‌கிரு‌மிக‌ள் எ‌ந்த வகையானதாக வே‌ண்டுமானாலு‌ம் இரு‌க்கலா‌ம். ‌சில சமய‌‌ங்க‌ளி‌ல் ‌பிர‌ட் போ‌ன்ற பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் பூ‌‌‌ஞ்ஞைக‌ள் உ‌யிரு‌க்கு உலை வை‌த்து ‌விடலா‌ம்.

எனவே க‌ெ‌ட்டு‌ப் போன பொருளை‌ச் சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு மரு‌த்துவ‌‌த்‌தி‌ற்கு செலவு செ‌ய்வதை ‌விட, அதனை தூ‌க்‌கி எ‌றிவதே மே‌ல்.

கெ‌ட்டு‌ப் போ‌ய்‌விடு‌ம் எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல் அதனை கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து நா‌ற்றமடி‌க்க‌ச் செ‌ய்யவு‌ம் வே‌ண்டா‌ம்.
http://pettagum.blogspot.in/2014/09/blog-post_6.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts